நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் கண்ணே


கருவறையில் என்ன
கண்ணாம்பூச்சி ஆட்டம்
அதனால்
என் உள்ளத்தில்
தினமும் தொடருது தேட்டம்

ஸ்கேன் என்னும்
கருவியோடு
என் வயிற்றுக்குள்
நடக்குது போராட்டம்

உன்உருவத்தை
பார்க்க
என்உள்மனதிற்குள் ஏக்கம்
உனக்கு
உயிர்கொடுக்கச்சொல்லி
இறைவனிடம் மன்றாட்டம்

அன்னை
அழுது புலம்புகிறேனே
அமுதே
என் அழுகுரல்
உனக்கு கேக்கலையா

புலம்பித்தான் தவிக்கின்றேன்
தேனே
என் தவிப்பு
உனக்கு புரியலையா

பூமியைப்பார்க்க
உனக்கு விருப்பமில்லையா
இல்லை
இந்த அப்-பாவித்தாயை
பார்க்கபிடிக்கவில்லையா

மருவித்தவிக்கின்றேன்
மன்றாடிதுடிக்கின்றேன்
உருவமில்லா உனக்காக
உருகித்தான்போகின்றேன்

பதுமையே பதுமையே
எனை காணவருவாயா
பட்டுப்பூவினமே
என்னை
பதறவைப்பாயா

காத்திருக்கிறேன்
கண்மணியே உயிருக்குள்
உருகியபடி
வசந்தமான உனைக்காண
என்வயிற்றை வருடியபடி

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மைதான்
முழுமையின் அடையாளம்

அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும்வரம்..[ஏழு வருடங்களுக்கு முன் மனம்பட்டபாடு
அதை கிறுக்கலாய் வடித்தேன் என் எழுத்துக்களோடு]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

26 கருத்துகள்:

 1. ஒரு பெண்மையின் உணர்வு போராட்டத்தை ரொம்ப அழகா பதிவு செய்து இருக்கீங்க.
  இந்த மன போராட்டத்தை-இதே மன்றாடலை என் மனைவியும் அனுபவித்து, இறைவனிடம் கதறி அழுதும் வீணாகிபோனது இரண்டு வருடத்திற்கு முன்பு.அந்த நாளை நினைத்தாலே உள்ளம் நடுங்குகிறது.கண்களில் கண்ணீர் துளிகள் எட்டி பார்க்கிறது...மன்னிக்கணும்...கவிதை அருமை....

  பதிலளிநீக்கு
 2. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க மேடம்.... மிக அருமை.

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 3. மனவேதனையின் வலி இன்னும் வலித்துக்கொண்டே..

  மொட்டுக்கள் அத்தனையும் பூக்களாவது இல்லை அதுபோன்று,
  சில சமயம் இதுபோல் நடப்பதுண்டு
  அனைத்தும் நன்மைக்கே என நம்மை தேற்றிக்கொள்ளவேண்டும்.

  என்மொட்டும் கருகியதால் வந்த வேதனைதான் இது.

  கலக்கம் வேண்டாம் தோழமையே
  கண்டிப்பாக இறைவன் கலக்கத்தைப்போக்கிடுவான்..


  /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
  ஒரு பெண்மையின் உணர்வு போராட்டத்தை ரொம்ப அழகா பதிவு செய்து இருக்கீங்க.
  இந்த மன போராட்டத்தை-இதே மன்றாடலை என் மனைவியும் அனுபவித்து, இறைவனிடம் கதறி அழுதும் வீணாகிபோனது இரண்டு வருடத்திற்கு முன்பு.அந்த நாளை நினைத்தாலே உள்ளம் நடுங்குகிறது.கண்களில் கண்ணீர் துளிகள் எட்டி பார்க்கிறது...மன்னிக்கணும்...கவிதை அருமை....

  பதிலளிநீக்கு
 4. தாய்மையுடன் ஒரு கவிதை .........
  அன்று குழந்தை பெற்றாய் ...........
  இன்று கவிதை பெற்றாய்

  பதிலளிநீக்கு
 5. என் தாயும் உங்களை போன்றுதான் கவிதை எழுத தெரியாது என் மேல் நிரம்ப காதல் கொண்டவள். அவளை பிரிந்து தனியாக வசிக்கிறேன். உங்கள் கவிதை அவளை என்னை நினைக்க வைத்தது.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 6. தாய்மையின் உணர்வுகள் அருமையான வரிகளில். பாராட்டுக்கள் மலிக்கா.

  பதிலளிநீக்கு
 7. வலியும் கூட வரம் தான் மிக மிக சில நேரங்களில்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. கருவுற்ற ஒரு தாய்மையின் ஏக்கம்.அருமை மல்லிக்கா.

  பதிலளிநீக்கு
 9. நல்ல கவிதை, தாய்மையின் ஏக்கமும், பூரிப்பும் அழகாய் சொல்லியிருக்கின்றிர்கள். இந்த கவிதை என் இரண்டாம் அன்னியின் பிரசவ காலங்களை ஞாபகப் படுத்தியது. நன்றி.

  பதிலளிநீக்கு
 10. \\பதுமையே பதுமையே எனை காணவருவாயா
  பட்டுப்பூவினமே எனை பதறவைப்பாயா...//

  இப்படி ஒரு தவிப்பு தோன்றி மரயுமென்பது உங்களின் இந்த கவிதை மூலமே தெரிந்து கொண்டேன்...தாய்மையின் தவிப்பை நன்றாக வெளிப்படுத்திருக்கிறீர்கள்...

  பதிலளிநீக்கு
 11. /பிரபாகர் கூறியது...
  அனுபவிச்சு எழுதியிருக்கீங்க மேடம்.... மிக அருமை.

  பிரபாகர்./

  ரொம்ப நன்றி பிரபாகர் வருகைக்கும் கருத்திற்கும்...

  பதிலளிநீக்கு
 12. /வெண்ணிற இரவுகள்....! கூறியது...
  தாய்மையுடன் ஒரு கவிதை .........
  அன்று குழந்தை பெற்றாய் ...........
  இன்று கவிதை பெற்றாய்/

  மிகவும் சந்தோஷம் வெண்ணிறவு கார்த்திக்..

  பதிலளிநீக்கு
 13. / கேசவன் .கு கூறியது...
  என் தாயும் உங்களை போன்றுதான் கவிதை எழுத தெரியாது என் மேல் நிரம்ப காதல் கொண்டவள். அவளை பிரிந்து தனியாக வசிக்கிறேன். உங்கள் கவிதை அவளை என்னை நினைக்க வைத்தது.

  நன்றி/

  தாயின் அன்புக்கு ஈடேது கேசவா,
  அதைவிட பலமடங்கு நீங்க அவங்கமேல் அன்பா இருங்க கடைசிவரை துணையா இருங்க அதுவே உங்களை அவங்க சுமந்ததற்கான பலன்..

  மிக நன்றி கேசவன் தொடர்ந்து வாருங்கள்..

  பதிலளிநீக்கு
 14. /S.A. நவாஸுதீன் கூறியது...
  தாய்மையின் உணர்வுகள் அருமையான வரிகளில். பாராட்டுக்கள் மலிக்கா./

  பாராட்ட பாராட்ட பலமடங்கு நல்எண்ணங்கள் பெருக்கெடுக்கிறது.

  மிக்க மகிழ்ச்சி நவாஸண்ணா..

  பதிலளிநீக்கு
 15. /வானம்பாடிகள் கூறியது...
  தாய்மைக்குச் சிறப்பு. அருமை/

  மிக்க நன்றி வானம்பாடிகளாரே..

  பதிலளிநீக்கு
 16. /சந்ரு கூறியது...
  நல்ல வரிகள் வாழ்த்துக்கள்./

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சந்ரு,
  தொடர்ந்து வாருங்கள்...

  பதிலளிநீக்கு
 17. /ராஜவம்சம் கூறியது...
  வலியும் கூட வரம் தான் மிக மிக சில நேரங்களில்

  வாழ்த்துக்கள்//

  ரொம்ப சந்தோஷம் ராஜவம்சம் தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும்...

  பதிலளிநீக்கு
 18. /Mrs.Menagasathia கூறியது...
  மிக அருமை..

  நன்றி தோழி மேனகா...

  பதிலளிநீக்கு
 19. /ஹேமா கூறியது...
  கருவுற்ற ஒரு தாய்மையின் ஏக்கம்.அருமை மல்லிக்கா/

  அன்புத்தோழியே ஹேமா வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 20. /பித்தனின் வாக்கு கூறியது...
  நல்ல கவிதை, தாய்மையின் ஏக்கமும், பூரிப்பும் அழகாய் சொல்லியிருக்கின்றிர்கள். இந்த கவிதை என் இரண்டாம் அன்னியின் பிரசவ காலங்களை ஞாபகப் படுத்தியது. நன்றி/

  அப்படியா, கடந்தநினைவுகளை மீண்டும் அப்பப்ப தட்டிக்கொடுத்தால் அதில்தனி ஆனந்தம்தான் மிக்க நன்றி சார்..

  பதிலளிநீக்கு
 21. /இப்படி ஒரு தவிப்பு தோன்றி மரயுமென்பது உங்களின் இந்த கவிதை மூலமே தெரிந்து கொண்டேன்...தாய்மையின் தவிப்பை நன்றாக வெளிப்படுத்திருக்கிறீர்கள்/

  மிகுந்த மகிழ்ச்சி லெமூரியன், வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 22. /மலர்வனம் கூறியது...
  Ammavin vayitril mutham kodukkum makanin photo kavithai.

  - Trichy Syed//

  பார்க்கும் அத்தனையும் கவிதையே நம் எண்ணத்தில்,,,

  மிக்க நன்றி மலர்வனம்...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது