நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தாய் மனசு





தங்கமே வந்துவிடு
என் தாமரையே வந்துவிடு
தாலாட்டி
நான் வளர்த்த
என் தாரகையே வந்துவிடு
உன்னை
நான் சுமந்த வேலையில்
பட்ட துன்பங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல!

சூடாக சாப்பிட்டால்
அதுஉனை சுட்டுடுமோ
என்றெண்ணி
சுரத்தே இல்லாமல்
நானுண்டேன் பலமாதம் -
ஆனாலின்று
நீ சுட்டுசுட்டு தள்ளுவதாய்
மற்றவர்
சொல்லக்கேட்கின்றேன்

மரத்தா விட்டது
ஒன்மனசு
என்மாரணைத்துதானே
பால்கொடுத்தேன்!
மறந்தா விட்டது
ஏனெப்பு
என் மனசுக்குள்ளேதானே
பொத்தி வளர்த்ததேன்!

தீராத
வலியெடுத்தல்லவா!
உனை பிரசவிச்சேன்-அதற்கு
கைமாறாகத்தான்
நீ தீவிரவாதியானாயோ!
ஒரு பாவமும் அறியாமல்
நான்னுனை பெற்றெடுத்த
பாவியடா!
பல பாவங்கள்செய்கிறாய்
நீயென
செய்தித்தாள்களில்
கண்டேனடா!

பதைபதைத்து
நானிருக்கேன்
பரிதவித்துப்போயிருக்கேன்
நான்பெற்றெடுத்த
பாவமோ!
இல்லை யார்
கொடுத்தசாபமோ!
இந்நிலைஉனக்குவர
அந்ததெய்வந்தான்
காரணமோ!
வயிற்றுக்குச்
சோறில்லையென்று
வக்கிரபுத்திக்காரர்களின்
வசியத்தில்
வழிதவறிபோனாயோ!

இந்த
லகுக்கே நீ
பொல்லாதவன் என்றாலும்
என்றைக்கும்
பெற்றவளுக்கு நீதான்
பிள்ளையடா!
ஒன்றும் புரியாமல்
புறப்பட்டு போனவனே!
போனதெல்லாம் போகட்டுண்டா
பொழுதுவிடியுமுன்னே
பொசுக்குன்னுவந்திடடா!

செய்தபாவம்
அத்தனைக்கும்
அந்ததெய்வமென்னை
தண்டிக்கட்டும்.
செய்தவினைபோதுமடா!
இனி
சிறப்பாய் வாழவந்திடடா!

என்கண்ணீரும் ஓயவில்லை
என்கண்களும் மூடவில்லை
என்புலம்பலும் தீரவில்லை
இன்னும்

எம்பொழுதும் விடியவில்லை
இருட்டோடு இருட்டாக
நம்துயரங்கள் போகட்டும்
வெளிச்சம் உருவாகி
நம்வாழ்க்கை செழிக்கட்டும்

வந்துவிடு
என் மகனே
என்னுயிர்
போகும்முன்னே..........

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

எச்சில் பூக்கள்


நாகரீகம் என்ற பெயரில்
அநாகரீகங்கள் அத்துமீரும்போது-இந்த
அல்லிப்பூக்கள் அறுவடைக்கு வருகிறது

பெற்றோரின்
முகம்காணாயிந்த மொட்டுக்கள்
தவறே செய்யாமல்
தண்டனை அனுபவிக்கும்
சிறகொடித்த பறவைகள்

தன் சுகங்களை மட்டுமே
பெரிதென எண்ணிவாழும்-சில
மனித ஜென்மங்களால்
ஜனனத்தில்கூட ஜடமாகிபோகும்
இச்சின்னஞ்சிறிய சிசுக்கள்

தான் அனாதையாக்கப்பட்டோம்
என்பதையறியாமலே
ஆதரவற்ற நிலையில்
அனாதையில்லத்தில்
அல்லாடும் இத்தளிர்கள்
தான் யாரென அறிந்த பின்னே
துடியாய்த் துடிக்கும்
இந்த பிஞ்சு மனங்கள்

கலாச்சாரத்தின் குரல் வலையை
காலடியில்யிட்டு மிதித்து
நாகரீகத்தின் பிடியில்
சிக்கிச் சீரழியும்
நவநாகரீக கன்றுகளே!

தன்கற்பு எனும் மானத்தை
காத்துக் கொள்ளுங்களேன்
அனாதை என்ற ஒன்றை
இல்லாமல் ஆக்குங்களேன்!!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்..

கிடைக்குமா ஓர்வரம்



நம் விழிகள் இரண்டும் விபத்துக்குள்ளானபோது
இடம் மாறிக்கொண்டன இதயங்கள்

எடுத்துசென்ற இதயத்தில் எவ்வித எண்ணங்களையும்
இணைத்துவிடாமல் திருப்பித்தந்துவிடு

தடுமாறி வந்த இதயத்தில் இருக்கிறதாம் ஒரு ஓட்டை
இனி கொஞ்சநாள்தான் நான் சுவாசிக்க முடியுமாம் காற்றை

"ஆதலால்"


தாழ்மையுடன் கேட்கிறேன் தயங்காமல் தந்துவிடு

என் இறப்புக்குப்பின் நீ இயந்திரமாக வாழ்வதை
நான் விரும்பவில்லை

விரும்பி வந்தவளே நான் வெறுத்துவிட்டேன் என்றெண்ணி
உன் வாழ்க்கையை வசந்தமாக்கிக்கொள்-என்று
உன்னிடம் சொல்லிவிட்டேனே தவிர

தவிக்கின்றேன் தினம் தினம் -உன்னோடு
இணைந்து வாழ கிடைக்குமா ஓர்வரம்
என நினைத்து ஏங்குது என்மனம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது