நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புதுவருட முதல்பரிசும் பட்டமும்.

அன்பும் அறனும் நம் வாழ்வின் நற்பண்புகளாகும்.

கவிக்குள் வாழ்வதும் கவியாய் வாழுவதும் கருத்தரிக்கும் தாய்மைக்கு நெருக்கம் கல்புக்குள் {நெஞ்சுக்குள்} களிப்பினை புகுத்தும்... நீண்ட நாட்களாகிறது நீரோடையில் நீராடி, முகநூல் மக்களை ஆட்கொள்வதால் வலைதளங்கள் சற்றே முடக்கங்கள்தானென சொல்லவேண்டும் அதனுள் நானும் மூழ்கிவிட்டேனவும் சொல்லலாம். என்ன இருந்தாலும் நம் குழந்தை நம் வலைதளம் அதனை பராமரிக்காது விட்டுவிட்டால் செழுமையற்று போகுமல்லவா இனி தொடர்வருகைதந்து நீரோடையில் நீர்வரத்தை அதிகரித்து கவிமீன்களை நீந்தும்படி செய்ய வேண்டுமென எண்ணியுள்ளேன். இறைநாடின்.. இதோ இந்த இனிய ஆண்டின் முதல் பரிசாய் கவிபரிசலும் ”கவிநிலா” பட்டமும்,முகநூலில் கவியருவி குழுமத்தால் நடத்தப்பட்ட கவிப்போட்டியில் என கவிதைகான பட்டமும் பரிசலும் பெற்றுதந்தது மனத்தை நெகிழச்செய்தது எழுத்தறிவித்த இறைவனுக்கே புகழைனைத்தும்.. கவியருவி நிர்வாக குழுவிற்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... முடிவுகள் இதோ: கவியருவி மலிக்காஃபாரூக், வழக்குரைஞர் கவிஞர் ஷாந்தி மீனாக்‌ஷி இருவர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு மிகச் சிறந்த கவிதைகளாகத் தெரிவு செய்யப்பட்டுளவைகளாகும். இருவர்க்கும் தலா உருபா 500/= வீதம் எம்குழுவின் பொருளாளர் கவிஞர் சாராபாஸ் அவர்கள் அனுப்பி வைப்பார்கள். பரிசுக்குரியோர் இருவரும் பொருளாளர் கவிஞர் சாராபாஸ் Sara Bass அவர்களைத் தொடர்பு கொண்டு இருவரின் வங்கி விவரம் அளிக்க வேண்டுகிறேன் வெற்றி பெற்றோர்க்கும், பங்குபற்றியோர்க்கும் உளம்நிறைவான வாழ்த்துகள்!

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பசி"


மானம்
தன்  மானத்தை இழந்து
அவமானத்தை சுமந்து
அறிவுடமையை மடமையாக்கி
அன்னம்கேட்டு கையேந்த வைக்கும்,,,,

அடிவயிற்றில் அமிலம் சுரக்க
அதனனலில் அடிக்கடி
அங்கமெங்கும் வெந்துதுடிக்க
வெட்கம் வேரறுந்து
குலமழிக்கும் நிலையை  தூண்டும்
அச்சம்தன் அச்சானி கழட்டி பிறரை
அச்சுறுத்தியும் பிழைக்கும்...

ஊன் உருகி உயிரைக் கருக்க
உதிரச் செல்கள் தர்ணா நடத்த
வயிறலறி வாய்கண்ணடைக்க
உடல்களைத்து வீதியில்சாய்ந்து
விதி
வீதிஉலா காட்சியாக்கி வருத்தும்...

உயிரின் வேர்காலில்
விகாரத்தின் கொடுக்கொன்று
விடாதுகொத்தி கொத்தி
பசியின் துயரத்திற்கு விசமேற்றும்
வீடற்று தெருக்களிலும் தவக்கோலம் பூட்டும்...

ஆற்றடியை அடியோடு வீழ்த்தி
அங்கத்தை அனுஅனுவாய் மாய்த்து
உணர்வுகளை வெருண்டோடவைத்து
வதன உடமைகளையும்
வேல்வியில் இறக்கி வதைக்கும்...

பணம் பொருளிருந்தும்
பசியில் உண்ணமுடியா நிலைவந்தும்
பட்டினியின் கொடுமைதன்னை
புரிந்தும் புறந்தள்ளி

பசித்துகிடப்போர் அறியாது
தானம்தரா ஈனராய்
ருசியில் புசிப்போரப்போரை
புளிச்சயேப்பத்தின் துர்வாடையோடு
நாளை நரகம் பசியெடுத்து
அகோரியாகி தன் பசியிதனைத் தீர்க்கும்..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எனைவிரும்பி....


நைல் நதியின் நீளத்தை மிஞ்ச
நினைத்த உனதன்பால்
நான் நிலைகுழைந்துதான் போனேன்
நீயற்ற பொழுதுகள்
நீரற்ற நிலமாவதுபோல் உணர்ந்தேன்

உன்போல் யாரும்
என்மீது அக்கரை கொண்டதில்லை
இதுதானோ
இதயமாற்றம் செய்யும் அன்பின் நிலை
அதீத அன்பே ஆன்மாவின் பிள்ளை
அதுவும் மிஞ்சினால் வருமோ சல்லை!

என்னை விரும்பியாய்
எந்நொடியும் இருந்துவிட்டு
எங்கு மறைந்தாய் எனைவிட்டு
எதையும் மறக்குமோ நம்மிதயக்கூடு
எதுவும் அழியுமோ நம்மைவிட்டு

உடல் தடதடக்க
உதிரம் கிறுகிறுக்க
குழைகிறது குமைகிறது
உனைத்தேடும்  கண்கள்!

உயிர் துடி துடிக்க
உணர்வுகள் வெடி வெடிக்க
துடிக்கிறது துவழ்கிறது
உன்னால் களவாடப்பட்ட நெஞ்சம் ...
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது