நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உன்னாலே! உன்னாலே!.

chez



யிரம் பேர் அமர்ந்திருந்தபோதும்
அருகில் நீயில்லாததால்
ஆளவரமற்றிருப்பது போன்று
அடிமனதிலொரு உணர்வு

ன இறுக்கத்தை மண்டியிட வைத்து
மயிலிறகாய் மனதினை வருடும்
வித்தையைக்கற்ற உன்
வார்த்தைகளின் வலிமை

சொட்ட சொட்ட -உன்
நினைவுகளால் நனைந்தபோதும்
செப்படி வித்தையாய்
நீருக்குள்  நனையாமலே நான்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உயிர்கள் எழுதிய உயிர்க்கவிதை.

இதயங்கள் இணைந்ததில்
இரத்த சம்பந்தம் உருவானது
ஈருயிர் சங்கமித்ததில்
ஓருயிர் உதயமானது.

இன்று எனது அன்புசெல்லத்தின் 12.வது பிறந்தநாள்.இறைவனின் சாந்தியும் அருளும். அவனுக்கு என்றென்றும் குறைவில்லாமல் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை இருகரமேந்திக் கேட்கிறோம்
.
நான்தாங்கோ மரூஃப்
சிங்கத்தின் வாயிலேயே கைவைத்து  சிறை பிடிச்சிட்டாறாம்.
என் தங்கை மகள்.பக்கத்தில் நம்ம ஹீரோ.இறக்கத்தில் அண்ணன் மகள்.மூவரும் சேர்ந்து, கல்ஃபா டேனலையும் விலைக்கு வாங்க வந்திருக்காங்களோ!

ஹயாத் ஐஸ்கேட்டிங்கில்,ஸ்கேட்டிங் செய்ய  களத்தில் குதிச்சிட்டாரோ!
ஸ்கை துபையில[எமிரேயிட் மாலில் ] ஆத்திக்காவும் மரூஃபும்.
ஐஸ் விண்வெளியை சுத்திப்பார்க்கப் போறாங்களாம் ..
ஆகா கெளம்பிடாருய்யா கெளம்பிட்டாரு. குதிரையிலேறி நாட்டை வென்றெடுக்க போறாரோ.
ஆத்திக்கா. மரூஃப்.  ஜிஹான் மூவரும் வீட்டில் நடத்தும் வெவ்வெ வெவே!

பாலைவன மணலையும் [பிளாட்]பங்குபோட.பைக்கிலேறி
புறப்பட்டு விட்டாரோ!
ஹை உயிருள்ள இரு சித்திரங்களுக்கு  நடுவில்.ஒருஉயிரற்ற சிற்பம் நிற்கிறதே!.
250.300. அடி ஆழத்திலிருக்கும் மலையில் இறங்கிவிட்டு மீண்டும் மலையேறுகிறாரே சாதனை செய்யப்போகிறாரோ!
கடல் நீரைகண்டதும் உற்சாகம் ஊற்றெடுக்க கானம் பாடுகிறாரோ!
இளவரசனும் இளவரசியும். ஒட்டக ஊர்கோளம் போறாங்களோ!
கோல்டுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு  குளிர குளிர ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்களோ!.
அல் அயில் சுடுதண்ணீர் வாய்காலில்.சுடுதண்ணீர் சுள்ளென்று சுட்டுவிட முகத்தை சுளிக்கிறாரோ!

மதினத்துல் ஜிமேராவில் நின்றுகொண்டு  மாடல்போஸ் கொடுக்கிறார்களோ!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.

வலை வீசப்போகிறேன் [என்னது அப்புடியா!!!]



      இந்த போட்டோவை அழுத்தினால்  வலைக்குள் விழுந்துடுவீங்க


அன்பு நெஞ்சங்களே!
நீரோடையின் நீரோட்டம் நாளையிலிருந்து 1 வாரத்திற்க்கு வலைச்சரத்திற்க்குள் ஓடப்போகிறது ஆகையால் இந்நீரோடையின் நீரோட்டதில் சல சலப்பு சற்று அடங்கியே இருக்கும்
இங்கு வந்து ஆதரவு தரும் அனைவரும் அங்கேயும் வந்து என் பணியை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பாவம் இந்த பச்சபுள்ள ஆரம்பப்பாடம் படித்துக்கொண்டிருப்பதபோய் ஆசிரியர் பணிக்கு அழைத்துள்ளார்கள். நம்மையும் நம்பி அழைத்தவர்களுக்கு நல்லபடியாக பணியை முடித்துக்கொடுக்கனுமுல்ல எல்லாம் உங்ககையில்தான் இருக்கு. ஆத்தி உங்களையெல்லாம் நம்பித்தான் கையில் பிரம்பில்லாமல் அன்பைக்கொண்டு போகிறேன் வந்துடுவீகல்ல வந்துடுவீக
வந்துடுங்க மக்கா..

என்னை அன்போடு ஆசிரியர் பணிக்கு அழைத்த வலைச்சரத்தின்
சீனா சார் அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது