நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புதுப்பித்தேன்
கதிரவனின் கதிர்வீச்சை கண்ணடித்தது சிரித்தது

காலைதென்றலுடன் கைகுழுக்கி நடந்தது

அன்னை ஊட்டிவிட அழகாய் உண்டது

அவள்மடியில் படுத்தமடி மயங்கிக்கிடந்ததுரெட்டை பின்னல்போட்டு ரெக்கைகட்டிப்பறந்தது

மழையுடன் காதல் கொண்டு மறைந்து நின்றதுபட்டுபாவாடை கட்டி பட்டாம்பூச்சியானது

பல்லாங்குழியாடி பரவசம் அடைந்ததுபச்சைக்குதிரை தாண்டி பட்டென விழுந்தது

பாண்டியாடி கோட்டை தவறாய் மிதித்ததுபளிங்கி [கோலி]விளையாடி பத்து பத்தாய் சேர்த்தது

ஒளிந்து விழையாடி ஒப்பீ சொன்னதுகபடியாடி கொண்டு குதூகலம் அடைந்தது

கயிறு தாண்டித்தாண்டி களைத்துப்போனதுதட்டாம்பூச்சி பிடிச்சி மீண்டும் பறக்கவிட்டது

தட்டாமலைச் சுற்றி துள்ளிக்குதித்தது
உயரத்திலிருந்து  குளத்தில் குதித்தது

இக்கரையிலிருந்து அக்கரைக்கு சென்றதுமுதுகில் ரெண்டடி வாங்கிக்கொண்டது

முனுமுனுத்துக்கொண்டே மீண்டும் ஓடியது


மனதிற்குள் புதைந்துள்ள மகிழ்ச்சிகளை
மீண்டும் புதுப்பித்து சிறுபிள்ளையாய்
தோன்றி சிறகடிக்கிறது மனம்
இப்படியே இருந்துவிடச்சொல்லி ஏங்குது தினம்...அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

18 கருத்துகள்:

 1. இந்த கவிதையை அந்த கதிரவன் படித்தால் ரொம்ப மகிழ்வான்.
  உன் சொல் வீச்சில் அந்த கதிர் வீச்சின் வெட்கம் தெரிகிறது.வார்த்தைகள் ரொம்ப அழகா இருக்கு தோழி.

  பதிலளிநீக்கு
 2. தோன்றி சிறகடிக்கிறது மனம்
  இப்படியே இருந்துவிடச்சொல்லி ஏங்குது தினம்...//

  அழகாய் இருக்கிறது அனைத்து வரிகள்..

  பதிலளிநீக்கு
 3. இந்தக் கவிதை, படிப்பவர்கள் அனைவரின் நினைவுகளையும் புதுப்பிக்கும். அத்தனை அருமையாய் வரிகளில் வடித்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. அட அட மலிக்கா. வெகு அருமை. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
 5. //முதுகில் ரெண்டடி வாங்கிக்கொண்டது
  முனுமுனுத்துக்கொண்டே மீண்டும் ஓடியது//

  ayyo.....

  kavithaiyil nalla rasanai. kuzhaiyaga, sirumiyaga ellorukkum aasai irukkathan seikirathu.

  பதிலளிநீக்கு
 6. மல்லிக்,உங்கள் கவிதை மீண்டும் தும்பி பிடித்து வால் கட்ட ஆசையைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 7. மலிக்கா எனக்கும் மீண்டும் அந்த பருவத்திற்கே செல்ல வேண்டும் என ஆசைதான். ஆனால் இதெல்லாம் நிறைவேறாது எனத் தெரிந்த ஆசைகள். அருமை மலிக்கா.

  பதிலளிநீக்கு
 8. வாவ். இளமைக்கால நினைவுகள் அருமைங்க இருக்குங்க. படங்களும் கவிதையுமாய் மிகவும் கவித்துவமாயும் அழகாயும் இருக்குங்க.

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 9. நல்ல கவிதை. பொருத்தமான படங்களுடன் புதுமையாக படைத்துள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 10. அழகான வரிகளும் அதனோடு போட்டிபோடும் படங்களுமாய் கவிதை அசத்தல்!

  பதிலளிநீக்கு
 11. அழகு..... உங்களின் சிறு வயது நிகழ்வுகளை அழகாய் பதித்து இருகிறிர்கள்.

  இப்பதிவை படிக்கும் அனைவரும் கண்டிபாக அவர்களின் நின்வைவுகளை புதுப்பித்து இருபார்கள்.

  அருமை மல்லிகா

  பதிலளிநீக்கு
 12. ஏக்கம் தெரிகிறது ....படம் கவிதை அருமை ,,,,,படங்களே கவிதயாய் கவிதையே படமாய்

  பதிலளிநீக்கு
 13. /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
  இந்த கவிதையை அந்த கதிரவன் படித்தால் ரொம்ப மகிழ்வான்.
  உன் சொல் வீச்சில் அந்த கதிர் வீச்சின் வெட்கம் தெரிகிறது.வார்த்தைகள் ரொம்ப அழகா இருக்கு தோழி/

  கதிரவனின் ஒளிகதிர் பட்டு பட்டாம்பூச்சியாய் திரிந்த நாள்கள்மட்டும், நெஞ்சில் ஆணியடித்ததுபோல் நிலைத்துவிட்டது.

  நன்றி பூங்குன்றன்..

  பதிலளிநீக்கு
 14. தாங்களைவரும் தொடர்ந்துவந்து
  உங்களின்
  அன்பான கருத்துக்களின்மூலம் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து என்னை இன்னும் முன்னேறச்செய்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது..
  உங்களனைவரின் அன்பான, ஆதரவான, குறையான, அனைத்துக்கருத்துக்களும் எனக்கு தந்து என்னை மேலும் வலுவடையச்செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

  என்றென்றும்
  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது