நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறையில்லம்



இடித்து தள்ளப்பட்டது இறையில்லம்
   அதற்கு தீர்வே தெரியவில்லையே
இன்றுவரையும்

மனிதம் மீறிப்பட்டது சிலமனிதமிருகங்களால்
  அதற்கு முடிவே தெரியவில்லையே
இன்றுவரையும்

வந்திடுமே நல்தீர்பென்று வருடங்கள்
   பதினேழையும்கடந்தும் வந்திடவில்லையே
இன்றுவரையும்

பிறர்மதத்தை இழிவாய் நினைத்து
  தன்மதத்தை உயர்த்தும் மனிதன்
மனிதனில் சிறந்தவனா?

மனிதமனங்களை கொன்றுசிதைத்து
  அதில் மகிழ்வுகாணும் மனிதன்
மனிதனில் புனிதவனா?

மனிதா மனிதா கேள்கேள்
  மனசாட்சியிருந்தால்
அதைகேள்

நீ செய்தது சரியா பிழையா
  இது மாபெரும்
பாவமில்லையா?

மனிதனாய் பிறந்துவிட்டு
  மனசாட்சியைகொன்றது
முறையா?

எப்போது கிடைத்திடும் நியாயம்
அதற்காக வேண்டுகிறோம் நாளும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பாலைவன பரிதவிப்பு


பாலைவன பனியில் நனைந்துகொண்டே நடந்துபோது
பொங்கிவந்த மனகுமுறலை பொறுத்திடமுடியாமல்
வெளிறிக்கிடந்த வானத்தையே வெறித்துபார்த்து
வெதும்பிகரைந்தது கண்ணீர்

பத்துக்கு பதிமூன்றை நம்பி
இருந்தெல்லாம் விற்று போதாகுறைக்கு
பத்துக்கு பதினைந்தாக வட்டிக்கும்வாங்கி
வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தால்

இன்றுபோகுமோ வேலை நாளைபோகுமோ
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு
அடுத்ததுநானோ அடுத்ததுநானோ என

காலையில் வேலைக்குபோகும் மனம்கலங்கியபடி
ஒவ்வொருநாளும் பொழுதுபோக்கும் அவஸ்தை
அனலில் புளுவாய் துடித்தபடி

குடும்பச்சுமை கடன்சுமை இதற்கு
நடுவே வேலைகள் பறிபோகும்நிலை
என்னசெய்வது என்னசெய்வது என்றெண்ணியபடியே
இருதலைக்கொள்ளியாய் தவித்திடும்மனது

சொட்டச்சொட்ட பனியில் நனைந்தபோதும்
நெஞ்சுக்குள் மட்டும் பற்றி எறிகிறது நெருப்பு
சோறுபோட்ட நாடு சுகம் பெறுமா -இல்லை
சுமைகளின் பாரம் கூடிப்போகுமா?

எல்லாம்வல்ல இறைவன் இருள்நீக்கி
அருள்புரியவேண்டும்
இன்னல்களை போக்கி மகிழ்ச்சியை
தந்திடவேண்டும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

எழுதுகோல்


இங்கிதத்தை மறந்து இறுக்கித்தழுவியதையும்
இலகுவான காதல்கவிதைகளாய் எழுதச்சொன்னாயடி

படபடத்த பார்வைகளின் பதியல்கள்
பட்டாம்பூச்சியோடு போட்டிபோட்டதையும்

பருவமனதிற்குள் படுவேகமாய் மிதிவண்டி
பறந்து செல்லும் பருந்தோடு போட்டிபோட்டதையும்

இதோ உள்ளத்தில் மிதக்கும் எண்ணங்களோடு
இனிமையான தருணங்களையும் கிறுக்கித்தள்ளியதடி..

:என் இதய எழுதுகோல்:

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது