நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுதந்திரமே சுதந்திரமே


சுதந்திரமே சுதந்திரமே!

உன் சுவாசம் தேடி அலைந்தபோது –அது
உச்சானிக் கொம்பில்
மூவர்ணங்களின் கொடியில்
மூச்சுவிட்டு அசைந்து கொண்டிருந்தது

சுதந்திரமே! உன்னை
அறுபத்தியிரண்டு வருடங்களுக்கு
முன்பே பெற்றுவிட்டோம் -ஆனால்
அதன் அடிச்சுவடுகூட தெரியாமல்
வாழ்வோரை காணும்போது
வியப்பதா? வேதனைப்படுவதா?

பாடசாலைகளில்
கல்வி கற்கவேண்டிய பாலகர்கள்
பட்டாசு தொழில்சாலையிலும்
கல்குவாரியிலும்.

சுத்தமான காற்றைகூட
சுவாசிக்க முடியாத
குடிசைவாழ் மக்களின் வாழ்க்கை
சுற்றிவலைத்த கொசுக்களிலும்
கூவத்தின் நாற்றத்திலும்.
அநியாயத்தில் கைகளில்
நியாயத்தின் குரல்வலைகளும்.

சகோதரத்துவத்தோடு
வாழவேண்டிவர்களின் ஒற்றுமை
சாதிமத சண்டைகளால்
வெட்டிக் கொன்று கொண்டும்
தனக்குச் சொந்தமானவைகளைக்கூட
தன்னோடு வைத்திருப்பதும்
ஆபத்தாகவும்.

அர்த்த ராத்திரியில்
ஆண்களே தன்னந்தனியே
வெளியில் செல்வது முடியாமல் போவதும்
முகம் திறந்த திருடர்களின்
கொள்ளையடிக்கும் மோகமும்
நாளுக்குநாள் கூடுவதும்

இப்படி சுதந்திரமே! நீ இருந்தும்
இல்லாததுபோலானதேயென
இவர்களின் நிலையை நினைத்து
வருந்தும் மனம் புண்ணாகிபோகிறது.

ஆனால்!
உன்னை அத்துமீறி
பயன்படுத்துவோரை காணும்போது
ஆத்திரப்படுவதா? ஆதங்கப்படுவதா?

அன்புக்கணவனையும்
ஆசைக் குழந்தைகளையும்
அந்தரத்தில் விட்டுவிட்டு
தன்சுகங்களுக்காக
தடுமாறிப்போகும் மனைவிகள்!
தன்னையே நம்பிவந்த மனைவி மக்களை
தவிக்க விட்டுவிட்டு
தன்னலத்துக்காக
தலைமறைவாகும் கணவர்கள்!

தன்சுதந்திரம் பறிபோகுதென
தன்னைப் பெற்றவர்களையே!
பெருஞ்சுமயையாய்
பெற்றபிள்ளைகளே நினைக்க
பெருகி வழியும் முதியோர் இல்லங்களில்
நெஞ்சுருகும் சோகங்கள்!

வயிற்றுக்கே போராடும்
வறுமையுடையோர்களை
வசதிபடைத்தோர்கள் வாரியணைக்காது
அன்றாங்காய்சியாக்கி அடிமாடுகளாய்
அடிபணியவைக்கும் அல்லல்கள்

முழுவதும் மூடிய காலம்போய்
சுதந்திரம் என்ற பெயரில்
முற்றும் துறந்தவராய் அலைந்துதிரியும்
ஆபாசத்தின் அவலங்களென
சுதந்திரத்தை
அசுத்தமாக்குவோரை எண்ணி
நெஞ்சம் புலம்பித் தவிக்கிறது.

சுதந்திரமே!
உன்னை அன்னியர்களிடமிருந்து-பலபல
சோதனைப்பின் சொக்கத்தங்கமாய்
வென்றெடுத்தோம்
அதை நம்மவர் சிலரின்
சுயநலத்துக்காக மட்டும் நீ
சொந்தமாகி மீண்டும்
அடிமையாகிவிடாதே!

சுதந்திரமே! சுதந்திரமே!
உன் சுதந்திரக் காற்றால்
இந்த தேசதத்தை சுத்தப்படுத்து
உன் சுகந்தமானகாற்று
இவ்வுலகை சுற்றியடிக்கட்டும்
அதில் இப்புனிதபூமியே
ல்லாங்குழல் வாசிக்கட்டும்
உலகெங்கும் சுதந்திரத்தின்
சுகங்கள் பரவட்டும்
மனங்களனைத்தும் இணைந்துஒருதாய் மக்களாய் வாழட்டும்.....


/இதை சுதந்திரதினத்தன்று :தமிழ்குடும்பத்திற்காக: எழுதியது/
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

32 கருத்துகள்:

 1. 1947-இல் சுதந்திரம் பெற்றும் நாம் உண்மையான சுதந்திரம் பெறாமல் இன்னும் இருட்டறையில் இருக்கிறோம் என்பதை ஆதங்கத்துடன் சொல்லி இருக்கும் தோழியை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  பதிலளிநீக்கு
 2. இல் சுதந்திரம் பெற்றும் நாம் உண்மையான சுதந்திரம் பெறாமல் இன்னும் இருட்டறையில் இருக்கிறோம் என்பதை ஆதங்கத்துடன் சொல்லி இருக்கும் தோழியை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  பதிலளிநீக்கு
 3. தங்களை யார் என்று தெரியாது தங்கள் மனத்தை நிதானமாக புரிந்து கொண்டேன். எல்லோரும் நலம் பெற வேண்டும் உங்களின் வேண்டுதலுக்கு வெற்றி கிடைக்கட்டும்.

  இந்த கட்டுரை அருமை.

  பதிலளிநீக்கு
 4. தங்களை யார் என்று தெரியாது தங்கள் மனத்தை நிதானமாக புரிந்து கொண்டேன். எல்லோரும் நலம் பெற வேண்டும் உங்களின் வேண்டுதலுக்கு வெற்றி கிடைக்கட்டும்.

  இந்த கட்டுரை அருமை.

  பதிலளிநீக்கு
 5. சுதந்திரமே! உன்னை அறுபத்தியிரண்டு வருடங்களுக்கு
  முன்பே பெற்றுவிட்டோம் –ஆனால்
  அதன் அடிச்சுவடுகூட தெரியாமல்
  வாழ்வோரை காணும்போது ..... நல்லா எழுதி இருக்கிங்க மலிக்கா

  பதிலளிநீக்கு
 6. எங்கெல்லாம் சுதந்திரம் அவமதிக்கப்படுகிறதோ அதெல்லாம் சொல்லிவிட்டீர்கள். நன்று.

  பதிலளிநீக்கு
 7. ஒவ்வொரு சுதந்திரமும் அருமை..தொடரட்டும் கவிதைக் கணைகள்.

  பதிலளிநீக்கு
 8. இவ்விடுகை யூத்ஃபுல் விகடனின் குட்பிளாக்ஸ் பகுதியில் வாழ்த்துக்கள் சகோ...

  பதிலளிநீக்கு
 9. சுதந்திரம் இல்லாத நாங்கள் வாழ்த்தை மட்டும் சொல்லிப் போகிறோம்.

  பதிலளிநீக்கு
 10. பாராட்டுகள் மலிக்கா யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்ஸ் பகுதில் இந்த இடுகை வந்திருக்கிறது.
  http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

  பதிலளிநீக்கு
 11. மிக அருமையாக சொல்லிருக்கீங்க மலிக்கா..!

  பதிலளிநீக்கு
 12. வெள்ளையனிடம் பெற்ற சுதந்திரத்தை நாம் கொள்ளையனிடம் கொடுத்து (அரசியல்வாதிகள்) விட்டோம்.

  பதிலளிநீக்கு
 13. சுதந்திரம் சிதைக்கப்பட்ட இடங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதம் அருமை மலிக்கா

  பதிலளிநீக்கு
 14. //சுதந்திரமே! உன்னை அறுபத்தியிரண்டு வருடங்களுக்கு
  முன்பே பெற்றுவிட்டோம் –ஆனால்
  அதன் அடிச்சுவடுகூட தெரியாமல்
  வாழ்வோரை காணும்போது//

  ஏக்கமும்தான் சேர்ந்தே வருகிறது...மீண்டும் எப்போது பெறப்போகிறோம் என்று...


  நல்ல இடுகை.....

  பதிலளிநீக்கு
 15. /1947-இல் சுதந்திரம் பெற்றும் நாம் உண்மையான சுதந்திரம் பெறாமல் இன்னும் இருட்டறையில் இருக்கிறோம் என்பதை ஆதங்கத்துடன் சொல்லி இருக்கும் தோழியை பாராட்ட வார்த்தைகள் இல்லை./

  மிகுந்த மகிழ்ச்சி தோழமையே, பூங்குன்றன் தாங்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும்
  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 16. /கேசவன் .கு கூறியது...
  தங்களை யார் என்று தெரியாது தங்கள் மனத்தை நிதானமாக புரிந்து கொண்டேன். எல்லோரும் நலம் பெற வேண்டும் உங்களின் வேண்டுதலுக்கு வெற்றி கிடைக்கட்டும்.

  இந்த கட்டுரை அருமை/

  வருக வருக தாங்களின் வரவு நல்வரவாகட்டும் கேசவன்,

  முகங்காணாதபோதும் பிறறின் மனதை புரிந்து அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்போதுதான் நாம் மனிதநிலையில் முழுமையகிறோம்,

  என்முகங்காணாதபோதும் நான் எழுதியவைகளுக்கு கருத்துக்கள்தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும் தங்களையும் சேர்த்து என் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன்..

  தொடர்ந்து வாருங்கள்...

  பதிலளிநீக்கு
 17. /sarusriraj கூறியது...
  சுதந்திரமே! உன்னை அறுபத்தியிரண்டு வருடங்களுக்கு
  முன்பே பெற்றுவிட்டோம் –ஆனால்
  அதன் அடிச்சுவடுகூட தெரியாமல்
  வாழ்வோரை காணும்போது ..... நல்லா எழுதி இருக்கிங்க மலிக்கா/

  மிக்க சந்தோஷம் சாருக்கா..

  பதிலளிநீக்கு
 18. /வானம்பாடிகள் கூறியது...
  எங்கெல்லாம் சுதந்திரம் அவமதிக்கப்படுகிறதோ அதெல்லாம் சொல்லிவிட்டீர்கள். நன்று./

  சுதந்திரத்திற்கே சுதந்திரம்கேட்டு நிற்கிறோமோ என சிலநேரங்களில் வருத்தப்படத்தான் முடிகிறது...

  மிக்கநன்றி வானம்பாடிகளார்...

  பதிலளிநீக்கு
 19. பாடசாலைகளில் கல்வி கற்கவேண்டிய பாலகர்கள்
  பட்டாசு தொழில்சாலையிலும்- கல்குவாரியிலும்//
  ஆம் அற்புதமான ஆழமான வரிகள்

  பதிலளிநீக்கு
 20. /இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
  ஒவ்வொரு சுதந்திரமும் அருமை..தொடரட்டும் கவிதைக் கணைகள்../

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்கநன்றி நிஜாம்..

  பதிலளிநீக்கு
 21. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
  இவ்விடுகை யூத்ஃபுல் விகடனின் குட்பிளாக்ஸ் பகுதியில் வாழ்த்துக்கள் சகோ/

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
  வசந்த் சகோதரா..

  பதிலளிநீக்கு
 22. /ஹேமா கூறியது...
  சுதந்திரம் இல்லாத நாங்கள் வாழ்த்தை மட்டும் சொல்லிப் போகிறோம்./

  வருத்தப்படவேண்டாம் தோழியே என தோளில்சாய்த்தபடி ஆறுதல்சொல்த்தான் முடியும் என்பதை நினைக்கும்போதே மனம் வருத்தபடுகிறது ஹேமா.

  எல்லாவற்றிற்கும் முடிவு என்று உண்டு அதுபோல் தங்களுக்கும் தாங்களின் நாட்டிற்க்கும் வெகுவிரைவிலேயே நல்லவைகள் நடக்கட்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் தோழி..

  பதிலளிநீக்கு
 23. /வானம்பாடிகள் கூறியது...
  பாராட்டுகள் மலிக்கா யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்ஸ் பகுதில் இந்த இடுகை வந்திருக்கிறது.
  http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp/

  வானம்படிகளாரின் பாராட்டுக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 24. அது சரிங்க சுதந்திரம் என்பது என்ன?

  பதிலளிநீக்கு
 25. லெமூரியன் கூறியது...
  மிக அருமையாக சொல்லிருக்கீங்க மலிக்கா..!

  மிக்க நன்றி லெமூரியன்..

  பதிலளிநீக்கு
 26. /கவிக்கிழவன் கூறியது...
  சிறப்பாக உளது./

  நன்றி கவிக்கிழவன்..


  புலவன் புலிகேசி கூறியது...
  வெள்ளையனிடம் பெற்ற சுதந்திரத்தை நாம் கொள்ளையனிடம் கொடுத்து (அரசியல்வாதிகள்) விட்டோம்..

  அப்படியும் ஆகிபோய்விட்டது..நன்றி புலிகேசி

  பதிலளிநீக்கு
 27. /S.A. நவாஸுதீன் கூறியது...
  சுதந்திரம் சிதைக்கப்பட்ட இடங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதம் அருமை மலிக்கா/

  மிகுந்த மகிழ்ச்சி நவாஸுதீன் அண்ணா

  பதிலளிநீக்கு
 28. /ஏக்கமும்தான் சேர்ந்தே வருகிறது...மீண்டும் எப்போது பெறப்போகிறோம் என்று.../

  இறைவனே அறிவான்..


  நல்ல இடுகை...../

  மிக்க நன்றி பாலாஜி

  பதிலளிநீக்கு
 29. /வெண்ணிற இரவுகள்....! கூறியது...
  பாடசாலைகளில் கல்வி கற்கவேண்டிய பாலகர்கள்
  பட்டாசு தொழில்சாலையிலும்- கல்குவாரியிலும்//
  ஆம் அற்புதமான ஆழமான வரிகள்../

  நன்றி வெண்ணிறவே...

  பதிலளிநீக்கு
 30. /தியாவின் பேனா கூறியது...
  அது சரிங்க சுதந்திரம் என்பது என்ன?/

  என்ன தியா எனக்கே சந்தேகத்தை கிளப்பிட்டீங்க....

  பதிலளிநீக்கு
 31. தங்களின் கவிதைகள் அனைத்தும் அருமை, தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை எமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக இருக்கிறோம்...

  http://tamilparks.50webs.com

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது