நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மெல்ல வெளியேறிய மெளனங்கள். 2

 
மெல்ல வெளியேறும் மெளனங்கள்.
தொடர்கிறது
 -------------------------------------
திருமணமென்ற சடங்குகளால் என்னை
வேறொருத்தியின் பக்கம்
திரும்பிப்பார்க்க வைத்துவிடலாமென்ற நப்பாசையில்
பெண்பார்க்கும் படலங்கள் தொடர்ந்து
பேதையொருத்தியின் வாழ்வை சிதைக்க
போட்டாப் போட்டிகள் நடைபோடுகின்றது

தண்ணீரில் வாழும் மீன்களின்
கண்ணீரை எவரும் அறிவாறில்லை!
எந்நிலையில் நானிருந்தாலும்
என்னையறிவாரும் எவருமில்லை
என்னையே புரிந்துகொள்ளாத மனிதர்கள்
எனதுணர்வையா! உணர்ந்துக் கொள்ளப்போகிறார்கள்!

அறிவார்களோ! என்னையும் என்மனதையும்
அதனுள்ளே ஆணிவேராய் நீயிருப்பதையும்
அதில் ஆலோலம் பாடி என்னை தாலாட்டுவதையும்
அசையும் பொருள்களோடு நானும் அசைகிறேன்
இசையும் லயத்தோடு நானும் இசைகிறேன்
எல்லாம் உன் நினைவுகளின் உரசல்களால்தானென்று!

உடல் மட்டும் என்னுடன் இருக்கிறது
உயிரை உன்னிடம் அனுப்பிவிட்டுஇது
உலக்குப் புரிகறதோ இல்லையோ
உனக்குப் புரியாதென்றே நினைக்கிறேன்
”ஏனெனில்”
உனக்கே அறியாமல் 
உன்னைத் தொடர்ந்தவனல்லவா!
உனதுயிருடன் ஒட்டி உறவாடுடியவனல்லவா!!

என்னிலிருந்து உன்னை பிரித்துவிட்டதாய்
எண்ணிக்கொண்டு -என்னை
ஏமாற்றியதாய் நினைத்துக்கொண்டது என் வாழ்க்கை
அதற்கெங்கே புரியப்போகிறது
அதனையே ஏமாற்றி உனக்காகவே
உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேனென்று!

உரக்கபேசுகிறார்கள் எனக்கு நீயில்லையென
உண்மையறியாமல் எனதுள்ளம்பற்றி ஒன்றும் புரியாமல்!
உடல் தொட்டு உயிர் வாழும்
காதலை நான் ஒருபோதும் யாசிக்கவில்லை
உயிர்தொட்டு மெய்வாழும்
காதலைத்தான் உள்ளன்போடு நேசிக்கிறேனென்று!

முதுமையாகி நீ கிழவியானபோதும்
முன்வைத்தை அதே அன்பை
உன்மீது நான் வைத்திருப்பேன் நாளும்
இளமைக்கு இரையாகும் கள்ளத்தனங்களை
நேசிக்கவில்லை ஒருபோதும்
இளையோடும் உனதெண்ணச் நினைவுகளை-என்
இறுதிநாள்வரை சுமக்க விரும்புகிறேன் எந்நாளும்

விதி செய்த சூழ்ச்சிசியிலே உன்னை
வேறொருவர் சொந்தமாக கண்டபோதும்
வேண்டுமடி நீயெனக்கு என்ற சொல் என்னிடமேது
வேண்டவில்லை நீ வேண்டும் என ஒருபோதும்
வேண்டுமென வேண்டுகிறேன் உன் நினைவுகளை மட்டும்
எனக்குள் தேக்கிக்கொள்ள அதே மனக்கூடு!

விதியை மதியால் 
வெல்லத்தெரியவில்லை எனக்கும்
விரும்பிய உன்னை மறக்கச்சொல்ல! 
உரிமையில்லை எவருக்கும்
விரும்பியபடியே வாழ்க்கை 
அமைந்திடாது யாருக்கும்!
 
அப்படியே விரும்பியது கிடைத்தாலும்! நிலைப்பது 
அரிதாகிவிடுகிறது சிலருக்கும்
இதுநாள்வரை! கண்ணியமாய் 
உன்னை விரும்பியது எனதுள்ளம்
இறுதிமூச்சுவரை! கண்ணியத்தோடே 
காதல் கொள்ளும் எனது உயிரும்!....

முற்றும்,,, அல்ல தொடரும். கவிதையல்ல வாழ்க்கை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

9 கருத்துகள்:

 1. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

  Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  பதிலளிநீக்கு
 2. ///விரும்பியது கிடைத்தாலும்! நிலைப்பது////

  இதென்ன இந்த வார்த்தைகள் மட்டும் போல்ட்...!

  புரியல...!


  என்னைப் பொறுத்தளவில்..!

  "வாழ்க்கை" என்பது காட்டாற்று வெள்ளம் போல..!

  இதில்... ஓர்

  இலையாய்... ஓர்

  சருகாய் நாம்...!


  காட்டாறு

  காட்டின்

  மலை, முகடு, பள்ளம், மேடு இவற்றில்

  தாழ்ந்தும், தவழ்ந்தும், குதித்தும், சீறியும் ஓடும் நீர்....!

  அந்தந்த இடத்திற்கேற்றவாறு...

  தாழ்வான இடத்தில் ஓடும்போது வேகமாய்...!

  சமவெளியில் ஓடும்போது ஆரவாரமே இல்லாமல் அமைதியாய்...!

  பாறை முகடுகளில் நுழைந்து ஓடும்போது சத்தத்துடன்...!

  மலைமேலிருந்து பள்ளதாக்கில் குதிக்கும்போது பேரிரைச்சலுடன் அருவியாய்...!

  இப்படி...பலநிலைகளை "வாழ்க்கை" கடக்கும்போதும்...!

  ஓர் சருகாகிய நாம்...! அந்த நீரின் ஏற்றத்தாழ்வுகளில் சிக்கி...

  நீரின் ஓட்டத்திற்கேற்பதான் ஓடவேண்டுமே தவிர...!

  மீனைப் போல எதிர்நீச்சல் போட்டு... தாண்டி... குதித்து... ஓட்டமுடியாது.. நாம் ஓட்டத்தை...!

  அதனால்...! நமக்கு

  "இறைவனோ"...! "இயற்கையோ"...! எதோ ஒன்று ஒதுக்கியதை ஏற்றுக்கொண்டு அதில் செவ்வனே...! மகிழ்ச்சியுடன் வாழ்கையை நடத்தி முடித்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்...!

  அதைவிட்டுவிட்டு

  ///
  விரும்பியபடியே வாழ்க்கை

  அமைந்திடாது யாருக்கும்!  அப்படியே விரும்பியது கிடைத்தாலும்! நிலைப்பது

  அரிதாகிவிடுகிறது சிலருக்கும் இதுநாள்வரை! ////

  இப்படி நினைப்பதே தவறு...!  "இருப்பதை விட்டுவிட்டு...!

  பறப்பதற்கு ஆசைபட்டால்...!

  இருப்பதும் இல்லாமல் போய்விடும்...!  கவிதை அருமை...!

  பதிலளிநீக்கு
 3. விதியை மதியால்
  வெல்லத்தெரியவில்லை எனக்கும்
  விரும்பிய உன்னை மறக்கச்சொல்ல!
  உரிமையில்லை எவருக்கும்
  விரும்பியபடியே வாழ்க்கை
  அமைந்திடாது யாருக்கும்!//

  உண்மை உண்மை உண்மை.
  மிகவும் கவிதை அருமை.

  ஒன்று கேட்கலாமா இது யாரோட சொந்த கதை. ஏதோ நம்மாள முடிஞ்சது. ஹி ஹி

  பதிலளிநீக்கு
 4. எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதுவீங்களோ கடவுளே இவாளுக்குமட்டும் எப்படி. எங்களையெல்லாம் உனக்கு தெரியலையா?


  ஆதங்கம்தான் வேரென்ன.. ஹூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉம்ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 5. "இருப்பதை விட்டுவிட்டு...!

  பறப்பதற்கு ஆசைபட்டால்...!

  இருப்பதும் இல்லாமல் போய்விடும்...!

  //

  அப்படிபோடு போடு போடு

  பதிலளிநீக்கு
 6. இதென்ன இந்த வார்த்தைகள் மட்டும் போல்ட்...!
  //

  அதானே இத நான் கவனிக்கலையே.
  ஒருவேலை பாண்டின் குழப்பமாக இருக்கும் இல்லையின்ன்ன்ன்ன்ன்ன்னாஅ மல்லி.........

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது