குருதியின் கண்ணீராய்
வேர்வைத் துளிகள்
வேகாத வெயிலிலும்
தாங்காத குளிரிலும்
தன்னை வருத்திக்கொண்டு
குடும்ப மென்னும் கூடு
வறுமை யென்னும்
கிலிக்குள் சிக்காதிருக்க
வருத்தமதை தான் சகித்து
வசந்தமதை குடும்பம் சுகிக்க
நெஞ்ச டைக்கும் பாரம்
தாங்க முடியா துயரம்
மேனி தாளா வருத்தம்
எதையும் பொருட்படுத்தாது
பொதியிழுக்கும்
மாடாய் மனிதன்
காகிதமவனை ஆட்டுவிக்க
களி மண்ணை
சுமக்கும் நிலையில்
சூலைகளின்
சுவாலையில்
வேகும் செங்கற்கள்
கருகாது சிவந்திருக்கும்
ஏனெனில்
களிமண்ணுக்குள்
ஏழைகளின் உழைப்பு
செந்நீராய் கலந்திருக்கும்...
100, தாண்டி மீண்டும் 01 லிருந்து தொடங்கப்பட்ட
கவிதை வயலுக்காக இக்கவிதை. நன்றி சகோ றாபி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
வரிகள் அருமை...
பதிலளிநீக்குஉண்மையும் கூட...
தொடர வாழ்த்துக்கள்...
உடனுக்குடன் கருத்திடுவதில்
நீக்குஉங்களை மிஞ்ச யாருமில்லை சகோ
மிக்க சந்தோஷம். மிக்க நன்றி..
வணக்கம்
பதிலளிநீக்குகவிதையின் வரிகள் மிக அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன். தங்களின் வாழ்த்துக்கும் கருதுக்கும் மிக்க மகிழ்ச்சி..
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம.3.வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் பதிவுக்கு கருத்துமிட்டு, வாக்குமிட்டு சென்றமைக்கு மிக்க நன்றி ரூபன்..
நீக்குஉழைக்கும் வர்கத்தின்
பதிலளிநீக்குஇப்பெருநாட்டின் தூண்களை பற்றிய
அழகிய கவிதை சகோதரி..
அருமை.
தங்கைளைபோன்று கவிதைகள் ஒவ்வொன்றும் வரிக்கு வரி வெளுத்துவாங்க தெரியாவிட்டாலும் என்னளவுக்கு எழுதியுள்ளேன் சகோ.
நீக்குஅன்பின் கருத்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ..