நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆதலால் காதலிக்காதே!


காதலிக்காதே!

கனவுகள் மெய்படட்டும்
கண்ணீர் பாதுகாக்கப்படட்டும்
கற்பனைகள் பொய்யாக்கபடட்டும்
கள்ளத்தனம் குடியேராதிருக்கட்டும்

காதலிக்காதே!

கிறுக்கல்கள் கவிதையாகதிருகட்டும்
காகம் குயிலாகாதிருக்கட்டும்
கனவுகளுக்கும் ஓய்வு கிடைக்கடும்
கடலலைகள் கலங்கப்படுத்தாதிருகட்டும்!

காதலிக்காதே!

தொண்டைக்கும் வயிற்றுக்குமிடையில்
துன்பங்கள் சேராதிருக்கடும்
இமைகளுக்கும் விழிகளுக்குமிடையில்
இன்னல்கள் கூடாதிருக்கட்டும்
தனிமைக்கும் கூட்டத்திற்கும் நடுவில்
தவிப்புகள் நிகழாதிருக்கடும்
இரவுக்கும் பகலுக்குமிடையில்
ஏக்கங்கள் தொடராதிருக்கட்டும்!

காதலிக்காதே!

நிலவு நிம்மதியாயிருக்கட்டும்
நித்திரைக்கு சுதந்திரம் கிடைக்கடும்
நிகழ்காலம் நின்றுவிடாமலிருக்கட்டும்
நிம்மதி பறிபோகாமலிருக்கடும்!

காதலிக்காதே!

கம்பனுக்கும் கவிக் கிறுக்கனுக்கும்
வித்தியாசம் தெரியட்டும்
உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும்
வித்தியாசம் விளங்கட்டும்
வறுமைக்கும் வசதிக்கும்
வம்புகள் வராமலிருக்கட்டும்.!

பாவற்காய் கரும்பாகி!
பாம்பு கயிறாகி!
பச்சைத்தண்ணீர் பாலாகி!
பார்ப்பத்தெல்லாம் பரவசமாகி!
கிறுக்குப்பிடித்து! தனியே சிரித்து!
உருக்குழைந்து! ஒளிந்து அழுது!

இப்படி! - - இப்படியெல்லாம்
நிகழாதிருக்க வேண்டுமெனில்
காதலிக்காதே!
காதலை அலைக்கழிக்காதே!

இலண்டன் வானொலியில் சகோதரி பேகம் அவர்களால் வாசிக்கப்படும்
எனது கவிதை.

7 கருத்துகள்:

 1. நிலவு நிம்மதியாயிருக்கட்டும்
  நித்திரைக்கு சுதந்திரம் கிடைக்கடும்//

  உண்மைதான் மலிக்கா .இந்த நிலவு படும் பாடிருக்கே அப்பப்பா சொல்லிமாலாது அது வாயில்லை இருந்தால் ஒப்பாரிவைக்கும்..

  எனக்கு ரொம்ப பிடித்தது இக்கவிதை..

  நல்ல வேள சொல்லிட்டீக காதலிக்கல..

  பதிலளிநீக்கு
 2. அதுசரி இதெல்லாம் நிகழுமுன்ன என்ன செய்யனும் மலிக்காக்கா..

  பதிலளிநீக்கு
 3. ஆமா...
  இதெல்லாம் நிகழுமுனும்னா...
  என்ன செய்யணுங்கோ....

  பதிலளிநீக்கு
 4. நீங்க சொல்லிட்டீங்க... ஆனால் நான் இன்னும் காதலித்துக் கொண்டே இருக்கிறேனே-அன்பு உள்ளங்களை...

  பதிலளிநீக்கு
 5. நீங்க சொல்லிட்டீங்க... ஆனால் நான் இன்னும் காதலித்துக் கொண்டே இருக்கிறேனே-அன்பு உள்ளங்களை...

  பதிலளிநீக்கு
 6. ஆதலால் காதலிக்காதே சூப்பரப்பு..

  ஆனாலும் காதலிப்பேன் அவஸ்தைகள் பிடிச்சிருக்கே ஹா ஹா.

  என்னானாலும் நீங்க சொல்லிட்டீங்க அப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டியதுதான் ஏன்னா பெரியவுங்க சொன்னா பெருமாளே சொன்னமாதரி.. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 7. மாறுபட்ட சிந்தனைகள்.

  ஆனால் இந்த ஞானம் நமக்கு ஏற்படுவ்தற்குள், நம் நாடி
  நரம்பெல்லாம் தளர்ந்து போய் விடுகிறது, என்பதல்லவா உண்மையான யதார்த்தமான நிலையாக உள்ளது! ;)

  யார் சொல்லியும் யாரும் கேட்கப்போவது இல்லை.

  அதுவே காதலின் வலிமை.

  பகிவுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது