நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தீராத!!!!!!!!


சாந்தியைத்தேடி சன்னிதானத்தில்
கூட்டங்கள்
சந்தடிசாக்கில் சிந்துபாடும்
சாத்தான்கள்

அமைதியைநாடி அல்லபடும்
உள்ளங்கள்
அடிநாக்கிற்கடியில் அடிமைப்படும்
பேதைகள்

நியாயங்களைதேடி நிரம்பிவழியும்
வழக்குகள்
நீதிதவற போடப்படும் நியாயமற்ற
வாய்தாக்கள்

வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பாமரர்கள்
வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
பணபேய்கள்

சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
கொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மழைப்போர்வை


தூவி தூவி பெய்தது
தூறல்போட்டு நெய்தது

சாரல் சாரல் அடித்தது
சரம் சரமாய் தொடுத்தது

சன்னல் வழியே பார்க்கையில்
சாடைகாட்டி அழைத்தது

சற்று எட்டிப் பார்க்கும்போது
சரசம் செய்ய துடித்தது

மெல்ல மெல்ல தேகத்தை
முழுவதுமாய் நனைத்தது

செல்லமான மழைதுளிக்கு
முத்தம் ஒன்று கொடுக்கையில்

ஹச்சென்ற தும்மல் வந்து
எங்கள் இறுக்கத்தையே பிரித்தது

நனைந்த தேகம் குளிரக் குளிர
நாடிநரம்பெல்லாம்  நடுங்கியது

கதகதப்பு தேடிய தேகத்திற்க்கு
கையில் போர்வை  கிடைத்தது

இழுத்துப்போர்த்தபோகையில்
போர்வை கேள்வி கேட்டது

காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
காதல் உனக்கு வேண்டுமா?

பட்டென்றென்று பதிலளித்தேன்
காய்ச்சல் தந்தால் போதுமே

வினோதமாய் பார்த்தது
வியப்பாய் ஏனென்று கேட்டது

காய்ச்சல் வந்தால் கூடவே
காதலும் வரும் தன்மையாய்

காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மையாய்

சொல்லி முடிக்கும் முன்னெயே
என்னை மூடிக்கொண்டது போர்வையே......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


புண்ணியம் தேடு


மனிதா!!!

உன் மனநிலையை புரிந்துகொள்ளவே
முடியவில்லையே!
கடலின் ஆழத்தையே அங்குளம்
அங்குளமாக அளந்துவிடும் மனிதனுக்கு
மனிதனின் மனதை
மனிதனே அறியமுடியவில்லையே!

மனிதா நீ,,,,

சுயநலமாய் நடக்கிறாய்
சுயநலத்துடன் வாழ்கிறாய்
உன் தேவைகளுக்காக
அடுத்தவர்களை பயன்படுத்தும் நீ,,

அவர்களின் தேவையென்னும்போது
கண்டும் காணாமலும் போகிறாய்
மனிதப்பிறப்பே மகத்துவமிக்கது
அதை சுயநலமென்னும் சேற்றைப்பூசி
மாசுபடுத்துவதா?

சுயநலத்துடன் வாழ்வது உனக்கு சுகம்
கொடுப்பதாக தோன்றும் அதுவே
உனெக்கென்றுவரும்போது
சுமையிலும் சுமையாக மாறும்.

மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது
புண்ணியம் செய்து பலனைபெறு
புனித மனிதனாய் பூமியில் வாழு.......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது