நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கெளரவமாய் காக்கும் அசிங்கங்கள்..


தன் வயலில் வேறொருவரின் விதை
வேரூன்றி காலூன்றியதைக் கண்டும்
காணமல் காக்கிறதாம் கெளரவம்
தான்கட்டும் வேட்டியில் கறைபட்டுவிடாமல்

கூச்சநாச்சமற்று கொஞ்சி சிரிக்க
கூசாதோ உள்ளம்
கூடிக் களித்தால் நீங்கிடுமோ!
கறைபட்டதெல்லாம்!

அச்சாணி கழண்டு
அஞ்சாமல் ஓடும் வண்டி
எச்சாணியாலும், எச்சிலையானாலும்
ஏறிமிதித்தோடுமோ
எல்லைகளைத்தாண்டி!

மந்திரத்தால் காய்க்குமோ வாழை
மானமிழந்து வாழுமோ மானின் தசை
கெளவுரத்தைக் கட்டிக்காக்கும்  மீசை
குலத்தை குலைக்க வகுக்கிறதே
கேடுகெட்டபாதை

கூரைவீடுகளில் புகையமுற்ப்பட்டாலும்
கொழுந்துவிட்டெறிகிறது
தெருக்கோடிவரை
கோடிவீடுகளில் பற்றியே எறிந்தாலும்
கசியக்கூட மறுக்கிறது
தன்வாசல்வரை

வெக்கமற்ற வாழ்க்கை வாழும்
வெம்புழுக்களோ
வீதியில் மட்டும் காட்டும் வீராப்பு
வீட்டுக்குள்ளே போடும் மாராப்பு

வசைபாடும் சமூகம்கூட
வக்கனையோடு வாரியணைக்கிறது
வகைகெட்ட வகையார்களை
வாழையிலை பரிமாறி!

கண்ணிருக்கு பார்க்க
என்றிருக்க முடியாத -சில
எண்ணங்கள் மட்டுமே
கொதித்தெழுகிறது
அதுவும் வீட்டடுப்பில்
கொதித்தடங்கும் வெந்நீரைப்போல!!!.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

5 கருத்துகள்:

 1. கூச்சமா அதுவும் இதுபோன்றவங்களுக்கா போங்கக்கா கிண்டல்பண்ணாம. சிலருக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லக்கா. நமாதான் அடிச்சிகிடனும் அதுசரி இந்த கவிதை எதைபத்தி. வேண்டாக்கா அடிக்கவராதீங்க..

  பதிலளிநீக்கு
 2. கூரை வீட்டுத் தீ தெருக்கோடி வரை கொழுந்து விட்டெரிவதும், கோடி வீட்டுத் தீ உள்ளேயே முடிந்து விடுவதும்...

  -இதற்கு யார் என்ன செய்துவிட முடியும்?

  வீட்டடுப்பில்
  கொதித்தடங்கும் வெந்நீரைப்போல...

  -சரியாச் சொன்னம்மா... எண்ணங்கள் கொதித்து அடங்குவதுதான் இங்கே சாத்தியம்... வேறு வழி? அருமையான கவிதை...

  பதிலளிநீக்கு
 3. ஆர்பரிப்பு ஏதுமின்றி
  சலனமில்லாமல் இருந்த.... தங்கள்
  மனமெனும் நீர்நிலையில்...
  கல்லெறிந்துபோன
  நிகழ்வு ஏது...?

  சலனத்துடன்
  சிறுவலைகள் பெருகி..!
  பேரலையாய் எழுந்து...
  புரட்டிபோட்ட நிகழ்வின் விளைவுதான் இப்பதிவு...!

  சரியா...!

  பதிலளிநீக்கு
 4. வசைபாடும் சமூகம்கூட
  வக்கனையோடு வாரியணைக்கிறது
  வகைகெட்ட வகையார்களை
  வாழையிலை பரிமாறி//

  atheepola ullavangkathaan aatharippaangka silar paNathukkaaka avaazaiyilai parimaaruvaangka..

  keedukedda samuukam..

  super kavithai..

  பதிலளிநீக்கு
 5. சமூகத்தின் அவல நடத்தையைச் சாடி, சாட்டையடி கொடுக்கும் வார்த்தைகள். சுரணை இருப்பவர்க்கு சுட்டிருக்குமே இந்நேரம்! கைகட்டி வேடிக்கை பார்க்கும் கையாலாகாத்தனத்தையும் கடைசியில் சொன்னது யதார்த்தம்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது