நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாங்க வாங்க விருந்து களிக்க வாங்க.

[நம்மவீட்டு ஹீரோ மரூஃபும். என்தோழியின் மகள் ஜுல்பியாவும்.]

[காஞ்சி முரளி கூறியது...

ஏனுங்க...! 'நோன்பே' முடியப்போகுது... வரும் வாரம்..!
atleast .... 'நோன்பு கஞ்சி' கொடுப்பீங்கன்னு பார்த்தா....!
நல்லா... ஏமாத்துறாங்கப்பா...!
அப்படியே... ஒரு பிரியாணி சட்டிலே
எனக்கும்... ஜெய்லானிக்கும்... நாடோடிக்கும்... courierல போட்டனுப்புங்க.]

அப்படின்னு பிரியாணியும் நோன்பு கஞ்சியும் கேட்ட சகோ முரளிக்கும்.
அதில் பங்குகேட்ட ஜெய்லானி அண்ணாத்தேக்கு மற்றும் நாடோடியால் வந்த விருந்துதான் இது..

நீரோடையில் கண்களால் கவிதை நீராடி
களைத்தும் களைக்காமலும் -கண்
கலங்கியும் கலங்காமலும்-உதடு
சிரித்தும் சிரிக்காமலும்-மனம்
மகிழ்ந்தும் மகிழாமலும் -நெஞ்சம்
நிறைவடைந்து நிறைவடையாமலும்
எல்லாவற்றுக்கும் மேலாக
பொறுமையாய் படித்து
பொறுப்பாய் கருத்திட்டு - என்னை
பூரிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும்.

என் அருமை தமிழ்மக்களே! உங்கள் அன்பிற்குறிய மலிக்கா
[நிறுத்து என்னது பாரதிராஜா ஸ்டைலில்தான் இத நாங்க படிக்கனுமா அப்படினெல்லாம் கேட்காம படிங்கப்பூ] அன்போடு வழங்கும் [ நோன்பு மற்றும் பெருநாள் விருந்து [கண்களுக்கு மட்டும்] இது
தர்பூசணி. நோன்புக்கஞ்சி. சாம்பார். சம்சா.ஃப்ரைட் ரைஸ். டம்ளிங். கீமாதோசை. பேரிச்சைபழம். பால்சர்பத். கொய்யாஜூஸ்.
அனைத்தும் மச்சான் ஸ்பெசல்..[ஆனா தர்பூசணி நான் கட்பண்ணியது எவ்வளவு கஷ்டமான வேலை அதை என்னிடம் விட்டதுதான் கொடுமை அதை செய்து முடிப்பதற்குள் அப்பப்பா ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்]
இது முட்டை, மட்டன்கீமா. லாப்பா.

லாப்பா. வாழைக்காய் பச்சி. பெங்களூர் பக்கோடா.
வெள்ளரிமற்றும் பழங்கள். சைடிஸ் வருவதற்குள் கிளிக்.

நோன்புக்கஞ்சி. இது நான் செய்தது அதுவும் ஓட்ஸில் மட்டன்போட்டு.
என்னது குடிக்கிறமாதரி இருந்ததாவா? கோப்பையும் சேர்த்து காணோம் கடைசியில் கச்சடா சுருட்டும்போது சுருட்டியிருப்பாக! அவ்வளவு நல்லாவாஆஆஆ இருந்துச்சி. [முரளியண்ணா கேட்டீகளே நோன்புக்கஞ்சி இதோ]

நோன்புக்கஞ்சி. சிக்கன்கட்லெட். உளுந்து போண்டா. கொண்டைக்கடலை கூட்டு.

இது உருளைக்குகிழங்கு ஓட்ஸ் கட்லெட்.

இது எங்க அண்ணன்வீட்டுக்கு நாங்க நோன்பு திறக்க போயிருந்தபோது வைத்த பதார்த்தங்களை நான் எதார்த்தமாக செய்த கிளிக்.
இது கீமா மற்றும் ஓட்சில் செய்த மசாலா ஹரீஷ்.
இது ஒரு தனி டேஸ்ட்.
என்னதிது. ஏன் யாருக்கும் தெரியாதோ இதுதாங்கோ சிக்கன். இல்லயில்ல கோழி. ஓ அதுதான் இதா நாங்களும் என்னமோன்னு நெனச்சோம் அப்படின்னு பெருமூச்சி. காக்கா அதுவும் வெள்ளக்காக்கவை  இரவில் தின்னவங்க விடுவதுபோல் தெரியுது.
இத நாங்க கிரிளரில் சுட்டு. கப்சா சோறு செய்து. அதுமேல உக்காத்தி வச்சிருக்கோம். கோழி சோறை சாப்பிட்டுவிட்டு குண்டானதும்,
நாங்க சாப்பிட.

சரி சரி நீ கோழியைபார்க்காமல் கண்ணை மூடிக்கிட்டுதான் இருக்கேன்னு
அல்லாரும் நம்பிட்டாங்க! கண்ணு.
போங்க மம்மிஇன்னும் மீதியெல்லாம் எங்கே மம்மி.
 அதுவா வந்துகிட்டேயிருக்கு இதுகே கண்ணு போட்டுருவாங்கோ ன்னுதானே  சைடில் நின்னு கிளிக் செய்தேன் மரூஃப்கண்ணு.
ஓகே மம்மி
பாருங்க மம்மி ஜெய்லானி அங்கிளும். முரளி அங்கிளும். ஸ்டீபன் அங்கிளும். கூடவே இப்ப வந்திருக்கிற அய்யூஃப் அங்கிளும் குறு குறுன்னு என்னையே பார்க்கிறாங்க.
அச்சோ அப்படியா வெள்ளக்காக்காக்கிட்ட சொல்லி இவுகளெயெல்லாம் ஒரு வழிபண்ணிச்சொல்லாம்டா கண்ணு சரியா!
ஓகே மம்மி வெவ்வெவெவே..

தாயகத்திலிருந்து வந்தபின் எங்கள் வீட்டில் செய்த சில [ஏதோ ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டைபோல்] உணவு வகைகளை உங்களுக்கு விருந்தளிக்க இங்கே கொடுத்துள்ளேன். என்ன ஒன்னு வாசனை பிடிக்க முடியாது [அப்படாஆஆஆஆஆ தப்பிச்சேன்] கண்ணெதிரில் இருந்தும் கைதொட்டும் இடையில் கண்ணாடி [அதாங்கோ மானிட்டர் கண்ணாடி]தடுத்துக்கொண்டு வாயில் வைக்க முடியாமல் போகும் அவ்வளவுதான்.

இருந்தாலும் அன்பாய், பாசத்துடன் பரிமாறியுள்ளேன் அனைவருக்கும் உண்டுகளித்து அச்சோஒ கண்டுகளித்து மகிழுங்கள் [எங்கே மகிழ்வது வயிறு எரியுது அப்படின்னு எல்லாம் கோரசாக சொல்வதுபோல் கேட்குது] என்ன செய்ய என்னால் தற்போது இப்படிதான் விருந்து கொடுக்க முடியும். அனைவருக்கும் சேர்த்து கொடுக்க முடியாட்டியும் நிச்சயம் ஒருநாள் அனைவருக்கும் விருந்துகொடுக்க இறைவன் அருளட்டும். அருள் புரிவான்.

என்ன எல்லாரும் பெருநாள் துணியெல்லாம் எடுத்தாச்சா..
உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் என் அன்பான அட்வான்ஸ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

டிஸ்கி// மூன்று மாதமுன்பே டிக்கெட் புக்பண்ணிவைத்திருக்கும் கலாம்காக்காவுக்கு ஸ்பெசல் விருந்து பெருநாளைக்கு கொடுத்துட வேண்டியதுதான். [டிக்கெட்காலாவதி யானாலும் நாங்க விடமாட்டோமுல்ல அப்படின்னு அய்யூஃபிடம், கலாம்காக்கா அபுதாபியிலேர்ந்து சொல்லுறது கேட்குறதுபோல தெரியுது?]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

ஒரு காதலி காதகியானாள்.

அன்பேயென்றாள்
அரவணைத்தேன்
ஆருயிரேயென்றாள்
ஆட்டம் கொண்டேன்

அகிலமே நீதானென்றாள்
அடிபணிந்தேன்
உயிரே உனக்காகவென்றாள்
உருகி விட்டேன்

ஒருநாள் வந்து
ஓசையின்றி அழுதாள்
உதிர்ந்து விட்டேன்

அழுத முகத்தோடு
அழுத்தமான மனதோடு
அன்பே என்ற உதட்டால்
அண்ணா என்றழைத்தாள்

அழைத்த மறுநொடி
அடிதளம் அதிர அதிர
அதாளத்திற்குள் அழுத்தப்பட்டேன்
அண்ட சராசரம் அத்தனையும்
அப்படியே உரையக் கண்டேன்

அபூர்வமாய் தெரிந்த அவள்
அசிங்கமாய் தெரியக் கண்டேன்
அடுக்கடுக்காய் என் மனயேடு
அவளின் நினைவுகளை
அடிச்சுவடு தெரியாமல்
அழிக்கக் கண்டேன்

காதலல்ல காதலல்ல
அவள் என்மேல் கொண்டது
காதலல்ல
காதலின் பெயர்கொண்டு
காலமெல்லாம் எனை
கருகவைக்க வந்த
காதல் காதகி.

டிஸ்கி// பல இடங்களில் இதுபோன்று நடகிறது அதனால்
காதல்கள் கானலாகி போகிறது. சிலநேரம் கருகியும்போகிறது. உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக்கிறுக்கினேன்.

[சுஸ்கி//இது ஆண் பெண் இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்போது மாற்றி படித்துக்கொள்ள வேண்டும் ஜமால்காக்காவின் பின்னுட்டத்தால் வந்ததிந்த சுஸ்கி.. ஹா ஹா ஹா]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

சாட்டையடி

வீட்டைவிட்டு கிளம்பும்போது
விருட்டென சென்றது
வாசல்வழி வந்தபூனை

வாசலிலேயே நின்று
வடக்கு பார்த்தும்
வாஸ்து பார்த்தும் -மனதில்
விசமத்தோடு சென்றான்

வீதியிலொருப் பூனை-தன்
வயிற்றுப் பசிபோக்க 
எதிர்திசையில் கிடந்த -தன்
இரணத்தை எடுக்க ஓடியது

கூறுகெட்ட மனிதன்-அதன்
குறுக்கே போக
சர்ரென போனவண்டி-அதன்மீது
சட்டென ஏறியதும்

இறந்தது பூனை
இடிவிழுந்ததுபோல் நின்றான்
எல்லாம் கற்றறிந்த
இன்றைய மனிதன்

மரித்தது பூனை
மனிதனின்
சகுனம் சரியில்லாததால்-அவன்
மனதில் விழுந்தது சாட்டையடி
மனசாட்சியின் ஓசையால்......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது