நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ப்ரியத்தின் வெளிப்பாடு!இருபது வருட ஆவல்
இனம்புரியா இதயத்தின் தேடல்
அன்புகொண்டவர்களை இணைத்தது
இணையத்தின் சாதனை
இணைந்த மனங்களுக்கு கிடைத்தது
ஆத்மார்த்த நட்பின் ஆராதணை
 
நட்பு என்னும் பந்தமொன்று
நெடுநாளானபின்னும் படர்ந்து வந்து
நெஞ்சத்துக்குள் நுழைந்துகொண்டு
நேசப்பூக்களை பூத்துச் சொரிகிறது
 
கொடுக்கல் வாங்கலில்
அன்பு அதிகரிக்கும்
அன்பை கொடுக்க கொடுக்க
ஆத்மா மகிழ்வடைந்தும்
அன்பு கிடைக்க கிடைக்க
ஆத்மா நிறைவடைந்தும்
 
இயற்க்கைமீது இச்சைகொண்ட பச்சை
இதோ என்மீதும் கொண்டதுபோல்
எங்கிருந்தோ எனை நினைத்து
எனக்காக தேடியெடுத்து
இதயக்கண்ணால் எனக்கு போட்டு அழகுபார்த்து
ஹாஜியிடம் அனுப்பிவைத்த
இளம் பச்சைநிறத்து கழுத்தணியும் காதணியும்
அணிகலன்களாய் என்னிடம் வந்து சேர்ந்தது
 
எல்லையில்லா அன்புகோர்
எடுத்துக்காட்டு இதையென்பேன்
பாசம் தந்த பரிசுயிதை
பலங்காலந்தொட்டு வைத்திருப்பேன்
அன்பென்னும் அகராதிக்கு
அஸ்மா என்னும் நட்பை மொழிபெயர்ப்பேன்..
=============================================

நாம் எதிர்பார்க்காமல் நமக்கு பிடித்தது நடந்தால் எப்படியிருக்கும,அதைவிட மேலாக இருந்தது இந்நிகழ்வின் சந்தோஷம். என்மீது அஸ்மா அக்காவிற்க்கு எத்தனை ப்ரியம் அதனை வெளிப்படுத்தியது இந்தச்செயல்.

இவ்வருடம் ஹஜ்ஜிக்குசென்றிருந்த எனது நாத்தனார் அவர்களை, நேரில் சென்று பார்த்ததோடு, எனக்காக இந்த நெக்லஸ் செட்டையும், அனுப்பியிருந்தார்கள். எத்தனை ஆண்டுகள் கடந்தாலென்ன! கண்டங்கள்தாண்டி இருந்தாலென்ன! உண்மை நட்பு என்றேனும் ஒருநாள் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் என்பதை சாத்தியமாக்கியது எங்களின் குரல்வழியே இதயங்களின் சந்திப்பு. இறைவன் நாடினால் வெகுவிரைவில் நேரிலும் சந்திப்போம்.

அக்கா நீங்கள் அனுப்பிய
நட்பின் அடையாளத்திற்க்கு நன்றிசொல்லபோவதில்லை 
அன்பாய்  அதீதப்ரியமாய்  
ஆத்மார்த்தமாய் எனக்குள் நீங்கள் குடியேறிக்கொண்டதால்..

இப்படியும் நடக்குமா?
இதையும் கிளிக் செய்து பார்க்கவும்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

30 கருத்துகள்:

 1. அருமை...நீங்கள் இருவரும் அனைபிரியா நண்பர்களாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. நட்பு என்னும் பந்தமொன்று
  நெடுநாளானபின்னும் படர்ந்து வந்து
  நெஞ்சத்துக்குள் நுழைந்துகொண்டு
  நேசப்பூக்களை பூத்துச் சொரிகிறது
  //

  அருமைங்க. உங்களோடு நட்புகொள்ள ஏங்குது மனம்.ஏற்பீங்களா இந்த நட்பையும்.

  சுகைனா பர்வின்.

  பதிலளிநீக்கு
 3. தங்களின் பிரியமான நட்பு மனதை பரவசப்படுத்தியது... மகிழ்ச்சி... தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. ப்ரியம் சமைத்தக்கூடு இந்த நட்பின் வெளிப்பாடு..

  இதுவும் உங்கல் வரிகள்தான் மலிக்கா. நட்புக்கவிதையில் சுட்டேன்..

  உங்கள் நட்பில் நானும் இணைகிறேன்.

  வாழ்த்துகள் இருவருக்கும்

  பதிலளிநீக்கு
 5. சலாம் சகோ..

  மாஷா அல்லாஹ்.. சகோ அஸ்மா மீதான அன்பை அழகாக கவிடை நடையில் சொல்லி இருக்கீங்க...

  அஸ்மா, இந்த வருடம் நிறைய சகோதர, சகோதரிகள சந்திச்சு இருக்காங்க.. உண்மையிலே பாராட்டப்பட வேண்டிய விஷயம்....

  பதிலளிநீக்கு
 6. //நட்பு என்னும் பந்தமொன்று
  நெடுநாளானபின்னும் படர்ந்து வந்து
  நெஞ்சத்துக்குள் நுழைந்துகொண்டு
  நேசப்பூக்களை பூத்துச் சொரிகிறது//

  அனைவர் மனங்களிலும் இருக்க வேண்டிதும் இவ்வரிகளே

  அருமையான நன்றியறிதல் வாழ்த்துகள்
  http://hafehaseem00.blogspot.com/2012/11/blog-post_29.html

  பதிலளிநீக்கு
 7. //அன்பை கொடுக்க கொடுக்க
  ஆத்மா மகிழ்வடைந்தும்

  அன்பு கிடைக்க கிடைக்க
  ஆத்மா நிறைவடைந்தும்//

  அன்பு அதிபயங்க ஆயுதம்
  ஆக்கவும் பயன்படுத்தலாம்
  அழிக்கவும் பயன்படுத்தலாம்

  பதிலளிநீக்கு
 8. இக்கவிதையின் வீச்சு என் அடிமனதை துளைக்கிறது.

  அன்பை உணர்ந்து எழுதும் போது அது பிறரிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பார்கள் அதை இக்கவிதையில் உணர்கிறேன் சகோதரி

  பதிலளிநீக்கு
 9. அ.மு.அன்வர் சதாத்

  ///அன்பு அதிபயங்க ஆயுதம்
  ஆக்கவும் பயன்படுத்தலாம்
  அழிக்கவும் பயன்படுத்தலாம்///

  உண்மை அன்பு ஒருபோதும் அழிக்காது நான் சிலர் மீது மிகவும் அன்புக் கொண்டிருந்தேன் அந்த அன்பு இன்றும் குறையவில்லை குறையாது

  அன்பு கொண்டவர்களை நாம் திட்டுவதெல்லாம் போலித்தனமான நுறை போன்ற வார்த்தைகள். இறைவன் மீது சத்தியமாக அன்பு கொண்டவர்கள் மீது உண்மையாக கோபப்பட தெரிவதில்லை போலித்தனமாக கோபப் படுவது போல் நடிக்க வேண்டியதாய் இருக்கிறது இது என் அனுபவம்

  பதிலளிநீக்கு
 10. சலாம் மை டியர் மல்லி..! :)

  //இணையத்தின் சாதனை
  இணைந்த மனங்களுக்கு கிடைத்தது
  ஆத்மார்த்த நட்பின் ஆராதணை//

  //எனக்காக தேடியெடுத்து
  இதயக்கண்ணால் எனக்கு போட்டு அழகுபார்த்து//

  எந்த வரிகளை மேற்கோள் காட்டி உன்னை பாராட்ட என்றே தெரியல மலிக்கா! மாஷா அல்லாஹ், எந்த வரியிலும் மிகைப்படுத்தலுக்கான பொய்யின்றி உண்மையான‌ வரிகள்!!

  //அன்பென்னும் அகராதிக்கு
  அஸ்மா என்னும் நட்பை மொழிபெயர்ப்பேன்..//

  கண்கள் குளமாகுதம்மா...! - உன்
  கவிதையைப் படிக்கையிலே...!

  இதுக்கு பேரு.. ஆனந்தக் கண்ணீராம் மல்லி.. :)))

  //அக்கா நீங்கள் அனுப்பிய
  நட்பின் அடையாளத்திற்க்கு
  நன்றி சொல்லபோவதில்லை
  அன்பாய் அதீத ப்ரியமாய்
  ஆத்மார்த்தமாய் எனக்குள்
  நீங்கள் குடியேறிக்கொண்டதால்..//

  இப்போதைக்கு முடிந்ததை நான் ஆசையாய் தந்தாலும் அற்பமாய் சொற்பமாய் இருக்கும் அதை, எனக்கு கிடைத்த உன் நட்புடன் ஒப்பிட்டால் அது வெறும் தூசிதான் மல்லி, சத்தியமா..! :) இத்தனை வருடங்களுக்கு பிறகும் உன் நெஞ்சில் எனக்கு நீங்கா இடம் கொடுத்ததே போதும், அல்ஹம்துலில்லாஹ்!

  அல்லாஹ்தஆலா உயர்ந்த சுவனபதியில் நம்மை மேலும் அதிகமாக நெருக்கி வைப்பானாக!

  பதிலளிநீக்கு
 11. நட்பின் நெருக்கம் வார்த்தையின் நெருக்கத்தில் தெரிகிறது மல்லிக்கா !

  பதிலளிநீக்கு
 12. உங்கள் அன்பை கவிதையாக அற்புதமாக வெளிப்படுதியுள்ளீர்கள் சகோதரி...மாஷா அல்லாஹ்...

  பதிலளிநீக்கு
 13. உங்களை எப்படியாவது சந்திக்க அஸ்மாக்கா நினைப்பது இதிலிருந்து நன்றாகவே தெரிகிறது மலிக்கா... மாஷா அல்லாஹ்... இன்று போல் என்றும் இணைபிரியா ('த்' வருமான்னு தெரியலயே.. அஸ்மாக்கா திட்டிடாதீங்க;)) தோழிகளாக இருக்க இறைவன் துணை புரிவானாக!....

  உங்கள் மேலிருக்கும் அன்பை அவங்க நெக்லஸ் மூலமா வெளிப்படுத்த... நீங்க கவிதை மூலமா வெளிப்படுத்த.... மாஷா அல்லாஹ்... பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியா இருக்குதே....:-))

  (ஹ்..ம்... கிடைச்சா இப்படியொரு தோழி கிடைக்கணும்பா...;-)))

  பதிலளிநீக்கு
 14. வாங்க கீதா ரொம்ப நாளைப்புறம் தங்களின் வருகை மகிழ்ச்சியளிகிறது..
  அன்புகொண்ட கருத்துகளுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 15. வாங்க சுகைனா பர்வின். என்ன இப்படி கேட்டுட்டீங்க நிச்சயம் ஏத்துப்பேன். நட்புக்க்குமுண்டோ அடைக்கும் தாழ்

  அன்பான ஏக்கதிற்க்கும் நட்பான பாசத்திற்க்கும் மிக்க நன்றிமா

  பதிலளிநீக்கு
 16. திண்டுக்கல் தனபாலன்//

  என்னுணர்வோடு சேர்ந்து பரவசமடைந்த அன்புச்சகோதரரே.. தங்களின் அன்புக்கு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 17. கிங்// உங்கள் கிங்கான கருத்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

  சிராஜ்//
  வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ..
  அக்கா தன் பாசத்தாலும் பேச்சாலும் அனைவரையும் ஈர்த்திடுவாங்க. சந்திச்ச அனைவரிடமும் கேளுங்கள் சொல்வாங்க..

  மிக்க நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 18. haseem hafe// வாங்க சகோதரர் அவர்களே தங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 19. அ.மு.அன்வர் சதாத் // வாங்க சகோ..

  அன்பு பயங்கர ஆயுதம்தான்.
  அன்பாயுதம் அதனைவைத்து நல்லவைகளை ஆக்கவும் முடியும் கெட்டவைகளை அழிக்கவும் முடியும்.. ஆனால் ஆத்மார்தமான அன்பே அன்பை ஒருபோதும் அழிக்காது உண்மைதானே..

  தங்களின் வருகைக்கும் பயங்கர பயமான கருத்துக்கும் ஹா ஹா மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 20. வாங்க பாயிஜா மற்றும் ஆமினா தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க சந்தோஷம்..

  பதிலளிநீக்கு
 21. ஹைதர் அலி கூறியது...
  இக்கவிதையின் வீச்சு என் அடிமனதை துளைக்கிறது.
  ///

  வாங்கண்ணா.. அன்பான நட்பை ஆழ்மனம் தேடிக்கொண்டேயிருக்கும் அது அடிமனதை துளைத்துக்கொண்டேயிருக்கும் அன்பாய்.

  நல்ல நட்பினை இழக்க ஒருபோதும் மனம் சம்மதிப்பதேயில்லை, சிலவேளைகளில் பிரிந்திருப்பதோ சூழ்நிலைகள் கொடுக்கும் தொல்லை.

  மிக்க சந்தோஷம் சகோ தங்களின் மனம் உவந்த கருத்துகளுக்கு. நெஞ்சார்ந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 22. உண்மை அன்பு ஒருபோதும் அழிக்காது நான் சிலர் மீது மிகவும் அன்புக் கொண்டிருந்தேன் அந்த அன்பு இன்றும் குறையவில்லை குறையாது

  அன்பு கொண்டவர்களை நாம் திட்டுவதெல்லாம் போலித்தனமான நுறை போன்ற வார்த்தைகள். இறைவன் மீது சத்தியமாக அன்பு கொண்டவர்கள் மீது உண்மையாக கோபப்பட தெரிவதில்லை போலித்தனமாக கோபப் படுவது போல் நடிக்க வேண்டியதாய் இருக்கிறது இது என் அனுபவம் ///


  உண்மையிலும் உண்மை 100/ பிரசண்டல்ல 1000 பிரசண்ட்..

  பதிலளிநீக்கு
 23. மை மனங்கவர்ந்த அக்காவ். வலைக்குமுஸ்ஸலாம்..

  // மாஷா அல்லாஹ், எந்த வரியிலும் மிகைப்படுத்தலுக்கான பொய்யின்றி உண்மையான‌ வரிகள்!!//

  எனதன்பின் என்நட்பில் எந்தளவு பொய்யில்லையோ அந்தளவே என்வார்தைகளிலும்.

  மிகைப்படுத்துதல் எப்போது ஏற்படும். போலியாய் புகழப்படும்போது, அல்லது மேன்மைப்படுத்திக்காட்டவேண்டுமென்ற கட்டாயத்தில். ஆனால் நான் மிகைப்படுதவேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில் என்னில் நீங்கள் என்றோ சின்னக்குழந்தையான அறியாப்பருவத்திலேயே என்மீது அன்பைசொரிந்து என்னுள்புகுந்து மிகுதிகொண்ட பாசத்தால் என்மனதுக்குள் மிதப்பதால்..

  பதிலளிநீக்கு
 24. இப்போதைக்கு முடிந்ததை நான் ஆசையாய் தந்தாலும் அற்பமாய் சொற்பமாய் இருக்கும் அதை, எனக்கு கிடைத்த உன் நட்புடன் ஒப்பிட்டால் அது வெறும் தூசிதான் மல்லி, சத்தியமா..! :) இத்தனை வருடங்களுக்கு பிறகும் உன் நெஞ்சில் எனக்கு நீங்கா இடம் கொடுத்ததே போதும், அல்ஹம்துலில்லாஹ்! //

  கொடுதனுப்பிய பொருள் தூசியாக இருக்கலாம். அல்லது தெரியலாம். ஆனால் அதை கொடுதனுப்பிய மனம் பலகோடிகளைவிட மிஞ்சியதாயிற்றே.
  ஆக பொருளல்ல முக்கியம் அதனை கொடுதனுப்பிய மனம்தான்.

  உண்மையிலேயே மச்சி என்கையில் இதைத் தந்ததும் வாங்கிக்கொண்டு அழுதேன் அக்கா. நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அங்கே கூடியிருந்தவர்கள் என்னை கேலி செய்து சிரிதார்கள் குழந்தையாடி நீ என..பாசங்கள் பொங்கும்போது சில நேரம் அக்கம்பக்கம் பார்பதில்லை அப்படிதான் நானும் அன்று..

  //அல்லாஹ்தஆலா உயர்ந்த சுவனபதியில் நம்மை மேலும் அதிகமாக நெருக்கி வைப்பானாக!//


  ஆமீன் ஆமீன் யாரபல் ஆலமீன். இறைவனுக்குத்தெரியும் உண்மையானவர்களின் உள்ளங்கள் நிச்சயம் நெருக்கதை ஏற்ப்படுதந்தருள்வான் அக்கா..

  தங்களின் பாச நீரோடையில் நான் என்றுமே நீராடுவேன்..

  பதிலளிநீக்கு
 25. வாங்க தோழி ஹேமா..

  நீண்ட நாளைக்குபின் ப்ரியத்தின் வெளிப்பாடு தலைப்பு கண்டு பாசத்தோடு வந்ததுபோல் தெரிகிறது.

  வருகைக்கும் அன்புக்கும் மிக்க மகிழ்ச்சி. தோழி..

  பதிலளிநீக்கு
 26. முஸ்லிம் கூறியது...
  உங்கள் அன்பை கவிதையாக அற்புதமாக வெளிப்படுதியுள்ளீர்கள் சகோதரி...மாஷா அல்லாஹ்...
  //

  வாங்க சகோ.

  தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துகளுக்கும் மி்குந்த சந்தோஷம் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 27. enrenrum16//

  வாங்கம்மா என்றும் 16..
  நாங்கமட்டும் என்னவாம். என்றும் 13தான்..

  பார்க்க ஏங்குவது அக்காமட்டுமல்ல இந்த அன்புத் தங்கையும்
  தானுங்கோ..

  ஆமீன் தங்களின் துஆக்களை இறைவன் கபூல் செய்வானாக..

  இணைபிரியாத் தோழிகளாய் சகோதரிகளாய் இருப்போம்..

  அக்கா வேகமா வந்து இந்த 16 திட்டுங்க.. த் போடாம விட்டுடுச்சி..

  ஹ்..ம்... கிடைச்சா இப்படியொரு தோழி கிடைக்கணும்பா...;-)))//

  கவலைப்படாதீங்கப்பு நானிருக்கேன். அட்ரஸ்கொடுங்க அன்பை அனுப்பிவைக்கிறேன்.தோழமையோடு

  மிகுந்த சந்தோஷம் பானு. தங்களின் சிலு சிலு கருத்துகளுக்கு குளு குளு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 28. மலிக்கா... மேடம்...

  அந்த நெக்லசு தங்கமா....

  இப்படியே...
  அஸ்மா மேடம் போல ஆளுங்கள மயக்கி நெக்லசா வாங்கி அடுக்கியிருக்கீங்க போலிருக்கு...

  ச்சே... நமக்கு இந்த ‘ட்ரிக்கு’ தெரியமாட்டேங்குதுப்பா...

  அஸ்மா மேடம் ஏமாந்து போய்ட்டீங்களே...


  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது