நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏதோ நடக்கிறது
திடீரென்று
சடசடவென கொட்டிய மழை
பெருந்துளிகளாகி
என்தேகத்தைத்தொட
சட்டென்று
குடையெடுத்து பட்டென்று
விரித்தேன்

ஆனபோதும்
நனைந்துகொண்டிருந்தேன்
சுற்றும் முற்றும்
பார்த்தபோதுதான் தெரிந்தது
மழை மனதிலும்
நான்
வெறும் குடையிலும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

23 கருத்துகள்:

 1. //மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//

  இந்த மாதிரி பல பேர் திரியுறாங்க. எனக்கு முதல் விருது கொடுத்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. குடைக்குள் மழை குளுகுளுன்னு நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 3. வழக்கம் போல உங்க கவிதை ரொம்ப அர்த்தமுள்ளதா இருக்கு.தொடரட்டும் மழை..ஸாரி..கவிதை !!!

  பதிலளிநீக்கு
 4. ///மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..///

  ரொம்ப கஷ்டம்

  பதிலளிநீக்கு
 5. சுற்றும் முற்றும் பார்த்தபோதுதான் தெரிந்தது
  மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//

  வரிகள்..கலக்கல்..

  பதிலளிநீக்கு
 6. கவிதைகள் மிகவும் அருமை, விரும்பினால் எமது வலைதளத்திற்கு படைப்புகள் அனுப்பினால் வெளியிட ஆவலாக உள்ளோம்..

  பதிலளிநீக்கு
 7. /ஆனாபோதும்/

  ஆனபோதும்

  /வெரும் குடையிலும்/

  வெறும் குடையிலும்.

  அழகான கவிதை கவிதாயினி. :)

  பதிலளிநீக்கு
 8. கவிதை குளிர்ச்சியாய் இருக்கிறது மல்லிக்.

  பதிலளிநீக்கு
 9. \\மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//

  அருமை :-)

  பதிலளிநீக்கு
 10. /இந்த மாதிரி பல பேர் திரியுறாங்க. எனக்கு முதல் விருது கொடுத்தமைக்கு நன்றி/

  அதுசரி அப்படியா??????

  நன்றி புலிகேசி

  பதிலளிநீக்கு
 11. S.A. நவாஸுதீன் கூறியது
  /குடைக்குள் மழை குளுகுளுன்னு நல்லா இருக்கு./

  மனதுக்குள் மழையண்ணா..

  பதிலளிநீக்கு
 12. /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
  வழக்கம் போல உங்க கவிதை ரொம்ப அர்த்தமுள்ளதா இருக்கு.தொடரட்டும் மழை..ஸாரி..கவிதை !!/


  கவிதமைழை இனிகொட்டோ கொட்டுன்னு கொட்டுமுங்க...

  பதிலளிநீக்கு
 13. /கேசவன் .கு கூறியது...
  ///மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..///

  ரொம்ப கஷ்டம்/

  கஷ்டம்தான் கேசவன் என்ன செய்ய...

  பதிலளிநீக்கு
 14. /அதிரை அபூபக்கர் கூறியது...
  சுற்றும் முற்றும் பார்த்தபோதுதான் தெரிந்தது
  மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//

  வரிகள்..கலக்கல்/

  நன்றி அபூ என்ன கொஞ்சநாள் இந்தபக்கம் கணோம்..

  பதிலளிநீக்கு
 15. /Tamilparks கூறியது...
  கவிதைகள் மிகவும் அருமை, விரும்பினால் எமது வலைதளத்திற்கு படைப்புகள் அனுப்பினால் வெளியிட ஆவலாக உள்ளோம்../


  நிச்சயம் அனுப்பித்தருகிறேன், வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தமிழ் பார்க்...

  பதிலளிநீக்கு
 16. /அழகான கவிதை கவிதாயினி. :)

  மிக்க நன்றி வானம்பாடிகள்.
  டைப் பண்ணுவதில் மிஸ்டேக் ஆகிவிடுகிறது.. இனி கவனமாக டைப்பண்ணுகிறேன்...


  வானம்பாடிகள் கூறியது...
  விருதுக்கு நன்றியம்மா.

  ரொம்ப சந்தோஷம் அய்யா..

  பதிலளிநீக்கு
 17. /ஹேமா கூறியது...
  கவிதை குளிர்ச்சியாய் இருக்கிறது மல்லிக்/

  குளுமையான நன்றி தோழி..

  பதிலளிநீக்கு
 18. லெமூரியன் கூறியது...
  \\மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//

  அருமை :-)

  நன்றி லெமூரியன்..  பிரியமுடன்...வசந்த் கூறியது...
  மழை போலவே கவிதை..குளுமையா இருக்கு...

  மகிழ்ச்சி பிரியமான வசந்த்..

  பதிலளிநீக்கு
 19. /ஆரே வரிகளில் ஆருபக்கது(six page) கவி/

  மிக்க நன்றி ராஜவம்சம்...

  பதிலளிநீக்கு
 20. //மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//

  Arivujeevaithanamana varikal...

  - Trichy Syed

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது