விதி முடியும் தருமிது
வாழ்க்கை வாழ நேரமில்லை
சதிராட்டம் ஆடியதெல்லாம்
சக்தியை தருவதில்லை
செய்தவைகள் கண்முன்னே
சுழல் காட்சிகளாய்
சுழன்றுவர
மாட்சிபெற கைகுப்பி
மண்டியிட்டு கேட்டாலும்
மரணமது விடுவதில்லை
மண்ணில்
மறுவாழ்க்கை வாழ
வழி தருவதில்லை
சதியென்ற போதினிலும்
விதியென்ற போதினிலும்
மரணம்வென்ற மதியில்லை
மரணமில்லாத ஜீவன்களில்லை
உலகில் உள்ள அத்தனைக்கும்
இங்கேயேயிருக்க அனுமதில்லை
இவ்வுலகமும் நிரந்தரமில்லை.
------------------------------------------
அகோர மரணம்
ஆபாச மரணம்
நடுவழியில் மரணம்
நாதியத்த மரணம்
இவையணைத்துமில்லா
இலகுவான மரணம்
எனைத்தழுவ வேண்டி
இருகண்கள் மூடி
இறைவனிடம் வேண்டி
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
உண்மை... உண்மை வரிகள்...
பதிலளிநீக்குஉண்மையான வரிகளை உள்ளடக்கிய அருமையான கவிதை அக்கா.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குநீரோட்டம் என்னும் வலைப்பூவில் மிக உயிரோட்டம் உள்ள கவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குத.ம. 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மாஷா அல்லாஹ்.
பதிலளிநீக்குநல்ல வரிகள்.