நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுதந்திரமே சுதந்திரமே


சுதந்திரமே சுதந்திரமே!

உன் சுவாசம் தேடி அலைந்தபோது –அது
உச்சானிக் கொம்பில்
மூவர்ணங்களின் கொடியில்
மூச்சுவிட்டு அசைந்து கொண்டிருந்தது

சுதந்திரமே! உன்னை
அறுபத்தியிரண்டு வருடங்களுக்கு
முன்பே பெற்றுவிட்டோம் -ஆனால்
அதன் அடிச்சுவடுகூட தெரியாமல்
வாழ்வோரை காணும்போது
வியப்பதா? வேதனைப்படுவதா?

பாடசாலைகளில்
கல்வி கற்கவேண்டிய பாலகர்கள்
பட்டாசு தொழில்சாலையிலும்
கல்குவாரியிலும்.

சுத்தமான காற்றைகூட
சுவாசிக்க முடியாத
குடிசைவாழ் மக்களின் வாழ்க்கை
சுற்றிவலைத்த கொசுக்களிலும்
கூவத்தின் நாற்றத்திலும்.
அநியாயத்தில் கைகளில்
நியாயத்தின் குரல்வலைகளும்.

சகோதரத்துவத்தோடு
வாழவேண்டிவர்களின் ஒற்றுமை
சாதிமத சண்டைகளால்
வெட்டிக் கொன்று கொண்டும்
தனக்குச் சொந்தமானவைகளைக்கூட
தன்னோடு வைத்திருப்பதும்
ஆபத்தாகவும்.

அர்த்த ராத்திரியில்
ஆண்களே தன்னந்தனியே
வெளியில் செல்வது முடியாமல் போவதும்
முகம் திறந்த திருடர்களின்
கொள்ளையடிக்கும் மோகமும்
நாளுக்குநாள் கூடுவதும்

இப்படி சுதந்திரமே! நீ இருந்தும்
இல்லாததுபோலானதேயென
இவர்களின் நிலையை நினைத்து
வருந்தும் மனம் புண்ணாகிபோகிறது.

ஆனால்!
உன்னை அத்துமீறி
பயன்படுத்துவோரை காணும்போது
ஆத்திரப்படுவதா? ஆதங்கப்படுவதா?

அன்புக்கணவனையும்
ஆசைக் குழந்தைகளையும்
அந்தரத்தில் விட்டுவிட்டு
தன்சுகங்களுக்காக
தடுமாறிப்போகும் மனைவிகள்!
தன்னையே நம்பிவந்த மனைவி மக்களை
தவிக்க விட்டுவிட்டு
தன்னலத்துக்காக
தலைமறைவாகும் கணவர்கள்!

தன்சுதந்திரம் பறிபோகுதென
தன்னைப் பெற்றவர்களையே!
பெருஞ்சுமயையாய்
பெற்றபிள்ளைகளே நினைக்க
பெருகி வழியும் முதியோர் இல்லங்களில்
நெஞ்சுருகும் சோகங்கள்!

வயிற்றுக்கே போராடும்
வறுமையுடையோர்களை
வசதிபடைத்தோர்கள் வாரியணைக்காது
அன்றாங்காய்சியாக்கி அடிமாடுகளாய்
அடிபணியவைக்கும் அல்லல்கள்

முழுவதும் மூடிய காலம்போய்
சுதந்திரம் என்ற பெயரில்
முற்றும் துறந்தவராய் அலைந்துதிரியும்
ஆபாசத்தின் அவலங்களென
சுதந்திரத்தை
அசுத்தமாக்குவோரை எண்ணி
நெஞ்சம் புலம்பித் தவிக்கிறது.

சுதந்திரமே!
உன்னை அன்னியர்களிடமிருந்து-பலபல
சோதனைப்பின் சொக்கத்தங்கமாய்
வென்றெடுத்தோம்
அதை நம்மவர் சிலரின்
சுயநலத்துக்காக மட்டும் நீ
சொந்தமாகி மீண்டும்
அடிமையாகிவிடாதே!

சுதந்திரமே! சுதந்திரமே!
உன் சுதந்திரக் காற்றால்
இந்த தேசதத்தை சுத்தப்படுத்து
உன் சுகந்தமானகாற்று
இவ்வுலகை சுற்றியடிக்கட்டும்
அதில் இப்புனிதபூமியே
ல்லாங்குழல் வாசிக்கட்டும்
உலகெங்கும் சுதந்திரத்தின்
சுகங்கள் பரவட்டும்
மனங்களனைத்தும் இணைந்துஒருதாய் மக்களாய் வாழட்டும்.....


/இதை சுதந்திரதினத்தன்று :தமிழ்குடும்பத்திற்காக: எழுதியது/
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

பத்துக்கு 10



இந்த தொடருக்கு என்னை அழைத்த தோழர் தியாவிற்கு நன்றி

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்


கவிஞர்

பிடித்தவர் –கவிக்கோ அப்துல்ரஹ்மான், கவியரசு வைரமுத்து

பிடிக்காதவர்- கொச்சையாக எழுதும் கவிஞர்கள்


தியாகி

பிடித்தவர்-  வீரபாண்டிய கட்டபொம்மன்

பிடிக்காதவர்-எட்டப்பன் [போடனுமுள்ள]


இயக்குனர்

பிடித்தவர்- விக்ரமன் K. S. ரவிக்குமார்

பிடிக்காதவர்- எஸ்ஜே சூர்யா


அரசியல்வாதி

பிடித்தவர்- காமராஜர்

பிடிக்காதவர்-என்னத்தசொல்ல [புரியுமுன்னு நினைக்கிறேன்]


விஞ்ஞானி

பிடித்தவர்- டாக்டர் A P J அப்துல்கலாம்

பிடிக்காதவர்- தெரியவில்லை
                         
நடிகை
பிடித்தவர் --பொய்சொல்லபிடிக்கலைங்கோ அதனால

பிடிக்காதவர்--யாரையுமே பிடிக்குமுன்னு சொல்லமுடியலைங்க

நடிகர்
பிடித்தவர்- சிவாஜிகணேசன்

பிடிக்காதவர்-ம் ஆன்ங் [இதாருன்னு சொல்லுங்க]அவுகதான்



பேச்சாளர்-

பிடித்தவர்- பாரதி பாஸ்கர்

பிடிக்காதர்-விஜய டிராஜேந்தர்


எழுத்தாளர்

பிடித்தவர்- அப்துற் றஹீம், சுஜாதா,

பிடிக்காதவர்-சோ

இசையமைப்பாளர்

பிடித்தவர் இளையராஜா, A R ரஹ்மான்

பிடிக்காதவர்- ஸ்ரீகாந் தேவா.

இத்தொடரை தொடர நான் அழைக்கும் அன்பர்கள்

ப்ரியமுடன் வசந்த்
மேனகா சத்தியா
வெண்ணிற இரவுகள், கார்த்திக்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

நாந்தானுங்க



நாட்டுக் கோழி பேசுறேன்
நானும் கூட்டம் கூட்டமாக பறக்கும்
பறவைகள்போல் பறக்கனும் என்றுதான்
ஆசைப்படுகிறேன் ஆனால் முடியவில்லையே பறக்க


சிறகுகள் இருந்தும் சக்தியில்லாததால்
குப்பைமேடுகளிலும் கூரைகளிலும் 
பறந்து பறந்துதான் -என் ஆசைகளை
நிறைவேற்றுகிறேன் என்ன செய்ய

என்விதியை நினைத்து வெந்துசாகிறேன்
மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்...



அன்புடன்: மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது