நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நம்மைநோக்கிஅருளான அருளாளன்
அன்பினை சொல்லிட
அருள்மாத மொன்று
அருமையாய் வருது நம்மைநோக்கி!

இறைமறையென்னும்
திருமறை வேதம்
தோன்றிய நன்னாளொன்று
பெருமையாய் வருது நம்மைநோக்கி!

தக்வாவென்னும் இறையச்சத்தை
தூசிதட்டி மனதை தூய்மையாக்க
தூய துடைப்பமாகவரும் நாளொன்று
விரைந்து வருது நமை நோக்கி

உறுதியான ஈமானை
உதறிதள்ளி வாழ்வோருக்கும்
உள்ளத்தெளிவை உண்டாக்கும் நாளொன்று
ஓடி வருது நம்மைநோக்கி!

தர்மமென்னும் ஜக்காத்தை
தாராளமாய் ஏழை எளியோருக்கும்
வாரி வாரிக்கொடுத்திடும் நாளொன்று
வருது வருது நம்மைநோக்கி

லைலத்துல் கதிரென்னும்
ஒளிகொண்ட நன்னாளொன்று
அகம் புறம் குளிர்விக்க
அதிவேகமாய் வருது நமைநோக்கி!

பசித்திருந்து தனித்திருந்தும்
படைத்தோனை வழிபடவே
பதினோரு மாதங்கள் கடந்து
பவித்திரமாய் வருது நம்மைநோக்கி!

உடலுக்கும் உள்ளத்துக்கும்
உரம்கொடுக்கும் ஒருமாதம்
உணர்வையும் உணர்ச்சியையும்
உணர்ந்து புரியவைக்கும்  திருமாதம்

பசிக்கும் தாகத்துக்கும்
பரிட்சை வைக்கும் பண்மாதம்
வரியோரையும் எளியோரையும்
வாஞ்சைகொள்ளச்செய்யும் நன்மாதம்

உலக்காசை துறந்து
இறையாசை அதிகரிக்கும் ஏற்றமிகுமாதம்
பாவங்களை போக்கி
பயபக்தியை உண்டாக்கும் மாதம்

இம்மாதம் இம்மாதம்
ஒருமாதம் மட்டும் வந்தால் போதாதே!
இம்மாதம்போல் மக்கள்
எம்மாதமும் வாழ்ந்தால்
இவ்வுலகம் இவ்வுலகம்
இழிவான பாவங்களால் சுழலாதே!அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

 1. இம்மாதம் இருக்கும மனோநிலை, உடல நிலையுடன் மக்கள் எந்நாளும் வாழ வேண்டும் என விரும்புகிறாய் தங்கச்சி. அதற்கென நானும் வாழ்த்துகிறேன். அட்வான்ஸாக என்னுடைய ரமலான் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. //இம்மாதம்போல் மக்கள்
  எம்மாதமும் வாழ்ந்தால்
  இவ்வுலகம் இவ்வுலகம்
  இழிவான பாவங்களால் சுழலாதே!//

  மிக மிக ரசித்த வரிகள்...

  பதிலளிநீக்கு
 3. உலக்காசை துறந்து
  இறையாசை அதிகரிக்கும் ஏற்றமிகுமாதம்
  பாவங்களை போக்கி
  பயபக்தியை உண்டாக்கும் மாதம்

  //

  அருமை அருமை மலிக்கா.. ரம்ஜான் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. வறியோரையும் எளியோரையும் நினைத்துப் பார்க்க வைக்கும்
  பொன்னான மாதம் இது உங்கள் எண்ணம்போல் எந்நாளும்
  மலர வேண்டும் மண்ணில் உயிர்கள் மனம் மகிழ வேண்டும்
  என்று கூறி மனதார வாழ்த்திச் செல்கிறேன் சகோதரி .மிக்க
  நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது