நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எனைவிரும்பி....


நைல் நதியின் நீளத்தை மிஞ்ச
நினைத்த உனதன்பால்
நான் நிலைகுழைந்துதான் போனேன்
நீயற்ற பொழுதுகள்
நீரற்ற நிலமாவதுபோல் உணர்ந்தேன்

உன்போல் யாரும்
என்மீது அக்கரை கொண்டதில்லை
இதுதானோ
இதயமாற்றம் செய்யும் அன்பின் நிலை
அதீத அன்பே ஆன்மாவின் பிள்ளை
அதுவும் மிஞ்சினால் வருமோ சல்லை!

என்னை விரும்பியாய்
எந்நொடியும் இருந்துவிட்டு
எங்கு மறைந்தாய் எனைவிட்டு
எதையும் மறக்குமோ நம்மிதயக்கூடு
எதுவும் அழியுமோ நம்மைவிட்டு

உடல் தடதடக்க
உதிரம் கிறுகிறுக்க
குழைகிறது குமைகிறது
உனைத்தேடும்  கண்கள்!

உயிர் துடி துடிக்க
உணர்வுகள் வெடி வெடிக்க
துடிக்கிறது துவழ்கிறது
உன்னால் களவாடப்பட்ட நெஞ்சம் ...

பூக்கவா! புதையவா!


இறைவனின் பேருதவியால், இன்ஷாஅல்லாஹ் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பான
 ”பூக்கவா புதையவா” நூல் இன்று ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைபள்ளியின் 20 ஆண்டுவிழாவில் வெளியிப்பட உள்ளது.
இது இறைவனின் திடீர் ஏற்பாடு,, 

எது எப்படி நடக்கவேண்டுமென மனதார நினைத்திருந்தேனோ 
அது திடீரென்று நடக்கபோவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது
எனது மனமகிழ்வை தங்களோடு பகிர்வதில் ஆத்ம திருப்தி.
தாங்கள் அனைவரின் பிராத்தனைகளை என்றும் எதிர்பார்க்கும்
உங்கள்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மரண தண்ட[வேத]னை...




தூக்குகயிறறியாது
தொங்குபவரின் துக்கமும், தொண்டைக்குழியின் சத்தமும்
வன்மம்கொண்ட மனமறியாது-பிறர்
வாழ்க்கையின் மகத்துவமும் உயிரின் மேன்மையும்...

மரணவலி மனிதர்களுக்கு ஒன்றுதானே
துடிக்கும் உயிரை
துடிக்க துடிக்க கொல்லுகையிலும்
தூக்குக்கயிற்றில் தொங்கவிடுகையிலும்....

இருள்
நீங்கா பொழுதொன்றில்
நீதி அநீயிழைத்ததா?
இல்லை
நீதிக்கே அநீதம் இழைக்கப்பட்டதா?
என்றறிந்துமறியா நிலையில்-
நிசப்தங்களாய் சில நிழல்கள்...

முற்றும் துறந்த நிலையில்
மூச்சடக்கப்போகும்-தன்
முன்தொங்கும் கயிற்றின் வழியே-இறுதி
மூச்சுக் காற்றினை உள்ளிழுத்த
நெஞ்சுக்குள் நிலைகுலைக்கும் பேரிடிகள்...

தீவிரங்களாய் சில தீர்ப்புகள்
தீவிரவாதிகளின் உயிரெடுப்பதற்க்கு
தீட்டுவது சரிதான்--ஆனால்
தீவிரவாதிகளென அப்பாவிகளின் உயிர்கள்
தீர்க்கப்படாமல் காக்கவேண்டுமே நீதிதான்...

தீவிரவாதம்
ஒருபோதும் ஏற்க்கபடவேண்டிய ஒன்றல்ல
ஒழித்தழிக்கப்படவேண்டிய ஒன்று
ஒழிப்பதாய் எண்ணி ஒடுக்கப்பட்டோர்கள்
அழிக்கப்படுவதும் நன்றல்ல..

நீதி தேவதையே!
உன் கண்ணைக் கட்டியது எதற்க்கு?
அநீதங்கள் அரங்கேறுகையில்
நீ கதறியழுவது கசிந்திடக்கூடாதென்பற்கா?

நீதி தராசே!
உன் முட்கள்
சத்தியங்களால் மட்டுமே சமமாகட்டும்!
தீர்ப்பெழுதும் எழுதுகோளே!
உன் எழுத்தாணி
உண்மைக்கு மட்டுமே தலைசாய்க்கட்டும்...

----------------------------------


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது