நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மெல்ல வெளியேறும் மெளனங்கள்.



மாய உலகத்தின் மர்ம குகையென்னும்
மனதிற்க்குள் மண்டிக் கிடக்கும்
உனது நினைவுகளைச் சுற்றியே
எனது எண்ணங்கள் சுழல்கிறது
அதனைச் சுற்றியே
எனது வாழ்க்கையும் கழிக்கிறது!

ஆறறிவைத் தாண்டி
ஏழாம் அறிவைத் தூண்டி
எட்டாம் அறிவை எட்டி
எனக்குள் ஏதேதோ நிகழச்செய்து
உன்னைப் பற்றிய எண்ணங்களே
என்னை ஆட்க்கொண்டு ஆட்சி செய்கிறது!

உன்னை முதல் முதலாய் கண்ட
என்கண்களுக்கு ஏனோ இதுவரை
வேறொரு பெண்ணின் உருவத்தை
உற்றுநோக்கும் சக்தி உண்டாகவில்லை
உன்னை விரும்பயதுபோல் வேறெதையும்
என் விழிகள் விருப்பமும் கொள்ளவில்லை!

உன் தின வருகையை எதிர்பார்த்து
எதிர்வீட்டு திண்ணையை தேய்த்தவன் நான்
என்னைக் கடக்கும் ஒரு நொடியைக்கூட
நீண்டதொரு  மணிக்கணக்காய் எண்ணி
நீ கடந்த பின்பும்  அவ்விடத்திலேயே
நெடுநேரம் நின்றவன்தான்
 
நீயறியாது உன்னைத் தொடர்வதும்
நீயறிகையில் அவ்விடத்திலிருந்து விலகுவதும்
நீ பயணங்கள் செய்வதை நான் அறிவதும்
நீண்ட தூரமென்றாலும் உன்பின்னே வருவதும்
தேவதை தந்த வரமாக்கிகொண்டேன்
தினம் தினம் அதையும் வேண்டி நின்றேன்!

திருமணமென்ற சடங்குகளால் என்னை
வேறொருத்தியின்,,,,,,,,தொடரும்.


என்னது தொடருமா!!!!!!!! ஆமாம் இது ஒரு[தலைக்] காதல் தொடர்கவிதை. 
காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தெரியாமலும். வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளி வைக்கமுடியாமலும் திண்டாடிக்கொண்டிருக்கும் பலமனங்களின் வெளிப்பாடாய் இக்கவிதை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான கவிதை சகோ
    எழுத்து நடையும் சொல்லாக்கமும்
    அழகாய் கச்சிதமாய்

    பதிலளிநீக்கு
  2. ஆறறிவைத் தாண்டி
    ஏழாம் அறிவைத் தூண்டி
    எட்டாம் அறிவை எட்டி
    எனக்குள் ஏதேதோ நிகழச்செய்து
    உன்னைப் பற்றிய எண்ணங்களே
    என்னை ஆட்க்கொண்டு ஆட்சி செய்கிறது!//

    அதுதானே இன்றுவரை இம்சையென்னும் வலையில் சிக்கவைத்து இழுத்துச்செல்கிறது என்வாழ்க்கையையும். அதெப்படி உங்களுக்கு தெரிந்தது.. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  3. உன்னை என்னும் போது - என் உள்ளம் தடுமாறியது!உன் கன்கள் பேசும் போது-என் மனசில் கவிதை பிற்ந்தது!-உன் வாசம் வந்து என்னை நேசம் கொண்டது!-உன் உற்வை நினைத்து என் உறக்கம் நின்றது!-பூவை தொட்டால் உன் நினைவு-நிலவை கண்டால் உன் முகத்தின் பொழிவு!-நீ பூத்த போது நான் பார்த்தபோது காதல் வந்தது-இன்று நீ மனவி!-என் வாழ்க்கை துனைவி-////// காதலி நீ காதலி உன் மனைவியை!!!!!!!

    பதிலளிநீக்கு
  4. மௌனங்கள் இங்கே பேசுகின்றன
    சகோதரி...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது