நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அப்பாவைவிட ஒருபடி!

 
பிள்ளையை  
பள்ளிக்கு கிளப்பிக்கொண்டிருந்த
அவசர தருணங்களில்  
அம்மாவின் கேள்வி
வளர்ந்து ஆளானதும்
யாரைப்போல வர ஆசை!            

வேளைக்குப் போக 
வேகமாய் கிளம்பிய தந்தை
சிலநொடிகள் தாமதம்
பிள்ளையின் பதிலைக் கேட்க!

அழுத்தமாய் சொன்னது
அப்பாவைவிட ஒருபடி மேலாக!
ஆனந்தம் பொங்கிய நிலையில்
அடுத்தடி எடுத்தவைத்து

அப்படியா அன்புச்செல்லமேயென
ஆரத்தழுவி அன்பாய் முத்தமிட்டபோது
”ஆமாம்மா”
அப்பா அவங்கப்பாவை மட்டுந்தானே
முதியோர் இல்லத்துக்கு பார்க்கப்போறாங்க 
ஆனா நான் அப்படியல்ல
உன்னையும் சேர்த்து பார்க்கவருவேன் என்றதும்

முதுகெழும்பு முறிபட்டதுபோல்
உடல் தடதடக்க
மனதெழும்பு நசிந்து  குருதி கசிய
விழிகள் நான்கும்  
நிலைகுத்தி நின்றன...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

23 கருத்துகள்:

  1. //அப்பா அவங்கப்பாவை மட்டுந்தானே முதியோர் இல்லத்துக்கு பார்க்கப்போறாங்க ஆனா நான் அப்படியல்ல உன்னையும் சேர்த்து பார்க்கவருவேன் //


    முதியோர் செய்கை சிறியோரை பாதிக்கும்

    நெல்லை விதத்தால் நெல் விலையும்
    நன்மை(நல்லத்தை )விதைத்தால் நன்மையே விளையும்

    பால்யம் என்பது ஈரமான விளைநிலம்
    ஆதலால் இங்கு விதைத்தல் முக்கியம்

    அதை சொல்லும் உங்கள் கவிதை சிறப்பு சகோ

    அருமையான கவிதை சகோ

    பதிலளிநீக்கு
  2. சாட்டையடி கவிதை. அதற்கேற்றபடம். குழந்தைகள் மனதில் பதியும் விசயங்கள் பசுமரத்தானியாகிவிடும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்..

    பாராட்டுகள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  3. காலம் மாறிவிட்டது.குழந்தைகளும் வேடிக்கையாக பேசுவதிலும் வல்லவர்கள் ஆகிவிட்டார்கள் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கவணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.குழந்தை உண்மைதானே பேசும்.( சகோதரி அன்புடன் மலிக்கா அவர்களுக்கு பாராட்டுக்கள் - கேட்டு எழுதியமைக்கு)

    பதிலளிநீக்கு
  4. யதார்த்தமான கவிதை...!

    அது சரி...!

    இத யாருக்கு சொல்றீங்க மேடம்...!

    பதிலளிநீக்கு
  5. செய்தாலி கூறியது...//

    பால்யம் என்பது ஈரமான விளைநிலம்
    ஆதலால் இங்கு விதைத்தல் முக்கியம் //

    உண்மைதான் சகோ குழந்தைகளிடம் மிக கவனம் தேவை..

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  6. சிவா கூறியது...

    சாட்டையடி கவிதை. அதற்கேற்றபடம். குழந்தைகள் மனதில் பதியும் விசயங்கள் பசுமரத்தானியாகிவிடும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்..

    பாராட்டுகள் மலிக்கா.//

    வாங்க சிவா நிச்சயமாக பிள்ளைகளின் விசயத்தில் ஏனோ தானோ என்றிருந்தால் பின் விளைவுகள் இப்படிதான் ஆகும்.தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சிவா..

    பதிலளிநீக்கு
  7. nidurali கூறியது...

    காலம் மாறிவிட்டது.குழந்தைகளும் வேடிக்கையாக பேசுவதிலும் வல்லவர்கள் ஆகிவிட்டார்கள் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கவணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.குழந்தை உண்மைதானே பேசும்.( சகோதரி அன்புடன் மலிக்கா அவர்களுக்கு பாராட்டுக்கள் - கேட்டு எழுதியமைக்கு)//

    வாங்க வாப்பா நலமா ரொம்ப நாளைக்கப்புறம் இந்தபக்கம் தெரிகிறது..

    ஆமாம் குழந்தைகள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதனை கவனிக்கதவறும் பெற்றோர்கள்தான் இன்று நிறைய. காலமும் அப்படியிருக்கு ..

    [சகோதரி அன்புடன் மலிக்கா அவர்களுக்கு பாராட்டுக்கள் - கேட்டு எழுதியமைக்கு)//

    என்னது கேட்டு எழுதியமைக்கா. ஆத்தாடி இதென்ன கதையாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  8. காஞ்சி முரளி கூறியது...

    யதார்த்தமான கவிதை...!

    அது சரி...!

    இத யாருக்கு சொல்றீங்க மேடம்...!//

    வாங்க சகோ வாங்க.

    யாருக்காக இதப்போல அன்னையில்லத்துக்கு முதியோர் இல்லத்துக்குன்னு [இன்னும் என்னவெல்லாமோ புதுசு புதுசா பேர்வக்கிறாங்களாமா] அனுப்பிவச்சிட்டு வீட்டையும் பாக்கமுடியாம பசங்களையும் பாக்கமுடியாம திண்டாடி நொந்து நூடல்ஸாகும் பெற்றோருக்குத்தேன் வேறாருக்கு..

    பதிலளிநீக்கு
  9. என்னது கேட்டு எழுதியமைக்கா. ஆத்தாடி இதென்ன கதையாயிருக்கு.

    ”ஆமாம்மா”
    அப்பா அவங்கப்பாவை மட்டுந்தானே
    முதியோர் இல்லத்துக்கு பார்க்கப்போறாங்க
    ஆனா நான் அப்படியல்ல
    உன்னையும் சேர்த்து பார்க்கவருவேன் என்றதும்"
    என்று குழந்தை சொல்லி கேட்டு எழுதியமைக்கு.

    பதிலளிநீக்கு
  10. கவிதை சொல்லும் கதை ...,

    முதியோர் இல்லம் என்பது தற்போதைய

    கால கட்டத்தில் சாத்திய மான ஒன்றாக மாறி

    வருவதுதான் காலத்தின் கட்டாயம் .., மனம் மட்டும் காரணமல்ல

    பணமும்தான் ..எழுபது வயதுக்கு மேல் வாழும்

    முதியோர்கள் ..,வீட்டில் இருப்பதை விட வசதி

    வாய்ப்புள்ள நல்ல முதியோர் இல்லமே மேல்

    தினமும் மருத்துவர் கண்காணிப்பு .சுத்தம் செய்ய சரியான

    ஆட்கள் ..ஆனால் பாசமாய் பேச பழக உறவுகள் இருக்காது

    ஆன்மீகத்தில் மூழ்கிவிட்டால் ..இக்காலத்தின் எதார்த்தத்தை ..,

    புரிந்து கொண்டால் கவிதையின் கரு வலியைதராது ..,

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடுவரை பிள்ளை

    கடைசி வரை யாரோ .., என்னிடம் அளவுக்கு அதிகமாக

    பணமிருந்தால் முதியோர் இல்லம் அமைப்பேன் நல்ல எண்ணத்துடன் ..,

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா3 மே, 2012 அன்று PM 1:51

    கவிதை சொல்லும் கதை ...,

    முதியோர் இல்லம் என்பது தற்போதைய

    கால கட்டத்தில் சாத்திய மான ஒன்றாக மாறி

    வருவதுதான் காலத்தின் கட்டாயம் .., மனம் மட்டும் காரணமல்ல

    பணமும்தான் ..எழுபது வயதுக்கு மேல் வாழும்

    முதியோர்கள் ..,வீட்டில் இருப்பதை விட வசதி

    வாய்ப்புள்ள நல்ல முதியோர் இல்லமே மேல்

    தினமும் மருத்துவர் கண்காணிப்பு .சுத்தம் செய்ய சரியான

    ஆட்கள் ..ஆனால் பாசமாய் பேச பழக உறவுகள் இருக்காது

    ஆன்மீகத்தில் மூழ்கிவிட்டால் ..இக்காலத்தின் எதார்த்தத்தை ..,

    புரிந்து கொண்டால் கவிதையின் கரு வலியைதராது ..,

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடுவரை பிள்ளை

    கடைசி வரை யாரோ .., என்னிடம் அளவுக்கு அதிகமாக

    பணமிருந்தால் முதியோர் இல்லம் அமைப்பேன் நல்ல எண்ணத்துடன் ..,

    பதிலளிநீக்கு
  12. ////பெயரில்லா//// சொன்னது..ன்னு ஒருத்தர் கருத்து சொல்லியிருக்கார்...!

    அவர் தன் பெயரையே சொல்லவிரும்பவில்லை என்றால் என்ன அர்த்தம்...!

    அவர் சொல்வதெல்லாம் அபத்தம்...! அதாவது... வெளியுலகத்திற்கு தன்னை இனங்காட்டிக்கொள்ள விரும்பவில்லைஎன்றால் என்ன அர்த்தம்... தான் சொல்வது தவறான கருத்து என தன் மனசாட்சியே உறுத்தியதால்... தன் பேரை சொல்லவில்லை...!

    இப்ப matterக்கு வருகிறேன்...!

    இவர் சொல்லவருவதென்ன...!

    உற்றார், உறவினர், சொந்தம், பந்தம், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மகள், மகன், இப்படி உறவினால் உண்டான.. உறுதியாய் உள்ள "உறவு" என்பதை...



    இக்கால... "மனிதம் மறந்த மனிதனாய்" ... "

    பணம் என்றால் புதைந்த பிணம்கூட எழும்" எனும்

    இக்கால மிருகமாய் உலவும் மனிதனாய் தன் கருத்தை பதிவிட்டிருக்கிறார்...!



    பெயர் குறிப்பிட விரும்பாத அண்ணாரே...!

    பணத்தால் உலகில் எல்லாம் வாங்கிவிடலாம் என எண்ணாதீர்...!

    பலகோடி ரூபாய் கொடுத்தாலும் தாய்ப்பால் தயாரிக்கமுடியுமா...!



    இயற்கை அல்லது இறைவன் அல்லது கடவுள் எல்லா நாட்டிலும் ருத்திர தாண்டவம் ஆடினாலும் இந்தியாவில் மட்டும் ஆடாமல் இருந்தது(தான்)...!

    ஆனால்... உங்களைப் போல பலபேர் எண்ணத்துவங்கியதன் விளைவே... பணம் மட்டுமே வாழ்க்கை என எண்ணத்துவங்கியதன் விளைவே... நம்நாட்டிலும் பூகம்பம், சுனாமி, புயல் ஆகியவை பேரழிவுகளை ஏற்படுத்துகிறது...!



    இவர் சொல்கிறார் ///மனம் மட்டும் காரணமல்ல.... பணமும்தான் ..எழுபது வயதுக்கு மேல் வாழும் முதியோர்கள் ..,வீட்டில் இருப்பதை விட வசதி வாய்ப்புள்ள நல்ல முதியோர் இல்லமே மேல்....///



    அண்ணாரே...! பணம் அதிகமிருப்பதால் பணத்தையே தின்ன வேண்டியதுதானே...! எதுக்கு நாக்குக்கு ருசியா பிரியாணி சாப்பிடுறீங்க...!

    எதுக்கு வாழ்க்கை ருசிக்க கல்யாணம் பண்ணிகிறீங்க...! பணத்தையே கல்யாணம் பண்ணிக்கிட்டு "பணபுள்ளைகளா" பெத்துக்கவேண்டியதுதானே...!



    இப்படியெல்லாம் நினைக்க துவங்கியதே...! நம் அழிவின்... நம் மனிதகுல அழிவின் ஆரம்பம்...! அண்ணாரே...!

    பதிலளிநீக்கு
  13. "பெரியரில்லா" அண்ணாரே...!

    உங்களமாதிரி ஆளுக்குதான் "சுகமான சுமைகள்"ன்னு நாலு வருஷத்துக்கு முன்பே நான் எழுதிய கவிதையில் சில வரிகள்....! படித்தாவது "பாசம், அன்பு" இவை நிஜம், உண்மை, யதார்த்தம், நிலையானது என்பதை உணருங்கள் "பெரியரில்லா" அண்ணாரே...!


    ///உன் அன்னையை விட....
    நீ 'மிகச் சிறந்தவளா...?'

    உன்னை நீயே 'எடை போட்டு'
    பார்த்துக் கொண்டிருக்கிறாயா?


    உன்னை நீயே
    உன் தாயுடன்
    'ஓப்பீடு' செய்து கொண்டிருக்கிறாயா?

    அதற்கேது
    உனக்கு நேரம்..........

    விழித்து....
    உண்டு.....
    ஓடியாடி....
    உழைத்து....
    மீண்டும் உறங்கி....
    'பாச'மென்பதையும்
    'பற்று' என்பதையும் மறந்து.......

    நின்
    பெற்றோரையே
    'மற்றோர்' என்று
    'முதியோர் இல்ல'த்தில்
    தள்ளிவிட்டு.....

    கூலிக்காரியை
    வேலைக்காரியாய்
    உன் குழந்தையை வளர்ப்பதற்கு....

    உன் குழந்தை
    எப்போது எழும்..? அழும்..?
    என்பதைக்கூட - நீ
    வேலைக்காரியிடம்
    அறிந்துகொள்ளும்
    அவலம்....!

    இப்படி
    'பாச'த்தை விற்றுவிட்டு,
    'பண'த்தை சம்பாதித்து
    பயனேது?

    நீயும்
    'முதியோர் இல்ல'த்திற்கு
    செல்லவா?..............////

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள காஞ்சி முரளி அவர்களுக்கு ..,

    தங்களை மனித நேயமான கருத்துக்கு ..,நன்றி

    மனதார பாராட்டுகிறேன் ..இது தாய் தந்தையை

    வெறுத்தோ ஒதுக்கும் நோக்கத்துடனோ கூறவில்லை

    சென்னை போன்ற பெரும் நகரங்களில் சிறிய வீட்டிற்குள்

    அதுவும் வாடகை வீட்டிற்குள் இருந்துகொண்டு ..சிரமப்படுவதும்

    மருமகளின் இழிசொல்லுக்கு ஆளாகி கூனி குறுகி

    நரக வேதனையை அனுபவிக்கும் காலமிது வேலை விட்டு

    அயர்ந்து வரும் மகனிடம் புகார் தெருவித்து விடை கிடைக்காத

    அபலையாய் கடவுளே ஏன் என்னை இன்னும் விட்டு வைத்திருகிறாய்

    என்னை உன் பக்கம் அழைத்து கொள்ள மாட்டாயா .என எத்தனை

    முதியோர் புலம்புகிறார்கள் தெரியுமா..நல்ல குணம் உள்ள இடத்தில தான்

    கோபம் இருக்கும் ..எனது கருத்து இரு முறை பதிவாகி உள்ளது ..மேலே

    அதிரை சித்தீக் என இருக்கும் கருத்தும் அதுவே தான் ..ஒரு கருத்தரங்கில்

    நடிகர் சிவகுமாரும் இதே கருத்தை கூறியுள்ளார் ..நல்ல நடமாட்டம்

    உள்ள பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுவது தவறு ..

    சாதார நகர வாழ்கையில் பெரிய வீட்டில் வாழ்பவர்களுக்கு இது

    பொருந்தாது ..இது ஒரு கருத்துபரிமாற்றம் தான் தவறுகள் இருந்தால்

    மாற்றிகொள்வோம் ...

    பதிலளிநீக்கு
  15. நண்பர் அதிரை சித்திக் அவர்களே..!

    "பெயரில்லா" கண்டதும் எனக்கு கொஞ்சம் கோவம்...!

    என்னை பொறுத்தளவில் எதிரெதிரே மோதுவதுதான் நல்ல மனிதன்...! பதிவில் தவறு இருந்தால் தைரியமாய் சுட்டிக்காட்டவேண்டும்...! நான் அப்படித்தான் சுட்டிக்காட்டுவேன்...!

    இந்த வலையுலகில் சிலர் கோழைத்தனமாய் "பெயரில்லா" என கருத்து சொல்லும்போது...! முதுகெலும்பில்லா மனிதனாய்தான் அவரை நினைப்பேன்...! அதனால் வந்த கோவம்தான்...! மற்றபடி ஏதுமில்லை...!



    தாங்கள் சொல்லியுள்ள இந்த கருத்திலும் நான் மாறுபடுகிறேன்...! காரணம்...! எனக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் மூத்த சகோதரியார்... 74 வயதிருக்கும்... நன்றாக இருந்தவர்... திடீரென ஓர் நாள் கீழே விழுந்துவிட்டார்...! அவரின் மீது மிக அன்பும், பாசமும் உள்ள அவர்... இங்குள்ள சிறந்த மருத்துவமனையில் சேர்த்து... உயர்தர சிகிச்சை செய்து... நன்றாக குணம் அடைந்தவுடன்... தனது வீட்டுக்கு அழைத்து சென்று ஓரிரு மாதங்கள் வைத்திருத்தார்... அந்த சகோதரி... தான் பிறந்த ராயபுரம் செல்லவேண்டும்... நான் அங்கே செல்கிறேன்... செல்கிறேன் என தினமும் நச்சரித்துகொண்டிருந்தார்... பிறது சிலநாட்களில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் சிகிச்சை செய்து... ராயபுரம் கொண்டு விட்டுவிட்டார்... சிலவாரங்கள் ஆனதும் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதும்... சிகிச்சை செய்து... உங்களைபோல ஓர் நபர் வழிகாட்டுதலில் தன் சகோதரியை... மிகமிக உயர்ந்த... சிறப்பான... இந்த சென்னை மாநகரத்திலேயே very costlyயான.... மாதம் 25,௦௦௦ ரூபாய் செலவிட்டு ஓர் முதியோர் இல்லத்தில் சேர்த்தார்...! அதன் விளைவு... அந்தம்மா தான் தன் பிறந்த இடத்தில்... பிறந்த வீட்டில் இருக்கமுடியவில்லையே என்ற கவலையில் உயிர் நீத்தார்...! அதன்பின்பு... எனக்கு வேண்டியவர் இப்போது வருத்தப்படுகிறார்...!

    முதுமையில் பணமோ... புகழோ... பெருமையோ தேவை இல்லை...!
    அந்த வேர்களுக்கு தேவை "அன்பு", "பாசம்", "கவனிப்பு" எனும் அரவணைப்பு மட்டுமே...

    இதைத்தான் நான் எப்போதும் வலியுறுத்துகிறேன்...! என்றும் வலியுறுத்துவேன்...!

    பதிலளிநீக்கு
  16. குழந்தையின் பதில் நெத்தியடி.
    வருந்தத்தக்கும் விஷயம்.
    மிகச்சிறப்பாக ஒரு கவிதை நடையில் கொடுத்திருக்கீங்க மலிக்கா..வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. எனது கருத்தை முதலில் எனது பெயருடன்

    வெளியிட்டு இருந்தேன் அதே கருத்தை

    கனணியை கையாள்வதில் ஏற்பட்ட சிறு தவறினால்

    பெயரில்லா நபர் இடுகையில் வந்து விட்டது ..நீங்கள்

    மீண்டும் படித்து பார்த்தால் தெரியும் ஒரே கருத்து

    இரண்டுமுறை வந்திருப்பது தெரியும் ..,கருத்தை

    தெரிவிப்பதில் பயம் இல்லை என்றாலும் நாகரீகமாக

    வசை பாடுவதிலிருந்து விடு படலாம் ...,

    தங்களின் நியாய மான காரணத்தை ஏற்கிறேன்

    எனது தரப்பில் பல தாய்மார்களின் கஷ்டங்களை

    பார்த்த போது முதியோர் இல்லம் தேவலாம் ..,

    என நினைத்தேன் நீங்கள் ஆதார பூர்வமாக

    கூறும் போதுஅதனை ஏற்பதுதான் அறிவுடைமை

    எனது நிலையை மாற்றிகொள்கிறேன் ..

    கருத்து பரிமாற்றங்களால் பல விஷயங்கள் தெளிவு பெரும்

    தெளிந்த நீரோடையை குழப்பாமல் தெளிவு பெற்றமைக்கு

    மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
  18. நண்பர் அதிரை சித்திக் அவர்களே...!

    நீங்கள் என் அழுத்தம் திருத்தமாக வாதிடுவதால் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...!

    இன்றைய சமூகச் சூழலில் "மனிதம்" மரித்து வருவதும்...
    அன்பு, பாசம் இவைகளுக்கெல்லாம் விலை நிர்ணயம் செய்வதும்...

    "அண்ணன் எப்ப சாவா திண்ணை எப்ப காலியாகும்" என்ற பழமொழிக்கேற்ப இன்றைய சமூகம் மாறிவருவதை நினைத்தால் மிகவும் வேதனையை இருக்கு...! இதில் ஓர் கொடுமை என்னவென்றால்...!


    இதனை சொல்வதால்... எழுதுவதால் நான் ஒண்ணும் யோக்கியனில்லை...! இந்த பதர்களுடன் ஓர் பதராய் நானும் இருப்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்...!


    நீங்கள் சொன்ன கருத்தில் உள்ள உண்மை எனக்கு விளங்குகிறது...! ஆனால்... அது நடைமுறை சாத்தியமா...? என எண்ணிப்பார்த்தால்... விஞ்சுவது பூஜ்யமே...!

    இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்...!

    இப்போது அனைத்துமே வணிக நோக்கமாய் இருக்கிறது...!

    எடுத்துக்காட்டாய்... நான் என் குழந்தையை கொஞ்சுவதுக்கூட நேரமில்லை... காரணம்... பணம்..! பணம் சம்பாதிக்கோணம்...! காரு... பங்களா... சொகுசு வாழ்க்கை, முதலில் தரையில் நடக்கணும், அப்புறம் சைக்கிள், அப்புறம், மோட்டார் பைக், அப்புறம் சிறிய கார், அப்புறம் பி.எம்.டபிள்யூ என்ற பெரிய கார், அப்புறம் கப்பல், அப்புறம் விமானம், கடைசியாய் இப்போ புதுசா நிலவுக்கு விண்வெளி பயணம்.. இப்படி ஆசைபட்டால் பரவாயில்லை... மூச்சுமுட்டும் வரை பேராசை நெஞ்சை அடைத்துகொண்டிருப்பதால்... கண்களுக்கு பாசமும், அன்பும் தெரிவதில்லை...! இப்படி இன்றைய ஐ.டி. உலகம்... ரெக்கைக்கட்டிகொண்டு பறந்துகொண்டிருக்கும் வேளையில்...

    சமூகசேவை... அதாவது... சேவையாய் முதியோர் இல்லம் நடத்துவது இயலாத காரியம்...! அப்படியே நடத்தினாலும் என்னைப் போல பேராசைகொண்டவர்கள்... வணிகநோக்கம் கொண்டவர்கள் உங்கள் சேவையை கொச்சைப்படுத்தி... உங்களை அழிக்க பார்ப்பார்கள்...!

    நான் சொல்வது இன்றைய காலக்கட்டத்தின் சாத்தியமான சத்தியம்..! யதார்த்தம்...! நிஜம்...! உண்மை...!


    எனவே..! உங்கள் கனவு நனவாகாது...! அதைத்தான்.. என் பாஷையில்... மொழியில்... கொஞ்சம் ஹார்ஷாய் சொன்னேன்... நண்பா..! வேறொன்றுமில்லை...!


    நான் சொன்ன கருத்தில் யதார்த்தம் நிறைந்திருக்கும்...! அப்படி இல்லையென நீங்கள் நினைத்தால் அதற்காக வருத்துகிறேன்...!

    நன்றி...!

    பதிலளிநீக்கு
  19. நாள்ல விசயத்திற்காக ஆரோக்யமான

    கருத்து பரிமாற்றம் நல்ல தகவல்களையே

    அள்ளி தரும் அந்த வகையில் காஞ்சி முரளி அவர்களின்

    விளக்கம் அற்புதம்

    பதிலளிநீக்கு
  20. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    உண்மை சுடுகிறது. கசக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. //அப்பா அவங்கப்பாவை மட்டுந்தானே முதியோர் இல்லத்துக்கு பார்க்கப்போறாங்க ஆனா நான் அப்படியல்ல உன்னையும் சேர்த்து பார்க்கவருவேன் //

    தாயைப் போல பிள்ளை...
    நல்ல படிப்பினை!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது