நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வீசுதடா விஷக்காற்றுவீசுதடா விஷக்காற்று
வீதியெங்கும் வேகமாக!
பரவுதடா வீதியெங்கும்
பூகம்பமாக பூலோகமெங்கும்!
சாந்தமான கடல் தாயோ
சுருட்டுதடா சுனாமியாக!
அழியுதடா விதவிதமாக
அறியாத நோய்களாலே!

வாசத்தோடு பூக்கும் மலர்கள் -நொடியில்
வாடி வீழ்ந்து போகுதடா!
வாஞ்சையாக வீசும் தென்றல்
வாசலெங்கும் வக்கிரத்தோடு ஆடுதடா!

அழகாக காட்சி தரும்
அடர்ந்தகாடும் அழியுதடா!
எழில் மிகுந்த மலைகளுமே
எரிகுளம்பாகி உருகுதடா!

அன்னம் தரும் அருள் மழையோ
அடை மழையாய் பொழியுதடா!
பயிர்களெல்லாம் மூழ்குவதால்
பசிக் கொடுமை கூடுதடா!

உக்கிரங்கள் மனதில் குடியேற
அக்கிரமங்கள் உலகில் அரங்கேறுதடா!
அதை பொறுக்க முடியாமல்
இயற்கையும் எகுறுதடா
இடைவிடாமல் ஏறுக்குமாறா! 

 இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

9 கருத்துகள்:

 1. வீசுதுங்க உங்க கவிதைகளில்
  வாசமும் வீவேகமும்.

  எல்லாதலைப்புக்கும் நல்லா கவிதைஎழுதுறீங்க
  மனமார வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 2. எல் கே கூறியது...

  நல்லா இருக்குங்க ...//

  வாங்க சகோ.
  தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. ஹேமா சந்திரன் கூறியது...

  வீசுதுங்க உங்க கவிதைகளில்
  வாசமும் வீவேகமும்.

  எல்லாதலைப்புக்கும் நல்லா கவிதைஎழுதுறீங்க
  மனமார வாழ்த்துகிறேன்.//

  வாங்க ஹெச் எம். நலமா
  நீங்க எழுதுவதைவிடவா நாங்களெல்லாம் சும்மா
  ..
  தங்களின் மனம்திறந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான் .. கவிதையின் வீரியம் எங்குமே குறையவில்லை ..
  வாழ்த்துக்கள் மேடம் ..

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதை மலிக்கா. போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. யக்கோவ். ஏன் ஏன் ஏன் இப்படியெல்லாம் சூப்பராக கவிதையெழுதி எங்களை அசரவைக்கிறீங்க. எப்படிக்கா இப்படியெல்லாம் தனி ரூம்போட்டு யோசிப்பீங்களோ.

  ஆனால் அநியாயத்து எழுதுறீங்க..

  வாழ்த்தெல்லாம் சொல்லமாட்டேன் இன்னும் எழுதுங்க நிறைய எழுதுங்க உங்க கிட்ட ஏதோ ஒன்று இருக்கு இன்னும் பல சிறப்புகள் வெளியில் வரும்..

  பதிலளிநீக்கு
 7. //அழகாக காட்சி தரும்
  அடர்ந்தகாடும் அழியுதடா!
  எழில் மிகுந்த மலைகளுமே
  எரிகுளம்பாகி உருகுதடா!//

  சந்தம் தப்பாமல் வருகிறது. அருமையான கவிதை அக்கா. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது