நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொய்யின் தண்டனை!


பொய்யுரைக்கும் நாவிற்கு
போசனமேதுமில்லை!
பொய்யாளியின் பேச்சிற்க்கு
போதியளவேனும் மதிப்பில்லை!

ஒற்றைப்பொய்யை மறைப்பதற்கு
ஓராயிரம் பொய்களை அடுக்கிக்கொண்டால்
ஒழுக்கக்கேட்டை அணிந்துகொண்டே
ஒப்பாரி வைக்க வர வேண்டிவரும்

பொய்யில் தொடங்கும் தொடக்கமெல்லாம்
பிரயோசனமற்று அழிந்துவிடும்
பொய்யுரைப்போருக்கு தண்டனையோ
அவர்
மெய்யுரைத்த போதிலும்
அனைத்தும்
பொய்யே என்று  தூற்றுப்படும்

நெருப்பு விறகை   தின்பதுபோல்
பொய் இறையச்சத்தை தின்றுவிடும்
பொய்யின் வழியே செல்வோருக்கு
நல்வழித்தடங்களே  மறைந்துவிடும்.

பொய்யைச்சொல்லி ஒருகவளம்
சோற்றை வாங்கி உண்பதற்க்கு
மெய்யைசொல்லி ஒருகுவளை
தண்ணீர் வாங்கிப் பருகிவிடு
தவறும் வழியிலிருந்து மீண்டுவிடு!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

7 கருத்துகள்:

 1. நல்லாச் சொன்னீங்க சகோ.. நன்றி !

  யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்
  வாய்மையின் நல்ல பிற. (குறள் எண் : 300)

  என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

  பதிலளிநீக்கு
 2. கவிதைக்கு பொய்யழகு என்பதை பொய்ப்பிக்கிற உங்களின் கவிதை அழகு

  பதிலளிநீக்கு
 3. பொய்யை குறித்தை கவிதை அழகு சகோ...

  ஒரு டவுட்டு சகோ..

  //விறகு நெருப்பை தின்பதுபோல்//

  இது "நெருப்பு விறகை தின்பதுபோல்" என்று வருமா சகோ..

  பதிலளிநீக்கு
 4. அன்பின் சகோ தனபாலன் அவர்களுக்கு தங்களின் தொடர்ந்த கருத்துகளுக்கு எனமனம்நிறைந்த நன்றிகள்.

  ஊக்கம்தருவதுபோல் தொடர்ந்தவந்து கருத்திடுவது ஒரு சிலரால்மட்டுமே முடிகிறது. என்னாலும் அடிக்கடி பல வலைதளங்கலுக்கு செல்லமுடிவதில்லை மனம் சங்கடப்படத்தான் செய்கிறது காரணம் சூழல். இருந்தாலும் தங்களைபோன்றவர்களின் கருத்துக்களைகாணும்போது நாமும் அடிக்கடி பிறருக்கு கருத்துகளிடமென்று தோன்றுகிறது நன்ர்றி சகோ

  பதிலளிநீக்கு
 5. வாங்க சகோ ஹைதர் அலி. பொய்யழகை பொய்பித்து மெய்யழகை மெய்ப்பிக்கனும் நம் வாழ்விலும்

  நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 6. அடடா நாடோடி வாங்க வாங்க நல்லாயிருக்கீங்களா? அப்பாடா எத்தனைநாளாச்சி ஆளைப்பார்த்து வீட்டில் அனைவரும் நலமா?

  அதுக்குத்தான் அப்பப்ப வந்துபோகனுமுங்கிறது. அய்யா நாடோடியாரே ஒங்க டவுட்டு சரியோ சரி விரல் ஸ்லிபாயி விறகாயிடுச்சி.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குப்பா..

  மிக்க நன்றி சகோ வருகைக்கும் சுட்டிக்காடிய கருத்துக்கும்.. மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 7. ரெம்ப நல்ல சொனீங்க சகோ
  சிறப்பான கவிதை

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது