நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பச்சோந்தி பாசங்கள்..


இருதயம் தாண்டி
இறுக்கம் இறுக்கியிருக்கும்
இன்னலிலும் தேடிவந்து பங்குபோடும்
எதுவரை சென்றபோதும் கூட வரும்
என்ன ஆனாலும் கைகோத்திருப்பேன் உறுதிதரும்

அணைத்து நின்ற சொந்தங்கள்
அக்குவேராய் ஆணிவேராய்
அகழும் தருணம் –அவ்வேதனையை
தாங்காத நெஞ்சம்
தனிமையில் சிதைந்து வாடும்

வரவுகளின் எடை கொண்டே
வருகைகளின் எடை அதிகரிக்கும்
வரவில் கொஞ்சம் சரியல் கண்டால் –தூர
விலகியிருந்தே விசாரிக்கும்
விரும்பிய விழிகள் கூட
வெருப்பைக் கக்கும்
வேண்டாமிந்த உறவு என்றே
வெருண்டோடிப் போகும்

ஏற்ற இறக்கம் காணாத்துபோல
ஏளனம் பேசும்
ஏனென்று கேட்கக்கூட திராணியற்க்கும்
ஏறுமுகம் ஒன்றேதான்
ஏற்றமென்று சாடை பேசும்

ஒன்றுமில்லையென்று அறிந்தபின்னே
ஒன்றுகூடி எள்ளி நகையாடும்
ஒட்டுவுறவெல்லாம் சட்டென விலகியோடும்
உறவுகள்கூட மெல்லமெல்ல கலைந்துபோகும்
உதவிகள் செய்யக்கூட அஞ்சும் நெஞ்சம்
உபத்திரம் செய்வதற்கோ ஓடோடிவரும்

காசேதான் கடவுளென்று அடித்துபேசும்
கடன் கேட்டுவிட்டால்
கண்ணைச் லேசாய் சுணங்கிக் காட்டும்
பாசங்கள்கூட வேசம்போட்டு மோசம் செய்யும்
பச்சோந்திகளாக மாறி மாறி நடித்துக் காட்டும்

எச்சக் கையை உதறினால் தானே
கூடும் காக்காய் கூட்டம்
ஏதுமில்லையென்றால்
எவ்வளவு பெரிய மனிதரானாலும்-வெரும்
கூடாய் அலையும் உணர்வற்ற ஜடம்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

27 கருத்துகள்:

 1. வாங்க சகோ ரொம்ப நாளைக்கப்புறம் ஃபஸ்டா.. ஓகே லேட்டாவந்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்..

  பதிலளிநீக்கு
 2. அருமையான கருத்துக்களை தாங்கிய
  அழகான கவிதை சகோதரி
  நன்றி பகிர்ந்தமைக்கு

  பதிலளிநீக்கு
 3. கவிதை ரொம்ப நல்லாருக்கு.

  //ஒன்றுமில்லையென்று அறிந்தபின்னே
  ஒன்றுகூடி எள்ளி நகையாடும்
  ஒட்டுவுறவெல்லாம் சட்டென விலகியோடும்
  உறவுகள்கூட மெல்லமெல்ல கலைந்துபோகும்
  உதவிகள் செய்யக்கூட அஞ்சும் நெஞ்சம்
  உபத்திரம் செய்வதற்கோ ஓடோடிவரும்//

  யதார்த்த வரிகள். கவிதை அழகு.

  பதிலளிநீக்கு
 4. A.R.ராஜகோபாலன் கூறியது...

  அருமையான கருத்துக்களை தாங்கிய
  அழகான கவிதை சகோதரி
  நன்றி பகிர்ந்தமைக்கு.//

  வாங்க அண்ணா. தங்கள் அன்பான பகிர்தலுக்கு மிக்க சந்தோஷம்.. மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 5. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

  கவிதை ரொம்ப நல்லாருக்கு.

  //ஒன்றுமில்லையென்று அறிந்தபின்னே
  ஒன்றுகூடி எள்ளி நகையாடும்
  ஒட்டுவுறவெல்லாம் சட்டென விலகியோடும்
  உறவுகள்கூட மெல்லமெல்ல கலைந்துபோகும்
  உதவிகள் செய்யக்கூட அஞ்சும் நெஞ்சம்
  உபத்திரம் செய்வதற்கோ ஓடோடிவரும்//

  யதார்த்த வரிகள். கவிதை அழகு.//

  வாங்க ஷேக் என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் நல்லாயிருக்கீங்களா. சகோதரி நல்லாயிருக்கா..

  வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி ஷேக்..

  பதிலளிநீக்கு
 6. உலகின் இயல்பை
  மிக இயல்பாகச் சொல்லிப் போகும் பதிவு
  அருமையிலும் அருமை தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நற்சிந்தனை .. கூறும் கவிதை மிகச்சிறப்பு ... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. ”பச்சோந்திப் பாசங்கள்” தலையங்கமே கவிதை சொல்லிவிட்டது மல்லிக்கா !

  பதிலளிநீக்கு
 9. //அகழும் தருணம்//

  ம்ம்ம்.... தமிழினிமை...!!!

  பதிலளிநீக்கு
 10. ஆமாகக்கா. இதில் வரும் ஒவ்வொருவரியும் உண்மை. மனிதர்கள் பச்சோந்தியைவிட மோசமாகிவிட்டார்கள் எல்லாம் பணம் செய்யும் மாயம். இருந்தால் ஒட்டும் இல்லாவிட்டால் வெட்டும் இதுதான் மனிதகுணமாகிவிட்டது.

  மிக அழகாக வார்த்தைகள் சேர்த்திருக்கீங்கக்கா வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அருமயான உண்மை கவிதை

  தலைப்பு மிகச்சரியே

  பதிலளிநீக்கு
 12. //காசேதான் கடவுளென்று அடித்துபேசும்
  கடன் கேட்டுவிட்டால்
  கண்ணைச் லேசாய் சுணங்கிக் காட்டும்
  பாசங்கள்கூட வேசம்போட்டு மோசம் செய்யும்
  பச்சோந்திகளாக மாறி மாறி நடித்துக் காட்டும்//

  எதார்த்தம்க்கா...வாழ்த்துக்கள்.

  அருமையான வார்த்தைகளை அழகு தமிழில் செப்பிருக்கின்றிர்கள் காறி துப்பியும் இருக்கின்றிர்கள் பச்சோந்தி உறவுகளை.

  பதிலளிநீக்கு
 13. Ramani சொன்னது…

  உலகின் இயல்பை
  மிக இயல்பாகச் சொல்லிப் போகும் பதிவு
  அருமையிலும் அருமை தொடர வாழ்த்துக்கள்.//

  வாங்கய்யா அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி அய்யா..

  பதிலளிநீக்கு
 14. அரசன் கூறியது...

  நற்சிந்தனை .. கூறும் கவிதை மிகச்சிறப்பு ... வாழ்த்துக்கள்.//

  வாங்க அரசன் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி..மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 15. அஸ்ஸலாமு அலைக்கும்

  அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. ஹேமா கூறியது...

  ”பச்சோந்திப் பாசங்கள்” தலையங்கமே கவிதை சொல்லிவிட்டது மல்லிக்கா !//

  வாங்க தோழி தலைப்பு வைப்பதில் உங்களைவிட ஆள்வேண்டுமா..


  மிக்க நன்றி தோழி..

  பதிலளிநீக்கு
 17. சிசு கூறியது...

  //அகழும் தருணம்//

  ம்ம்ம்.... தமிழினிமை...!!!


  அருமை...//

  வாங்க சிசு பேரே வித்தியாசமாக இருக்கு.
  வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 18. அனுஜா கூறியது...

  ஆமாகக்கா. இதில் வரும் ஒவ்வொருவரியும் உண்மை. மனிதர்கள் பச்சோந்தியைவிட மோசமாகிவிட்டார்கள் எல்லாம் பணம் செய்யும் மாயம். இருந்தால் ஒட்டும் இல்லாவிட்டால் வெட்டும் இதுதான் மனிதகுணமாகிவிட்டது.

  மிக அழகாக வார்த்தைகள் சேர்த்திருக்கீங்கக்கா வாழ்த்துக்கள்.//

  உண்மைதான் அனு.
  அழகான கருத்துரைகள் மிக்க சந்தோஷம் அனுஜா மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 19. Jaleela Kamal கூறியது...

  அருமயான உண்மை கவிதை

  தலைப்பு மிகச்சரியே.//

  வாங்கக்கா. உண்மைச்சொன்னா ஒத்துப்பாங்களாக்கா. ஹா ஹா. மிக்க நன்றிக்கா..

  பதிலளிநீக்கு
 20. ////வரவுகளின் எடை கொண்டே
  வருகைகளின் எடை அதிகரிக்கும்
  வரவில் கொஞ்சம் சரியல் கண்டால் –தூர
  விலகியிருந்தே விசாரிக்கும்
  விரும்பிய விழிகள் கூட
  வெருப்பைக் கக்கும்
  வேண்டாமிந்த உறவு என்றே
  வெருண்டோடிப் போகும்////

  "என் பிரிய.... சொந்தங்களான துரோகிகளே...!" எனும் என் கவிதையில் 1986ல் நான் சொன்னதை... தங்கள் வரிகளில், தங்கள் மொழியில், தங்கள் பாணியில் சொல்லியிருக்கிருறீர்கள்...!

  இப்பவாவது உணர்ந்தீர்களே...!

  நீங்கள் டூ லேட்....!
  என் நினைவு சரியெனில்... சென்ற வருடம் சொந்தங்களை பற்றி நான் சொன்னபோது மறுத்தீர்கள்... இப்போது கவிதையாய் வடித்துள்ளீர்கள்...!

  வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 21. கலக்கிடீங்க சகோ
  எடுத்துரைத்த வரிகளில் எத்தனை எத்ததனை உண்மைகள்
  பச்சோந்தி பாசங்களின் உருவங்களை படம் பிடித்து காட்டுகிறது
  உங்களின் அற்புத வரிகள்

  பதிலளிநீக்கு
 22. HI..malikka..un kavithai ellame nalla iruku, athuvum mukkiyama intha kavithai PACHONTHI PASANGAL. ROMBA NALLA IRUKU..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது