நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்சுவாசம்-உன்வசம்


எனதுயிரே,,
உன் சுவாசம் வெளியேறியபோது- அதை
என் மூச்சுக்காற்றுக்குள் உள்வாங்கிக்கொண்டேன்,

”வேண்டுமெனில்”
உன் சுவாசத்தை நுகர்ந்துபார்!!!
நான்விடும் மூச்சுக்காற்றில்
உன்வாசம் கலந்திருக்கும்.

என் சுவாசக்குழாயினுள்
உன்சுவாசத்தை சிறைவைத்துக்கொண்டேன்,

”ஏனெனில்”
வெளிசுவாசம் உள்நுழைகையிலும்-என்
உள்சுவாசம் வெளியேருகையிலும்
என்நொடியும் என்சுவாசம்
உன்வசம் இருக்கவேண்டுமென்பதற்காக.....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

இருளும்!!!ஒளியும்


எதற்கு
இறைவனின் அருளை- நாம்
பெறவேண்டுமே
அதற்கு


மனிதா!
உன் கருவறை தொடங்கி
உன் கல்லறை வரையில்
உன்னை இருளென்னும்
சோதனையைக்கொண்டு
சோதிப்பதே இறைவனின் வேலை!


அதை
தன்னம்பிக்கையென்னும் மனதில்
இறைநம்பிக்கையென்னும்
உறுதியைக்கொண்டு
வெற்றிபெறவே வைத்துள்ளான்
மனிதனுக்கு மூளை!


வெளிச்சத்தில்
அமர்ந்திருக்கும் மனிதனுக்கு
திடீரென்று
இருட்டு சூழ்ந்துகொள்கிறது-உடனே
மனதில் பயம் புகுந்துகொல்[ள்]கிறது


உள்ளத்தில் உதறல் எடுத்தபோதும்
இருட்டிய இருளுக்குள் அமர்ந்து
அதை உற்றுப்பார் உற்றுப்பார்-
இன்னும் உற்றுப்பார்
அப்போது தோன்றும் ஒரு சிறு ஒளி
அதுதான் உன் ”மனஉறுதி”


மனிதனாய் பிறந்து
மனசாட்சியோடு வாழ்வதற்கும்
மனிதனாய் பிறந்ததற்காக
மனிதத்துடன் இறப்பதற்கும்
மனிதனுக்கு நிச்சயம் வேண்டும்
மனஉறுதி!


அந்த வெண்நிலவை
சற்று கவனித்துப்பார்
அதிலும்கூட
இருளின் கலவை இருக்கும்
தனக்குள்
இருளுள்ளதே என்பதற்காக
ஒளிராமல் இருக்கிறதா
இல்லையே!


வாழ்க்கை முழுவதும்
சோதனையில்லாமல்
வாழ்ந்தவர் எவருமில்லை
அப்படி இருந்தால்
அவரிடம் கேட்டுப்பார்


ஏதோ ஒருவகையில்
இருளென்னும் சோதனைக்குள்
இன்னுமும்
ஏதோஒரு வெளிச்சமென்னும்
வெற்றியை
தேடிக்கொண்டிருப்பதை
விவரிப்பார்


இருளைவிட்டு உடனடியாக
ஒளியை கண்டால்
உன் கண்கள் உடனே மூடிக்கொண்டு
இருளைத்தேடும்
அதை உணர்ந்தபின்னே
ஒளியையை நாடும்

இருளில்லாமல் ஒளியில்லை
சோதனையில்லாமல்
வாழ்க்கையில்லை

ஆதலால்


சோதனையிலும்
வெற்றிபெற்றுவாழ்க்கை
வாழ்ந்திட
இருளை உணர்ந்து
ஒளியை பெற்றிட


இருளிலும் ஒளியிலும்
இறைவனை நினைத்திடு
ஈருலகிலும் மகத்தான
வாழ்வினை பெற்றிடு...




இக்கவிதை அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் மாதஇதழில் வெளிவந்த
என்கவிதை




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்


இறைவனின் துணைக்கொண்டு
இனிதே நிறைவேறியது
நோன்பென்னும் புனித விரதம்

இம்மாதம் முழுவதும் மகிழ்ந்த மனம்
கரையேரும் நோன்பை நினைத்து வருந்தும்
இனிதினம்

முடியும் மாதத்தை நினைத்து வருத்தம் ஒருபுறம்
முடிந்தபின் முதல் நாள் வரும் பெருநாளை நினைத்து
சந்தோஷம் மறுபுறம்

நாளை வரும் பெருநாளை வரவேற்கின்றேன்
இன்றே,
உங்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்கின்றேன்

உலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
தோழமைகளுக்கும் உள்ளங்களுக்கும்
என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது