அஸ்ஸலாமு அலைக்கும்:
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.
”உணர்வுகளின் ஓசை” இதுதான் என் கவிதைகளின் முதல் தொகுப்பு. [என்னுடைய மகள் தேர்ந்தெடுத்த தலைப்புதான் இது] ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் ஒவ்வொருவிதமான கனவுகளும். நினைவுகளும். ஆசைகளும். இன்னுமும் பல பல விதங்களில் நிரம்பிக்கிடக்கும் . அவைகளின் பிரதிபலிப்பை சிலரால் வெளிப்படுத்த சந்தர்பங்கள் அமையும் . சிலருக்கு அதை வெளிப்படுதுவதற்கான சந்தர்பங்கள் அமையாது. அமைத்துக்கொள்ளவும் சிலர் விரும்புவதில்லை.ஆக மொத்தத்தில் அனைவருக்கும் உணர்வுகளிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அப்படித்தான் என்னுள்ளும் அந்த உணர்வுகள் ஊற்றெடு[த்தது]க்கிறது.
என்னைபோல்தானே பிறருக்கும் துன்பம். துயரம். சிரமம். சந்தோஷம். ஆசை. கனவு. வலி. வேதனை. சாதனை.வெற்றி. தோல்வி. என இருக்கும். அதையும் என்மனம் உணர்வதை உணர்ந்து அதை ஓசையாக ஒலிக்கச்செய்ய முயற்சித்துள்ளேன் இத்தொகுப்பின் வாயிலாக.
”உணர்வுகளின் ஓசை”இந்த கவிதை தொகுப்பினை படித்துவிட்டு குறை நிறைகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.
25/02/2011 வெள்ளிக்கிழமை அன்றுமாலை 6 மணிக்கு. துபை லேண்ட் மார்க் ஹோட்டலில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை நடத்திய இஸ்லாமிய இலக்கியவிழா மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழாவில்
காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தீரன் ”திப்பு சுல்தான்” காவியம். மற்றும் தொழிலதிபர் திரு கீழை சீனாதானா அவர்களின்
”நான் நேசிக்கும் திருக்குர்” ஆன் விளக்கமும் - நீதியும்.
என்ற குறுந்தகடு மற்றும் என்னுடைய ”உணர்வுகளின் ஓசை.” கவிதை தொகுப்பும் வெளியிடப்பட்டது.
சங்கமம் டிவி. கலையன்பன் ரபீக் அவர்கள் தொகுத்துவழங்க, திரு. மஃரூஃப் காக்கா அவர்கள் கிராத் ஓத விழா இனிதே துவங்கியது.
வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடைபோர்த்தி, பூங்கொத்தும். நினைப்பரிசுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவர்,காவியத்திலகம். டாக்டர் திரு ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்கள் ”உணர்வுகளின் ஓசை” புத்தகத்தை வெளியிட, தமிழக கவிஞர் பேரவைத் தலைவர், பாடலாசிரியர், கவிச்சித்தர் திரு மு.மேத்தா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அத்துடன்.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளரும்,இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான முனைவர் திரு. சேமுமு. முஹமதலி அவர்களும்.
இலங்கை எழுத்தாளர் கலாபூஷணம். திரு.மானா மக்கீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.
.அப்படியுள்ள மனிதர்களில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். நான் சிறியவயதில் தந்தையை இழந்தவள்.அந்தபாசத்தை என் தாய்மாமனிடம் உணர்ந்தவள்.எனக்குள் உணரபட்டவைகளை காகிதத்தில் கிறுக்கிய கிறுக்கல்களை தொகுத்து வைத்திருந்த வேளையில் திருச்சி சையதண்ணன் மூலமாக காவியத்திலகம் தந்தை. ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்களிடம் காண்பிக்க, சென்ற வருடம் சென்றிந்தபோது எல்லாம் பேசிவிட்டு கிளம்பும்போது சொன்னோம் என் கவிதை தொகுப்பென்றுஒன்றுவெளிவந்தால், நான் துபையில் இருந்து அதை வெளியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தாங்களின் கரத்தால் வெளியிட வேண்டும் வாப்பா என்று சொன்னோம் .
அதையின்று சாத்தியப்படுத்தியது இந்நிகழ்வு, நாங்கள் இம்முறை அவர்கள் வந்திருப்பதையறிந்து பார்க்கசென்றபோதுதான் தகவல் வந்தது மணிமேகலை பிரசுரத்திடமிருந்து.எனது புத்தகம் ரெடியாகிவிட்டது என்று, என்ன ஒரு சந்தர்ப்பமென்று மகிழ்ச்சியாக இருந்தது அதை தந்தையிடம் தெரிவித்து விழாவில் வெளியிட முடியுமாயென கேட்டபோது, அப்படியா சந்தோஷம் நானும் அமைப்பின் மற்ற உறுப்பினர்களையும் கலந்துகொண்டு சொல்கிறேன். என்று சொல்லிவிட்டு சரி இப்போது எப்படி வரவழைப்பது விழாவிற்கு மிககுறுகிய நாட்கள்தானே உள்ளது என்றார்கள்.நீங்கள் மற்றவர்களிடம் கேட்டு ஒப்புதல்பெற்றுசொல்லுங்கள் வரவழைக்கமுடியுமா என்று முயற்சிக்கிறோம் என்று சொல்லிவந்தோம் .
செவ்வாக்கிழமை தகவல் தந்தார்கள் இறைவன் நாடியபடி.
உடனே மணிமேகலை பிரசுரத்திற்கு போன்செய்து பிரதி ரெடியாக உள்ளவிபரத்தை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு, கூரியரில் அனுப்பினால் குறைந்தது 48 மணிநேரமாவது ஆகுமென்றும் அதாவது.விழா நடக்கும் வெள்ளிகிழமை அன்றுதான் கிடைக்குமென கூறினார்கள்.மேலும் கூரியரில் கூடுதல் புத்தகம் அனுப்பமுடியாதெனவும் முடிந்தவரை அனுப்புகிறோமென்று கூறினார்கள். இருப்பினும் மணிமேகலை பிரசுரத்தாரின் முழுமுயற்சியில்.” புளு டார்ட் கூரியர் சர்வீஸ்மூலமாக 24 மணிநேரத்தில் எங்களுக்கு புத்தகம் கையில் கிடத்தது” [எவ்வளவு செலவானது என்பதைபற்றிமட்டும் கேட்கக்கூடாது.] நான் வேண்டாமென்றும் என்னவரான என்மச்சானின் அக்கறைதான் இக்கவிதைதொகுபிற்கான முழு உழைப்பும். எழுத்துக்கள்மட்டுமே என்னுடையது அதை ஏடாக்கியது என்னவரே]
மலிக்கா ஃபாரூக்.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.
”உணர்வுகளின் ஓசை” இதுதான் என் கவிதைகளின் முதல் தொகுப்பு. [என்னுடைய மகள் தேர்ந்தெடுத்த தலைப்புதான் இது] ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் ஒவ்வொருவிதமான கனவுகளும். நினைவுகளும். ஆசைகளும். இன்னுமும் பல பல விதங்களில் நிரம்பிக்கிடக்கும் . அவைகளின் பிரதிபலிப்பை சிலரால் வெளிப்படுத்த சந்தர்பங்கள் அமையும் . சிலருக்கு அதை வெளிப்படுதுவதற்கான சந்தர்பங்கள் அமையாது. அமைத்துக்கொள்ளவும் சிலர் விரும்புவதில்லை.ஆக மொத்தத்தில் அனைவருக்கும் உணர்வுகளிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அப்படித்தான் என்னுள்ளும் அந்த உணர்வுகள் ஊற்றெடு[த்தது]க்கிறது.
என்னைபோல்தானே பிறருக்கும் துன்பம். துயரம். சிரமம். சந்தோஷம். ஆசை. கனவு. வலி. வேதனை. சாதனை.வெற்றி. தோல்வி. என இருக்கும். அதையும் என்மனம் உணர்வதை உணர்ந்து அதை ஓசையாக ஒலிக்கச்செய்ய முயற்சித்துள்ளேன் இத்தொகுப்பின் வாயிலாக.
”உணர்வுகளின் ஓசை”இந்த கவிதை தொகுப்பினை படித்துவிட்டு குறை நிறைகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.
25/02/2011 வெள்ளிக்கிழமை அன்றுமாலை 6 மணிக்கு. துபை லேண்ட் மார்க் ஹோட்டலில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை நடத்திய இஸ்லாமிய இலக்கியவிழா மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழாவில்
காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தீரன் ”திப்பு சுல்தான்” காவியம். மற்றும் தொழிலதிபர் திரு கீழை சீனாதானா அவர்களின்
”நான் நேசிக்கும் திருக்குர்” ஆன் விளக்கமும் - நீதியும்.
என்ற குறுந்தகடு மற்றும் என்னுடைய ”உணர்வுகளின் ஓசை.” கவிதை தொகுப்பும் வெளியிடப்பட்டது.
சங்கமம் டிவி. கலையன்பன் ரபீக் அவர்கள் தொகுத்துவழங்க, திரு. மஃரூஃப் காக்கா அவர்கள் கிராத் ஓத விழா இனிதே துவங்கியது.
வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடைபோர்த்தி, பூங்கொத்தும். நினைப்பரிசுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
திரு.கீழை சீனா தானா அவர்களின் “நான் நேசிக்கும் திருக்குர் ஆன்” விளக்கமும்- நீதியும் குறுந்தகடு வெளியிடப்பட்டது.
இலங்கை எழுத்தாளர் கலாபூஷணம்.மானா மக்கீன் அவர்கள் உரையாற்றியபோது.
இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவர்.காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தீரன் ”திப்பு சுல்தான்”காவியம் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய தலைமை கழகத்தின் பொதுச்செயலாளரும்.
முனைவர்ருமான திரு
சேமுமு. முஹமதலி அவர்கள் வெளியிட,
பிரபல கிரிகெட் வர்ணனையாளரும்.தமிழ் அறிஞருமான.
சாத்தான்குளம்.திரு அப்துல் ஜப்பார் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
இதோ இத்தருணம்.இத்தருணம்.எனக்குள் ஆயிரமாயிர உணர்வுகளின் ஓசைகள் ஒலிக்க. கற்றறிந்த மேதாவிகளின் முன்னிலையில்.கற்றறியா என்படைப்பு வெளியிடப்பட.உடலில் இயங்கும் அத்தனை நரம்பெழும்புகளின் இயக்கங்களும் சற்று அடங்கியெழுந்து ஆர்ப்பரித்தது ஆனந்ததில். எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
பலவருடங்கங்கள் குழந்தையிலா பெண்மை கருத்தரித்து அதை ஈன்றடுக்கும் தருணம் எவ்வாறிருக்குமோ! அதே நிலையில் அன்றென்னை உணரும்படியான வரத்தை தந்த இறைவனுக்கும். இத்தாய்மை தன்மையை என்னிலிருந்து வெளிபடுத்தி இவ்வுலகம் அறியும்படிசெய்ததோடு எனக்கு தாயுமானவாராகயிருக்கும் என்மச்சானை நான் கணவராக அடைந்தற்க்கு இறைவனுக்கும் என் தாய்மாமன்[தற்போது உயிரோடுயில்லை] அவர்களுக்கும். என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வாழ்க்கைதுணை சரிவர அமைந்துவிட்டால் அவளுக்கு சொர்க்கம் ஈருலகிலுமே கிடைத்திடும்.
இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவர்,காவியத்திலகம். டாக்டர் திரு ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்கள் ”உணர்வுகளின் ஓசை” புத்தகத்தை வெளியிட, தமிழக கவிஞர் பேரவைத் தலைவர், பாடலாசிரியர், கவிச்சித்தர் திரு மு.மேத்தா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அத்துடன்.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளரும்,இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான முனைவர் திரு. சேமுமு. முஹமதலி அவர்களும்.
இலங்கை எழுத்தாளர் கலாபூஷணம். திரு.மானா மக்கீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.
ஒரு பெண்ணின் தனித்திறமைகளை வெளிகொண்டுவர வீட்டிற்குள் உள்ளர்வர்கள் முனையும்போதும்.இச்சமூகத்தின் சிலரால் அவளுடைய திறமைகள் முடக்கப்பட்டு முன்னேறத் தடைவிதிக்கபடுவாள் என்பது உண்மைதான்.அதையெல்லாம் தாண்டிவர அவளுக்கு உறுதுணையாக அவளின் குடும்பம் இருப்பது எல்லாருக்கும் வாய்க்காத ஒன்று. அப்படியொரு இறைவன் அருளிய வாய்ப்புதான் எனக்கும்.
எல்லோருக்கும் உங்க மச்சானின் மனதைபோலிருக்குமென்று நினைத்தால் எப்படி அப்படிங்கிறீங்களா! இல்லையிலை அதேபோன்று நல்லுள்ளம்கொண்ட சில மனிதர்களும் இருக்கிறார்கள்

அதையின்று சாத்தியப்படுத்தியது இந்நிகழ்வு, நாங்கள் இம்முறை அவர்கள் வந்திருப்பதையறிந்து பார்க்கசென்றபோதுதான் தகவல் வந்தது மணிமேகலை பிரசுரத்திடமிருந்து.எனது புத்தகம் ரெடியாகிவிட்டது என்று, என்ன ஒரு சந்தர்ப்பமென்று மகிழ்ச்சியாக இருந்தது அதை தந்தையிடம் தெரிவித்து விழாவில் வெளியிட முடியுமாயென கேட்டபோது, அப்படியா சந்தோஷம் நானும் அமைப்பின் மற்ற உறுப்பினர்களையும் கலந்துகொண்டு சொல்கிறேன். என்று சொல்லிவிட்டு சரி இப்போது எப்படி வரவழைப்பது விழாவிற்கு மிககுறுகிய நாட்கள்தானே உள்ளது என்றார்கள்.நீங்கள் மற்றவர்களிடம் கேட்டு ஒப்புதல்பெற்றுசொல்லுங்கள் வரவழைக்கமுடியுமா என்று முயற்சிக்கிறோம் என்று சொல்லிவந்தோம் .
செவ்வாக்கிழமை தகவல் தந்தார்கள் இறைவன் நாடியபடி.
உடனே மணிமேகலை பிரசுரத்திற்கு போன்செய்து பிரதி ரெடியாக உள்ளவிபரத்தை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு, கூரியரில் அனுப்பினால் குறைந்தது 48 மணிநேரமாவது ஆகுமென்றும் அதாவது.விழா நடக்கும் வெள்ளிகிழமை அன்றுதான் கிடைக்குமென கூறினார்கள்.மேலும் கூரியரில் கூடுதல் புத்தகம் அனுப்பமுடியாதெனவும் முடிந்தவரை அனுப்புகிறோமென்று கூறினார்கள். இருப்பினும் மணிமேகலை பிரசுரத்தாரின் முழுமுயற்சியில்.” புளு டார்ட் கூரியர் சர்வீஸ்மூலமாக 24 மணிநேரத்தில் எங்களுக்கு புத்தகம் கையில் கிடத்தது” [எவ்வளவு செலவானது என்பதைபற்றிமட்டும் கேட்கக்கூடாது.] நான் வேண்டாமென்றும் என்னவரான என்மச்சானின் அக்கறைதான் இக்கவிதைதொகுபிற்கான முழு உழைப்பும். எழுத்துக்கள்மட்டுமே என்னுடையது அதை ஏடாக்கியது என்னவரே]
கூரியரில்வந்ததைதந்தையிடம்ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் மேற்கொண்டமுயற்சியால் யார் மனமும் கோணாதவாறு என் புத்தக வெளியீட்டை நடத்திய விதம். அனுபவமும் பெரியவகளுக்கே உண்டான அன்பான அணுகுமுறையும் அழகியவெளிப்பாடுகளாய்இருந்தது. அதோடுஅவர்கள் ஆற்றியஉரையின்போது என்னைபற்றியும் என் ”உணர்வுகளின் ஓசைகள்” பற்றியும் பாராட்டி பேசியது சிறிதளவாகவேயிருந்தாலும் எங்களின் மனங்களை மிகவும் ஆனந்தமடையச் செய்தது.
புத்தகம் வெளியிட்டு முடிந்ததும்.என்னுடைய புத்தங்களை அவர்களே பெரிவர்களுக்கு எடுத்துச்சென்றுகொடுத்ததைபார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்களின் மகள் சாமிலா சொன்னார் ”ராத்தா வாப்பாவைப்பாருங்கள் அவர்களே போய் உங்களின் புத்தகத்தை எல்லாருக்கும் தாராங்க மலிக்காமகள்மீது அவ்வளவு பிரியம்! என்று அவர்களின் மகளே என்மீது தன்தந்தைக்குப் பிரியம் என்று சொன்னபோது தந்தையின் பாசத்தைகண்டு நெகிழ்ந்தேன். தந்தை. தாய். தங்கை. அண்ணன் தம்பிகள். என்று ஒரு குடும்பமே கிடைத்துள்ளது. அவர்கள் அனைவருமே மிகுந்த அன்புள்ளவர்களாக அக்கறையுள்ளவர்களாக இருப்பதை பார்க்கும்போது நெகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது.அவர்களுக்காக எங்களின் துஆவும் எங்களது நன்றிகளும் என்றும் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
தொழிலதிபர் ஈ டி ஏ நிறுவனதின் நிவாக இயக்குனர். திரு சையது சலாவுதீன் அவர்களை சந்தித்து என்னுடைய புத்தகத்தை கொடுத்து என்புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு விமர்சனம் தாருங்கள் அது என் எழுத்துக்களுக்கு ஊக்கத்தை தரும்என்றுகூறினேன்.அதைஅவர்கள்.மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டதோடு உடனே புரட்டிப்பார்த்தபடி,
நெருங்கியவர்களோடு பேசுவதைபோல் பேசினார்கள்.[நாங்கள் முதல்முறையாக அவர்களிடம் பேசுகிறோம்]
பின்பு வந்து அமர்ந்துவிட்டு சிறிதுநேரம் கழித்து எதார்த்தமாக என்பார்வை அவர்கள்பக்கம் திரும்பியபோது என்புத்தகத்தை இன்னும் அவர்கள் புரட்டிக்கொண்டிருப்பதை பார்த்து நெஞ்சம் நிறைவடைந்தது. அடுத்து அவர்களின் தம்பி திரு கீழை சீனாதானா அவர்களும் அந்தபுத்தகத்தை வாசிப்பதை கண்டு ரொம்ப சந்தோஷம் அடைந்தேன். திரு.கீழை சீனாதானா அவர்களும் ஒரு எழுத்தாளர் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே அவர்களின் புத்தகங்களை நான் வாசித்துவிட்டு அவர்களிடம் போனிலும் பேசியும் உள்ளேன்.

திரு சையது சலாவுதீன் அவர்கள் கிளம்பும்சமயம் அவர்களை பார்க்க மீண்டும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது.. உடனே அவர்கள் உன் புத்தகத்தைதான் படித்துக்கொண்டிருந்தேன் முதல் மூன்று கவிதைகள் படித்தபோதே அருமையாக இருந்தது மீதத்தையும் படிப்பேன் என்று சொல்லியதோடு அன்பளிப்பாக 1000. திர்கம் எடுத்து தந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ”இல்லையில்லை வேண்டாம்” என தயங்கிய நேரத்தில். ”காக்கா அவர்களிடமிருந்து அன்பளிப்பு பெருவது நமக்கு பெருமைதான் பெற்றுக்கொள் என சகோதரர் S M ஃபாரூக் அவர்கள் கூறியபோது என்னால் மறுக்கமுடியவில்லை.
பெரும் செல்வந்தர்கள் சாதரணமானவர்களிடம் பேசுவதற்கே தயங்குவார்களாம்.ஆனால் பணம்படைத்த மனிதர்களில் கண்ணியமிக்க பண்பானவர்களும் உண்டு என்பதற்கு உதாரணம் இவர்களைபோன்றவர்கள்தான் என்பதை நேரில் உணர்ந்தேன். எல்லோரிடமும் இயல்பாய் மிக அன்பாய் பேசும்தோரணை இறைவன் வகுத்த வழியில் நடப்பதை எடுத்துக்காட்டுகிறது .அவர்கள் என் எழுத்துகளை வாசித்ததே எனக்கு மிகப் பெருமிதமாக இருந்தது
கவிச்சித்தர் மு.மேத்தா அவர்கள். தன்னுடைய நாயகம் ஒரு காவியம் என்ற நூலில், குகையில் சிலந்தி நெய்த திரைச்சீலை என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹிவஸ்ஸலம் அவர்கள் காலத்தில் நடந்த ஒரு அற்புதமான நிகழ்வை கவிதையாக்கிவடித்திருப்பதை அருமையாககவிபாடிகாட்டினார்கள். அதோடு தன்னுடையபேச்சில் எனது”உணர்வுளின் ஓசை” என்ற இந்நூலையும் குறிப்பிட்டு ஒருசிலவரிகள் பாராட்டி பேசினார்கள்.
இலங்கைஇசையரசி.நூர்ஜஹான்அவர்கள்.இஸ்லாமியப் பாடல்களை தனது இனிமையான குரலின்மூலம் அருமையாக பாடினார்கள். அவர்களிடம் பேசியபோதுமிகுந்தஅன்போடு பேசினார்கள். தாய்மையுணர்வோடு நெற்றிலும் கன்னத்திலும் முத்தமிட்டு நெகிழ்ந்து இன்னும் பல நல்ல படைப்புகளை உருவாக்கும்மா என பாசத்தோடு வாழ்த்தினார்கள்.
முனைவர் திரு சேமுமு. முஹமதலி அவர்கள். பேசிய பேச்சு இன்னும் கொஞ்சம் நீளாதா என்ற வகையில் மிக தெளிவாக . இஸ்லாத்தைபற்றியும். இலக்கியத்தைபற்றியும். சீரழிந்துவரும் மனங்கள் பற்றியும் மிகமிக அருமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உரையாற்றினார்கள்.
”நெஞ்சத்தில் நஞ்சைவைத்து உதட்டில் தேனை வைத்து உதிர்க்கின்ற வார்த்தைகளெல்லாம் கவிதையில்லை. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வுகளை உணர்வுகள் பொங்க உண்மையாக்கித்தருவதே கவிதை” என்று மிக நயமாக கவிதைக்கு அர்த்தத்தை அழகுறச்சொன்னார்கள்.
அவர்களின் உரையில் வளர்ந்து வரும் இஸ்லாமியர்களின் இலக்கியங்கள் எழுத்தாளர்களைப்பற்றி பேசும்போது என்னுடைய உணர்வுகளையும் பாராட்டிப் பேசினார்கள்.
.
இலக்கிய கட்டுரைபோட்டிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.முதல் பரிசான ரிட்டன் டிக்கெட்டை[துபை டு சென்னை] கவிஞர் அத்தாவுல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
எனது தோழிகளும் வந்திருந்தார்கள்.
நானும் ஜலிக்காவும்.எங்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்
ஜலீலாக்கா வந்தது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. [கூடவே பிரியாணியுமுல்ல வந்தது]
விழாவின்போது இடையிடையே சமோசா தேனீர் பிஸ்கட் என உபசரிப்புகள் அருமை.[நமக்குதான் ஒண்ணும் எடுபடலை எப்படி எடுபடும் முற்பகுதி படபடப்பினாலும் பிற்பகுதி மனநிறைவாலும் சூழப்பட்டுவிட்டுமுல்ல]
திரு.மஃரூஃப் காக்காவின் கிராத்தில். தொடங்கிய இவ்விழா. S. M.பாருக் அவர்களின் அன்பான நன்றியுரையில் இனிதே நிறைவடைந்தது. இதில் விழாக்குழுவினர்களின் பங்களிப்பும். உழைப்பும் பாராட்டக்கூடியது .
அடுத்த தொகுப்பிற்கான அடிக்கல்.
கவிச்சித்தர் மு.மேத்தா அவர்களிடம் வாழ்த்துரைக்கா எனது அடுத்த கவிதைத் தொகுப்பை வழங்கியபோது.
முனைவர் திரு சேமுமு. முஹமதலி அவர்கள். மற்றும் நானும் என் குடும்பமும்.
தொழிலதிபர் திரு.கீழை சீனாதானா அவர்கள் குடும்பமும். என் குடும்பமும்.
அவசர காலத்தில் கூரியர் மூலமாக வரவழைக்கப்பட்ட உணர்வுகளின் ஓசை யின் குறைந்தளவு புத்தகங்கள் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது. புத்தகம் பெற்றவர்கள் நேரடியாக வந்தும், புத்தங்களை அனுப்பியும் ஏதாவது எழுதும்படி கேட்டபோது என்னையறியாமல் கண்ணீர் சிந்தியது.
புத்தகத்தில் என்றும் அன்புடன் மலிக்கா என்று எழுதிக் கொடுத்தேன். இருப்பினும் புத்தகம் கிடைக்கபெறாத நண்பர்கள் நேரடியாக வந்து
புத்தங்கள் கிடைக்கும் விபரத்தினை கேட்டுக்கொண்டார்கள்.மீதமுள்ளவைகளை இந்தியாவிலிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்.அவைகள் வந்தவுடன் என்னுடைய நீரோடை வலைதளம்மூலம் தெரிவிக்கிறேன் மேலும் தாயகத்திலுள்ளவர்கள் நேரடியாக வாங்கிக்கொள்ளவிரும்பினால் சென்னை மணிமேகலை பிரசுரத்தை அணுகவும்.
முகவரி:
மணிமேகலைப் பிரசுரம்
தபால்பெட்டி எண்: 1447
7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை
தியாகராய நகர்,சென்னை - 600 017
தொலைபேசி: 009144 24342926 , 24346082
என் கவிதை தொகுப்புக்கு அணிந்துரை மற்றும் வாழ்த்துரை வழங்கிய:
கவிதாயினி.. கனிமொழி M P . அவர்களுக்கும்.கனடாக் கவிஞர் அன்புடன் புகாரி அவர்களுக்கும். M அப்துல் ரஹ்மான் M P .அவர்களுக்கும்.
இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவரும்,காவியத்திலகம். டாக்டர்
ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்ளுக்கும்.
நர்கீஸ் இதழ் கெளரவ ஆசிரியரும்.பிரபல நாவலாசிரியர்
டாக்டர்.ஹிமானாசையத் அவர்களுக்கும்.
கவிச்சுடர் கவிதைபித்தன் அவர்களுக்கும்.
இக்கவிதை தொகுப்பின் அட்டைப்படம் முதல் அனைத்தையும் மிக அழகாக அருமையாக வடிவமைத்துக்கொடுத்த மணிமேகலை பிரசுத்தின் நிர்வாகஸ்தர்கள் திரு ரவி தமிழ்வாணன் மற்றும் பணியாளர்களுக்கும். எங்களின் உள்ளப்பூர்வமான நன்றிகள்.
அதோடு என் கவிதை தொகுப்பு வெளிவர காரணமாக என்னுடைய மச்சான்.
முகமது ஃபாரூக்.
தந்தை காவியத்திலகம் . ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.
சகோதரர் காஞ்சி முரளி. பத்திரிக்கை ஆசிரியர் திருச்சி சையத் அண்ணன் . மற்றும் என் வலைதளமான நீரோடையில் என் எழுத்துக்களுக்கு அன்பபென்னும் ஊக்கங்களை வாரிவழங்கொண்டிருக்கும் அன்புநிறைந்த தோழமைகள்.சகோதர சகோதரிகள். அமீரகத்தின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழத்தின் ஆட்சிமன்றக்குழு மற்றும் விழாக்குழு நண்பர்கள் மற்றும் இவ்விழாவிற்கு கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும். என்குடும்பத்தார்கள் அனைவருக்கும்.
எங்கள் மனமார்ந்த நன்றியினை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம். .
எங்கள் மனமார்ந்த நன்றியினை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம். .
”இறைவன் மிகக் கருணையுள்ளவன். மகா கிருபையாளன். நான் கொஞ்சம் சந்தோஷத்தைக் கேட்டேன், அவன் நிரம்பிவழியும்சந்தோஷத்தை தந்துவிட்டான்.அவனுக்கே புகழனைத்தும்”.
அன்புடன் மலிக்கா ஃபாரூக்.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குஹை...!
நான்தான் 1stடா ...!
வாழ்த்துகள் மலிக்கா..
பதிலளிநீக்குநீராடியவுடன் புத்துணர்ச்சி தந்தது
பதிலளிநீக்குவாழ்த்துகக்ள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், அருமையான தெளிவான விளக்க பதிவு.
பதிலளிநீக்குஓ மகளின் தலைப்பா அசத்தல், தான் புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
ஆஹா இப்படி ஒடச்சி போட்டிங்களே
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குஎல்லா புகழும் இறைவனுக்கே..
மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்..
சகோதரிக்கு இது இனிய ஆரம்பம்,
ஒரு இமாலயத்தின் தொடக்கம்...
அக்காவின் வளர்ச்சி,,,
மிக்க மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் தோழி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கவிதாயனி
பதிலளிநீக்குஅப்படியே நமக்கு ஒரு புக் பார்சல்.
வரமுடியாதற்கு மன்னிக்க...
படங்களுக்கும் அருமையான நிகழ்ச்சி தொகுப்புக்கும் நன்றிங்க... சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்தது கண்டு, மகிழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கே!
பதிலளிநீக்குஅன்பு மலிக்கா..,
பதிலளிநீக்குவார்த்தைகள்; கிடைக்காத முத்துப் போல் கிடைக்கும் தருணமிது. வானில் பூப்பரிப்பது போல் அண்ணாந்து நம் மேலே வீழும் வாழ்வின் வெற்றிகளை பார்த்து கண்சிமிட்டும் உணர்வு இது. பிறந்த கைக்குழந்தயை தூக்கி வைத்து உலகமே கனப்பதாய் மகிழும் பூரிப்பிது..
மகிழ்வாக கொண்டாடுங்கள். மேலும் பல வெற்றி வந்து குவியட்டும்.. தெள்ளிய நீரோடை போல் தெளிந்த பல நல்லெண்ணங்கள் போற்றத் தக்க பல படைப்புக்களாகட்டும்..
மிக்க வாழ்த்துக்களும் அன்பும் எப்பொழுதிற்குமாய் உரித்தாகட்டும் மாலிக்கா. கணவருக்கு ஒரு குழந்தை முத்தமிட்ட அன்பினோடு என் மாம் நிறைந்த நன்றிகளையும், நிறைந்த பாராட்டினையும் தெரியப் படுத்துங்கள்.
வேண்டுமெனில் தன சட்டை கலரை சற்று மேலே தூக்கிவிட்டுக் கொண்டு வீட்டின் உள்ளே இப்புறமும் அப்புறமுமாய்; உங்களை எண்ணி -
அவரையும் எண்ணி கன கம்பீரமாய் நடந்துக் கொள்ள சொல்லுங்கள். அன்பு வணக்கமும் மீண்டுமான வாழ்த்துக்களும் நிறைய நிறைய மலிக்கா..
வித்யாசாகர்
வாழ்த்துகள் சகோதரி!
பதிலளிநீக்குவிழாவுக்கு வரமுடியாமல் போனதில் வருத்தமுண்டு!
வாழ்த்துக்கள் கவிதாயனி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தாங்களின் முயற்சியும் உங்க கணவரின் உழைப்பும் மிக அருமையான வெளிபாடாய் பிரருள்ளங்களின் உணர்வுகளையும் தாங்கி வெளிவந்துள்ளது.
உங்களின் வெற்றிக்கு காரணம் உங்கள் கணவர் என்பதை பார்க்கும்போது எல்லாருக்கும் இதுபோன்றமைந்தால் எப்படிருக்குமென்று நினைக்கிறேன். நானும் அப்படி ஒருவனாக ஆக உறுதி கொள்கிறேன்..கடவுள் அருளோடு..
உணர்வுப்பூர்வமான ஒரு படைப்பை எங்களுக்கு தந்தமைக்கு நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்..
என்றும் நேசமோடு.
கதிரவன்..
ஸலாம் சகோ..
பதிலளிநீக்குபன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக விழாவுக்கு நானும் அழைக்கப்பட்டு கலந்து கொள்ள வாய்ப்புக்கிட்டியது..
கட்டுரை போட்டிக்கு ஒரு பரிசும் கிடைத்தது.
அத்துடன் தங்களின் புத்தக வெளியீட்டு விழாவை நேரில் காணும் வாய்ப்பும்,தங்களின் கவிதைத்தொகுப்பும் கிடைக்கப்பெற்றது.
தங்களின் மச்சான்,தங்கள் மகன் ம்ஃபூபை சந்தித்து பேசினேன்.
விழா வெகு சிறப்பாக இருந்தது.
நேரில் சந்தித்து வாழ்த்துச்சொல்ல முடியவில்லை...
வாழ்த்துக்கள் பல...
அல்லாஹ் தங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்
அன்புடன்
ரஜின்
தங்களின் உணர்வுகளை ஈன்றெடுத்த பெருமையினை பகிர்ந்த பொழுதோடு மீண்டுமொரு பரிமாணம் உங்கள் வாழ்வில் உதயமானது நீராடிவிட்ட புத்துணர்வில் கண்ணீர்மல்கிறது.... சாகோதரியின் சரித்திரம் எழுத்தானதை எண்ணி உண்மை உணர்வாளர்களுக்குள்ள உணர்விது ஈற்றில் எம் மனங்களுக்குக் கிடைக்கும் வெகுமானங்களும் கூட அத்தனை நல்ல உள்ளங்கள் வாழ்த்திட மிழிர்நத உங்கள் வாழ்வு என்றும் சிறந்திட இறைவன் துணைபுரிவானாக....
பதிலளிநீக்குபாராட்டுகளும் வாழ்த்துகளும் சகோதரி தொடருங்கள்.....
மலிக்கா, நான் எப்பவும் வியப்பது உங்களைவிட உங்களவரைத்தான். மனைவியின் திறமையைப் போற்றிவளர்க்கவும் ஒரு தனி மனம் வேண்டும்.
பதிலளிநீக்குதடைக்கற்களாய் இருந்தவைகள்/இருந்தவர்கள் அங்கேயே இருந்த இடத்திலேயே கிடக்க, தாண்டி வந்த நீங்களோ முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள், இறையருளால். வாழ்த்துகள்.
valthukkal malika..
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பதிலளிநீக்குஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
சகோதரன்
ஹைதர் அலி
ஸலாம் சகோ..
பதிலளிநீக்குமேலும் சில படங்களுடன்..இலக்கியவிழா...
http://sunmarkam.blogspot.com/2011/02/blog-post_28.html
அன்புடன்
ரஜின்
|||||ஹுஸைனம்மா சொன்னது… :
பதிலளிநீக்குமலிக்கா, நான் எப்பவும் வியப்பது உங்களைவிட உங்களவரைத்தான். மனைவியின் திறமையைப் போற்றிவளர்க்கவும் ஒரு தனி மனம் வேண்டும்||||||
yes, your honour
it's true
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் மின்னஞ்சல் கிடைத்ததும், புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துக்கொள்ளத் தீர்மானித்தேன், ஆனால் விடுமுறையே என்று நிம்மதியாக இருந்த நேரத்தில் திடீர் அலுவலக வேலை வந்துவிட்டது, அதான் கலந்துக்கொள்ள முடியவில்லை.
மனம்திறந்து எல்லா செய்திகளையும் சொல்லிட்டீங்க சகோதரி, நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட உணர்வு. மிக்க மகிழ்ச்சி.
மேலும் உங்கள் எழுத்துபணியை தொடருங்கள்.. வாத்துக்கள்.
சகோதரன் தாஜுதீன்.
//இறைவன் மிகக் கருணையுள்ளவன். மகா கிருபையாளன். நான் கொஞ்சம் சந்தோஷத்தைக் கேட்டேன், அவன் நிரம்பிவழியும்சந்தோஷத்தை தந்துவிட்டான்.அவனுக்கே புகழனைத்தும்.//
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ்
வாழ்த்துக்கள் மல்லி ... மிகவும் சந்தோசமாக உள்ளது.
பதிலளிநீக்கு"""""பெரும் செல்வந்தர்கள் சாதரணமானவர்களிடம் பேசுவதற்கே தயங்குவார்களாம்.ஆனால் பணம்படைத்த மனிதர்களில் கண்ணியமிக்க பண்பானவர்களும் உண்டு என்பதற்கு உதாரணம் இவர்களைபோன்றவர்கள்தான் என்பதை நேரில் உணர்ந்தேன். எல்லோரிடமும் இயல்பாய் மிக அன்பாய் பேசும்தோரணை இறைவன் வகுத்த வழியில் நடப்பதை எடுத்துக்காட்டுகிறது""""""
பதிலளிநீக்குகாரெல்லாம் வச்சுருக்கீங்க,
அப்ப நீங்க பணகாரவுக, செல்வந்தர், இல்லையா?
"""""அன்பளிப்பாக 1000. திர்கம் எடுத்து தந்தார்கள்""""""
பதிலளிநீக்குவிழா மேடையிலேயே collection பண்ணிடீங்க போலிருக்கு
மனசு நிறைவா சந்தோஷமா இருக்கு தோழி.மனம் நிறைந்த வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறைந்த படைப்புக்கள் எழுதணும் !
பதிலளிநீக்குசலாம் மலிக்கா..,ஆஹா நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த விளக்கபடமும்,செய்திகளும் வந்துபடிச்சாச்சு.
பதிலளிநீக்குநல்லா எழுதியிருக்கீங்க... படிக்கும் போதே அந்த அளவில்லா சந்தோஷத்தையும்,அன்றைய நாளின் சிறப்பையும் என்னால உணர முடிந்ததே... அதை அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
உங்களை நினைக்கும் போது நான் மிகவும் பெருமையடைகிறேன்.
ஃபோட்டொவில் உங்களையும்,ஜலீலா அக்காவையும் பார்த்தாச்சு... இனி நேரில் காணும் நாள் எப்போதோ..?(கண்டுபிடிச்சிட்டோமுல்ல...)
மீண்டும் எனது எண்ணிக்கயிலடங்கா வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் தோழி மலிக்கா...
அன்புடன்,
அப்சரா.
மிக்க மகிழ்ச்சி அக்கா...அடுத்த கவிதை தொகுப்பும் மிகச்சிறப்பாய் வர துவாக்கள்...வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா, ரொம்ப சந்தோசமாக இருக்கு, எமது வலைப்பூவுக்குள் இருக்கும் ஒருவர் புத்தகவெளியீட்டுவிழா நடாத்தியது... மிக்க மகிழ்வைத் தருது.
பதிலளிநீக்குஎனக்கு அழைப்பிதழ் வரல்ல.... இன்பொக்ஸ் எல்லாம் தேடிப்பார்த்திட்டேன்:(((( மீ எஸ்ஸ்ஸ்ஸ்.
வாழ்த்துக்கள் மலிக்கா,உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை அதே சமயம் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அருமையாக எழுதிய இந்த தொகுப்பு மிக அருமை.பாராட்டுக்கள்.கொஞ்சம் முகம் காட்டியிருக்கலாம்,மலர்ந்த முகத்தை நாங்களும் கண்டிருப்போம்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் சிஸ்டர். அடுத்த முறை சென்னை செல்லும்போது இந்தப் புத்தகம் வாங்கிப் படித்து விடுகிறேன்:-)
பதிலளிநீக்குசெயதேவன் எனும் செம்மல் பலப்பல
பதிலளிநீக்குஉயர்வுகள் பெறுக! சிறப்பும் சீர்த்தியும்
நலனும் வளனும் பொலிவும் வலிவும்
பொங்குக! இன்பம் தங்குக! அன்புடை
கணவன் மக்கள் மற்றுள சுற்றம்
அனைவரும் மகிழ்வுடன் வாழிய! வாழிய!
அரபுக் கரையின் மணலினும் பன்னாள்
வாழ்க வாழ்கவே! வளமெலாம் சூழ்கவே!
என்று வாழ்த்தி...முடிப்பதற்குள் "நங்கென்று" என் தலையில் ஒரு குட்டு...கவிதை எங்கிருந்து சுட்டது என்று ?
அதற்க்கு நான் சொன்னேன், இது சுட்டது இல்லை.....என் நண்பர்களிடமிருந்து பெற்றது என்று.
வாழ்த்துக்கள் சகோ,உங்களின் பழைய செய்திகள் மனதை பாரமாக்கியது சிறு வயதிலியே தந்தையை இழந்த நீங்கள் அன்று நீங்கள் எத்தனை வேதனை கொண்டிருப்பீர்கள் என்று enkalukku theriyum.
"இறைவன் மிகக் கருணையுள்ளவன். மகா கிருபையாளன். நான் கொஞ்சம் சந்தோஷத்தைக் கேட்டேன், அவன் நிரம்பிவழியும்சந்தோஷத்தை தந்துவிட்டான்.அவனுக்கே புகழனைத்தும்."
பதிலளிநீக்குஉங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லவிதமாய் நடக்கும். எல்லாப்புகழும் இறைவனுக்கே! இது ஆரம்பம்தான்! இத்தோடு திருப்தி அடைந்துவிடாதீர்கள்! இலக்கை நோக்கி உங்கள் இலக்கியப் பயணம் தொடரட்டும்! இறைவன் என்றும் உங்களுக்கு துணை நிற்பானாக!
பிரியமுடன்...
சாபிரா சையது.
மாஷா அல்லாஹ், உங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றிப்பரிசைப் பார்த்து சந்தோஷமாக உள்ளது தோழி! நிறைய நிறைய வாழ்த்தவேண்டும் என்று தோன்றுகிறது. எழுத்தில் சுருக்கிக் கொண்டு மனதால் அனுதினம் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்..! உங்கள் மச்சனுக்கும்தான் :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிகுதியான சந்தோஷத்தை உணர்ந்தேன் உன்னைப்போல் வாழ்த்துக்கள் மல்லி.
பதிலளிநீக்குஇன்னும் பல சிறப்புகள் பெற இறைவனை வேண்டுகிறேன்.
//காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...!
ஹை...!
நான்தான் 1stடா ...!//
வாழ்த்துக்களுக்கு சந்தோஷம்
முதலில் வந்து வாழ்த்தியமைக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
/அமைதிச்சாரல் கூறியது...
வாழ்த்துகள் மலிக்கா..//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்
//nidurali கூறியது...
நீராடியவுடன் புத்துணர்ச்சி தந்தது.//
தாங்களின் வருகைக்கும் நீராடியமைக்கும் மிக்க நன்றி..
Jaleela Kamal கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துகக்ள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், அருமையான தெளிவான விளக்க பதிவு.
ஓ மகளின் தலைப்பா அசத்தல், தான் புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
ஆஹா இப்படி ஒடச்சி போட்டிங்களே
யக்கோவ் அன்பான வாழ்த்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம்க்கா அத்தோடு நேரில் வந்து கைகுலுக்கி பிரியாணியும் தந்தது இன்னும் சந்தோஷம்கா
போட்டு உடைக்காட்டித்தான் தவறுக்கா. உண்மைச்சொல்லனுமுல்ல.
மிக்க நன்றிக்க..
//isaianban கூறியது...
அஸ்ஸலாமு அலைக்கும்
எல்லா புகழும் இறைவனுக்கே..
மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்..
சகோதரிக்கு இது இனிய ஆரம்பம்,
ஒரு இமாலயத்தின் தொடக்கம்...
அக்காவின் வளர்ச்சி,,,
மிக்க மகிழ்ச்சி...
இறைவனிடம் கேட்க்கப்படும் துஆக்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மிக்க நன்றி காஜா
// வேடந்தாங்கல் - கருன் கூறியது...
வாழ்த்துக்கள் தோழி...//
அன்பான வாழ்த்துக்களுக்கு
மிக்க நன்றி தோழா..
// S Maharajan கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கவிதாயனி
அப்படியே நமக்கு ஒரு புக் பார்சல்.
வரமுடியாதற்கு மன்னிக்க...//
அன்பான வாழ்த்துக்களுக்கு
மிக்க நன்றி மகா.
அதுசரி இங்கதான் இருக்கீங்களா!!!!!!
வரமுடியாச்சுழல்கள் இருக்குமல்லவா.
அட்ரஸ் தாங்க அதோடு ஒரு 2000. திர்கம் அனுப்பிவைங்க ஹா ஹா.[கொஞ்சமா கேட்டுட்டனோ]..
//Chitra கூறியது...
படங்களுக்கும் அருமையான நிகழ்ச்சி தொகுப்புக்கும் நன்றிங்க... சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்தது கண்டு, மகிழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கே!//
வாங்க சித்ரா. ஆமாக்கா மனம் நிறைவடையும்படி இருந்தது.
ரொம்ப சந்தோஷம் தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..
வித்யாசாகர் குவைத் அன்பு மலிக்கா..,
பதிலளிநீக்குவார்த்தைகள்; கிடைக்காத முத்துப் போல் கிடைக்கும் தருணமிது. வானில் பூப்பரிப்பது போல் அண்ணாந்து நம் மேலே வீழும் வாழ்வின் வெற்றிகளை பார்த்து கண்சிமிட்டும் உணர்வு இது. பிறந்த கைக்குழந்தயை தூக்கி வைத்து உலகம...ே கனப்பதாய் மகிழும் பூ...ரிப்பிது.. //
கனவுகளாய் தோன்றிய அத்தனையும்
கைக்குள் சிக்கியதுபோன்றொரு உணர்வு.
நிழலாய் தெரிந்த நினைவுகளெல்லாம்
நிஜமாய் கண்முன்வந்ததுபோன்றொரு நிகழ்வு. வார்த்தைகள் தேடிய மனதெங்கும் சந்தோஷ
வாசங்கள் அடைக்கப்பட்டதால்,
உதடுகள் திறக்க முயன்றபோது
வார்த்தைகளுக்கு பதிலாய் கண்கள்
உதிர்த்தது ஆனந்தகண்ணீர்.
//மகிழ்வாக கொண்டாடுங்கள். மேலும் பல வெற்றி வந்து குவியட்டும்.. தெள்ளிய நீரோடை போல் தெளிந்த பல நல்லெண்ணங்கள் போற்றத் தக்க பல படைப்புக்களாகட்டும்..
மிக்க வாழ்த்துக்களும் அன்பும் எப்பொழுதிற்குமாய் உரித்தாகட்டும் மாலிக்கா. கணவருக்கு ஒரு குழந்தை முத்தமிட்ட அன்பினோடு என் மாம் நிறைந்த நன்றிகளையும், நிறைந்த பாராட்டினையும் தெரியப் படுத்துங்கள்.
வேண்டுமெனில் தன சட்டை கலரை சற்று மேலே தூக்கிவிட்டுக் கொண்டு வீட்டின் உள்ளே இப்புறமும் அப்புறமுமாய்; உங்களை எண்ணி -
அவரையும் எண்ணி கன கம்பீரமாய் நடந்துக் கொள்ள சொல்லுங்கள். அன்பு வணக்கமும் மீண்டுமான வாழ்த்துக்களும் நிறைய நிறைய மலிக்கா..
வித்யாசாகர்//
ஒரு கணவரென்பதையும் மீறி தாயுமானவராக இருக்கும் என்னவருக்கு செய்நன்றிகள் செய்வதற்கு இவ்வுலக வாழ்க்கைபோதாது ஈருலக வாழ்க்கையிலும் வேண்டுமென இறைவனிடம் இருகரம் ஏந்திகேட்கிறேன்.
தங்களின் மனம் திறந்த அன்பு நிறைந்த வாழ்த்துக்களுக்கும் உணர்வுகள் புதைந்த கருத்துக்களுக்கும்
எங்களின் மனமார்ந்த நன்றிகள் பல..
மிக்க நன்றி வித்யாசகர்..
என்றும்
அன்புடன் மலிக்கா
sabeer.abushahruk கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி!
விழாவுக்கு வரமுடியாமல் போனதில் வருத்தமுண்டு!//
அன்பான வாழ்த்துக்களுக்கு
மிக்க நன்றிசகோதரர் அவர்கள்
வரமுடியாச்சுழல்கள் இருக்குமல்லவா
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
//teedummanam கூறியது...
வாழ்த்துக்கள் கவிதாயனி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தாங்களின் முயற்சியும் உங்க கணவரின் உழைப்பும் மிக அருமையான வெளிபாடாய் பிரருள்ளங்களின் உணர்வுகளையும் தாங்கி வெளிவந்துள்ளது.
உங்களின் வெற்றிக்கு காரணம் உங்கள் கணவர் என்பதை பார்க்கும்போது எல்லாருக்கும் இதுபோன்றமைந்தால் எப்படிருக்குமென்று நினைக்கிறேன். நானும் அப்படி ஒருவனாக ஆக உறுதி கொள்கிறேன்..கடவுள் அருளோடு..
உணர்வுப்பூர்வமான ஒரு படைப்பை எங்களுக்கு தந்தமைக்கு நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்..
என்றும் நேசமோடு.
கதிரவன்..//
வாங்க கதிர். எப்படி நினைதீர்களோ அதன்படி நடக்க இறைவன் அருளட்டும்
ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய் தந்தைவிட அவளின் கணவர்தான் எல்லாமே எனநினைக்குமளவுக்கு அவரும் நடக்கவேண்டும் அவளும் அதற்கிணையாக இருக்கவேண்டும்.
தாங்களின் வருகைக்கும் அருமையான கருத்துக்கும்
அன்பான வாழ்த்துக்களுக்கு
மிக்க நன்றி கதிர்.
RAZIN ABDUL RAHMAN கூறியது...
பதிலளிநீக்குஸலாம் சகோ..
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக விழாவுக்கு நானும் அழைக்கப்பட்டு கலந்து கொள்ள வாய்ப்புக்கிட்டியது..
கட்டுரை போட்டிக்கு ஒரு பரிசும் கிடைத்தது.//
அல்ஹம்துல்லில்லாஹ் வாழ்த்துக்கள் ரஜின்.
//அத்துடன் தங்களின் புத்தக வெளியீட்டு விழாவை நேரில் காணும் வாய்ப்பும்,தங்களின் கவிதைத்தொகுப்பும் கிடைக்கப்பெற்றது.
தங்களின் மச்சான்,தங்கள் மகன் ம்ஃபூபை சந்தித்து பேசினேன்.
விழா வெகு சிறப்பாக இருந்தது.//
அப்படியா ரொம்ப சந்தோஷம் நேரில் வந்தது இரட்டிப்பு மகிழ்வைதந்தது. ஒன்று தங்களின் கட்டுரைக்குப் பரிசு.
இரண்டு புதகவெளியீடுக்குவந்ததும் என்னவரையும் என்மகனையும் கண்டதும்
//நேரில் சந்தித்து வாழ்த்துச்சொல்ல முடியவில்லை...//
ஏன் பயமுறுத்துறமாதரியாவாயிருந்தேன் [சும்மா சும்மா]
பரவாயில்லை சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதும் சில வேளை அப்படி நடப்பதுண்டு.
//வாழ்த்துக்கள் பல...
அல்லாஹ் தங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்
அன்புடன்
ரஜின்//
இரு இடத்து வருகைக்கும். அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி ரஜின்.
ஃஃஃஃ”உணர்வுகளின் ஓசை” இதுதான் என் கவிதைகளின் முதல் தொகுப்பு. [என்னுடைய மகள் தேர்ந்தெடுத்த தலைப்புதான் இது] ஃஃஃஃ
பதிலளிநீக்குஉண்மையில் நல்லதொரு தலைப்பு.. எல்லாம் நல்லதாய் அமைய கடவுளை வேண்டுகிறேன்...
தங்கள் கலைப்பயணம் மேன்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்...............
பதிலளிநீக்குபடிக்கும்போதே ஏன் இந்த நிகழ்ச்சியை தவற விட்டு விட்டோம் என்று நினைக்க தோன்றுகிறது...சிறிய சொந்த வேலைகளினால் வர முடியாமல் போய்விட்டது....ஆனால் உள்ளம் மட்டும் உங்களை வாழ்த்தி கொண்டு,நீங்கள் மென்மேலும் வளர்ந்து நம் சமுதாயத்திற்க்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று துவா செய்து கொண்டு உள்ளது...வாழ்த்துக்கள் சகோதரி
பதிலளிநீக்குசகோதரி தங்களின் களிப்போடு எனதுமனம் நாடியது வரிகளமைக்க
பதிலளிநீக்குஆதலினால் ஆனது இக்கவிதை
பார்த்துச்சொல்லுங்கள்.....
http://hafehaseem00.blogspot.com/2011/03/blog-post_01.html
இச்சகோதரனின் நேசத்தினை....
வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குஅன்புத்தங்கை மலிக்கா,உங்கள் பதிவில் கண்ட சந்தோஷத்திலும்,உற்சாகத்திலும்,நிறைவிலும் நானும் கலந்து கொள்கின்றேன்.படிக்க படிக்க மிக சந்தோஷமாக இருந்தது.அல்ஹம்துலில்லாஹ்.மேலும் மேலும் தங்கள் வளர்ச்சி உயர்வடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
பதிலளிநீக்குஇறை அருளால் உங்களுக்கு காதல் உள்ள கணவர், முத்தான குழந்தைகள், பாசமுள்ள அண்ணன்கள், சினேகமுள்ள நண்பர்கள் என எல்லாம் கிடைத்துள்ளார்கள்!
பதிலளிநீக்குYou are succesful Lady Mrs. Malikka Farook Madam!
பதிலளிநீக்கு-Lakshami
மாஷா அல்லாஹ்... உங்கள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமென்மேலும் சிகரங்கள் பலவற்றை எட்டிப் பிடிக்க இறைவன் உங்களுக்கு நல்லுதவி புரிவானாக.
மனமார்ந்த வாழ்த்துக்கள் மலிக்கா...
பதிலளிநீக்குதுபையிலிருந்தும், சில காரணங்களால் உங்கள் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை...
விழா சிறப்பாக நடந்தது அறிந்து நெஞ்சம் மகிழ்ந்தேன்...
புத்தக வெளியீட்டிற்கு முன்னதாக, அதற்காக நீங்கள் செய்தவை என்ன என்பது குறித்து சில தகவல்கள் தேவைப்படுகிறது...
உங்களை எப்படி தொடர்பு கொள்வது? என் ஜிமெயில் ஐடி இதோ : rgopi3000@gmail.com
மனமார்ந்த வாழ்த்துக்கள் மலிக்கா...
பதிலளிநீக்குதுபையிலிருந்தும், சில காரணங்களால் உங்கள் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை...
விழா சிறப்பாக நடந்தது அறிந்து நெஞ்சம் மகிழ்ந்தேன்...
புத்தக வெளியீட்டிற்கு முன்னதாக, அதற்காக நீங்கள் செய்தவை என்ன என்பது குறித்து சில தகவல்கள் தேவைப்படுகிறது...
உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
Weldone. Keep it up!
பதிலளிநீக்குகண்ணுபடப்போகுதம்மா... திருஷ்டி சுத்திப் போடுங்க!
பதிலளிநீக்குபர்வீன்
அஸ்ஸலாமு அலைக்கும்.
பதிலளிநீக்குசகோதரி நலம் நலமறிய விழைகிறேன்.
முதலில் தாமதமாய் வாழ்த்து இங்கு வார்தையில் வெளிப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.
உள்ளத்தில் என்றோ வாழ்து பெற்றவர் நீங்கள்.
என் உடல் நிலை மிக மிக மோசமாக இருந்ததால் உள்ளத்து அன்பு,பாச வெள்ளத்தை அணை போட்டு வைத்து கொண்டேன் என் சுகவீனம் பற்றி தெரிவிப்பதற்கு கூட வழிதெரியாமல் இருந்தேன். ஆனாலும் எல்லாம் வல்ல அல்லாவிடம் இறைண்ஜு நின்றேன். நிகழ்வுகள் எல்லாம் நல்ல படி நடந்தேறியதை படித்து அறிந்து மிக்க சந்தோசம் .இனி நீங்கள் போக வேண்டிய பாதை வேறு வகை. அதில் எப்பொழும் சூட்டுவீர்கள் வாகை.என்ன ? எங்களையும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நேரம் கிடைக்கும் போது கவிதை கற்று தாருங்கள் நாங்களும் எழுதி பார்த்து சந்தோசப்படுவோம்ல!
வாழ்த்துக்கள்.
ரொம்ப லேட்டா வந்துட்டேன். சீக்கிரம் வாங்கிப் படிச்சு சொல்றேன் . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉணர்வுகளுக்கு மௌனம் பிடிக்கும்... அதன் ஓசை நீண்ட நாள் இருக்கும் என்பது உங்களின் பதிவு மற்றும் படைப்பின் மூலம் உறுதி செய்யப்படும்.
பதிலளிநீக்குஹுஸைனம்மா சொன்னது…
பதிலளிநீக்குதடைக்கற்களாய் இருந்தவைகள்/இருந்தவர்கள் அங்கேயே இருந்த இடத்திலேயே கிடக்க, தாண்டி வந்த நீங்களோ முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள், இறையருளால். வாழ்த்துகள்.
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை"
கதீஜா
உங்களின் சந்தோசத்தில் எங்களையும் இணைத்ததில் ரொம்ப சந்தோசம்..
பதிலளிநீக்குஉங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! :-))
நீரோடை வாசகர்... விமர்சகர்.. ஆகியோருக்கு ஓர் முக்கியமான அறிவிப்பு...
பதிலளிநீக்குகவிஞர் மலிக்கா அவர்களின் "உணர்வுகளின் ஓசை" கவிநூல் வெளியிட்டதயொட்டி... நீரோடை வாசகர் மற்றும் விமர்சகருக்கு இலவசமாய் ஒரு நூல் வழங்கப்படும்... பெற்றுக்கொள்ளவேண்டிய முகவரி...!
கவிஞர் மலிக்கா,
நெ.6,. விவேகனந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின் ரோடு,
(துபாய் பஸ் ஸ்டாண்டு அருகில்)
துபாய்
குறிப்பு : முன்னாடி வருபவருக்கு முன்னுரிமையின் பேரில் இரண்டு நூல் வழங்கப்படும்)
இதற்கான பணத்தை கவிஞர் மலிக்காவே ஏற்றுக்கொள்வார் என அறிவிக்காப்படுகிறது....
எப்புடி...!
கொளுத்திபோட்டாச்சுல்ல...!
அப்ப சகோதரி அமெரிக்காவுக்கு உங்க செலவுல ஒன்னு அனுப்ப மாட்டிங்களா? ஹூ.ஹூ உங்களோட காய் போங்க.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..மல்லிக்கா
பதிலளிநீக்குமறக்க முடியாத தருனங்கள்...
congrates malikka. i will buy this book.
பதிலளிநீக்குabdul jabbar well known commentater. his commentry still in my ears.
////அப்ப சகோதரி அமெரிக்காவுக்கு உங்க செலவுல ஒன்னு அனுப்ப மாட்டிங்களா? ////
பதிலளிநீக்குயாரு...? இவுகளாளாளாளளாளாளா..!!!!!!
ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...!
யாரப்பாத்து....!
என்னக் கேள்விகேட்டீக...!
அட..... நீங்கவேற...!
நல்ல ஆளைப்பார்த்து கேட்டீக...!
கவிஞர் மலிக்காவுக்கும்..
பதிலளிநீக்குபதிவுலக...வலையுலக நண்பர்களுக்கும்... நண்பிகளுக்கும்...
"மகளிர் தின" வாழ்த்துக்கள்...!
நட்புடன்..
காஞ்சி முரளி....
அன்பான சகோதரி மலிக்காவுக்கு,
பதிலளிநீக்குஈகரைக்கு வந்தபின் தான் உங்களது கவித்துவத்தை என்னால் உணர முடிந்தது என்பதில் சற்றே துணுக்கிருப்பினும் இப்போதாவது அறிந்துகொள்ல இயன்றதே என்னும் மகிழ்ச்சி என்னுள் பிரவாகிக்கிறது. உங்களது இனிய படைப்புகள் மேன்மேலும் வெளியாகி நீங்கள் கவியுலகில் நீஙகா இடம்பெற எல்லாம் வல்ல அருளாளனை வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
கலை
www.eegarai.net
புகழனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கே!
பதிலளிநீக்குஎன்னை வாழ்த்தியும் எனக்காக பிராத்தனைகள் செய்தும் என் மச்சானை புகழ்ந்தும். எங்களுக்கு மனம் நிறைந்த மகிழ்வையும் நெகிழ்வையும் ஏற்படுத்திய அனைத்து நெஞ்சங்களுக்கும். நாங்கள் எங்களின் இதயத்திலிருந்து நன்றிகளை சொல்லிக்கொள்கிறோம் என்றும் இதே அன்பும் பாசமும் தங்கள அனைவரிடமிருந்தும் கிடைக்கவேண்டுமாய் இரைவனையும் வேண்டுகிறோம்..
ஆயிரமாயிரம் நன்றிகள்..
கலைவேந்தன் கூறியது...
பதிலளிநீக்குஅன்பான சகோதரி மலிக்காவுக்கு,
ஈகரைக்கு வந்தபின் தான் உங்களது கவித்துவத்தை என்னால் உணர முடிந்தது என்பதில் சற்றே துணுக்கிருப்பினும் இப்போதாவது அறிந்துகொள்ல இயன்றதே என்னும் மகிழ்ச்சி என்னுள் பிரவாகிக்கிறது. உங்களது இனிய படைப்புகள் மேன்மேலும் வெளியாகி நீங்கள் கவியுலகில் நீஙகா இடம்பெற எல்லாம் வல்ல அருளாளனை வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
கலை
www.eegarai.net//
வாங்க கலையண்ணா.
தங்களின் வருகைக்கும் நெஞ்சார்ந்த வேண்டுதலுக்கும் மனம் மகிழ்கிறேன்.
ஒருபடைப்பாளியை ஊக்குவிப்பது மிகப்பெரிய ஒன்று அவ்வகையில் முகம்தெரியா பாசங்களின் ஊக்கத்தால் இன்று ஒரு கவிதைதொகுப்பு வெளியிடுமளவுக்கு வந்துள்ளேன்.
இன்னும் பல படைப்புகள் கொடுக்கவேண்டுமென நினைக்கிறேன் . எல்லாம் வல்ல இறைவன் நாடினால் நிச்சயம் தொடர்ந்து படைப்புகளை படைப்பேன்.
தங்களின் அன்புக்கு மிகுந்த நன்றிகள்..