நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கல்லறையைத்தேடி!

உடலை விட்டு
உயிர் பிரிந்த நொடியில்
உலகில் நடந்தவைகளை
 நினைத்துப் பார்க்கும் ஒரு பின்னோட்டம்!

மூடிக்கிடக்கும் உடலினுள்ளே
 விழித்துக் கிடக்கும் உயிருக்குள்
ஓடியாடும் உலக நினைவுகள் ஓராயிரம்

விழி திறந்தால் வினோதமாவும்
விழி மூடியிருந்தால் வித்தியாசமாகவும்
வேடிக்கைக் காட்டிய உலக வாழ்க்கை

காதலென்ற கனி எவ்வித சுவையென
அறியத் தெரியாமலே! அதனை உண்டுகளித்தும்,
வெறுத்து ஒதுக்கியும் வாழும் மனங்கள் கண்டு
நெஞ்சம் சஞ்சலத்தோடு சங்கடப்பட்டது!

அன்னையின் அன்புக்கு
அகிலத்தில் ஈடேதென்ற
அகராதியை மாற்றியமைக்கும்
அன்னையர்களை கண்டு உணர்வு ஆத்திரப்பட்டது!

ஒழுக்கம் சார்ந்தவர்களென போற்றிப்
புகழப்பட்டவர்கள் கூட
ஒழுக்கக் கேடானவைகளின் பின்னே
ஓடியது கண்டு மனம் அதிர்வைக் கண்டது!

முகத்துக்கு முன்னே அழகாய் பேசி உறவாடும்
அன்பின் உறவுகள்கூட முதுகுக்கு பின்னே
முகம் சுழிக்கும் பாவனைகள் கண்டு மிரளவைத்தது!

தான் படைத்த காகித பணத்திற்கு
மதிப்பு கொடுத்து கைகட்டி நிற்கும் மனிதன்
தன்னைப் படைத்தவனுக்கு
மதிப்பு கொடுக்காது கண்டு ரத்தம் கொதிதெழுந்தது!

”இப்படி”

இரணத்திற்க்கும் மரணத்திற்க்கும்
இடைவெளியான பயணத்தில்தான்
எத்தனையெத்தனை இன்ப துன்பங்கள்
எத்தனையோ விதமான ஏற்ற இறக்கங்கள்

இவையெல்லாம் திறக்கவே முடியாத
இறுதிக் கண்மூடலின் பின்னே
கானல் நீராகும் காட்சி பிம்பங்களாய்
காட்சியளித்தது கண்டு 

பின்னோட்டம் பார்த்த மனதும்
திறந்து பார்க்கமுடியா விழியும்
உடலை விட்டுப் பிரிந்த உயிரும்

இமைகளை திறந்து பார்க்கவும்
இவ்வுலகை திரும்பிப் பார்க்கவும்
மனமேயில்லாது ஓடியது
கல்லறைத் தேடி..


டிஸ்கி// எதை எதையோ பின்னோக்கிப் பார்க்கிறோம் இதையும் பார்ப்போமேன்னுதான்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

8 கருத்துகள்:

 1. உன் ஒவ்வொரு எண்ணமுமே வித்தியாசம்தான் தோழி! அதுபோல் இதுவும் அசத்தலோடு அதிர்வுதான் தோழி.

  மனிதர்களின் வாழ்வில் எல்லாமே ஒரு மாயைதான்.. அருமையோ அருமை..

  பதிலளிநீக்கு
 2. அற்புதாமான கவிதை
  ஆழமான சிந்தனைகள்
  வரிகள் சொல்லிச் செல்லும் மெய்கள்
  இன்றைய மனிதர்களின் வாழ்கையின் யதார்த்தம்

  சிறந்த கவிதைக்கு நன்றிகள் சகோ

  பதிலளிநீக்கு
 3. நித்திரையில் நீ மூழ்கும் போது-விழித்திரை மூடினாய்!-சத்தமின்றி செல்வதற்க்கு நீ மனத்திரை மூடுவாய்!-வாழும்போது நீ வழி தவறி சென்றாய்!அடங்கும்போது நீ மரனகுழி நோக்கி செல்வாய்!-தாயின் ம்டியிலே நீ குழந்தையானாய்!-மனவியின் மடியிலே நீ மனிதனானாய்!- மரனத்தின் மடியிலே நீ பினமானாய்!- பிறந்தாய்!இறந்தாய்!இடையில் நீ இருந்தாய்! திமிருடன் அலைந்தாய்!-உயிருடன் இருந்தாய்!-உலகை மறந்து உலவினாய்!-புகைத்தாய்! மது குடித்தாய்!-மங்கையிடம் மயங்கி மதி இழந்து நின்றாய்!-ஆட்டம் ஓய்ந்ததும் ஓரமாய் கிடந்தாய்!!!!!!- வாழ்க்கையை வாழு நீ!வளமுடன் வாழு!தொழு! உழு!பின் எழு!-நல்லதை நாடு! நட்புடன் பழகு!-ஏற்றம் பெருவாய்!சுவர்க்கம் செல்வாய்!!!!!!!!-

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான் சிந்தனைகள் மலி
  ஒவ்வொருவரும் கல்லரையை நோக்கிதான் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம் இப்படியான வாழ்க்கையிலிருந்து விடுதலைப்பெற்று..
  வாழ்த்துகள். இன்னும் பல கவிகளை படைத்து எங்களில் மனகண்களை திற..

  பதிலளிநீக்கு
 5. ///இரணத்திற்க்கும் மரணத்திற்க்கும்
  இடைவெளியான பயணத்தில்தான்
  எத்தனையெத்தனை இன்ப துன்பங்கள்
  எத்தனையோ விதமான ஏற்ற இறக்கங்கள்///

  உண்மை...!

  ரணத்திருக்கும்...மரணத்திற்கும்
  ஒரே ஓர் எழுத்து மட்டுமே வித்தியாசம்...!

  அதைப்போலவே..

  ரணத்திருக்கும்... மரணத்திற்கும்
  இடைவெளி
  ஓர் நூலிழை மட்டுமே...!

  இதற்குள்
  இத்தனை.. எத்தனை ஆட்டங்கள்...!


  என்னைப் பொறுத்தளவில்

  கல்லறைகள்தான்...!

  ஆசைகளின் அஸ்தியை கரைத்துவிட்டு

  சில்லறைச் சத்தங்கள் ஏதும் இல்லாமலே...

  அமைதியாய்
  ஆழுறக்கம் கொள்ளுமிடம்...!


  ஆனால்...

  இப்போது...!

  சில்லறை இருந்தால்தான்
  கல்லறைக்
  கதவுகள்கூடத் திறக்கும்...!


  வாழ்த்துக்கள்...!
  நல்ல கவிதை...!

  பதிலளிநீக்கு
 6. கருவறையில் தூங்கும்போதுகூட ஒன்றுதானடா...!
  கல்லறையில் தூங்கும்போதுகூட ஒன்றுதானடா...!
  இடைவழியில்
  நீயும் நானும் வேறுவேறடா...!

  இது...
  ஆபாவாணனின் வரிகள் என நினைக்கிறேன்...!

  ஆனால்...!

  என் உள்ளத்தில் பதிந்துபோன வரிகள்...!

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது