நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புத்தாண்டு பரிசு.அகிலத்தை ஆளும் இறைவனே
அனைத்தும் அறிந்தவனே
அதிகம் கற்காத என்னை
அறிவோடு வளர வைத்தாய்


எழுத்தில் எழுந்த எண்ணம்
ஏறியது வானொலியில்
ஏற்றமிகு உன்னாலே
எதிரொலித்தது 
எல்லோரது காதுகளில்


வல்ல நாயனே
வாரிவழங்கும் தூயவனே
வற்றாத ஜீவநதியாய் 
எனக்குள் எண்ணங்களை
வழிந்தோடச் வகைசெய் ரஹ்மானே!

எங்கும் நிறைந்தோனே 
ஏக வல்லனோ
எண்ணாலும் எழுத்தாலும் உன்னை
ஏகமனதாய் என்றும் வணங்கிடுவேன்.

புத்தாண்டின் பூரிப்பு.

http://worldtamilnews.com/
எனது கவிதை worldtamilnews. வானொலியில் ஒலிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த புத்தாண்டில் எனது கவிதை வானொலியில் வலம்வருவது மனம் நிறைந்த பூரிப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
இதை ஒலிபரப்பச்செய்து, எனது கவிதை tதனது கணீரென்ற அழகுக் குரலால் வாசித்துக்கொண்டிருக்கும் தந்தை திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மனமாரச் சொல்லிக்கொள்கிறேன்

http://worldtamilnews.com/ .கவிதை கேளுங்கள் என்ற பட்டனை அழுத்துங்கள்.கவிதையை கேட்டு கருத்துகளை சொல்லுங்கள்..

இதோ யூ டியூப்பிலும் கண்டுகேட்க..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

 1. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ ...
  கவிதை கலக்கல் ..

  பதிலளிநீக்கு
 2. அன்பு குடும்ப தோழி மலிககவுக்கு வாழ்த்துகக்ள் வாழ்த்துகக்ள்.
  நான் தான் முதலே வ்ாழ்த்தி இருக்கேன உல்கமெங்க்ும் , உங்கள் நீ்ரோடை ஊற்றாய் ஓட வாழ்த்தக்ளோ என்றூ. மிக்க சந்தோஷம்

  பதிலளிநீக்கு
 3. அரசன் கூறியது...

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ ...
  கவிதை கலக்கல் ..//
  வாங்க சகோ தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. Jaleela Kamal கூறியது...

  அன்பு குடும்ப தோழி மலிககவுக்கு வாழ்த்துகக்ள் வாழ்த்துகக்ள்.
  நான் தான் முதலே வ்ாழ்த்தி இருக்கேன உல்கமெங்க்ும் , உங்கள் நீ்ரோடை ஊற்றாய் ஓட வாழ்த்தக்ளோ என்றூ. மிக்க சந்தோஷம்//

  வாங்கக்கா வாங்க அன்பும் பாசமும் கலந்த ஒரு அக்கா கிடைத்தமைக்கு நான் கொடுத்துவைத்தவள். நமது நட்பும் சொந்தமும் எந்நாளும் நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை வஏண்டுகிறேன்..

  தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த கருத்துகளுக்கும் எனது மனப்பூர்வ நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 5. அதிகம் கற்காத என்னை
  அறிவோடு வளர வைத்தாய்.//

  இந்த தன்னடக்கம்தான் உங்களை தலைநிமிர்ந்து வாழவைக்கிறது. வாழ்த்துக்கள் சகோ உங்களின் வளர்ச்சி எங்கள் மனதுக்கு குளிர்ச்சி

  பதிலளிநீக்கு
 6. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோ இன்னுமின்னும் பல சாதனைகள்பெற வாழ்த்துகிறேன்..

  பதிலளிநீக்கு
 7. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

  பதிலளிநீக்கு
 8. இறைவன் மிகக் கிருபையுள்ளவன்
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 9. காற்றினில் கரைந்து...
  வானில் ஒலியாய்...
  ஒலித்துகொண்டிருக்கும்
  "வானொலி" கவிதையாய்
  வலம்வரும்
  மலிக்காவின் கவிதை அருமை...!

  வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 10. மனமார்ந்த வாழ்த்துகள் மலிக்கா. இப்போ எங்கேயிருக்கீங்க? துபாயா, இந்தியாவா?

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துகள்,இன்னும் பலசாதனைகள் செய்து வளம் பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. அன்பு அக்கா. தங்களின் திறமைகள் கண்டு வியக்கிறேன்.மாசாஅல்லாஹ்.

  கவிதையும் அதன் வாசிப்பும் மிக அருமை. அக்கா ஒரு வேண்டுகோள் தாங்களே ஒரு கவிதை வாசித்து நீரோடையில் வெளியிடுங்களேன்..

  மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 13. இப்போ எங்கேயிருக்கீங்க? துபாயா, இந்தியாவா?

  ஏங்க நீங்க வேற துபாயில இருந்தது போதாதா.
  அவங்க கொஞ்சகாலமாவது சொந்தமண்ணில் இருக்கட்டுமே..

  யக்கோவ் மீண்டும் போயிடுவீங்களா!!!!!!!!

  பதிலளிநீக்கு
 14. அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா. தங்களின் கவிதைகள் என்றுமே அருமை அதிலும் புத்தாண்டுக்கவிதை கலக்கிட்டீங்க..
  எல்லாரும் யோசிப்பதை நீங்க யோசிப்பதில்லை.அதனால்தான் தனிச்சிறப்பு உங்க கவிதைக்கு..

  மீண்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. 'கவிதை கேளுங்கள்' அப்துல் ஜப்பார் உங்கள் கவிதையை வாசிக்க கேட்டு மகிழ்ந்தேன் .நல் வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் தொண்டு மக்கள் மனம் மகிழட்டும்.

  பதிலளிநீக்கு
 16. புத்தாண்வாழ்த்துக்கள் சகோ
  மனமும் மதியும் மகிழ்ந்தேன், உங்களின் கவிதையை படித்து

  பதிலளிநீக்கு
 17. வாழ்த்துக்கள் மலிக்கா.கவிதைகள் அருமை.

  பதிலளிநீக்கு
 18. மலர்கொத்து வழங்கி மனமார வரவேற்கிறேன் தங்கள் அனைவரையும். என்னையும் என் எழுத்தையும் ஆதரித்து ஊக்கமென்னும் அன்புகருத்துகளை அளப்பரிய அள்ளித்தந்து மகிழ்ச்சிக்கடலில் மூழ்கவைக்கும் தங்கள அனைவரையும் எந்நாளும்ம் மறவாது எனது நெஞ்சம்..

  என்றூம் உங்களை அன்பை வேண்டி நிற்க்கும்
  உங்கள் அன்புடன் மலிக்காவின் பாசமான நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 19. மார்ந்த வாழ்த்துகள் மலிக்கா. இப்போ எங்கேயிருக்கீங்க? துபாயா, இந்தியாவா?//

  தற்போதுவரை இந்தியாவில் இருக்கேன் ஹுசைனம்மா. இறைவன் நாடினால் துபைவருவேன். ஆனாலும் இங்கிருக்கவே மனம் விரும்புகிறது..

  அன்பான விசாரிப்புகும். வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 20. தாரிக் முகம்மது கூறியது...

  அன்பு அக்கா. தங்களின் திறமைகள் கண்டு வியக்கிறேன்.மாசாஅல்லாஹ்.

  கவிதையும் அதன் வாசிப்பும் மிக அருமை. அக்கா ஒரு வேண்டுகோள் தாங்களே ஒரு கவிதை வாசித்து நீரோடையில் வெளியிடுங்களேன்..

  மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.//

  ஏன் தம்பி விபரீத ஆசை ஹாஹா நல்லாவேயிருக்காது நான் வாசித்தால்.

  இருந்தாலும் முயற்சிக்கிறேன் சரியா

  தங்களின் அன்புக்கு நன்றி தாரிக்..

  பதிலளிநீக்கு
 21. அனுஜா கூறியது...

  இப்போ எங்கேயிருக்கீங்க? துபாயா, இந்தியாவா?

  ஏங்க நீங்க வேற துபாயில இருந்தது போதாதா.
  அவங்க கொஞ்சகாலமாவது சொந்தமண்ணில் இருக்கட்டுமே..//

  அடடடா என்னா ஒரு டச்..

  //யக்கோவ் மீண்டும் போயிடுவீங்களா!!!!//

  நீங்க எப்ப ஊருக்கு வருவீக சொல்லுங்க அப்ப சொல்லுறேன்.எப்புடி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது