நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மானங்கெட்ட காதல்

உலகம் எந்தளவுக்கு போய்கொண்டிருக்கு, பெண்மைக்கும் மதிப்பில்லை, பெற்றோருக்கும் மதிப்பில்லை எல்லாம் காதலென்றபோர்வையில் காமம் கொடுக்கும் தொல்லை.
பலயிடங்களில் இரக்கமெல்லாம் அரக்கத்தனமாகிவிட்டது. இந்நிகழ்ச்சி இப்படி செய்யும் அனைத்துபெண்களுக்கும் ஒரு பாடம், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பெருகிக்கொண்டேதானிருப்பார்கள்.

காதலென்ற போர்வையில்
காமங்கள் அரங்கேறியதால்
ஏழுவருட  இன்றியமையாக் காதல்
இன்று  எழவெடுக்க காத்திருக்கு
இவனைப்போன்ற
பச்சை  துரோகிகளுக்கு
இலவசமாய் பெண்கள்
ப[மு]ந்திபோடவும்  தவமிருக்கு !

காதலை காமத்தோடு
கைக் குலுக்க வைத்தவனே
காதலனாக வேசமிட்டு
கன்னிதிரை விளக்கியவனே
கன்னியின் கண்ணீர்  கண்டும்
கல்நெஞ்சமாகி கிடக்கிறாயே
கா[ம]தல்மோகம் தீர்ந்ததாலே
காத[லை]லியை
காலில்போட்டு மிதிக்கிறாயோ!

உன்னை காதலித்த பாவத்துக்கு
உன் உடல்பசிக்கு இறையாகி
உன்வாரிசை  சுமந்தபடி
ஊர் வசைக்கும் ஆளாகி
உன்முன் கெஞ்சிக்
கண்ணீர் வடிப்பவளை
உதறி உதறி  தள்ளுகிறாயே
உண்மையிலே 
உனக்கு  உள்ளமென்று ஒன்றிருக்கா?

அப்”பாவி”யே
பேதை பெண்ணல்லடி  - நீ
போதைப்பெண்
காதல்போதை
உன்கண்ணை மறைத்ததாலே
கண்விழிக்கா கருக்குஞ்சை
கருப்பையில் சிறையிவைத்து
சித்திரவைதை செய்யும் நீ
சீர்கெட்ட சிறுக்கியடி

உண்மைக்காதல் இல்லையடி
இது உண்மைக்காதல் இல்லையடி
இருமனம் இணைந்தாலும்
திருமணம் நடக்கும் முன்பே
இரு உடல்கள் இணைத்துக்கொண்டு
உடல் சுகத்தை தேடிக்கொண்ட
இந்த காதலெல்லெல்லாம்
 உண்மைக்காதல் இல்லையடி

அடி வெக்கங்கெட்டவளே
உன் முகம் பார்த்து
பேசுவதற்கே மறுப்பவனிடம்
உன்னை வேண்டாமென 
உதறி விடுபவனிடம்
நீதான்
வேண்டுமென வாதாடி நிற்கிறாயே
நீ இல்லையெனறால்
செத்துவிடுவேன் என்கிறாயே
சோற்றைத்தானே உண்ணுகிறாய்
சொரணையேதுமில்லையாடி

கொஞ்சிக் கொஞ்சி மிஞ்சியவன்
குற்றமெல்லாவற்றையும்
உன்மேல் சுமத்தியும்
கெஞ்சுகிறாய் கதறுகிறாய்
கொஞ்சமும்  இரங்கவில்லை
உன்மேல்  ஒருதுளியும் காதலில்லா
கொடுமனங் கொண்டவனென்றுகூடவா
உனக்குப் புரியவில்லை!

உம்போன்ற பெண்களாலே
பெற்றோருக்கும் ஈனமடி
உன்னை பெற்ற பாவத்துக்கு
பெற்றோருக்கும் கிடைக்குதே 
தண்டனையடி!
உறுதியற்ற காதலெல்லாம்
உடல் கேட்டு அலையுமடி
உடல்தேவை தீர்ந்த பின்னே
உதறிவிட்டு நகருமடி

இறையச்சம்  களைந்துவிட்டு
இச்சைகளின்பின்னே நடந்து செல்லும்
உன்னைப்போன்ற பெண்களுக்கு
இதுவெல்லாம்
உலகில் கிடைக்கும் பாடமடி!

இன்னும்
என்னவெல்லாம் நடக்கப்போகுதோடி!
எத்தனை கேவலங்கள்  
கண்முன் நடந்தாலும்
கேடுகெட்டு போவதற்கு
உன்னைபோல்
இன்னும் எத்தனையோ
இளம் ஜோடிகள் தயாரடி..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

 1. சாட்டையடியாக இருக்கிறது ஒவ்வொரு வரிகளும்.
  காலக்கொடுமை தான் இந்த சம்பவம்.
  அதுவும் இந்த தொலைக்காட்சி சாதாரணப் பட்டவர்களை
  இப்படி அடையாளம் கண்டு அவர்களின் வியாபாரத்திற்காக
  இந்த நிகழ்வை தொடுக்கிறார்கள்.
  முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்ச்சி இது.

  நாளை நாமும் இந்த சமூகத்தில் முகம் காண்பிக்கவேண்டும்
  என்ற நிலையை மனதில் வைத்துக்கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு
  செல்பவர்களும் உணரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. சகோதரி உங்கள் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சாட்டை அடி...

  ஆனால் என்னத்தை சொல்லி என்ன...
  சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் செய்பவர்களும் செய்துகொண்டே இருப்பார்கள் இதுதான் இன்றைய உலகம்.

  பதிலளிநீக்கு
 3. மன்னிக்க வேண்டும்...

  சமுதாயச் சீரழிவின் துவக்கம் எப்போதோ துவங்கிவிட்டது...

  இதில்...
  மனிதமும்..
  மனிதாபிமானமும்...
  இரக்கமும்...
  தனிமனித ஒழுக்கமும்...
  சமூக ஒழுக்கமும்...
  சிதைந்து பல ஆண்டுகளாகிவிட்டது...

  இச்சமுதாய .
  சிக்கிச் சீரழியும்...
  இளைஞர், இளைஞிகளில்..

  சாதியில்லை..
  மதமில்லை...
  இனமில்லை...
  மொழியில்லை...

  அழிவது என்று முடிவான பின்...
  சாதியாவது... மதமாவது...

  இயற்கையை
  மனிதன்
  மறக்க...மறக்க...
  மறுக்க... மறுக்க...
  மறைக்க... மறைக்க....
  வெறுக்க.. வெறுக்க... துவங்கிய போதே

  மனிதனின்...
  மனித இனத்தின்
  அழிவு... பேரழிவு...
  வெகுசீக்கிரமே...

  சாதி... மதம்.. மொழி... இனம்... என்று பாகுபாடின்றி...
  ஒட்டுமொத்த மனிதயினமும் அழியும்...

  இந்த அழிவின் துவக்கம் இது... இதுபோன்ற நிகழ்வுகள்...

  பதிலளிநீக்கு
 4. உம்போன்ற பெண்களாலே
  பெற்றோருக்கும் ஈனமடி
  உன்னை பெற்ற பாவத்துக்கு
  பெற்றோருக்கும் கிடைக்குதே தண்டனையடி!
  உறுதியற்ற காதலெல்லாம்
  உடல் கேட்டு அலையுமடி
  உடல்தேவை தீர்ந்த பின்னே
  உதறிவிட்டு நகருமடி//

  என்னத்தை சொன்னாலும் கேட்கமாட்டாமல் இழிவையே தேடிக்கிறாங்களே மலிக்கா. பட்டாலும் புத்திவராதா ஜென்மங்கள்.

  வரிகள் ஒவ்வொன்றும் சாட்டை அடியான செருப்படி

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது