தியாகத்தின் அடையாளம்.
இறைத் தூதருக்கே
இறை சோதனை
இயலாத காலத்தில் ஈன்றெடுத்த
அன்பு மகனை
அறுத்து பலியிடச்சொல்லி வந்தது
இறைகட்டளை
பெற்ற மகனை பலியிடுவதில்
பெற்றோருக்கில்லை
சிறு தயக்கம்
இறையாணையையேற்று
இறைத்தூதர் செய்யத் துணிந்ததோ
பெரும் தியாகம்
இறைச் சோதனையில்
இறை நேசருக்கு
இமாலய வெற்றி
நாயன் செய்தான்
நல்லதோர் செயலை
நரபலி நீக்கி
தீன்மார்க்கத்திலொரு சரித்திரம்
தீன்தாரியின் உறுதியான ஈமான் [இறைநம்பிக்கை]
தியாகம் என்பதின் அடையாளம்
இப்ராஹிம் நபி என்பதே அதுவாகும்
புண்ணியம் சேர்ப்பதிலொரு சிறப்பம்சம்.
புனித ஹஜ்ஜுப் பெருநாளாகும்…..
இவ்வுலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் ஈத் முபாரக் என்னும் ஹஜ்ஜுப்பெருநாள் தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்.
ஏங்கும் நெஞ்சம் [கிளிக்]
யாஅல்லாஹ்!
இப்புனித ஹஜ்ஜுப் பெருநாளின் பொருட்டால்
எங்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக!
இப்ராஹிம் நபி ஹாஜிரா அலை அவர்களின்
பொறுமை மனப்பான்மையையும், சகிப்புத்தன்மையையும்
எங்களுக்கும் தந்தருள்வாயாக.
அடுத்தவருடம் நாங்களும் ஹஜ் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வாயா
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
முன்பாவம் [முன்செய்தபாவம்].
மனக்கிடங்கில்
மன்றாடிக் கிடக்கும் ஊமை உணர்வுகள்
மங்காமல் மறையாமல் கிடந்தழும்
மடிந்துவிட வேண்டி
ஊற்றெடுக்கும் உணர்வுப் பிளம்புகள்
ஊழிக் காற்றிலும்
உதிர்ந்துபோன இலைகளாய்
ஊசலாடியே உயிர்வதை
செய்தபடி
எரிவதெல்லாம் ஒளியாகாது எனத்தெரிந்தும்
எரிந்துகொண்டிருகிறது
சிறு நெருப்பு
அணைந்து விடாது
அடைக்கலம் கொடுக்க
ஆளில்லையென்று துடித்தபடி
இன்பக்குழிகளுக்குள்
இளைப்பாற ஏங்கிய இதயமாய்
பனிப்போர்வைக்குள் சிக்குவதாய் எண்ணி
பாவச்சிறைக்குள்
மாட்டிக்கொண்டது சாப விதி
உயிர் நசித்து!உயிர் நசித்து!
ஊறுவிளைவிக்கும் மன உலைச்சலுக்குள்ளே
உடல் எரித்து!உணர்வு குலைத்து!
உயி[து]ர்நாற்றம் வரக்காரணமென்னவோ முன்பாவ சதி
உயிர் நசித்து!உயிர் நசித்து!
ஊறுவிளைவிக்கும் மன உலைச்சலுக்குள்ளே
உடல் எரித்து!உணர்வு குலைத்து!
உயி[து]ர்நாற்றம் வரக்காரணமென்னவோ முன்பாவ சதி
-----------------------------------------------------------------
இலண்டன் வானொலியில் வியாழன் கவிதை நேரம் பகுதியில் சகோதரி பேகம் அவர்களால் வாசிக்கப்பட எனது கவிதை..
மிக்க நன்றி சகோதரி பேகம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)