நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒரே தவிப்பு

மஞ்சத்தின் கட்டிலில் கிடந்துகொண்டு
வெற்றுமடியையே உற்றுப்பார்த்தபடி
மனம்குமுறி அழுதாள் மங்கை
மழழை வரம் கேட்டு

குப்பைத்தொட்டியில் கூளங்களுக்குநடுவில்
குட்டிக் கைகால்களை உதைத்தபடி
கூக்குரலிட்டுஅழுதது மழழை
அன்னை வரம் கேட்டு......அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

24 கருத்துகள்:

 1. அற்புதமாய் இரண்டு சம்பவங்களை கோர்த்து உள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 2. மலிக்கா..அருமையான முரண்பாட்டு கவிதை. என்ன சொல்வது..குழந்தைகளை தத்தெடுக்கும் முறை இருந்தாலும் இத்தகைய குப்பை தொட்டி குழந்தைகளுக்கு ஆதரவு கிடைப்பதில்லை...

  பதிலளிநீக்கு
 3. நல்ல கருத்து பொதிந்து உள்ள கவிதை. வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 4. \\குப்பைத்தொட்டியில் கூளங்களுக்குநடுவில்
  குட்டிக் கைகால்களை உதைத்தபடி
  கூக்குரலிட்டுஅழுதது மழழை
  அன்னை வரம் கேட்டு......//

  செய்தித் தாள்களில் இந்த மாதிரி செய்தி படிக்கும் பொது மனசு பதறும்...எப்படி இவர்களால் இப்படி மனசாட்சி இல்லாமற் செயல் பட முடிகிறதென்று....அப்பறம் கள்ளிப் பால் கதையா நினைக்கும் போது இன்னும் வலிக்கும் மனசு.

  அருமையான வரிகள். நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 5. அருமை மலிக்கா. இரண்டுமே சிறந்த எதிர்பார்ப்புகள். ஆனால் எத்தனை குழந்தையில்லாத பெற்றோர் இதுபோன்ற அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுக்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
 6. /வெண்ணிற இரவுகள்....! கூறியது...
  அற்புதமாய் இரண்டு சம்பவங்களை கோர்த்து உள்ளீர்கள்/

  மிக்க நன்றி வெண்ணிறவு கார்த்திக்..

  பதிலளிநீக்கு
 7. /புலவன் புலிகேசி கூறியது...
  மலிக்கா..அருமையான முரண்பாட்டு கவிதை. என்ன சொல்வது..குழந்தைகளை தத்தெடுக்கும் முறை இருந்தாலும் இத்தகைய குப்பை தொட்டி குழந்தைகளுக்கு ஆதரவு கிடைப்பதில்லை/

  இன்னும் நம் சமூகத்தில் நிறையமாற்றங்கள் வேண்டும் புலிகேசி..

  பதிலளிநீக்கு
 8. /எம்.எம்.அப்துல்லா கூறியது...
  எதிர் முரண் அருமை :)/

  முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிகுந்த மகிழ்ச்சி தொடர்ந்துவாருங்கள்..
  எம்.எம். அப்துல்லா..

  பதிலளிநீக்கு
 9. //பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
  நல்ல கருத்து பொதிந்து உள்ள கவிதை. வாழ்த்துக்கள் !!!//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழமையே...

  பதிலளிநீக்கு
 10. சுருங்க அழகாய் இருக்கிறது சகோதரி...

  ஏக்கம் இரு கோணங்களில்....

  தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டையும் போடுங்களேன்...

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள மலிக்கா அக்காவிற்கு,
  எப்படி இருக்கீங்க? அக்கா என்ன அருமையான கவிதைக்கா இது மனம் நோகுது.நான் இப்போதுதான் விஜய் டிவியில் போடும் நடந்தது என்ன புரோகிராமில் இதேமாதிரி ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன்.சாக்கடையில் குழந்தை நம் தமிழகத்தில்.என்ன கொடுமை.அதைப்பார்த்து விட்டு அந்த நினைப்பே இன்னும் மறக்கவில்லை அதர்குள் அக்காவின் தளத்தில் இப்படி ஒரு கவிதை.பார்த்ததும் நீங்களும் அதைப்பார்த்தவுடன் இந்த கவிதையை எழுதியிருப்பீர்களோ என தோன்றியது.அக்கா உங்க கவியில் அழுதுவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 12. /செய்தித் தாள்களில் இந்த மாதிரி செய்தி படிக்கும் பொது மனசு பதறும்...எப்படி இவர்களால் இப்படி மனசாட்சி இல்லாமற் செயல் பட முடிகிறதென்று....அப்பறம் கள்ளிப் பால் கதையா நினைக்கும் போது இன்னும் வலிக்கும் மனசு.

  அருமையான வரிகள். நல்லா இருக்குங்க../

  யாரைச்சொல்லி நோவது. பாவம் பச்சிளம் சிசுக்கள்தான்.
  நன்றி லெமூரியன்..

  /Mrs.Menagasathia கூறியது...
  நன்றாக உள்ளது/

  மிக நன்றி மேனகா..

  பதிலளிநீக்கு
 13. /இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
  அருமை மலிக்கா. இரண்டுமே சிறந்த எதிர்பார்ப்புகள். ஆனால் எத்தனை குழந்தையில்லாத பெற்றோர் இதுபோன்ற அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுக்கிறார்கள்?/

  சிலருக்கு மனம் இடங்கொடுக்கவில்லையாம் என்ன செய்ய????? கேள்விகளை நாம்தான் கேட்டுக்கொள்ளனும் பதில்களையும் நாமே சொல்லிக்கொள்ளனும்.

  எங்காவது எதிரொலிக்கிறாதான்னு பார்ப்போம் நன்றி நிஜாம்..


  /S.A. நவாஸுதீன் கூறியது...
  நல்லா இருக்கு/

  மிக்க நன்றி நவாஸண்ணா..


  /sarusriraj கூறியது...
  நல்ல கருத்து மலிக்கா/

  மிக்க நன்றி சாருக்கா..

  பதிலளிநீக்கு
 14. /கவிக்கிழவன் கூறியது...
  நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும்/

  மிக்க நன்றி யாதவன்...

  /வானம்பாடிகள் கூறியது...
  அழகாய்ச் சொன்ன வலிகள். வரிகள்./

  அன்பான கருத்துக்கு மிக்க நன்றி வானம்பாடிகள்..

  பதிலளிநீக்கு
 15. பிரபாகர் கூறியது...
  /சுருங்க அழகாய் இருக்கிறது சகோதரி...
  ஏக்கம் இரு கோணங்களில்..../

  மிகுந்த சந்தோஷம் சகோதரரே..


  தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டையும் போடுங்களேன்...
  பிரபாகர்./

  ஓகே பிரபாகரண்ணா..


  / malar கூறியது...
  நல்ல கவிதை வாழ்த்துக்கள்/

  முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மலர். தொடர்ந்து வாருங்கள்..

  பதிலளிநீக்கு
 16. /koini கூறியது...
  அன்புள்ள மலிக்கா அக்காவிற்கு,
  எப்படி இருக்கீங்க? அக்கா என்ன அருமையான கவிதைக்கா இது மனம் நோகுது.நான் இப்போதுதான் விஜய் டிவியில் போடும் நடந்தது என்ன புரோகிராமில் இதேமாதிரி ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன்.சாக்கடையில் குழந்தை நம் தமிழகத்தில்.என்ன கொடுமை.அதைப்பார்த்து விட்டு அந்த நினைப்பே இன்னும் மறக்கவில்லை அதர்குள் அக்காவின் தளத்தில் இப்படி ஒரு கவிதை.பார்த்ததும் நீங்களும் அதைப்பார்த்தவுடன் இந்த கவிதையை எழுதியிருப்பீர்களோ என தோன்றியது.அக்கா உங்க கவியில் அழுதுவிட்டேன்/

  ரொம்ப நல்லாயிருக்கேன் கொய்னி நீங்க எப்படியிருக்கீங்க. சமூகத்தின் அவலங்களை அங்கங்கே படம்பிடித்துக்காட்டியும் உபயோகமில்லாமல் போகிறதேன்னு நினைக்கும்போது வருத்தமாக உள்ளது கொய்னி.

  நம்மால் என்ன செய்யமுடியுமோ அதைச்செய்வோம். புரிந்துக்கொண்டால் நல்லது..

  அடிக்கடி வாப்பா, வந்து ஊக்கம்கொடு
  என்றும் பாசத்துடன் உன் மலிக்கா..

  பதிலளிநீக்கு
 17. அருமையான கவிதை மலிக்கா.

  இந்தச் சிறு கவிதைக்குள் எத்தனை பெரிய விசயம்.

  இப்படியாய் நீங்கள் கவிதை எழுதுவதையே நான் அதிகம் வரவேற்கிறேன்.

  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது