உன் கவித்தடாகத்தில் கவிதை நீராடவந்தேன்
அதில் ஆயிரமாயிரம் தாமரைகள் தத்தளித்தபடி
தடாகத்தின் ததும்பளில் ஆனந்தகும்மியடித்தபடி
காதலின் பரிமாணங்கள் கலைகட்டியிருந்தன
அழுகையின் அர்த்தங்கள் அரங்கேறியிருந்தன
சிரிப்பின் சிலம்பொலிகள் சினிங்கிக்கொண்டிருந்தன
உணர்வுகளின் பிம்மங்கள் மிளிர்ந்துமிளிரின
உணர்ச்சிகளின் உச்சங்கள் உள்ளங்களை தொட்டன
உண்மைகளின் சுவடுகள் உண்மையில் சுட்டன
பொய்களை வடித்து வடித்து
சிலகவிகளை படைத்திருந்திருந்தாலும்
சொட்டச்சொட்ட வடியும் கொம்புத்தேனாய் இனித்தது
தினம் தினம் கவிபடைக்கிறாய்
தித்திப்பாய் வரிகொடுக்கிறாய்
திகட்டாமல் உணர்வுகளின் பிம்பங்களை
கொட்டிகுமித்திருக்கிறாய்
பிறரின் மனங்களை கவிகளால் படம்பிடிக்கிறாய்
அதனால் பலமனங்களிலும் இடம்பிடிக்கிறாய்
தொடர்ந்து தொடரட்டும் உன்கவிப்பணி
தொடர்ந்து வரட்டும் பலரின் விழிஇனி....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
யாருக்கோ வாழ்த்து சொல்லி கவி படைத்திருப்பது போல இருக்கிறது தோழி? நிரம்ப ரசித்து படித்தேன் வரிகளை.
பதிலளிநீக்குபுகாரிக்கு பாராட்டு கவிதை அழகு !!
பதிலளிநீக்குகவிதைக்கு கவி எழுதும் கவிதாயினி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகவிக்காக ஒரு கவி...கலக்கல்.
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்குங்க.
பிரபாகர்.
கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநிச்சயம் கவிதை சந்தோசப்படும். அருமை
பதிலளிநீக்குகவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.
பதிலளிநீக்குமல்லிக்,தலைப்பிலயே அசத்திட்டீங்க.கவிதைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை மலிக்கா.
பதிலளிநீக்குவெறும் நன்றியைக் கூறிவிட்டுச் செல்லும் நன்றியிலாச் செயலை செய்யவும் விரும்பவில்லை.
கருத்துக்கள்தந்த அனைத்து தோழமை உள்ளங்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்..
பதிலளிநீக்குதொடர்ந்து தாங்களனைவரின் ஊக்கமும் ஒத்துழைப்பும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்....
/அன்புடன் புகாரி கூறியது...
பதிலளிநீக்குஎப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை மலிக்கா.
வெறும் நன்றியைக் கூறிவிட்டுச் செல்லும் நன்றியிலாச் செயலை செய்யவும் விரும்பவில்லை./
ஆசானின் அனைத்துக்கவிகளுக்காவும்
ஒரு கவிதை தரனுமென்றிருந்தேன்
இதற்கு நன்றி சொல்லிவிடவேண்டாம்.
அன்பு ஒன்றே போதும் எப்போதும் .
என்றென்றும்
அன்புடன் மலிக்கா