நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒலிவடிவில் என்கவிதைகள் [இணைய தமிழ் ரேடியோவில்]

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

உங்கள் அனைவருக்கும் தெரிந்ததிருக்கும் என் முதல் கவிதைதொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” வெளியானது. அது வெளியானதிற்கு பின்பு கற்றறிந்தவர்களும். கவிமேதைகளும். நல்லுள்ளம் நிறைந்தவர்களும். என்னை வாழ்த்தியும், என் எழுத்துக்களைபற்றி பாராட்டியும் நிறைய மெயில்வழி கடிதங்கள் வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சியும் புகழும் இறைவன் ஒருவனையே சேரும்.

அப்படி வந்த மெயிலில்  சந்தோஷசெய்தியையும் சுமந்துவந்த மெயில்தான். சாத்தாங்குளம்  பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்.மற்றும். திரு.அப்துல் ஜப்பார் அவர்களிடமிருந்து வந்த அந்த மெயிலைகண்டதும் மனம் சந்தோஷபட்டதுடன் உடனே சஜதாவிலும் விழுந்தேன் இறைவனுக்கு நன்றி சொல்லி,

இறைவன் தந்த இந்த உலகவாழ்க்கையில். மனம் நிறைந்த மணவாழ்க்கை, முத்தான குழந்தைகள். பாசம் மிகுந்த குடும்பத்தார்கள். என எல்லாத்தையும் தந்த இறைவன். எனக்குள் எழும் எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அதையும் உலகறிசெய்ய வாய்ப்பளித்துள்ளானே இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும் நிறைவு. இப்படி ஒரு நிறைவான வாழ்க்கையைதந்த இறைவனை அனுதினமும்   நேசிப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

 ”அப்படி என்ன எழுதியிருந்தார்கள்  என்று கேட்கிறீர்களா?” இதோ அவர்கள் எழுதிய அன்பான  கடிதத்தலிருந்து சிலவற்றை  இங்கே உங்கள் பார்வைக்கு

அன்புள்ள ‘பேத்தி’
அஸ்ஸலாமு அலைக்கும்,
.உங்களின் படைப்பான “ உணர்வுகளின் ஓசை” என் கைகளில் கிடைத்தது.
நேற்று உங்கள் நூலை வாசித்தேன். பாசாங்குகள் இல்லாத பாணி. எளிய-இனியநடை. சொல்லும் முறையில் ஒரு துல்லியம். உணர்வுகளின் வெளிப்பாட்டில் ஓர் அடர்த்தி.அதன் வடிவமைப்பில் ஒரு நேர்த்தி. புலம் பெயர்ந்தும் - கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் வாழும் என் இனப் பெண் ஒருத்தி இவ்வளவு கெட்டிக்காரியா...?-----வியந்து போனேன். One time wonder - ஆக நின்று விடாமல் இனியும் பல நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்பது என்னுடைய ஆசை - ஆசி. வாழ்க....வளர்க...தொடர்க...!

இன்ஷா அல்லாஹ் நான் தாயகம் திரும்பியதும் உங்களின் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து ஒலிபரப்புச் செய்ய எண்ணியுள்ளேன். உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பையும் சலாத்தையும் தெரிவியுங்கள்.
வஸ்ஸலாம். ஹுதா ஹஃபிஸ் -
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

அவர்கள் சொன்னதுபோல் இதோ இன்று என் கவிதை தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள் http://worldtamilnews.com/ இணைதளத்தில்,
திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் கம்பீரக்குரலால் வாசிக்கப்பட்டு ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
அவர்களில் கம்பீரக்குரலால் வாசிக்கப்படுவதை கேட்டு, என் உடலும் உள்ளமும் சிலிர்கிறதுது . இன்னும் அடுத்தடுத்து இடையிடையில் மற்ற தேர்வுக் கவிகளும் வாசிக்கப்படுமாம்
அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம். முடிந்தால் அங்கிருக்கும் ஃபீட் பேக்கில் என் கவிதைகளைபற்றி உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்..

எத்தனையோ கவிபடைப்போர்களுக்கிடையில் என்னுடைய கவிதைகளையும்படித்துவிட்டு அதனை பாராட்டி கடிதம் எழுதியதோடில்லாமல், தான் சொன்னதையும் சொன்னபடி நிறைவேற்றிய ”அப்பா” அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்து இன்னும் என்னைபோன்ற வளரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதோடு .

என்கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/ இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான சாத்தாங்குளம் திரு.அப்துல் ஜப்பார் அவர்களுக்கும் எங்களின்   அன்புநிறைந்த நன்றிகளை பாசத்தோடு சொல்லிக்கொள்கிறோம் ..

இன்ஷா அல்லாஹ் இன்னும் இதோன்று நல்லுள்ளங்களின் வெளிப்பாடுகளை இடையிடையே வெளியிடுவேன்.

என் மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் தாங்கள் அனைவருக்கும் பங்குண்டு.
அன்பாலும் பாசத்தாலும் ஊக்கமென்னும் கருத்துக்களாலும் தாங்கள் அனைவரும் என்னை தூண்டிக்கொண்டிருக்கிறீகள். இன்னும் பல நல்ல ஆக்கங்களை தருவதற்கு தூண்டுகோல் இருக்கவேண்டுமெனவும். இறைவனிடம் வேண்டும் உங்களின் பிராத்தனைகளில் எங்களுக்கும் சேர்த்து வேண்டும்படியும் கேட்டுகொள்கிறேன்...


என்றும் உங்கள் அன்பில் வாழநினைக்கும்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

பெண் எழுத்து...

என் எழுத்து அதாவது பெண் எழுத்து இதைபற்றிய தொடர்தான் இது.  இன்று மார்ச் 17  எங்களின் இரு மனங்கள் இணைந்ததிருமணநாளில் என்னெழுத்தைபற்றி எழுத அழைத்த ஸாதிகா அக்காவிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.

எழுத்து இது எல்லோருக்கும் சொந்தம். எழுதப்படிக்கத்தெரியாதவர்கூட எண்ணும் எண்ணத்தை இதயத்தில் எழுதிக்கொள்ளலாம் நியாபங்களாக என்ன சரிதானே! எழுத்து இதன் எழுச்சியை கடந்த சிலகாலங்களாகதான் உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன் அதனை உளமாற நேசிக்கிறேன்.உள்ளதை சொல்லவேண்டுமென்றால் இப்போதுதான் எழுதிப்படிக்க கற்றுக்கொள்கிறேன்.

எழுத்தால் எதையும் உயர்தலாம். அதேபோல் எதையும் தாழ்த்தலாம் என்பதையும் உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள் இவ்வுலகத்தில். எழுத்துச்சுதந்திரம் இருப்பததென்பதற்க்காக எதையும் எழுதிவிடலாமென்று நினைப்பதல்ல, அது ஆணெழுத்தாக இருக்கட்டும். பெண்ணெழுத்தாக இருக்கட்டும்.தன் சுயலாபத்திற்காக தனக்கு எழுத்துச்சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதாய் நினைத்து தாகதவைகளையும் தான்தோன்றிதனத்தையும். எழுத்துக்கள் மூலம் பரப்பி, பிற மனவுணர்வுகளை நோக்கடிப்பதிலும்.ஏன் சிலநேரம் அவ்வெழுத்தினால் உயிர்களைகூட சாகடிப்பதிலும் என்ன லாபம்?

ஆண். தன் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், குளிரூட்டி குவித்தும். கிளர்ச்சியூட்டி சிலிர்த்தும். கோபக்கனல்கொண்டு கொதித்தும். எழுத்துக்களை படைக்க நினைக்கிறான். படைப்பான் எல்லைக்கோட்டைத்தாண்டி. பலநேரங்களில் அகம்புறம் அனைத்தும் கூனிக்குறுவதுபோலவும் அமையும். பெண். தன் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், மென்மையாகவும். அதே சமயம் அதனுள் அடங்கிய பொருளை அழுத்தந்திருத்தமாகவும் தன் எழுத்துக்களால் படைக்க நினைக்கிறாள் படைப்பாள்.சிலநேரம் சற்று அத்துமீறி. ஆணைபோன்று எழுதுவதற்கு பெண்ணுக்கு தெரியாமல் அல்ல, ஆனால் அங்கேதான் பெண்மையின் ரகசியமிருக்கிறது.அதை வெளிப்படுத்திவிட்டால் அப்புறம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடுமே! வித்தியாசங்கள் வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையிலும் சரி. மற்றவைகளிலும் சரி. ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.

ஆண் பெண் படைப்புகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், வெவ்வேறு மாற்றங்களோடுதான் படைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் உணர்ந்திருந்திருக்கிறோம் உணர்த்தப்பட்டிருக்கிறோம்.இருவரும் வெவ்வேறு மாற்றங்களோடு படைக்கப்பட்டிருந்தாலும், இருவருக்கும் ஏற்படும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஒன்றாகயிருக்கும்போது அதை வெளிப்படுத்தும் முறைகளில் வித்தியாசங்கள் ஏற்ப்படும் இது இயற்கை.சிலநேரம் இதையும்மீறி ஒன்றிபோயிருக்கும் அது விதிவிலக்கு.

எழுத்துக்கள் என்பது விருட்ச்சத்தை தரக்கூடிய விதை.நல்லெண்ணங்களால் உருவாகும் நல்லெழுத்துக்கள் நற்விதைகளாகி நல் விருட்ச்சத்தைத்தரும் இந்த நானிலமே போற்றும்படி. தீய எண்ணங்களால் உருவாக்கப்படும் எழுத்துக்கள். சட்டென முளைத்து, சடசடவென பரவி, பட்டென சருகாகும் பலரின் சாபத்திற்குள்ளாகி. ஒரு எழுதுகோல்[தட்டச்சுவிரல்கள்] அதன் பணியை செவ்வன செய்தால் செழித்து நிற்கும் பலரின் வாழ்வு. அதே சீர்கெட செய்தால் செத்தொழியும் பல பலரின் மனவுணர்வு. 

ஆணின் சுதந்திரம்போல் பெண் சுதந்திரம் எதிர்பார்ப்பது சரியா? அது விபரீதத்தை உண்டாக்குமல்லாவா? அதேபோல் பெண் எழுத்துக்களிலும் ஓர் வரையரை வகுத்துக்கொள்வது நல்லது. அதேபோல் ஆண்களும் வகுத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாகும் [இது என் கருத்து யார்மீதும் திணிக்கவல்ல]  வரையரையோ எல்லைகளையோ பெண்ணுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டியதில்லை அது தானே வந்துவிடும்.[வராவிட்டால் அதுக்கு நாம் பொருப்பல்ல] நம் எண்ணங்களை எப்படி அமைத்து அதை எப்படி செயல்படுத்தவேண்டும் என்று தனக்கென்ற ஓர் எல்லை வகுத்துக்கொண்டு,[எழுத்துக்கு எல்லையில்லை என்று வீண்வாதங்கள் செய்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை] சொல்லவந்த செய்திகளை தீர்க்கமாகவும். அதே சமயம் தெளிவாகவும். சொல்லிவிட்டால் அதுவே தன் செயலுக்கும், தன் எழுத்துக்கும். கிடைத்த முதல்வெற்றி .

அதையே கொஞ்சம் வரையரையை மீறி மூர்க்கமாகவும்.முகம்சுழிக்கும் வார்த்தைகளாகவும் எழுதிப்பாருங்கள். சொல்லிப்பாருங்கள். என்ன கிடைக்குமென்று!.

நம்மிடமிருந்து உதிரும் வார்த்தைகள். அது வாயிலிருந்தாகட்டும். பேனாவிலிருந்தாகட்டும். அல்லது கணினிப்பலகையிலிருந்து தட்டச்சு செய்யும் விரல்களிருந்தாகட்டும். அவை மிக உயர்ந்தாக இருக்குமானால் நம் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிந்ததுபோலிருக்கும். காலங்கள் பல கடந்தபின்னும் பலமனங்களில் உன்னதமாக நிலைத்திருக்கும்..

ஏதோ எனக்கு தெரிந்தவைகளை உளறிவிட்டேன். எதுவும் கூடக்குறைய எழுதியிருந்தால் பொருந்திக்கொள்ளவும்.
என்னுடைய கருத்து பிறருக்கும் பிடித்துதான் ஆகவேண்டும்.அல்லது என்கருத்தோடு ஒத்துதான் போகவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிடித்திருந்தால் அதை ஏற்க்க மனமிருந்தால் அதைவிட சந்தோஷம் வேறுயில்லை.

அப்புறம் ஒன்றை சொல்லமறந்துட்டு போயிடப்போகிறேன். இது தொடர், அழைக்கனுமே  யாரையாவது. பெண்களாக அவர்களைபற்றி சொல்லிக்கொண்டிருந்தால் எப்புடி அதுக்கு எதிர்மறையான ஆண்களைத்தானே அழைக்கனும்.”யாரை அழைக்கலாம்:  ம்ம் ம்.

வக்கீல். மோகன் குமார்
டாக்டர். Dr PKandaswamyPhD
அய்யா.G.M  பாலசுப்ரமணியன் 
அய்யா  Ramani 


வாங்க  வாங்க வந்து உங்களோட கருத்துக்களையும் 
பதியுங்கள் பகிருங்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த நீரோடை
நிரம்பி வழியும் கவிதைநீரால்.

பேராசை!...


ன்னொரு முறை
இருளுக்குள்
இருந்து பார்க்க ஆசை!

ம்சைகளில்லா
இன்பங்களுக்குள்
இருந்து பார்க்க ஆசை!

றுக்க மூடியிருந்தும்
இருவிழிகளின் இடுக்கில்
ஒளிகளின்
ஊடுருவலிருந்ததே!

வ்விருளை
அனுபவித்து ரசிக்க
அன்னையின் கருவறையில்

மீண்டும்

ன்னொரு முறை
இருந்து பார்க்க ஆசை
இமைகளைமூடி
இவ்வுலம் மறக்க ஆசை...

இக்கவிதை  திண்ணையில் வெளிவந்துள்ளது
நன்றி திண்ணை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது