நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கோடையும் - வாடையும்

கோடை குழந்தைகளுக்கு கொண்டாட்டம்-அதன்
வெயிலோ தருமே திண்டாட்டம்

கோடை விரும்புவது குறைந்த உடை
வாடை தேடுவது நிறைந்த போர்வை

வாடை உடம்புக்கு கொண்டாட்டம்-அதன்
குளிரோ நரம்புக்கு திண்டாட்டம்

கோடைவெயில் தேடும் குளுகுளுப்பு
வாடைகாற்று நாடும் கதகதப்பு

கோடையின் மனைவி வாடை
வாடையின் கணவன் கோடை

”ஆகமொத்தத்தில்”

இருவரும் ஒரே கூட்டனி-அவர்கள்
இருவரும் தனித்தனியே வந்தால் நமக்கு எதிரணி

அன்புடன் மலிக்கா

2 கருத்துகள்:

 1. மலிக்கா அக்கா நீங்க பிளாக் ஆரம்பிச்சதில் மிகவும் சந்தோசம், மென்மேலும் வளர வாழ்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் மலிக்கா

  அழகிய வடிவமைப்பு!

  ///கோடையின் மனைவி வாடை
  வாடையின் கணவன் கோடை
  இருவரும் தனித்தனியே வந்தால் நமக்கு எதிரணி///

  நன்றாக இருக்கிறது

  அன்புடன் புகாரி

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது