ஓடுடைந்து கவிச்சடிக்கும் முட்டையாய்
ஒட்டி உறிஞ்சும் அட்டையாய்
சுயமிழக்க முடியுமோ
சுயநலமது சுயத்தினை போக்குமோ..
சுயமிழக்க
நெருங்கும் தருணம்
சுயம் காக்க முனையுமெந்தன்
சுயநலம்...
சுயம் பேணத்தவறும் -பிறர்
சுயத்திலென்
சுயமிழக்க விரும்பா
சுயநலம்..
தன்நலம் காத்து
பொதுநலம் சிறக்க
என்நலன் தேக்குமென்
சுயநலம்..
சூடு சொரணையற்று
சுடுசொற்கள் பட்டு
மண்புழுவாய் சுருழ
மதிமறுக்குமென் சுயநலம்..
குட்டக் குட்டகுனிந்து- இனியும்
குனிய முடியா நிலையில்
கட்டவிழ்த்து
குட்டுமென் சுயநலம்..
இல்லாமை நெறுக்கி
இன்னலிடும் போது
பொல்லாமை நீக்க
பொசுக்கென பாயுமென் சுயநலம்..
சுயநலக்காரியென
சுட்டிக்காட்டுவதை
சுண்டித்தள்ளுகிறேன்
சுயம் தேடும் பறவையாகாது
சொறியக்கொடுக்கும் மாடாய்
செல்லவிரும்பாததால்...
=============================================
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
சுயநலக்காரியோ..
பதிலளிநீக்குஉங்கள் சுயநலம் வாழ்க
சுயம் நல்லது
உங்களிடம் கற்றதால்..
ஆமாம்
நீக்குநான் சுயநலக்காரியே
என் சுயத்தைப்பறித்து
என்னை என்னிடமிருந்து பிரிக்க நினைப்போருக்கு
நான் சுயலக்காரியே...
கற்றல் நலம்
நல்லதை..
நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ..
மேடம்...
பதிலளிநீக்குசுயநலத்திலிருந்து
விளைவதுதான்...
பொதுநலம்...
சும்மாச்சும்...
உங்களுக்குத்தான்
கவிதை எழுதத் தெரியுமென்று...
உங்க இஷ்டத்துக்கு எழுதுனா என்ன அர்த்தம்...
சுயநலமில்லையேல்...
பொதுநலமில்லை....
பள்ளியில் கற்கும் போதும்...
கல்லூரியில் பயிலும் போதும்...
பாரட் லா பட்டம் பெறும் போதும்...
தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் போதும்...
சுதந்திரத்தைப் பற்றி சிந்திக்காத
“காந்தி”....
வெள்ளைக்காரன் செல்லும் முதல் வகுப்பு பெட்டியில்... கறுப்பினத்தைச் சேர்ந்த இவரை ஏற்றாமல்... பிளாட்பாரத்தில் தள்ளியபோதுதான்.. “சுதந்திரம்” பற்றி சிந்திக்கத் தொடங்கினார்... காந்தி...
தன்னை ஒருவன்
பிளாட்பாரத்தில் தள்ளிவிட்ட பின்புதான்...
தான் பாதிக்கப்பட்ட சுயநலத்தால்தான்..
“சுதந்திரம்” என்ற பொதுநலம் உருவானது...
எனவே..
சுயநலத்தை பழிக்காதீர்... கவிஞரே....
ஹெல்லோ ஹெல்லோல்லோ
பதிலளிநீக்குநல்லபடிங்க புலவரே
நாங்களும்
சுயநலம் வேணும் அது நல்லது
அதிலிருந்தே பொதுநலமென்றுதானே சொல்லியிருக்கோம்
நான்
என் சுயம்
இதை
யாருக்காகவும் விட்டுதருவதில்லை
விட்டுக்கொடுப்பதுமில்லை
சுயநலக்காரி என்கிறீர்களா
சொல்லிவிட்டுபோங்கள்
சொல்லை தள்ளிவிட்டு நடப்பேன்
என்றுதானுங்க சொல்லியிருக்கோம்....
காஞ்சிமுரளியாரே...
அவ்வளவு... சத்தமாவா கேட்குதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது....
நீக்கும்கும்
பதிலளிநீக்குகேட்டுடுச்சே