நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முகவரியை தொலைக்கத் துடிக்கும் மொட்டுக்கள்..


வாங்க வாங்க என்ன சொல்லபோகிறேனு நினைக்கிறீங்க!அது படித்தபின் தெரியுமுன்னு நினைக்கிறேன்..

தற்கால நாகரீக வளர்ச்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா என மனசாட்சியை மறைத்து வாழ நினைப்பவர்களுக்கு இது சாதாரணம்தான்.
ஆனால் மனமும் உடலும் எக்காலமும் வகைபடுத்தப்பட்ட வரைமுறைக்குட்ப்பட்டு வாழ நினைபோருக்கு இது சாதாரணமல்ல

நவநாகரீகத்தின் வளர்ச்சி, நாகரீகமற்ற மோகம், இதெல்லாம் மிக சர்வ சாதாரணமாகிவிட்டது இன்றைய காலத்திலும். இண்டர்நெட் மூலமும்
முகநூல் அதாவது பேஷ்புக். மற்றும் இணைத்தின் வாயிலாக தொடர்புக்கொள்ளப்படும் யாஹூ. கூகுள்.எம் எஸ் என்.ஸ்கைப்பி.மற்றும் மற்றவரை தொடர்புகொள்ள ஏதுவாக அதுவும் பல சமயம்  ஃப்ரியாக கிடைக்கப்படும் அனைத்தும்  இவைகள் தற்காலத்தின் மிக மிக அவசியமான ஒன்றானதாக ஆக்கப்பட்டுவிட்டது. எந்த ஒன்றையும் நாம் கையாளும் விதத்தை, மற்றும் அதைனை செயல்படுத்தும் முறையை தவறாக படுத்த ஆரம்பிக்கும்போதுதான் அது நமக்கே ஆபத்தாகவும், நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பாகவும் ஆகிவிடுகிறது.

இன்றய தலைமுறையினருக்கு யாரும் எதுவும் கற்றுகொடுக்கவேண்டிய அவசியமில்லை எல்லாம் தாமாகவே தெரிந்துக்கொள்ளும் ஆற்றல்கள் உருவாகியுள்ளது அல்லது உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி எல்லாம் தாமாகவே செயல்படும்போதுதான் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என அறியாமலேயே பலநேரம் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதில் பெற்றோர்களின்  அலச்சியப்போக்கும்,தன் குழந்தைதான் அது  எந்நிலையிலும் தவறே செய்யாது,  என அதிகபட்ச நம்பிகையையும் அவர்களின்மேல் திணித்துவிட்டு அவர்கள் அவதியுறும்போது, வேதனைபட்டு அவர்களையும் வருத்தி தாமும் வருத்தப்படுவது நிகழ்காலத்தில் நடந்துக்கொண்டிருக்கும் ஒன்று .

”அதற்காக பெற்ற பிள்ளைகளை நம்பாமல் அவர்களை கண்காணித்துக் கொண்டேயிருக்கமுடியுமா? இது இன்றைய பெற்றோர்களின் கேள்வி. ”அப்படியில்லை” அவர்களின் மேலும் எப்போதும் ஒரு கண்யிருக்கட்டும்.கவனிப்பு இருக்கட்டும் ”அதையும்மீறி நடக்கிறதே என்ன செய்ய” நம்மைமீறிய செயலுக்கு நாம் காரணமில்லை எனும்போது அதை எதிர்த்துபோராட துணிவும் எவ்வழியில் சென்றால் அதற்கான தீர்வுகாணலாம் என்ற தெளிவும் இருக்கவேண்டியதும் எடுக்கவேண்டியதும் நம்மிடமே!

”சரி அப்படி எப்படிதான் அவர்களை கண்காணிப்பது” கண்கொத்திப்பாம்பாகவா?செல்லுமிடமெல்லாம் கூடவே சென்றா? எந்நேரமுமும் நோட்டம் விட்டுக்கொண்டே அலைந்தா?
 அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.இருந்தாலும் சில சமயம் அப்படி இருப்பதிலும் தவறில்லை. எப்போது நமது குழந்தைகளுக்கு 10 வயது ஆரம்பிக்கிறதோ! [தற்காலத்தில் அதுவே ஜாஸ்தி என நினைக்கிறேன்.
அதற்கு முன்பே] அதிலிருந்து 20 வயது வரை மிக மிக அக்கரைகொள்வதும்,அவர்கள்மீது தனிகவனம் செலுத்துவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.அதன்பின் அவர்களுக்கே புரிதல் வரும். நல்லது எது? கெட்டது எது? என பிரித்துப் பார்க்கும் பக்குவம் வந்துவிடும் அதுவரை,

அவர்கள் என்ன செய்கிறார்கள். யாரோடு தொடர்பு வைத்துள்ளார்கள்.
எத்தனை தோழமைகள் உண்டு.யார் யார் வீட்டு இவர்கள் போவார்கள். யார் யார் இவர்களைத்தேடி வீட்டுக்கு வருகிறார்கள்.எதில் அதிகம் அக்கரை கொள்றார்கள். அது ஏன்?அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது. கணினியில் இருக்கையில் இவர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கு தானக மெல்லச்சிரிக்கிறார்களா! கணினியில் எத்தனை அக்கோண்ட் வைத்துள்ளார்கள்.தொலைபேசியில் எந்நேரமும் கையிலிருக்கிறதா? கேம் விளையாடுவதாக சொல்கிறார்களா? எனஅவர்கள் அறியாமலே அவர்களை கண்டும் காணாததுமாய் சிறு நோட்டம் அவ்வளவுதான்.

தற்கால சூழலில் தாயும் தந்தையும் வேலைக்கு சென்றுவிட அல்லது அவர்கள்கூடவேயிருந்து அவர்களை கவனிக்காது எல்லாம் ஒருநாள் தெரியதான் போகுது, வரத்தான் போகுது, பார்க்கதான் போகிறர்கள் என வெட்டிப் பேச்சி பேசிக்கொண்டு குழந்தைகளின் நிலைகளை, அவர்களின்

செயல்பாடுகளை அறியத்தவறிவிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதைகூட சிலர் உணர்வதேயில்லை. கன்னியென்றில்லாமல் கல்யாணம். மலடி என்றில்லாமல் மழலைகள். இதுபோல் வாழும் குடும்பங்களை ஏராளம் கண்டாச்சி.நேருக்கு நேர் உபதேசமும் செய்தாச்சி. இதுவல்ல வாழ்க்கை தன்குழந்தை தன்கண் முன்னே சீரழிவதை பார்ப்பது எவ்வளவு அறிவீனம் கேட்டால்.தற்காலத்தின்மேல் பழி. காலச்சூழல்மேல் குற்றம். தாமாகபோய் இடித்துக்கொண்டு நிலை இடித்துவிட்டதென்றும், வழியில் கிடந்த கண்ணாடிதுண்டு தெருவில் செல்லும்போது தன்னை தேடிவந்து குத்திவிட்டதென்றும், நாக்கு கூசாமல சொல்வதுபோல்.

’சரி சரி அப்படி என்ன நடந்துவிட்டது இப்படி அளக்கிறாய் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். நடந்த ஒரு சம்பவம் இது மற்றவருக்கு பாடமாக அமையத்தான் இதை எழுதுகிறேன். தம் குழந்தைகள்போல்தான் அடுத்தவர்கள் குழந்தையும். இதை படித்துவிட்டு மற்ற பெற்றோர்கள் உசாராகயிருக்ககூடும். இருக்கவேண்டும் என்ற அந்த ஒரு நல்ல நோக்கத்திற்காகவே இதை எழுதும்படியாக என்னைத் தூண்டியது.

ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது. அங்குபலதோழிகள் மற்றும் எங்கங்கோ பார்த்து பலகிய மனிதர்கள் என எல்லாம் வந்திருந்தார்கள்.எல்லாரும் அங்கு மீண்டும் அறிமுகமாகிக்கொண்டோம். நிகழ்சிகள் நடந்து கொண்டிருந்தபொழுது எனதுபோன் ஒலித்தது பேசிவிட்டு வைக்கும்போது. வந்திருந்த ஒருவரின் பெண்குழந்தை வயது 13-14.க்குளிருகும் ”ஆண்டி உங்க மொபைலை கொஞ்சம் பார்க்கலாமா என்றாள்” ”ஓ பார்கலாமே என்றேன்” கொடுங்கள் என வாங்கிகொண்டாள் ”சரி கால் வந்தால்மட்டும்தா” என சொல்லிவிட்டு போனைக் கொடுத்தேன்.ஒரு மணிநேரத்திர்கு பின் ’ஆண்டி ஸ்விச் ஆஃபாயிடுச்சி’ என திருப்பித்தந்தாள்.”அப்படியா சார்ச் போயிடுச்சிபோல் என சொல்லி மீண்டும் சார்ச் காரில்தான் போடனும் போட்டுக்கொள்றேன்’ன்னு வாங்கிக்கொள்ளவும், நிகழ்ச்சியும் முடியவும் சரியாக இருந்தது.வீடுவந்துசேர இரவு 2 மணியானதால் போனை சார்சில் போட்டுவிட்டு உறங்கியாச்சி.

மறுநாள்காலை வேலைகளை முடித்து விட்டு வந்தமர்ந்து போனை ஆன் செய்து போனிலிருந்து பிரவுசருக்கு போனபோது பேஷ்புக் ஓபனாகியிருந்தது, அதில் ஒரு மெசேஜ் இருந்தது. .அடடா நமக்கு யாரோ அனுப்பியிருக்காங்களேன்னு ஓப்பன் பண்ணிபார்த்தாஆஆஆஆஆஆஆஅ ஆடிவிட்டேன். கணவன் மனைவிபோல் வார்த்தைகள். மெசேஜ் முடிக்கும்போது மாலை யாஹுவில் எப்போதும்போல வா என முடித்திருந்தது.மனதெல்லாம் படபடக்க சே யாருடா இது நமக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கா! அதுவும் தங்கிலீஸில் என தேகம் நடுங்கியது ஐடியிலிருக்கும் பேரை பார்க்கமலே. சற்று சுதாரித்து ப்ரொபையில் வந்தால் போட்டோ மாறியிருக்கு. பெயரும் வேறாகயிருக்கு. ’ஆகா இது நம்மளோடது இல்லடி மல்லின்னு மனசு சொல்ல சில்லுன்ன நீரில் நீரோடையில் குளிச்சதுபோலான மனசு லேசானாது இருந்தாலும்,

இதுயாருன்னு கண்டுபிடிக்கனுமேயென மூளை முடுக்கிவிட அதிலுள்ள மெசேஜ்களை, ஒன்றல்ல இரண்டல்ல 2,429. இந்த ஐடி யாரோடதுன்னு யோசிச்சப்ப, கிளிக் ’அட நேற்றிரவு நம்மிகிட்டபோன் வாங்கினாளே ஒரு குட்டிபெண்’ ச்சே சே அவளுக்கு எப்படி இப்படி மெசேஜ்வரும் அதுவும் இந்த ஐடியில் இருப்பது அவள்பேரும் அல்லவே, தங்கியிருக்கும் நாட்டின் பெயர்கூட வேறு அல்லவா போட்டிருக்கிறது என ஒரே குழப்பம். சரி நாமளே குழம்பிக்கிட்டு இருப்பதில் அர்த்தமில்லை, ஒரு ஐடியா செய்வோமுன்னு கணினியை ஓப்பன் செய்து என் ஐடியிலிருந்து இதே ஐடிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். என்ன குட்டிமா யார்யிது ஃபிரண்டா என கேட்டு யாரிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்ததோ அதையும் இணைத்து அனுப்பினேன்.அனுப்பிவிட்டு நாம் நினைப்பது சரியாக இருக்கக்கூடாதுன்னும்,அது அந்த குட்டிப்பெண்ணாகவும் இருக்கக்கூடாது என வேண்டிக்கொண்டபோதும் மனதில் ஏதோ வலி ஏற்ப்படுத்தியது.

 காலை மணி 10.50 மெசேஜ் அனுப்பினேன். பகல் 12.28 அதற்கு பதில் வந்தது.அந்த 1.1/2 மணிநேரம் நான் மனதிற்க்குள் பட்ட வேதனைகள் சொல்லில் வடிக்கமுடியாது.தன் குழந்தை மட்டுமல்ல எந்த ஒரு குழந்தையும் சீரழிவதை தாய்மை உணர்வுள்ள யாரும் விரும்பமாட்டார்கள்.வந்த மெசேஜை படித்ததும் அழுதேவிட்டேன்..
’அச்சோஓஒ ஆண்டி தெரிஞ்சிபோச்சா உங்களுக்கு ப்லீஸ் ஆண்டி அம்மாகிட்ட சொல்லிடாதீங்க. அவன் இன்னவன், இங்கு வந்திருந்தபோது இப்படி பழக்கம். ப்லீஸ் ஆண்டி ப்லீஸ் ஆண்டி. என எழுதியிருந்தாள். நாம் சின்னகுழந்தையின்னு நினைத்துக்கொண்டிருக்க அது வா! இப்படியென மலைத்துபோன நான் மரத்ததுபோல் ஆனேன். இந்தகாலத்து குழந்தைகள் படு புத்திசாலிகள் என எல்லோரும் மார்தட்டிக்கொள்றார்கள். புத்திசாலிகள்தான், இல்லையென்றால் பெற்றோர்களின் கண்ணில் மண்ணைதூவிவிட்டு,பலவிதங்களில் பலவாறாக நடிக்க தெரிந்திருக்கிறதல்லவா? தன்பெயர் தான்வசிக்குமிடம் என இருந்தால் பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரிந்துவிடுமென.புது புது பெயர்களிலும் இங்கே வசித்துக்கொண்டு எங்கேயோ வசிப்பதுபோலும் கிரியேட் செய்யத்தெரிகிறதே? அப்படியென்றால் அவர்கள் புத்திசாலிகள்தான் நம்மைவிட பலமடங்கு படு புத்திசாலிகள்..

சரி அந்தபெண்தான் என உறுதியாகிவிட்டது அடுத்து என்ன செய்யலாம்.
அந்த கயவனிடமிருந்து எப்படி இந்த பெண்ணைகாப்பாற்றுவது.’என்ன நீயாக அவனை கயவனென்கிறாய் காதல் செய்கிறது தவறா?யென ஒருபுறம் கேட்பீர்கள். இது காதலல்ல.அதன் பெயரில் அந்த பெண்ணை கலங்கபடுத்த நினைக்கும் கொடூர எண்ணம்.அவன் அனுப்பியிருந்த மெசேஜிகளில் படிக்கப்பட்ட வார்த்தைகளும். சூட்சுமங்களும் ஒரு இளம்பெண் பலிகடா ஆகபோவது உருதியென்பதை வெட்டவெளிச்சமாக காட்டியது. இவளோ சிறுமி அறியாப்பருவம் ஆசைகளும் கனவுகளும் கண்ணிலும் மனதிலும் நிரம்பிவழியும் வயது. ஆசைவார்த்தைகூறி மயக்கும்போது மயங்கிடும் இளம் இளமை. இதை தவறாக பயன்படுத்துவதுபோல் அமைப்பட்ட அவர்களின் தொடர்பு அத்துமீறுவதற்க்குள் இறைவன் காப்பாற்றவேண்டும்.

இவர்களிருவரும் இருப்பதென்னவோ நாடுகள் கடந்து, அவன் அங்கும். இவள் இங்கும்.ஆனால் இவர்களை இணைத்தது எது இணையம்தான். நல்லவற்றிக்காக கண்டுபிடிக்கபடும் அனைத்தையுமே மனிதன் கெட்டவைகளுக்குதான் அதிகம் உபயோகப்படுத்துகிறான். இது கண்டிபிடித்தவனின் தவறல்ல, அதை கையாளத்[கடைபிடிக்கத்]தெரியாதவனின் தவறு. ஓகே. அடுத்து விசயத்துக்கு வருவோம். என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என மதியம்.போய் மாலைவரை யோசனை. இனி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்துதான் என அறிவித்தது மூளை. ”சரி நாம் போன் செய்து அந்த தாயிடம் சொன்னால் தவறாக எடுத்துக்கொள்வாரோ”. இது சராசரி மனித மனது. ’ம்ஹூம் எது சொன்னாலும் சரி உடனே போனைபோடு என்றது அறிவுள்ள மூளை’
மாலை 6 மணி அந்த தாயிற்கு போன் செய்தேன்.

முதலில் நலம்விசாரித்துவிட்டு பக்கத்தில் பசங்க இருக்காங்களா”ன்னு கேட்டேன் ஆமாம் என்றார். அவ்விடத்திலிருந்து வேறுயிடத்திற்க்கு  போங்கள் நான் பேசுவதோ நீங்கள் பேசுவதோ பசங்களுக்கு தெரியவேண்டாம் என்றேன். உடனே சரி ரூமிற்கு வந்துவிட்டேன் சொல்லுங்கள் என்றார். விசயத்தை சற்று தயக்கமாகவே சொன்னேன். ’என்னது அப்படியா! அப்படியெல்லாம் இருக்காது மலிக்கா’ ’இல்லைமா உண்மைதான்’ சரி எப்போ எப்படின்னு நிறைய கேள்விகளும் அதற்கான பதிலகளும் பரிமாறப்பட்டது. ஆதாரம் கேட்டார்கள்.இன்ன இன்னவென்று சொல்லி. கடைசியாக அன்று சந்தேகத்தின்பேரில் நான் அப்பெண்ணிற்கு அனுப்பிய மெசேஜும் அதற்கிட்டபதிலையும் சொன்னேன். அவர்கள் வீட்டில் நடந்த விசயங்கள் பலவற்றை அவர்களுக்கு நான் சொல்ல அதிர்ச்சியுற்றார்கள். ஏனெனில். நாங்கள் பார்த்துக்கொண்டதே பல மாதங்களுக்கு மேல் வருடத்தை தொட காத்திருந்த சமயம்தான் அன்று நாங்கள் சந்தித்தது.

அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வசதி வாய்ப்புகளை குழந்தைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ள நீங்களும் ஒரு காரணம், அதே சமயம் குழந்தைகளையும் கவனியுங்கள் கண்காணியுங்கள் என்றேன். இந்த வயதில் அனைவரும் செய்யும் தவறுதான், எந்நேரமும் அவர்களை கண்காணித்துக்கொண்டேயிருக்கமுடியுமா மலிக்கா’அதற்குதானே நாம் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தை அடைந்துள்ளோம், முழு பொருப்பும் நம்மிடத்தில்தானே இருக்கிறது. அதுமட்டுமில்லை இன்னொரு முக்கியமான விசயம்  நான் உங்களுக்கு போன் செய்ததே  இன்னும் கொஞ்ச நாளில் உங்க பெண் எஸ்கேப் ஆக தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதையறிந்துதான் என்றபோது, ஆடிபோய் ஒரே அழுகை என்ன சொல்லுறீங்க மலிக்கா’ ’ஆமாம்மா அந்தளவுக்கு வளர்ந்துவிட்டது அறியாதன்மை. தற்கால சூழல் அறிந்திருந்தும். படித்திருந்தும் அதை வளர்த்துவிட்டது உங்களின் அறியாமை.மற்றும் கவனமின்மைதான்.

ஆகவே உங்க குழந்தையை கண்டிகிறேன் என்ற பெயரில் துன்புறுத்தவோ! அல்லது அடிக்கவோ! வேண்டாம் நிதானமாக எடுத்துச்சொல்லுங்கள் இது அதுவல்ல என்பதையும், அதற்கான வயதோ மனநிலையோ உனக்கு தற்போதில்லையெனவும் அவளுக்கு புரியவையுங்கள். தாயால் முடியாது எதுவுமில்லை, உங்களவரிடமும் எடுத்துச்சொல்லி இருவரும் சேர்ந்து நல்லமுடிவெடுங்கள்.  அப்பெண்ணை கண்டிக்கிறேஎன்யென அதிகமாக மிரட்டினால் அது உங்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். முதலில் உங்களை பொறுமைபடுத்திக்கொள்ளுங்கள். பிறகு அவளிடம் மிக பக்குவமாக எடுத்துசொல்லுங்கள் என்றேன். மிகவும் உடைந்த குரலில் அழுது தேம்பினார்.ஆறுதலும் எனக்குதெரிந்த சில அறிவுறைகளையும் கூறிவிட்டு. அவசியமேற்ப்பட்டால் நேரில் வந்து அவளிடம் எடுத்துச்சொல்கிறேன் என சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

மனத்திலிருந்த பாரம் சற்று இறங்கியதுபோல் தோன்றவே இறைவனிடம் கண்ணீர் மழ்க துஆக்கேட்டேன்.யாஅல்லாஹ் எவ்வித சங்கடங்களுமின்றி இந்தபிரச்சனையை தீர்த்துவைப்பாயாக! என்று. மறுநாள் மாலை 5 மணியிருக்கும் அந்தாயிடமிருந்து போன் அவர்கள் பேசப்பேச அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டேன் .....

                                                                                                          தொடரும்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

26 கருத்துகள்:

  1. மலிக்கா, ஒண்ணும் சொல்றதுக்கில்லை. இந்த யுகத்துல நாமளும் பிள்ளை வளர்க்க வேண்டியிருக்கிறதேன்னுதான் இருக்கு. நம்மளப் பெத்தவங்க கொடுத்து வச்சவங்க. அவங்களுக்கு இந்தப் பிரச்னைலாம் இல்லை.

    எனக்குத் தெரிஞ்சவங்களோட டீனேஜ் பசங்க ரெண்டு பேரு ஃபேஸ்புக்ல என்னை restrict பண்ணி வச்சிருக்காங்க!! காரணம் என்னன்னா, நான் ஃபோட்டோ போடாதீங்கன்னு சொன்னதுதான்!! பெத்தவங்களுக்கும் அது தப்பாத் தெரியலை. அப்புறம் நாம என்ன செய்ய!!

    பதிலளிநீக்கு
  2. எப்போது நமது குழந்தைகளுக்கு 10 வயது ஆரம்பிக்கிறதோ! [தற்காலத்தில் அதுவே ஜாஸ்தி என நினைக்கிறேன்.
    அதற்கு முன்பே] அதிலிருந்து 20 வயது வரை மிக மிக அக்கரைகொள்வதும்,
    அவர்கள்மீது தனிகவனம் செலுத்துவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.அதன்பின் அவர்களுக்கே புரிதல் வரும். நல்லது எது? கெட்டது எது? என பிரித்துப் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்//


    மிகச்சரியாக சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான விழிப்புணர்வு பதிவு மலிக்காக்கா. அச்சோ கடைசியில் என்ன இப்படி நிருத்திட்டீங்க கவிதை யெழுதுவீங்கன்னுபார்த்தா திகில் கதையெல்லாம் எழுதுவீங்கலோ

    பதிலளிநீக்கு
  4. எத்தனை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்.பல திரியுது பெத்தவங்க்ண்ட பெயரில் உங்கட நாட்டுட்டமட்டுமல்ல எல்ல்லா நாட்டிலும் இந்த கொடுமையுண்டு..

    என்ன உலகத்தில் இருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  5. எல்லாத்துக்கும் ஓடியாந்து கருத்துள் போடுறவங்க இதுக்குண்ட உடனே யாரும் வரலை பார்த்தீங்களா மலிக்காமேம், அதுதான் இந்த காலத்துண்ட நாகரீகம்..

    பதிலளிநீக்கு
  6. ஸலாம் சகோ மலிக்கா...

    பதிவின் ஆரம்பத்தில் தங்களின் நீண்ட அறிவுறைத்தோரணை,ஏன் இதற்கு...என்ன காரணம் என யோசிக்க வைத்தது..ஆனால் அதை தொடர்ந்த சம்பவம்...

    மனதை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டது சகோ..பிஞ்சுகள் பாவம் குதரப்பட காத்திருக்கிறார்கள்...

    அடுத்து என்ன நடந்திருக்கும் என என்னால் ஓரளவு அவதானிக்க முடிகிறது...கஷ்டம்தான்...

    பெற்றோர்களின் சரியான பராமரிப்பின்மையும் இதற்கு ஒரு கர்ரணம்...நிறைய எழுதலாம்..ஹ்ம் எழுதனும்,எழுதுவதை நாமும் பழகனும்..அடுத்துவரும் தலைமுறையை எதிர்கொள்ள....

    அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கனும்...

    அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  7. வசதி வாய்ப்புகளை குழந்தைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ள நீங்களும் ஒரு காரணம், அதே சமயம் குழந்தைகளையும் கவனியுங்கள் கண்காணியுங்கள் என்றேன். இந்த வயதில் அனைவரும் செய்யும் தவறுதான், எந்நேரமும் அவர்களை கண்காணித்துக்கொண்டேயிருக்கமுடியுமா மலிக்கா என்றார்...!!!

    மகணை பெற்ற பெற்றோருக்கு பிற்காலத்தில் மகன் சம்பாதித்து தருவானா என்ற கவலை.

    மகளை பெற்ற பெற்றோருக்கு மகளை எப்படி திருமணம் செய்து வைப்பது என்ற கவலை.

    குழந்தையை பெற்றுகொள்ள தகுதி இழந்த தம்பதியினருக்கு தாம் மலடா..என்ற கவலை.

    இப்படி ஒவ்வொரு தம்பதியினரும் ஒவ்வொன்றைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது திடிரென ஒருப் புதுக் கவலை பத்து மாதம் தவம் இருந்து பெற்ற தம் புதல்வி எவனோடு ஓடி விடுவாளோ என்று.

    வயதோ பதிநாளு அவளை தம் கட்டுப் பாட்டிர்க்குள் வைத்திராத அவளின் பெற்றோரே குற்றவாளி.

    ஒரு பெண்ணிற்க்கு உணர்ச்சியின் வயது ஐந்தோ கூட இருக்கலாம் அது அறியாமை காலம்.(மருத்துவ உண்ன்மை)

    பதிநாளு என்பது இவ்விசயத்தில் தம்மை பைத்தியமாக் கூட மாற்றிவிடும் இது பெண் விசயம் என்பதால் நான் அதிகமா எழுதியால் நல்லா இருக்காது.

    ஆகவே பெண்னைப் பெற்ற பெற்றோர்கள் அவளுக்கு பாதுகாப்பாக இருங்கள்.

    கண்ணை இமைகள் காப்பது போன்றும்..
    உடலை ஆடைகள் மறைப்பது போன்றும்..
    அவளின் நடவடிக்கையை அங்குலம் அங்குலமாக கவனியுங்கள்.

    தேவையற்ற வசதிகளை செய்து கொடுக்கும் எண்ணத்தை தவிருங்கள்.

    சிந்தனைப் பதிவு வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  8. 'எம்புள்ள அப்படிலாம் செய்யாதே'ன்னு குருட்டு நம்பிக்கை வைக்கும் பெற்றோர்களே இப்படி பாதிக்கப்படுகிறார்கள். இந்த பதிவு அதுபோன்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடம் புகட்டட்டும்!

    //அவர்களின் தொடர்பு அத்துமீறுவதற்க்குள் இறைவன் காப்பாற்றவேண்டும்//

    இறைவன்தான் காப்பாற்றணும் :( நல்ல எச்சரிக்கைத் தரும் சம்பவம். பகிர்வுக்கு நன்றி தோழி!

    பதிலளிநீக்கு
  9. நாகரீக வளர்ச்சியால் கலாசார வீழ்ச்சிதான்.புத்தி சொல்லிப் பார்க்கலாம் !

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு.
    பெற்றோர் பிள்ளைகளின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.
    நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  11. இதெல்லாம்

    இஞ்ச சகஜமப்பா...!

    ச்சே...! சகஜமம்மா......!

    அறிவியல் வளர்ச்சி

    அழிவிற்கு

    அழைத்துச் சென்று....!

    மனிதயினத்தையே

    மியூஸியதிற்கு

    அழைத்துச் செல்லும்

    அழைப்பான்கள்தான் இந்நிகழ்வுகள்...!

    அதோ...!

    அதோ.....!

    அந்திவரும் நேரம்...!

    மனிதயினம்

    அழியும் நேரம் இதோ...! இதோ...!

    - காஞ்சி முரளி... //

    இதை இண்டியில் பார்த்துவிட்டு என்னடா இது இப்படியெழுதியுள்ளங்களேன்னு வந்தேன். வந்தாதானே தெரியுது. இபடி ஒரு சம்பவம் நடந்திருக்குன்னு. என்ன சொல்ல மேடம் காலம் கலிகாலம் ஆகிபோச்சி கம்பியுட்டர் உலகமாகிபோச்சி. நல்லவங்க யாரு கெட்ட்டவங்க யாருன்னே தெரியலை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.. பிள்ளைகளை கவனமாக வளர்கனும். எனக்கும் இரு பெண்குழந்தைகள்.ஆ நினைச்சாலே பயமாக இருக்கு.. மிக அருமையாக சொல்லியிருக்கீங்க. உங்கள் தளம் சூப்பர் மேடம் அழகான கலர். அதில் பொதியப்பட்ட கவிதைகள். காஞ்சி முரளிக்கு நன்றி. அவரின் கருத்தை இண்டிலியில் பார்த்துட்டுதான் இங்கே வந்தேன், தேங்ஸ்ங்க சார்.. இனி தொடர்ச்சியாக வருவேன்..

    பதிலளிநீக்கு
  12. மிகச்சரியான பகிர்வு மேடம் ...

    பதிலளிநீக்கு
  13. மதிப்பிற்குரிய தங்கைக்கு,

    தங்களின் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. தாங்கள் பாதிக்கப்பட்ட(?) பெற்றோருக்கு தெரிவித்ததுதான் சரியான தீர்வு.

    வாழ்க உங்கள் நல்ல மனசு. 

    இப்படிப்பட்ட ஒரு அசந்தர்ப்ப தருணத்தில் மனதில் பட்டது கீழே!

    படுமுன் தெளிக!

    ஒன்பதாம் வகுப்பு
    பத்தாம் வகுப்போடு
    ஓடிப்போனது...
    பெற்றோருக் கிடை
    வகுப்புக் கலவரம்!

    போய்ச் சேர்ந்த இடத்தில்
    தேடிச் சென்றது இல்லை -
    வீட்டுப் பாடம் ஒன்றும்
    விபரம் புரியவில்லை -
    கோனார் உரையிலும்
    குறிப்பெதுவும் இல்லை!

    குறுஞ்செய்தியில்
    முடங்கிய விரல்களால்...
    வெறுங்கஞ்சிக்குக்கூட
    வேலை யில்லை!

    கண்கள் வழி 
    கற்ற காதலும்...
    காதலன் வழி
    பெற்ற காமமும்...
    வயிற்றுப் பசியில்
    வெற்றாகிப் போனது!

    கண்மனியும் பொன்மனியும்...
    காவியமும் ஓவியமும்...
    காசில்லா கதிகேட்டில்
    காலாவதி யானது!

    அவனுக்கு அவளும் -
    அவளுக்கு அவனும் -
    அலுத்துப் போன தொரு
    அதிகாலையில்...

    அரவணைக்க அம்மா,
    ஆறுதலுக்கு அப்பா,
    அந்தரங்கத் தோழியென
    அவதரித்த அக்கா,
    அம்மா சாயலில்
    அருமைத் தம்பி,
    இடுக்கன் களைய
    இனியதொரு சகி,
    இழந்ததெற் கெல்லாம்
    ஏங்கியது மனது...!

    மின்வெட்டு இரவொன்றின்
    மிதக்கும் மின்மினி...
    மழையற்ற தினமொன்றில்
    புல்நுனியில் பனித்துளி...
    என -
    மிகைத்த காதல்;

    முடியாத இரவு...
    விடியாத வானம்...
    படியாத உரவு ...
    உலர்ந்த மலர்வனம்...
    உருகாத மேகம்...
    என -
    எதிர்மறை எண்ணங்களில்
    அஸ்தமித்தது!

    ஏனோ...
    பிடிமண் இடுகையில்
    நொடிநேரம் காட்டும்
    முகமொன்று -
    குழிக்குள்...
    மின்னி மறைந்தது!

    முடிவைத் துவக்கமென்று
    மயங்கும் பிஞ்சுகளே...
    பழுக்கும் பருவம்வரை
    பொறுத்தலே பகுத்தறிவு!

    - சபீர்



     

    பதிலளிநீக்கு
  14. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  15. // ஹுஸைனம்மா கூறியது...

    மலிக்கா, ஒண்ணும் சொல்றதுக்கில்லை. இந்த யுகத்துல நாமளும் பிள்ளை வளர்க்க வேண்டியிருக்கிறதேன்னுதான் இருக்கு. நம்மளப் பெத்தவங்க கொடுத்து வச்சவங்க. அவங்களுக்கு இந்தப் பிரச்னைலாம் இல்லை.

    எனக்குத் தெரிஞ்சவங்களோட டீனேஜ் பசங்க ரெண்டு பேரு ஃபேஸ்புக்ல என்னை restrict பண்ணி வச்சிருக்காங்க!! காரணம் என்னன்னா, நான் ஃபோட்டோ போடாதீங்கன்னு சொன்னதுதான்!! பெத்தவங்களுக்கும் அது தப்பாத் தெரியலை. அப்புறம் நாம என்ன செய்ய!!//

    ஆமாம் ஹுசைனம்மா. அந்தகாலம் வேறு இந்தகாலம் வேறு. என நிகழ்காலம் வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது.

    அனைத்து குழந்தைகளுக்கும் நல்லபுத்தியை தரவேண்டி இறைவனிடம் வேண்டுவதை தவிர என்ன செய்யமுடியும்..

    புத்திமதி சொல்கிறவர்கள் எதிரியாகிவிடுகிறார்கள். அவர்கள் கோணத்தில்..

    இதில் பெற்றோர்கள் கொஞ்சம் ஒத்துழைத்தால், நலமாகும் குடும்பம்..

    பதிலளிநீக்கு
  16. சுஜி கூறியது...

    எப்போது நமது குழந்தைகளுக்கு 10 வயது ஆரம்பிக்கிறதோ! [தற்காலத்தில் அதுவே ஜாஸ்தி என நினைக்கிறேன்.
    அதற்கு முன்பே] அதிலிருந்து 20 வயது வரை மிக மிக அக்கரைகொள்வதும்,
    அவர்கள்மீது தனிகவனம் செலுத்துவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.அதன்பின் அவர்களுக்கே புரிதல் வரும். நல்லது எது? கெட்டது எது? என பிரித்துப் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்//


    மிகச்சரியாக சொன்னீர்கள்

    // சுஜி கூறியது...

    மிக அருமையான விழிப்புணர்வு பதிவு மலிக்காக்கா. அச்சோ கடைசியில் என்ன இப்படி நிருத்திட்டீங்க கவிதை யெழுதுவீங்கன்னுபார்த்தா திகில் கதையெல்லாம் எழுதுவீங்கலோ.//


    வாங்க சுஜிமா. என்ன செய்ய எல்லாத்தையும் கடந்துவரவேண்டியதிருக்குல்ல அப்ப எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனுமுல்ல அதான். திகிலா. இடியே விழுந்த மாதரியிருந்தது சம்பவம் நடந்த அன்று..காலம் கலைகாலமுன்னு சும்மா சொல்லலமா. நெசந்தேன்..

    ஆத்துல எப்படியிருக்கார்?
    வருகைக்கும் கருத்துக் சந்தோஷம்..

    பதிலளிநீக்கு
  17. // சுதா கூறியது...

    எத்தனை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்.பல திரியுது பெத்தவங்க்ண்ட பெயரில் உங்கட நாட்டுட்டமட்டுமல்ல எல்ல்லா நாட்டிலும் இந்த கொடுமையுண்டு..

    என்ன உலகத்தில் இருக்கிறோம்..//

    இதையெல்லாம் பார்த்துகிட்டு கண்டும் காணாம போன எப்படின்னு யாரைபார்த்தும் கேட்கமுடியாத சூழல். இது நவநாகரீக காலம் சுதா. அதான் இப்படியாம்..


    // சுதா கூறியது...

    எல்லாத்துக்கும் ஓடியாந்து கருத்துள் போடுறவங்க இதுக்குண்ட உடனே யாரும் வரலை பார்த்தீங்களா மலிக்காமேம், அதுதான் இந்த காலத்துண்ட நாகரீகம்..//

    இதுக்கு பதில் சொல்லத்தெரியலை சுதா. அவங்களுக்கு நேரமில்லையோ என்னவோ? வருகிறவங்க வரட்டும் கருத்து தருகிறவங்க தரட்டும்.இது விழிப்படையவேண்டுமென்றநோக்கத்தில் எழுதியுள்ளேன் அனைவரும் படித்தாலே போதும் சுதா.


    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க சந்தோஷம்..

    பதிலளிநீக்கு
  18. // RAZIN ABDUL RAHMAN கூறியது...

    ஸலாம் சகோ மலிக்கா...

    பதிவின் ஆரம்பத்தில் தங்களின் நீண்ட அறிவுறைத்தோரணை,ஏன் இதற்கு...என்ன காரணம் என யோசிக்க வைத்தது..ஆனால் அதை தொடர்ந்த சம்பவம்...

    மனதை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டது சகோ..பிஞ்சுகள் பாவம் குதரப்பட காத்திருக்கிறார்கள்...

    அடுத்து என்ன நடந்திருக்கும் என என்னால் ஓரளவு அவதானிக்க முடிகிறது...கஷ்டம்தான்...

    பெற்றோர்களின் சரியான பராமரிப்பின்மையும் இதற்கு ஒரு கர்ரணம்...நிறைய எழுதலாம்..ஹ்ம் எழுதனும்,எழுதுவதை நாமும் பழகனும்..அடுத்துவரும் தலைமுறையை எதிர்கொள்ள....

    அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கனும்...

    அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்..

    அன்புடன்
    ரஜின்..//
    அலைக்குமுஸ்ஸலாம் சகோ.
    பிஞ்சைகூட வெம்பவைக்கும் காலமாகிவிட்டது இது

    இறைவன் அனைவரையும் அனைவருடைய குழந்தைகலையும் பாதுகாக்கவேண்டிக்கொள்வதே சாலச்சிறந்தது. மிக்க நன்றி ராஜின்..

    பதிலளிநீக்கு
  19. //அந்நியன் 2 கூறியது...

    வசதி வாய்ப்புகளை குழந்தைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ள நீங்களும் ஒரு காரணம், அதே சமயம் குழந்தைகளையும் கவனியுங்கள் கண்காணியுங்கள் என்றேன். இந்த வயதில் அனைவரும் செய்யும் தவறுதான், எந்நேரமும் அவர்களை கண்காணித்துக்கொண்டேயிருக்கமுடியுமா மலிக்கா என்றார்...!!!

    மகணை பெற்ற பெற்றோருக்கு பிற்காலத்தில் மகன் சம்பாதித்து தருவானா என்ற கவலை.

    மகளை பெற்ற பெற்றோருக்கு மகளை எப்படி திருமணம் செய்து வைப்பது என்ற கவலை.

    குழந்தையை பெற்றுகொள்ள தகுதி இழந்த தம்பதியினருக்கு தாம் மலடா..என்ற கவலை.

    இப்படி ஒவ்வொரு தம்பதியினரும் ஒவ்வொன்றைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது திடிரென ஒருப் புதுக் கவலை பத்து மாதம் தவம் இருந்து பெற்ற தம் புதல்வி எவனோடு ஓடி விடுவாளோ என்று.

    வயதோ பதிநாளு அவளை தம் கட்டுப் பாட்டிர்க்குள் வைத்திராத அவளின் பெற்றோரே குற்றவாளி.

    ஒரு பெண்ணிற்க்கு உணர்ச்சியின் வயது ஐந்தோ கூட இருக்கலாம் அது அறியாமை காலம்.(மருத்துவ உண்ன்மை)

    பதிநாளு என்பது இவ்விசயத்தில் தம்மை பைத்தியமாக் கூட மாற்றிவிடும் இது பெண் விசயம் என்பதால் நான் அதிகமா எழுதியால் நல்லா இருக்காது.

    ஆகவே பெண்னைப் பெற்ற பெற்றோர்கள் அவளுக்கு பாதுகாப்பாக இருங்கள்.

    கண்ணை இமைகள் காப்பது போன்றும்..
    உடலை ஆடைகள் மறைப்பது போன்றும்..
    அவளின் நடவடிக்கையை அங்குலம் அங்குலமாக கவனியுங்கள்.

    தேவையற்ற வசதிகளை செய்து கொடுக்கும் எண்ணத்தை தவிருங்கள்.

    சிந்தனைப் பதிவு வாழ்த்துக்கள் சகோ.//

    சகோ அய்யூப் தங்களின் விளக்கம் மிக அருமை...

    இறைவனின் அனைவரையும் தீமைகளிருந்து காப்பாற்றி நல்லவைகளின் பக்கம் நம் முகங்களையும் மனங்களையும் திருப்புவானாக.

    பதிலளிநீக்கு
  20. தேவையான நேரத்தில் அவசியமான பதிவு .. புத்திசாலிகள்தான் ஆனாலும் முட்டாள்தனமான செயல்கள் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காத அசட்டுத்தனம் ... கண்ணாடி கோப்பைகளை கையாள்வது போலத்தான் அவர்களை கையாள வேண்டியிருக்கிறது. எச்சரிக்கையூட்டும் பதிவு

    பதிலளிநீக்கு
  21. // ஹேமா கூறியது...

    நாகரீக வளர்ச்சியால் கலாசார வீழ்ச்சிதான்.புத்தி சொல்லிப் பார்க்கலாம் !//

    புத்திகள் சொல்லிப்பார்கலாம் எடுபட்டால் நல்லது அனைவருக்கும் இல்லையென்றால் கெடுதல் அவர்களுக்கே.. நன்றி தோழி..

    //Rathnavel கூறியது...

    நல்ல பதிவு.
    பெற்றோர் பிள்ளைகளின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.
    நன்றி அம்மா.//

    வாங்க தங்களின் வருகைக்கும் நல்ல கருத்திற்க்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  22. //இதை இண்டியில் பார்த்துவிட்டு என்னடா இது இப்படியெழுதியுள்ளங்களேன்னு வந்தேன். வந்தாதானே தெரியுது. இபடி ஒரு சம்பவம் நடந்திருக்குன்னு. என்ன சொல்ல மேடம் காலம் கலிகாலம் ஆகிபோச்சி கம்பியுட்டர் உலகமாகிபோச்சி. நல்லவங்க யாரு கெட்ட்டவங்க யாருன்னே தெரியலை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.. பிள்ளைகளை கவனமாக வளர்கனும். எனக்கும் இரு பெண்குழந்தைகள்.ஆ நினைச்சாலே பயமாக இருக்கு.. மிக அருமையாக சொல்லியிருக்கீங்க. உங்கள் தளம் சூப்பர் மேடம் அழகான கலர். அதில் பொதியப்பட்ட கவிதைகள். காஞ்சி முரளிக்கு நன்றி. அவரின் கருத்தை இண்டிலியில் பார்த்துட்டுதான் இங்கே வந்தேன், தேங்ஸ்ங்க சார்.. இனி தொடர்ச்சியாக வருவேன்..//

    கவனமில்லையென்றால் கவலைபடவேண்டிய நிலைக்கு தள்ளாப்படுவோம் என்பது மட்டும் உறுதி..

    மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும்..மிகக் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  23. // அரசன் கூறியது...

    மிகச்சரியான பகிர்வு மேடம் ...//

    மிக்க நன்றி அரசன் ..

    பதிலளிநீக்கு
  24. // sabeer.abushahruk கூறியது...

    மதிப்பிற்குரிய தங்கைக்கு,

    தங்களின் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. தாங்கள் பாதிக்கப்பட்ட(?) பெற்றோருக்கு தெரிவித்ததுதான் சரியான தீர்வு.

    வாழ்க உங்கள் நல்ல மனசு.

    இப்படிப்பட்ட ஒரு அசந்தர்ப்ப தருணத்தில் மனதில் பட்டது கீழே!

    படுமுன் தெளிக!//

    அக்குழந்தையும் என்குழந்தையென நினைத்துதான்அவர்களிடம் தெரியப்படுத்தினேன்..

    மிக அருமையான கருத்தைக்கொண்ட ஒரு கவிதையை தாங்கள் உருவாக்க என் பதிவும் ஒரு காரணமென நினைக்கயில் சந்தோஷம்.

    //முடிவைத் துவக்கமென்று
    மயங்கும் பிஞ்சுகளே...
    பழுக்கும் பருவம்வரை
    பொறுத்தலே பகுத்தறிவு!//

    தொடக்கத்திலிருந்து முடிவுவரை சொல்லாடல் அருமை வாழ்த்துக்கள். சகோ..

    மிக்க நன்றி..

    மிகுந்த நன்றி சபீர்காக்கா

    பதிலளிநீக்கு
  25. // சிநேகிதி கூறியது...

    உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html////


    ரொம்ப ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி ஃபாயிஜா..

    பதிலளிநீக்கு
  26. // பாரதிக்குமார் கூறியது...

    தேவையான நேரத்தில் அவசியமான பதிவு .. புத்திசாலிகள்தான் ஆனாலும் முட்டாள்தனமான செயல்கள் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காத அசட்டுத்தனம் ... கண்ணாடி கோப்பைகளை கையாள்வது போலத்தான் அவர்களை கையாள வேண்டியிருக்கிறது. எச்சரிக்கையூட்டும் பதிவு..//

    உண்மைதான் கீழே விழுந்து உடைந்திடாதவறு பார்த்துக்கொள்வது நம்பொறுப்புதான்.. அருமையான கருத்துக்கு மிக்க நன்றி பாரதி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது