நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிருடல்காக்கும் உழைப்பு.



ஏழை உழைப்பாளார்கள்

உழைத்துகொண்டேதான்
இருக்கிறார்கள்-
ஏனோ அவர்களின் 

ஊதியம் மட்டும் மிஞ்சுவதேயில்லை!
உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்தது உடல்-அதில்

மிஞ்சும் காசுக்கு தேய்ந்த உடலை 
தே[ற்ற]த்தக் கூட முடிவதில்லை!
உழைப்பாளர்களை
உற்று கவனிக்கும்போது-
அவர்கள்
உடலின் ஒவ்வொரு
எலும்பிலும்
ஏக்கம் தெரியும்

எத்தனை உழைத்தபோதும் -இந்த

எலும்புகள் மட்டுமே

எஞ்சி மிஞ்சுகிறதேயென!


கடும் உழைப்பாளிகளுக்கு
கஷ்டம் தெரியாதாம்

கஷ்டம் தெரியும்போது

கடும் உழைப்பும்

கஷ்டமாக தெரியாதாம்.


உழைப்பவர்களுக்கு
அவர்களின்  வியர்வை

உலர்ந்து விடுவதற்குள்

ஊதியத்தை கொடுத்திடுங்கள்.


உழைப்பாளிகள்
உழைப்பை உதாசினம் 
செய்யாதீர்கள்
ஏழை வியாபரிகளிடம்
அநியாய பேரம் பேசாதீர்கள்.. 
 

வாழ்த்துக்கள் சொல்வதோடு

நின்றுவிடாமல் –அவர்கள்

வாழவும் வழிவகுத்துக் கொடுக்க

வாஞ்சையோடு உதவுங்கள்..


உலகிலுள்ள அனைத்து உழைப்பாளர்களுக்கும்
எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் ..



அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம்

முதிர்ந்துதிரும் இளமைகள்.



வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,
வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு
வயது போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை கொடுக்க
வழியில்லையே என்று!

உடல் உருப்படியான
ஆண்மகன்களுக்கு
உள்ளம் ஊனமானதோ?
பழமுதிர் சோலையாகவேண்டிய
கன்னியற்களுக்கெல்லாம் அதனால்
பாலைவன வாழ்க்கையாகுதோ?

இந்த முதிர்-கன்னிகளின்
தேடலுக்கு முடிவென்ன?
முதுகெலும்பில்லாதவர்களின்
தேவைகளுக்கு தீர்வுதானென்ன?
முன்பக்கம் வேண்டாமென
பின்பக்கம் பல்லிழிப்பதை
தவிர்ப்பதெப்போ?

முதிரவைக்கும்
வரதட்சணையை
எதிர்த்து நில்லுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கணவர் எனும் உறவுக்கு
கெளரவம் சேர்க்க
முன்வாருங்கள்..

அன்புடன் மலிக்கா இறைவனை
நேசி இன்பம் பெறுவாய்.

மானங்கெட்ட காதல்





உலகம் எந்தளவுக்கு போய்கொண்டிருக்கு, பெண்மைக்கும் மதிப்பில்லை, பெற்றோருக்கும் மதிப்பில்லை எல்லாம் காதலென்றபோர்வையில் காமம் கொடுக்கும் தொல்லை.
பலயிடங்களில் இரக்கமெல்லாம் அரக்கத்தனமாகிவிட்டது. இந்நிகழ்ச்சி இப்படி செய்யும் அனைத்துபெண்களுக்கும் ஒரு பாடம், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பெருகிக்கொண்டேதானிருப்பார்கள்.

காதலென்ற போர்வையில்
காமங்கள் அரங்கேறியதால்
ஏழுவருட  இன்றியமையாக் காதல்
இன்று  எழவெடுக்க காத்திருக்கு
இவனைப்போன்ற
பச்சை  துரோகிகளுக்கு
இலவசமாய் பெண்கள்
ப[மு]ந்திபோடவும்  தவமிருக்கு !

காதலை காமத்தோடு
கைக் குலுக்க வைத்தவனே
காதலனாக வேசமிட்டு
கன்னிதிரை விளக்கியவனே
கன்னியின் கண்ணீர்  கண்டும்
கல்நெஞ்சமாகி கிடக்கிறாயே
கா[ம]தல்மோகம் தீர்ந்ததாலே
காத[லை]லியை
காலில்போட்டு மிதிக்கிறாயோ!

உன்னை காதலித்த பாவத்துக்கு
உன் உடல்பசிக்கு இறையாகி
உன்வாரிசை  சுமந்தபடி
ஊர் வசைக்கும் ஆளாகி
உன்முன் கெஞ்சிக்
கண்ணீர் வடிப்பவளை
உதறி உதறி  தள்ளுகிறாயே
உண்மையிலே 
உனக்கு  உள்ளமென்று ஒன்றிருக்கா?

அப்”பாவி”யே
பேதை பெண்ணல்லடி  - நீ
போதைப்பெண்
காதல்போதை
உன்கண்ணை மறைத்ததாலே
கண்விழிக்கா கருக்குஞ்சை
கருப்பையில் சிறையிவைத்து
சித்திரவைதை செய்யும் நீ
சீர்கெட்ட சிறுக்கியடி

உண்மைக்காதல் இல்லையடி
இது உண்மைக்காதல் இல்லையடி
இருமனம் இணைந்தாலும்
திருமணம் நடக்கும் முன்பே
இரு உடல்கள் இணைத்துக்கொண்டு
உடல் சுகத்தை தேடிக்கொண்ட
இந்த காதலெல்லெல்லாம்
 உண்மைக்காதல் இல்லையடி

அடி வெக்கங்கெட்டவளே
உன் முகம் பார்த்து
பேசுவதற்கே மறுப்பவனிடம்
உன்னை வேண்டாமென 
உதறி விடுபவனிடம்
நீதான்
வேண்டுமென வாதாடி நிற்கிறாயே
நீ இல்லையெனறால்
செத்துவிடுவேன் என்கிறாயே
சோற்றைத்தானே உண்ணுகிறாய்
சொரணையேதுமில்லையாடி

கொஞ்சிக் கொஞ்சி மிஞ்சியவன்
குற்றமெல்லாவற்றையும்
உன்மேல் சுமத்தியும்
கெஞ்சுகிறாய் கதறுகிறாய்
கொஞ்சமும்  இரங்கவில்லை
உன்மேல்  ஒருதுளியும் காதலில்லா
கொடுமனங் கொண்டவனென்றுகூடவா
உனக்குப் புரியவில்லை!

உம்போன்ற பெண்களாலே
பெற்றோருக்கும் ஈனமடி
உன்னை பெற்ற பாவத்துக்கு
பெற்றோருக்கும் கிடைக்குதே 
தண்டனையடி!
உறுதியற்ற காதலெல்லாம்
உடல் கேட்டு அலையுமடி
உடல்தேவை தீர்ந்த பின்னே
உதறிவிட்டு நகருமடி

இறையச்சம்  களைந்துவிட்டு
இச்சைகளின்பின்னே நடந்து செல்லும்
உன்னைப்போன்ற பெண்களுக்கு
இதுவெல்லாம்
உலகில் கிடைக்கும் பாடமடி!

இன்னும்
என்னவெல்லாம் நடக்கப்போகுதோடி!
எத்தனை கேவலங்கள்  
கண்முன் நடந்தாலும்
கேடுகெட்டு போவதற்கு
உன்னைபோல்
இன்னும் எத்தனையோ
இளம் ஜோடிகள் தயாரடி..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது