நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சமமாக வேண்டுமடி சகியே!



அவர் உழைக்கவில்லை
அடுப்பு எரியவில்லை
ஆண்
அடிமாடாய் உழைக்கவேண்டும்
பெண்
அடுப்படியில் இருக்கவேண்டும்
காலங் காலமாக
எழுதப்படாத விதியாகப்போனதோ!

உழைத்துக் களைப்பவனுக்கு
ஊதியங்கள் கைநிறைந்தால்
உறவுகளின் மனம்நிறையும்
உழைத்துழைத்தே ஓட்டாண்டியாய்
ஓடாய் நாராய் போனப்பின்னே
ஓய்வெடுக்க எண்ணுகையில்
முடங்கப்பட்டு மூலையில்!

இணையென்பதின் அர்த்தம்
இணக்கத்தில் மட்டுமல்ல
எல்லாத்திலும்
இருத்தல் வேண்டும்
தாரம் அவனின் ஆதாரமாக
தாங்கவேண்டும் தக்க சூழலிலும்
அவன் முடங்கப்படும் முன்பே!

வீட்டில் உலைகொதிக்க
விலையேற்றத்தின் மலைகண்டு
நிலைதடுமாறுவதை தடுக்க
தள்ளாட்டும் அலையை
தாலாட்டாய் நினைத்து
வலைவீசத்துணிந்தாள் இவள்!

பெண்ணுக்குள்
பொறு[றா]மை மட்டுமல்ல
போர்வெல்லும் ஆண்மையுமுண்டு
வெல்வதற்கு
வழிகாட்டுதல் மட்டுமல்ல
தனதாற்றலைக்கொண்டும்
வெற்றியின் வேர்பிடித்து
வளரவும் தெரியும்

குடும்பத்தின் தளம்காக்க
உழைப்போடு கைகோத்து
துணைக்கு தோள்கொடுத்து
வாழ்க்கையினை வளப்படுத்த
இவள் வலையெடுத்தாள்
நான் வளையெடுத்தேன்

மானங்காத்தபடி
வருமானமீட்டடி சகியே
வாழ்வும் செழிக்குமடி
வாஞ்சையும் நிலைகுமடி சகியே!
குடும்பம் காப்பத்திலும்
கூடி மகிழ்வதிலும்
ஆணும் பெண்ணும்
சமமாக வேண்டுமடி சகியே!
==============================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

8 கருத்துகள்:

  1. செந்தில்மணிகண்டன்8 பிப்ரவரி, 2015 அன்று PM 12:56

    ஆண்
    அடிமாடாய் உழைக்கவேண்டும்//

    ஆமாங்கக்கா எவ்வளவு உழைத்தாலும் அடிக்குமேல் அடி விழுந்துகொண்டேயிருக்கு.துணையானவளே இதைபற்றி கவலைகொள்வதில்லைக்கா.கூடப்பிறந்தவங்க அதுக்குமேல. என்ன செய்ய எங்க நெலம யார்கிட்ட சொல்லி அழ எங்க துயரம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு சகோவிற்கு. காலப்போகில் எல்லாம் மாறும். அவர்கள் தங்களை புரிந்துகொள்வார்கள் கவலைவேண்டாம். சில சிலரை புரிந்துகொள்வது சிரமம்தான், என்ன செய்ய வாழ்வந்துவிட்டோமே வானத்தின் கீழ் வாழ்ந்துபார்த்திடலாம்.

      நெஞ்சார்ந்த நன்றி கருத்துகள் பகிர்ந்துகொண்டமைக்கு..

      நீக்கு
  2. தங்களின் கவிதையை சுவாசித்தேன் . ஒரு இன்பகரமானதொரு நிலையில் , என்னை ஆட்கொண்டுவிட்டன தங்களின் கவிதை வரிகள் . தொடர்ந்து எழுதுங்கள் அக்கா ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மகேஷ். கவிதை வரிகளை சுவாசிக்கவும் ஒரு மனம் வேண்டும். தங்களின் வருகைக்கும் கவிதை சுவாசிப்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்வருகையை எதிர்பார்க்கிறேன் சகோதரா..

      நீக்கு
  3. அருமையான கவிதை அக்கா...
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/8.html

    பதிலளிநீக்கு
  5. வலைச்சரத்தில் இன்று தங்களது வலைத்தளத்தை திரு வை.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    பதிலளிநீக்கு
  6. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள் சிறப்பான கவிதைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது