நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எதிரும் புதிரும்.

 
இருக்கு என்கிறேன்
இல்லை என்கிறாய்!

நெருப்பு என்கிறேன்
புகை என்கிறாய்!

நீர் என்கிறேன்
கானல் என்கிறாய்!

கவிதை என்கிறாய்!
கிறுக்கல் என்கிறேன்

மனம் என்கிறேன்
சிறை என்கிறாய்!

எதிர் என்கிறேன்
நீ புதிர் காண்கிறாய்!

நான் காதல் என்கிறேன்
நீ மோதல் கொள்கிறாய்!

நீ எனக்கு என்கிறேன்
நீ எதற்க்கு என்கிறாய்!

இருவருக்குள் எப்போதும்
எதிரும் புதிருந்தான்!

இருந்தபோதும் 
இனிக்கிறதே!இல்ல[ற]ம்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

13 கருத்துகள்:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்..

  எந்த வரியும் தனியா சொல்ல முடியாது.. இதான் புடிச்சிருக்குன்னு..

  ஒவ்வொரு வரியும் அருமை...

  மாஷா அல்லாஹ் உங்கள் சிந்தனை கடல் பெருகி ஓட வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. எதிரும் புதிருமாய்
  இருப்பதால் தானோ

  இனிக்கிறதே!
  இல்ல[ற]ம்.

  நல்ல அழகான காரசாரமான கவிதை.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இது...! உங்க வூட்லயா...!

  இல்ல...! இதுமாதிரியெல்லாம் இப்பத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ண வூட்ல நடக்கும்...!

  அதுனாலத்தான் கேட்டேன்...! "இது...! உங்க வூட்லயா...!" என..?

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப சோகமாகத்தான் இருக்கு...!

  நான் கவிதையைச் சொன்னேன்...!

  பதிலளிநீக்கு
 5. Opposite poles attract each other. எதிரும் புதிரும் எப்போதும் ஈர்த்துக் கொள்ளும் தங்கையே... உன் கவிதை அருமைம்மா. மிக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 6. புதிய வரவுகள்:
  கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்,

  கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
  ,ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!

  பதிலளிநீக்கு
 7. பாசிடிவ் நெகடிவ் இணைய ஒளிரும்
  மின்விளக்காய் ஒளிருகிறது கவிதை
  வித்தியாசமான அருமையான சிந்தனை
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. அன்புக் கவிஞர் மலிக்கா,

  சில நாட்களுக்குப்பின் நான் உங்கள் வலைப்பூ நுகர வந்தேன். அத்தனை பூக்களும் வாசம் கூடியவைகளாக இருக்கின்றன. உங்கள் கவிதை விரல்களில் வலிமை கூடியிருக்கிறது. மேலும் வளர வாழ்த்துக்கள். எழுதிக்கொண்டே இருங்கள். பாராட்டுக்கள்!

  அன்புடன் புகாரி

  பதிலளிநீக்கு
 9. அன்பு நெஞ்சங்களின் ஆத்மார்த்த கருத்துகளுக்குள் நான் ஆழ்ந்து புதைந்துவிட்டேன், கருத்துக்களென்னும் அன்பை தந்து என் மனங்குளிர்விக்கும் தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 10. வாங்க ஆசான். ஆசனின் வருகை ஆச்சர்யம்.

  மல்லிக்கவிதைகளில்
  மணம்வீசுவது பற்றி
  மனந்திறந்து கூறியமைக்கு
  மட்டற்ற மகிழ்ச்சி.


  ஆசானின் வாழ்த்துப்படி
  எனது உணர்வுகள் உள்ளவரை உயிர்ப்பிக்கும்
  எனது கவிதைகளின் [வரிகள்] வரவுகள்..

  மிக்க நன்றி ஆசான்.

  பதிலளிநீக்கு
 11. I liked your site www.niroodai.blogspot.in. Offtopic: Who do you think will play in the final of the Champions League football this year?
  minute clinic mn [url=http://pillsonlinenoprescription.com/category/pets-meds/#gpsn]buy pets meds online no prescription[/url] dry hair care

  பதிலளிநீக்கு
 12. Good design www.niroodai.blogspot.in. Offtopic: Can Barcelona beat Bayern Munich in the semi?
  professional home health care [url=http://pillsonlinenoprescription.com/#zfehzwp]pills online no prescription[/url] fulton county health clinic

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது