நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உலக மக்களுக்கு எச்சரிக்கை!


அன்பு உள்ளங்களே! உலகில் பலயிடங்களில் சுனாமி சுழற்றிக்கொண்டிருக்கிறது அதே வேளை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுனாமி மற்றும் நிலநடுக்க எச்சரிக்கை விடப்படுள்ளது.


எல்லாம் வல்ல இறைவனிடம் பாதுகாப்புத்தேடுங்கள்.இருகரமேந்தி இறைஞ்சி கேளுங்கள். எவ்வித பயங்கரங்களும். எவ்வித சேதமும். எவ்வித அகோரங்களும் நடந்துவிடாதவாறு இருக்கவும். வரும் சுனாமி எவ்விதத்திலும் மனித வர்கங்களையும் மனிதயினத்துக்கு தேவையானவற்றைகளையும் வதைசெய்துவிடாமல் சென்றிடவும் பிராத்தனை செய்யுங்கள்.

உலகில் பலயிடங்களில் பலவாறாக அக்கிரமங்களும் அட்டுழியங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. மனிதனுக்கு படைத்தவனின்மேல் உள்ள பயம் அற்றுபோய் படைப்பினங்களின் பின்னேயே போய்க்கொண்டு அதன் கவர்ச்சியில் ஆட்க்கொண்டுவிட்டதால் ஆங்காகே ஆட்டம் காணுகிறது பூமியும் பூமியை சுற்றியிருக்கும் கடலும்.  

யா அல்லாஹ் எங்களின் குற்றங்குறைகளை மன்னிதருள்வாயாக!
யா அல்லாஹ் எங்களை நேரான வழியில் நடத்திசெல்வாயாக!
யா அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னித்து
வரவிருக்கும் ஆபத்துகளிருந்தும் பாதுகாத்தருள்வாயாக!

தற்போதைய செய்தி
-----------------------------------
நகுவீர் :சுமத்ரா தீவிற்கருகில் மையப்பகுதியில் உணரப்பட்ட 8.9 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் என்பது சற்று ஆபத்தான கட்டமே இன்னும் ஒரு மணி நேரம் காலக்கெடு கொடுக்கப்பட்டிருப்பதால் நாங்கள் [களஞ்சியம் சுனாமி எச்சரிக்கை மற்றும் சமுதாய வானொலி ] கடலோர மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கி வருகிறோம்!

கார்த்திக் : ஆனால் இணையத்தில் விகடன் மூலம் அறியப்பட்ட தகவல் என்னவென்றால் கடல்சார் தகவல் மையம் சுனாமி எச்சரிக்கையை திறும்பப்பெற்றதாக தெரிவிக்கின்றதே?

நகுவீர் : அது பற்றி கருத்து இல்லை ஆனால் 8.9 ரிக்டர் என்பது ஆபத்தான கட்டமே! நாங்கள் கடற்கரையோரம் அமைந்துல்ல எங்கள் வானொலி நிலையத்தில் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தோம், ஆகையால் தயவு செய்து அஜாக்கிரதையாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும்

கார்த்திக் : கண்டிப்பாக செய்துவிடுகிறேன்

நகுவீர் : கடந்த முறை சுமத்ராவில் ஏற்பட்ட அதிர்வைப்போலவே இம்முறை மையப்பகுதில் கீழ்ப்பகுதியில்ல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
இங்குள்ள மீனவர்கள் கூட கொஞ்சம் பொருட்படுத்தாமலே இருக்கிறார்கள் நாங்கள் கடற்கரைப்பகுதியை விட்டு அப்புறப்படுத்த வலியுறித்தியே வருகிறோம்!

**************************************************************
மீனவர்களோ கடற்கரையோரவாசிகளோ இணையம் பாவிக்கக்கூடிய சூல்நிலையில் இருப்பார்களா எனத் தெரியது ஆனாலும் இயற்கை சீற்றத்தில் அறியாமையால் அழிந்த மக்கள் உதாசீணத்தால் அழியக்காரணமாகிடக்கூடாது முடிந்த வரை உங்களுக்கு தெரிந்த நபர்களை உஷார் நிலைப்படுத்துங்கள்...

இன்னும் சில மணி நேரம் கழித்து என்ன ஆகும் என எண்ணிக்கொண்டிருப்பதை விட செயல் மிக முக்கியம்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

17 கருத்துகள்:

 1. யா! அல்லாஹ் எல்லோரையும் பாதுகாப்பாயாக ...

  பதிலளிநீக்கு
 2. இறைவா அனைவரையும் காத்தருள்வாயாக!

  பதிலளிநீக்கு
 3. நிச்சயமாக இது ஒரு எச்சரிக்கைதான் மனிதா திருந்திக்கொள்.. இல்லையே நஷ்டமைவாய்..

  பதிலளிநீக்கு
 4. எல்லாம் நன்மைக்கே11 ஏப்ரல், 2012 அன்று பிற்பகல் 2:49

  அல்ஹம்துலில்லாஹ் ... நாங்க இங்க பத்தரமா இருக்கோம் ... இன்ஷா அல்லாஹ் ...

  பதிலளிநீக்கு
 5. அவிங்க அவிங்க safe ஆ இருந்துகொங்க ..

  நான் சுனாமி சொல்றேன் ..

  அப்புறம் என்ன சொல்லி ஒரு குற்றமில்லை .. எல்லாம் அவன் செயல் ..

  இறைவனிடம் சோதனையின் தீங்குகளை விட்டு பாதுகாப்பு தேடுங்கள் ...

  நான் சுனாமி சொல்றேன் ..

  பதிலளிநீக்கு
 6. அஸ்ஸலாமு அலைக்கும்,

  இறைவன் பாதுக்காப்பானாக...

  பதிலளிநீக்கு
 7. why are inducing religion in this!!!. are you trying to warn people against tsunami or spreading the religion?

  பதிலளிநீக்கு
 8. கியாமத்து
  நாளை உணர்த்தும்
  அனர்த்தங்கள்

  பதிலளிநீக்கு
 9. எல்லாம்வல்ல இறைவா! எல்லோரையும் பாதுகாத்து ஆசீர்வதித்து உன் இறையருள் பெற்ற மக்களாக ஆக்கியருள்வாயாக.. ஆமீன்.

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா கூறியது...

  why are inducing religion in this!!!. are you trying to warn people against tsunami or spreading the religion?//

  அன்பு சகோதரரே! இதில் நான் மதத்தை பரப்பவில்லை.நம்மைப்படைத்தவனை மறந்துவிட்டு நாம் செய்யும் பாவங்கள். குற்றங்கள் அனைத்தும் நமக்கு தெரிந்தும் ஏனோ தொடர்ந்து அதையே செய்கிறோம். அதனைத் திருத்திக்கொள்ள பல சந்தர்ப்பங்கள் நமக்கு எடுத்துக்காட்டாக கொடுக்கப்படுகிறது. அது சிலநேரம் நம் கண்முன்னே நடக்கவும் செய்கிறது இருந்தபோதிலும் நாம் திருந்த தயாராக இல்லை, அதற்கான முயற்சிக்கூட எடுப்பதில்லை அப்படியே எடுத்தாலும் அதனை நிலைப்படுத்துவதில்லை, என்பதையும் இதில் என்னையும் சேர்த்துதான் எச்சரிக்கை விடப்படுகிறது என்பதை சொல்கிறேன்..
  மனிதன் தன் மனம்போன போக்கில் போவதையும் தவிர்த்து. தன்போக்கில் மனதை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தாலே மனிதன் மனிதாகி விடுவான் தன்னைப் படைதவனையும் நினைப்பான் அப்படி நினைக்கையில் பாவங்களையும் குற்றங்களை குறைப்பான் நல்வழியை நாடுவான் என்றுதான் சொல்கிறேன்..

  இயற்கை நம்மை ஆங்காங்கே எச்சரிக்கிறது அது தன்னைப்படைத்த இறைவன் கட்டளைப்படி இயங்குகிறது இதனை உணர்ந்தவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள்..

  எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நல்லருள் புரிவானாக!

  வந்திருக்கும் ஆபத்து யாருக்கும் எவ்விதத்திலும் பாதிப்பலிக்காது சென்றடைய பிராத்திப்போமாக!..

  பதிலளிநீக்கு
 11. பிற்பகல் மலிக்காவுக்கு

  பதட்டமான பகலாய் கழிந்திருக்கிறது...!

  தன்னை மட்டுமே காத்துக்கொள்ளும்

  சுயநலம் பேணாமல்...!

  தன்னோடிருப்பவரையும்

  காக்கவேண்டும் என்ற தங்கள்

  "பொதுநலப் போக்கு" வரவேற்புக்குரியது...! வாழ்த்துக்குரியது...!

  இதுதான் "மனிதம்"...!


  எனக்கு பதட்டமே இல்லை...!

  காரணம்...!

  "ஊருடன் ஒத்து வாழ்" என்ற பழமொழிக்கேற்ப

  ஊருக்கு என்னவோ...

  அதுவே எனக்கும்...! என்ற எண்ணம்தான்...!

  அதோடு...!


  எதையும்
  எதிர்கொள்ள
  என்னை
  எப்போதோ தயாரித்து வைத்துள்ளேன் என் மனதை...!

  அதுமட்டுமல்லாமல்...!

  "இதுவும் கடந்துபோகும்" என்ற பாங்கு

  என்மனதில் ஆழப் படிந்துவிட்டது...!

  பதிலளிநீக்கு
 12. eththunai peerukku intha akkarai irukkum malikkaanna malikkaathaan

  பதிலளிநீக்கு
 13. யா அல்லாஹ் எங்களின் குற்றங்குறைகளை மன்னிதருள்வாயாக!
  யா அல்லாஹ் எங்களை நேரான வழியில் நடத்திசெல்வாயாக!
  யா அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னித்து
  வரவிருக்கும் ஆபத்துகளிருந்தும் பாதுகாத்தருள்வாயாக!
  //ஆமீன் ஆமீன்.!!

  பதிலளிநீக்கு
 14. //பெயரில்லா கூறியது...

  why are inducing religion in this!!!. are you trying to warn people against tsunami or spreading the religion?//

  அன்பு சகோதரரே! இதில் நான் மதத்தை பரப்பவில்லை//

  see the below from your post.
  //மனிதனுக்கு படைத்தவனின்மேல் உள்ள பயம் அற்றுபோய் படைப்பினங்களின் பின்னேயே போய்க்கொண்டு அதன் கவர்ச்சியில் ஆட்க்கொண்டுவிட்டதால் ஆங்காகே ஆட்டம் காணுகிறது //

  is it required at this point of time, when people are scared of facing the danger.
  may god bless you

  பதிலளிநீக்கு
 15. see the below from your post.
  //மனிதனுக்கு படைத்தவனின்மேல் உள்ள பயம் அற்றுபோய் படைப்பினங்களின் பின்னேயே போய்க்கொண்டு அதன் கவர்ச்சியில் ஆட்க்கொண்டுவிட்டதால் ஆங்காகே ஆட்டம் காணுகிறது //

  இதில் தவறென்ன இருக்கிறது தோழா மனிதனைப்படைத்தது கடவுள்தானே ஆனால் அவனை மறந்த நிலையில் நாம் பாவவழியிலும் ஆட்டம்போட்டுக்கொண்டு தானே இருக்கிறோம். அந்த ஆட்டம் சரியானதல்ல. சரியான பாதைநோக்கிபோன நன்மை பெறுவாய் என்பதை சகோதரி சுட்டிக்காட்டுகிறார் அவ்வளவுதான். நீங்கள்தான் தவறாக புரிந்துகொள்கிறீர்கள். கடவுள்தான் பூமியை படைத்தான் மனிதனைப்படைத்தார் பூமி அவருக்கு கட்டுப்படுகிறது மனிதன் ஏனோ மண்டைகணம் பிடித்து அலைகிறான். அவனுடைய தலைகணம் அவனுக்கே ஆபத்தாகும் என்பதை சிலவேளை ஆக்ரோஷத்தோடு வெளிப்படுகிறது இது மனிதருக்கு கடவுள் புகட்டும் பாடம். புரிந்து கொண்டால் அனைவருக்கும் நலம்.. வீண் வாதம் புரிந்தால் விவகாரமே மிஞ்சும்..

  பதிலளிநீக்கு
 16. இயற்கை
  இரண்டுமுறை
  "சுனாமி" என்ற பெயரில்
  ஒத்திகை பார்த்துள்ளது....!

  நான்
  என்னைக்கு என்னையே மறந்தேனோ...

  அன்றே அழிவுகள்
  தன் நூலுக்கு முகவுரை எழுதத் துவங்கிவிட்டது...!

  இனி அணிந்துரை...! வாழ்த்துரை...!
  நூல்...!
  இறுதியில்
  முடிவுரையை எழுதி
  முடிக்கப்போகிறது நம்மை...
  நமை படைத்த இயற்கை...!
  எதிர்பார்ப்போம் அந்நாளை...!

  நாம கொஞ்சநஞ்சமா தப்பு பண்ணிட்டிருக்கோம்...!

  இரவும்பகலும்
  மிருகத்தைவிட
  மிகமிக கேவலமாய்...!

  மண் பசி..!
  பொன் பசி...!
  பெண் பசி...!
  காதல் என்ற பெயரில் காமப் பசி...!

  நமக்கு
  பால் கொடுத்த
  இயற்கையின் மார்பகத்தையே...
  அறுத்த...
  அறுத்துக்கொண்டிருக்கிற
  நம்மை...!
  நமை படைத்த இயற்கை...!

  நம் இனத்தோடு
  வேரறுக்க...

  "சுனாமி"...!
  "பூகம்பம்"...!
  நிலச்சரிவு...!
  விபத்துக்கள்...! என்ற மாறுவேடத்தில்
  தன் வேட்டையை துவங்கிவிட்டது...!

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது