நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பேட்ட பேட்ட முத்தான பேட்டை..


சொந்த ஊரைப்பற்றி எழுதனுமுன்னு  ஸாதிகாக்காவின் அன்புக்கட்டளை. அவர்களின் கட்டளைகிணங்கி இங்கு எங்க ஊரைப்பற்றிய சில தகவல்கள் உங்களுடன் பகிரப்போகிறேன்.

எங்க ஊரு நல்ல ஊரு வந்து பாத்து நீங்க சொல்லுங்க!
 
சொந்த ஊரைப்பற்றி எழுதனும்முன்னா சொல்லவா வேணும்.[இருந்தாலும் கடகடன்னு ஆடுது விரல்கள். எப்படி எழுதபோறேனோ! ஏனா ரொம்ப காலமாச்சில ஊர்லயே தங்கி. இருந்தாலும் நம்ம ஊரப்பத்தி பெருமையா எழுதனுமுல்ல.. ஓக்கே ரெடி ஸ்டாட்.. 

அகிலத்தை படைத்து பாதுக்காக்கும் இறைவனே!
எங்கள் ஊரையும் அதனுள் வாழும் மக்களையும் நேரானபாதையில் வழிநடத்திச்செய்வாயாக! தீயவைகளின் நின்றும் காத்தருள்புரிவாயாக!

முத்தான பேட்டை அதாங்க முத்துப்பேட்டை அதில்தான் பிறந்தது. வளர்ந்தது. படித்தது [ஆமா எம் பி ஏ. படிச்சாக ஏன் சும்மா எடுத்ததும் அறுக்காம அடுத்தத எழுது] வாக்கப்பட்டது எல்லாமே. ஆனா என் சொந்த ஊரு அதிராம்பட்டினம். எப்படிங்கிறீங்களா? அதுதானே என் தந்தையின் ஊரு, ஆக இரு ஊருக்கு சொந்தக்காரிதான் இந்த அன்புக்காரி.
என்ன இருந்தாலும் வாக்கப்பட்ட ஊருதானே பொம்மணாட்டிகளுக்கு சொந்த ஊராயிடுது. அதசொல்லுறதுதானே பெருமையிலும் பெருமை.அந்த வகையில் என் சொந்த ஊராகிப்போன முத்துப்பேட்டைக்கு உள்ளே செல்வோமா வாருங்கள்.வாருங்கள்.
 உங்களை அன்புடன் வரவேற்கிறது முத்துப்பேட்டை ரயில் நிலையம்.

முத்துப்பேட்டை பெயரிலேயே முத்தை வைத்துள்ளோம் பாருங்க அப்படின்னா எவ்வளவு முத்தானவங்க.[யாருப்பா அது கட்டையோடு வாரது சரி சரி]முன்னூறு ஆண்டுகளுக்கு  முன்பு முன்னோர்களால், வைக்கப்பட்ட முதல்  முழுபெயர்தான் இந்த முத்துப்பேட்டை.
தமிழகத்தின்   கீழ்த்திசையில் நீண்டு,பரந்து,விரிந்து நீரினால் நிறைந்து  சூழ்ந்திருக்கும் வங்கக்கடலை  ஒட்டி வடக்கே சுமார் 3 கிலோமீட்டர்  தூரத்தில் இருக்கின்ற "பேட்டை" எனும் இடம்தான் முத்துபேட்டையின் துவக்க கால ஊராகும்,
கடலில் மீன் பிடிப்பது,முத்துகுளிப்பது பறவைகளை வேட்டையாடுவது,அவற்றை விற்பது,வாங்குவது போன்ற செயல்கள் நடந்து வந்ததால் அது பேட்டையாக இருந்தது.வணிக தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த இடம்,தங்கி வாழ்வதற்கும் ஏற்ற வகையில் மாறியமைக்கப்பட்டது.பெரும்பாலும் முஸ்லிம்கள் வசிக்க ஆரம்பித்தர்கள்,
இந்த மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் பரவலாக வாழும் ஊர்களுள் ஒன்றாக முத்துபேட்டை மாறி இருந்தாலும்,அந்த கால கட்டத்தில் இறைவனை வணங்குவதற்காக பேட்டையில் ஒரு பள்ளிவாசல் கூரை குடிசையாக கட்டப்பட்டது,அதுவே முத்துபேட்டையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும்,அப்பகுதிக்கு துறவி காடு என்று பெயர் ஏற்பட்டு இப்பொழுது "துறைகாடு" என்று மாறிவிட்டது. [தகவ்லுக்கு நன்றி முத்துப்பேட்டை மக்கள்.காம்]


                                         இது அரபு சாஹிப் பள்ளி[எங்க தெரு பள்ளி]
தற்போதைய முத்துபேட்டை; 
முத்துபேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு "தேர்வுநிலை பேரூராட்சி" ஆகும், இது சென்னையில் இருந்து 360 கி.மி தொலைவில் உள்ளது,முத்துப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும்,இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாத்துக்கோங்க நாங்கலெல்லாம் எவ்வளவு அறிவாளிங்கன்னு..  

முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் சங்கத்து பள்ளிக்கூடமாகும்[நாம படிச்சது மதியலங்காரம் பள்ளிக்கூடம். பார்த்திலாப்பு மதியைக்கூட நாங்க அலங்காரமாக்கி வைத்துள்ளோம் என்று].

இங்கு மொத்தம் 13 பள்ளி வாசல்களும், 4 மதரசாக்களும் உள்ளன. 15 மருத்துவமனைகள், 61 தெருக்கள், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், சார்பதிவுகம், பேருந்து நிலையம், காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பேருந்து நிலையம், இரயில்வே ஸ்டேசன், வார சந்தை, அரசு பொது நூலகம், இன்டெர்னெட் மையங்கள், தொலை தொடர்பு அலுவலகம் உள்ளன.[தகவலுக்கு நன்றி விக்கிப்பீடியா]
                                           தர்கா
சுமார் எழுநூறு வருடங்கள் பழமை வாய்ந்த தர்காவும் உள்ளது அனைத்து சமுதாய மக்களும் வருகை தந்தவண்ணம் உள்ளார்கள். இங்கு கந்தூரி சந்தனக்கூட மிகபிரபலம்.[அறியாமைக் காலத்தில் செய்த தவறை அறிந்தகாலத்தில் திருத்திக்கொள்ள இறைவன் அருளவேண்டும்..] 

முத்துவின் சிறப்புகள் பல அதில் சில 

              அலையாத்திக்காடுகள் நிறைந்த லகூன்

இங்கு கோரையாறும்,பாமனியாறும் ஓடுகின்றன, இவ்விரண்டு ஆறுகளும் கடலில் கலகின்ற இடத்தில் லகூன் உள்ளது.தமிழகத்தின் மிகப்பெரிய அலையாத்தி காடு முத்துபேட்டையில் தான்  உள்ளது, இங்கு அறிய வகை மீன்களும், எறால் வகைகளும் கிடைகின்றன,மேலும் அலையாத்தி காடுகளில் மான்,நரி.காடை . போன்ற உயிர் இனங்கள் வாழ்கின்றன:வெளிநாட்டு பறவைகளும் வந்துபோகும் சீசனில்.
                   அந்தமானைப்பாருங்கள் அழகு
 
முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளதால் தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது. இங்கு கழுதை முள்ளி, நரிக்கண்டல், வெண்கடல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை, சுரப்புன்னை, குட்டை சுரப்புன்னை, மலட்டு சுரப்புன்னை, சோமுந்திரி, சோனரேசியா எபிடெலா உள்ளிட்ட மரங்கள் வளர்கின்றன. சாம்பல் நிறத்தில் இருக்கும் இம்மரங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டவை.  வெளியூர்களிருந்தும். வெளிமாநிலங்களிருந்தும் லகூனுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். 

படகுகளில். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்வதும். அங்குசென்று சமைத்து உண்பதும் ஒரு அலாதி இன்பம்.[இப்ப சமைக்கவெல்லாம் அனுமதியில்லை என்கிறார்கள். நாங்கள் ஊரிலிருந்தபோது லகூன் சென்று அப்பவே மீன்பிடித்து காற்று எரியவிடாத அடுப்பதை ஊதி ஊதி எரித்து சமைத்துண்டு. சேரில் கால் அமுக்கி விளையாடி. இக்கரையில் நின்றுகொண்டு அக்கரைக்கு கைகாட்டி அதோ தெரியுதுபார் கொழும்பு  உனக்கு எம்புட்டு கொழுப்பு என்றுக்கூறி  கூத்தாடி மகிழ்ந்ததெல்லாம் ஹூம் அக்காலமெல்லாம் திரும்ப எப்ப கிடைக்குமோ!]

 
இங்கு பள்ளிக்கூடங்கள் பல இருந்தாலும். பெண்களுக்கென ஹாஸ்டல் வசதியோடு தனி பள்ளிக்கூடம் ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திரு முஸ்தபா தமீம். அவர்களால் நிறுவப்பட்டு அதனால் அனைத்து பெண்குழந்தைகளும் பயனடையும் விதமாக, தரமான கல்வியோடு சிறப்பாக நடைப்பெற்று வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.  வெளியூர்களிருந்து இங்குவந்து தங்கிப்படிக்கும் கூட்டமும் அதிகரித்து வருகிறது. அதனால் வாடகை வீடுகளும் நிறைய கட்டப்பட்டு வருகிறது.

முத்துவின் சிறப்பம்சத்தில் ஒன்று திரையறங்கு இருந்தும் இஸ்லாமிய பெண்கள் யாரும் அங்கு போகாததுதான். ஆகாத ஒன்றுக்கு அனுமதிதராதது வரவேற்கத்தக்க ஒன்று.

முத்துவில் இன்னும் சில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்து கொண்டிருப்பது பெருமைமிகுந்த விஷயம்.
முத்துப்பேட்டையை சேர்ந்த அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்கள் வேலூர் தொகுதியில் எம் பி யாக இருப்பதோடு நல்லவிசயங்கள்பல செய்துகொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

பெரும்பாலான திருமணங்கள் இங்கு மதரசாக்களில் நடைபெருவது வழக்கம்.இங்கு நடக்கும் திருமண வைபோகங்களில் ஒருபெரிய தட்டில்[சகன்] நான்குபேர் அமர்ந்து [ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் ]சாப்பிட்டும் வழக்கம் உள்ளது. இதில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுகள் களையப்பட்டு நல்லுறவுக்கு வழிவகுப்பதுபோல் அமைந்திருப்பது போற்றதக்கது.

திருமணத்திற்க்கு மொய்யுண்டோ இல்லையோ [இப்பவெல்லாம் குறைஞ்சிபோச்சின்னு பேசிக்கிறாங்க] மணமுடித்த வீடுகளுக்கு செல்லும்போது ஒரு பூ பந்தாவது வாங்கிச்செல்வது இவ்வூரின் வழக்கம்.

இங்குள்ள இஸ்லாமிய பெண்கள் அனைவரும் துப்பட்டி என்னும் வெள்ளை பர்தா அணிவதுதான் வழக்கம் 9.அல்லது 10 வயதில் வயதுக்கு வந்த பெண்பிள்ளையாக இருந்தாலும் வெளியில் வரும்போது கட்டாயம் புர்காவோ! பர்தாவோ! இல்லாமல் வெளியே வராது. அக்கம் பக்கம் ஆனாலும் பள்ளிக்கூடம் செல்கையிலும் அதை அணிந்தபடியேதான் சென்றுவரும்.

இங்கு பிரதான வாணிபம்,மீன்பிடித்தலும்.தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்கு தேங்காய் மற்றும் மீன் இறால் நண்டு. ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சின்ன சின்ன துளிகள்.
பேட்டையில் இருக்கும் தாமரைகுளம் ரசிக்கதக்கவையாக இருக்கும் [தற்போது எப்படியிருக்குன்னு தெரியவில்லை] அதன் பக்கத்தில் பெரிய கோயில் மற்றும் கள்ளுக்கடை. கள்ளுக்கடையில் மீன்வாங்க போயிருக்கேன் சின்னவயசுல.. என்னது கள்ளுக்கடையில் மீனா அப்படின்னு அதர்ச்சியாயிருக்கா. அட அதுக்குபெயர் கள்ளுக்கடையின்னு சொல்லுவாங்க. அங்கே கல்லு இருக்கும், கள்ளுயிருக்கான்னு தெரியாதுங்கோ.. 

பேட்டை ரோட்டில் உள்ள மாதாகோவிலில் உள்ள கடிகாரம் மிகவும் பெரியதாம். நான் பார்த்ததில்லை. சென்றமுறை ஊருக்கு சென்றிருந்தபோது மின்சாரம் அணைந்திருந்த இரவு வேளையில் மிக அருகில் கேட்பதுபோல் கடிகார மணியோசை கேட்டது எங்கிருந்து என்றேன் மாதாகோவிலிருந்து என்றார்கள்..
 மாலைச்சூரியன் மறையும் தருணம் பேட்டை ரோடு ஜொலி ஜொலிக்கிறது.
ஆங்காங்கே குளங்களும் தென்னைமரங்களும் பார்ப்பதற்கே ரம்மியமானதாக காட்சியளிக்கப்பட்ட இடங்களெல்லாம் செங்கலும் சிமிண்ட்டும் நிரப்பிய கட்டிடங்களாக காட்சிதந்து சற்றே வாட்டத்தை தருகின்றன.தோப்புகளும் வீடாகிபோக சந்து சந்தாக நிறைய தெருக்கள். அதற்குள் ஓடும் ஆட்டோக்கள்.ஓடும் ஆட்டோக்கள் சுவற்றையோ! வேலியையோ சற்றே கிடுகிடுக்கச் செய்தால் சடசடவென கொட்டும் வசைபாடுகள் ஹா ஹா .சுவாரஸ்யம்

நிறைய வீடுகளுக்கு பட்டபெயர் உண்டு.அப்பெயர்களை சொல்லலாம்தான் வேணாங்கோ ஏங்கப்பு நாமா  வம்பில் வலிய சென்று மாட்டிப்பானே! அந்தகாலத்தில் என்னஎன்ன தொழில் செய்தாங்களோ அல்லது ஏதாவது ஒரு வகையில் இப்பெயர்கள் அவர்கள் வீடுகளுக்கு ஒட்டிக்கொண்டது..

பால்முதல் காய்கறி.மீன்.வரை சேலை பாய் முதல் வார்வல்[விளக்கமாரு] பாத்திரம்வரை அவசியமான பொருள்கள் அத்தனையும் வீட்டுவாசலுக்கே வந்துவிடும் சவுகரியங்கள். இருந்தாலும் கடைகளுக்கும் போய் வாங்கும் பழக்கம் போகுமா! 

இங்கு மருத்துவமனைகள் இருந்தாலும். பலநேரங்களில் வியாதிகளின் தன்மைபொருத்து பக்கத்திலிருக்கும் பட்டுக்கோட்டை. தஞ்சாவூர் அல்லது திருத்துரைப்பூண்டிக்குதான் மக்கள் அதிகம் செல்வார்கள்.

எங்க ஊர் சாப்பாட்டில் அதிகம் தேங்காயும். எண்ணையும். புளியும். சேர்க்கப்படும் அதிலும் விசேச சாப்பாட்டுகளுக்கு ருசி அதிகம்..எங்க ஊர் சமையக்காரங்கதான் வெளியூர்களின் விசேச சாப்பாட்டுகளுக்கு அழைக்கப்படுங்கண்ணா பாத்துக்கோங்க அதன் மகிமையை..

                                             இறால் வாடா இது நாங்க செய்ததுங்கோ

அதேபோல் வடை. இறால்வாடா. சமூசா. பஜ்ஜி. அனைத்திற்க்கும் பஞ்சமேயில்லை.  குட்டியார்பள்ளி அருகில் செம டேஸ்டாக மொரு மொருன்னு. 1 ரூபாய்க்கு குட்டி மெதுவடை கிடைக்கும். சங்கத்துப்பள்ளீகூட வாசலில் நாவல்பழம் இழந்தைபழம் உப்பு மாங்காய் பனங்கிழங்கு. ஆட்டுக்கால் சூப். சேமியாக்கஞ்சின்னு ஏகப்பட்ட அயிட்டங்கள் கிடைக்கும்.

வெளியூர் மக்களும் இங்குவந்து குடியேறி பிழைப்பு நடத்தியயவண்ணமாக உள்ளார்கள். இங்கிருப்போர்களும் குழந்தைகளின் படிப்புகாக வெளியூர்களுக்கும் சென்றுகொண்டுமிருக்கிறார்கள். 
குளங்களெல்லாம் வீடுகளாகி வயல்களெல்லாம் ரோடுகளாகி காடுகளெல்லாம் மேடுகளாகி காட்சிதருவது சங்கடமாக இருந்தாலும். ஒருவாரு எதையோ சாதித்து நிற்கிறது. 
 
 இது நம்ம எம் ஜி ஆர் தாத்தா எங்க ஊருக்கு வந்து திறந்துவைத்த தண்ணீர் தொட்டி.


ஏற்ற இறக்கங்கள் எங்கும் உண்டு அது இங்கும் உண்டு.  என்பதைப்போல் பலபிரிவினைகள்.பலவித மக்கள். அப்பப்ப வந்துபோகும் ம[ன]தக்கலவரங்கள்.அதனால் ஏற்படும் சிலபல விபத்துகள். பலநேரங்களில் காவல்துறையால் கண்காணித்து காவல்காக்கப்படும் ஊரும்.[அதான் முதலிலேயே சொன்னேனே முத்துன்னு] அதனைச்சார்ந்த  மக்களும்.என்று சுழன்றுகொண்டிருக்கிறது சிப்பியைவிட்டு வெளியேறிய முத்தாய். எதுவென்றபோதும் எதார்த்த வாழ்க்கையோடு ஒன்றி கோத்தெடுக்கபட்ட முத்தாக ஜொலித்துக் கொண்டிருக்கும் முத்தான பேட்டை எங்க முத்துப்பேட்டை..
இன்னும் ஏகப்பட்டது இருக்கு [எனக்கும் தெரியனுமுல்ல] படிப்போர்களில் நலன்கருதி  சுருக்கிவிட்டேன் [என்னது இது சுருக்கமா அடி ஆத்தீஈஇ] ஏதோ எனக்கு தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். யக்கோவ் ஸாதிக்காக்கோவ்  பாவம் இந்த பச்சப்புள்ளய நம்பி ஒரு பதிவ தந்திய, தத்துபித்துன்னு ஏதேதோ உளறி வச்சிக்கிறது இந்தபுள்ள .கொஞ்சம் வந்து பாத்து நீங்க எதிர்பார்த்ததுயிருக்கோ இல்லையோ சொல்லிட்டு போங்கக்காஆஆஆஅ..


இப்பதிவை எழுத அழைத்த அன்பு ஸாதிகா அக்கவிற்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.நம்ம ஊரைப்பத்தி நாமளே பெருமையா பேசுறதவிட, மத்தவா பேசுறது இன்னும் சிறப்பாக அமையும். அப்படி சிறப்பாக பேசப்படும் ஊராக எங்க ஊரை ஆக்க  எல்லாம் வல்ல இறைவன் நல்லருள்புரிவானாக..

நாமளும் அழைக்கனுமில்ல.

நம்ம A R ராஜகோபலன் அண்ணா
நம்ம சே.குமார் தம்பி
நம் சகோ புதுவரவு [Ramvi] ராம்வி.


வாங்க வாங்க வந்து உங்க ஊரைப்பத்தி விளாவரியாக சொல்ல, செல்லமாக அழைக்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

46 கருத்துகள்:

 1. எங்கக்கா முத்துப்பேட்டை பற்றி நிறைய விஷயங்கள் எழுதியிருக்காங்கன்னு படிச்சுக்கிட்டு வந்தா கடைசியில நம்மளையும் மாட்டி விட்டுட்டிங்களே... ரொம்ப நல்லா படங்களுடன் அழகா எழுதியிருக்கீங்க... ஆமா எம்.ஜி.ஆர். இப்ப தாத்தா ஆயிட்டாரா?

  பதிலளிநீக்கு
 2. மலிக்கா, ரொம்ப நன்றக சுவார்சியமாக உங்க ஊரை பற்றி எழுதியிருக்கிரீர்கள்...வாழ்த்துக்கள்..

  மலிக்கா நான் ஏற்கனவே அன்பு சகோதரி angelin தொடர் பதிவிர்க்கு அழைத்ததால் “எங்க ஊர்” பதிவில் எங்க ஊரை பற்றி எழுதி இருக்கிறேன்.அதனால் இன்னொரு சந்தர்பத்தில் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்..நீங்க என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது பற்றி நன்றி...

  பதிலளிநீக்கு
 3. சே.குமார் கூறியது...

  எங்கக்கா முத்துப்பேட்டை பற்றி நிறைய விஷயங்கள் எழுதியிருக்காங்கன்னு படிச்சுக்கிட்டு வந்தா கடைசியில நம்மளையும் மாட்டி விட்டுட்டிங்களே... ரொம்ப நல்லா படங்களுடன் அழகா எழுதியிருக்கீங்க... ஆமா எம்.ஜி.ஆர். இப்ப தாத்தா ஆயிட்டாரா?//

  வாங்க குமார் [மாட்டிக்கிட்டீங்களா]எழுதுங்க உங்க ஊரின் சுவாரஸ்யங்களை.

  எம் ஜி ஆர் இப்ப இல்ல எப்பவும் தாத்தா தான் எனக்கு.. ஹா ஹா ஹா

  மிக்க நன்றி குமார் எழுதி சமாய்ங்க..

  பதிலளிநீக்கு
 4. எங்க பக்கத்து ஊரை நெம்ப டீட்டெய்லா தெரிஞ்சிக்க வச்சிட்டீங்க

  பதிலளிநீக்கு
 5. மதி நிறைந்த சகோதரி வணக்கம்
  நீங்க நம்ம பகுதியை சேர்ந்தவங்க என என்னும் போது மனம் நிறைய மகிழ்ச்சி
  முத்துபேட்டைக்கு சில முறை வந்திருந்தாலும் எனக்கு தெரியாதா இரண்டு விஷயங்கள் ஒன்று ரயில் நிலையம் , மற்றொன்று பாமணி ஆறு கலக்குமிடம். முத்து பேட்டையை பற்றி உங்களின் முத்தான எழுத்துக்களில் சத்தான செய்திகளை பகிர்ந்த விதம் அருமை.

  என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி , ஆனாலும்
  எனக்கு முன்பே என் நண்பன் RVS (தீராத விளையாட்டு பிள்ளை ) மன்னார்குடி டேஸ் என்று தனிப் பதிவே போட்டு அவனின் சொல்லாட்சியில் பிளந்து கட்டியிருக்கிறான்.

  ஆனாலும் உங்களின் அன்பு கட்டளையை ஏற்று வெகு விரைவில் என் மண்ணின் பெருமையை மன்னையின் அழகை சுமாராகவாவது எழுத முயற்சிக்கிறேன் , நன்றி

  பதிலளிநீக்கு
 6. உங்ககிட்ட பேசின பிறகு, உங்க ஊர் ‘பேச்சு வழக்கு’ இன்னும் என் காதிலயே பேச்சு வழக்கையும் உங்க ஊர்ப் பெருமைகளில் ஒன்றாகவே நினைக்கிறேன் மலிக்கா.

  பதிலளிநீக்கு
 7. உங்க ஊரு நல்ல ஊரு.சொந்த ஊர் எல்லோருக்கும் நல்ல ஊர்தான் . பிறந்த மண்ணும் பெற்ற தாயும் உயர்ந்தவர்களே! மண்ணின் மணம் வீச நினைக்கும் பொழுதெல்லாம் மனம் பொங்கும்.
  எங்கள் ஊர் நீடூர் - நெய்வாசல் - Nidur - நெய்வாசல்
  இதையும் கொஞ்சம் பாருங்களேன்
  http://nidurseasons.blogspot.com/2010/07/blog-post_7298.html

  பதிலளிநீக்கு
 8. பதிவு நன்றாக சுவாரஸ்யமாக கிராமீய மணத்துடன் நகைச்சுவையும் கலந்ததாக உள்ளது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. அட நல்ல கட்டுரைதானுங்க..
  என்னோட வலைப்பக்கமும் கொஞ்சம் வந்திட்டு போங்க பாஸ்...

  பதிலளிநீக்கு
 10. என் பூர்விகம் மலையாளம். நான் சென்னையுள்ளென்.பிறந்துவளர்ந்தன்.
  உங்கள் பக்கம் அடிக்கடிவருவதில் தமிழிமேல் அதிகம் ஸ்நேகம் வந்தது.

  நன்றாக எழுதுகிறீர்கள்.உங்கள் ஊரை அறிந்ததில் மகிழ்ச்சி. நானும் தர்காவுக்கு அடிக்கடி வந்துள்ளேன் அச்சன்கூட.

  இன்னும் நிரம்ப்ப எழுதுங்கள்..

  பதிலளிநீக்கு
 11. அடடா நீங்க நம்ம தூரத்து ஊரா நான் சிவகங்கை.
  உங்க ஊரை அழகாக வர்ணித்துள்ளீர்கள்.
  நீங்க எழுதியதை படிததுவுடன் லகூனுக்கு வரனும்போல் உள்ளது. அது சரி அங்கே மான் இருக்கே அதை நாங்க லகூன் பார்த்துவிட்டு வரும்போது அபேச் பண்ணிட்டுவந்திடலாமா?

  அருமையாக எழுதியுள்ளீர்கள். அப்படியே அந்த வாடா தட்டை இங்கே அனுப்பிவைங்க. எங்கபக்கமெல்லாம் இதெல்லாம் கிடைக்காதுங்க. ப்லீஸ்.

  சிநேகமுடன் சிவா..

  பதிலளிநீக்கு
 12. RAMVI கூறியது...

  மலிக்கா, ரொம்ப நன்றக சுவார்சியமாக உங்க ஊரை பற்றி எழுதியிருக்கிரீர்கள்...வாழ்த்துக்கள்..

  மலிக்கா நான் ஏற்கனவே அன்பு சகோதரி angelin தொடர் பதிவிர்க்கு அழைத்ததால் “எங்க ஊர்” பதிவில் எங்க ஊரை பற்றி எழுதி இருக்கிறேன்.அதனால் இன்னொரு சந்தர்பத்தில் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்..நீங்க என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது பற்றி நன்றி.//

  ஓ அப்படியா!!! எழுதியாச்சா. நான் உங்க பக்கம் புதுசுல்ல அதான் பார்க்கவில்லை. இனிவந்துபார்கிறேன். ரொம்பசந்தோஷம் சகோ.தங்களின் வருகைக்கும் அன்பான பதிலுக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 13. நட்புடன் ஜமால் கூறியது...

  எங்க பக்கத்து ஊரை நெம்ப டீட்டெய்லா தெரிஞ்சிக்க வச்சிட்டீங்க//

  வாங்க காக்கா. ஓ இப்பதான் டீட்டியலே தெரிஞ்சிக்கிட்டியலா. இத நாங்க நம்பனும். சரி சரி நம்பிட்டேன்.

  நெம்ப நாளைக்கப்புறம் வந்துகிறீங்க. எப்படி இருக்கீங்க து பாய் என்ன சொல்லுது..

  ரொம்ப மகிழ்ச்சி காக்கா மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 14. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சகோதரி
  ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க..

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. உங்க ஊரைப்பத்தின விவரங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்குதுங்க.. எம்.ஜி.ஆர் உங்க தாத்தாவா!! சொல்லவேயில்ல ;-)

  பதிலளிநீக்கு
 16. மிக அருமை மலிக்கா.. முத்துப் பேட்டைக்கு ஒரு சூப்பர் விசிட். அப்புறம் அந்த வடையை கூரியர் பண்ண முடியுமா..:)))

  பதிலளிநீக்கு
 17. உங்கள் பதிவு நல்லாயிருக்கு.
  விளக்கிய விதமும் சுப்பர்.....
  அற்புதம்.
  வாழ்த்துக்கள்..........

  நண்பர்களே நம்ம பக்கம் !!!!!1மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!! நீங்களும் யோசித்து பாருங்களேன்

  பதிலளிநீக்கு
 18. நல்ல பதிவு.
  உங்கள் ஊரைப் பற்றி அனைத்து விபரங்களையும் அருமையாக படத்துடன் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. ஊரின் மீது அளவு கடந்த பாசம் இருந்தால் ஒழிய
  இவ்வளவு ஈடுபாடோடு நேர்த்தியோடு எழுதுவது கடினம்
  மிகச் சிறந்த பதிவு படங்களும் அருமை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. அன்புள்ள சகோதரிக்கு.

  நலமா?

  இப்பதான் விடுமுறைலிருந்து திரும்பினேன். மீண்டும் அதிரைக்கு போக தூண்டிகிறது இந்த பதிவு.

  வாழ்த்துக்கள்.

  சபீர் காக்கா எழுதிய அதிரை புளியமரம் பற்றிய பதிவை இங்கு சென்று பாருங்கள்.

  http://adirainirubar.blogspot.com/2011/06/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 21. காக்கைக்கு தன் குஞ்சு.....!
  பொன் குஞ்சல்லவோ...!

  அதைப்போலத்தான்

  மலிக்காவுக்கு
  முத்துப்பேட்டையும்..........!

  இந்த பதிவும்...!
  அந்த ஊரும்.......!
  நல்லாத்தான் இருக்கு......!

  ஆனால்....

  முத்துப்பேட்டையில் வாழும் மனிதர்கள்...!
  குறிப்பாய்...
  மலிக்காவின் அன்னை, சகோதரி, சகோதரர்...
  என் நண்பர் முத்துப்பேட்டை கார்த்திக்...
  they are very good peoples....!

  "மறக்கமுடியாதவர்கள்"......!

  பதிலளிநீக்கு
 22. A.R.ராஜகோபாலன்..//

  அண்ணாதங்களின் அன்பான அழகான கருத்துரைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ஓ நீங்க மன்னையா.என் சொந்தங்களும் அங்குண்டு தற்போது உங்களையும் சேர்த்து..
  அப்படியா அண்ணா நண்பதர்தானே எழுதினார். நீங்களும் எழுதுங்கள் நம்ம ம[ன்னை]ண்ணைப்பற்றி. சுவாரஸ்மாக. மிக்க நன்றிண்ணா.

  பதிலளிநீக்கு
 23. ஹுஸைனம்மா கூறியது...

  உங்ககிட்ட பேசின பிறகு, உங்க ஊர் ‘பேச்சு வழக்கு’ இன்னும் என் காதிலயே பேச்சு வழக்கையும் உங்க ஊர்ப் பெருமைகளில் ஒன்றாகவே நினைக்கிறேன் மலிக்கா.//

  மெய்யாலுமா ஹுசைனம்மா. என் பேச்சுவழக்கு அவ்வளவா நல்லாயிருந்தது.அப்படின்னா இனி எங்க ஊர் பேச்சுவழக்கும் சிறபிலும் சிறப்புன்னு போட்டுக்கலாம். நன்றியோ நன்றி ஹுசைனம்மா.

  உங்க ஊர் பாஷை எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்கும்.ஹுசைனம்மா.. ரொம்ப சந்தோஷம். இப்படி ஒரு அழகான கருத்துக்கு..

  பதிலளிநீக்கு
 24. nidurali கூறியது...//

  சொந்த ஊர் எல்லோருக்கும் நல்ல ஊர்தான் . பிறந்த மண்ணும் பெற்ற தாயும் உயர்ந்தவர்களே! //

  உண்மைதான் தந்தையே.
  எவ்வூரு சென்றாலும் அது நம்மூருக்கீடாகுமா..

  நீடூர் பள்ளிகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. ஊருக்கு வந்தால் ஒருதடவை நீடூர் பக்கம் வர ஆசையாக உள்ளது. இன்ஷா அல்லாஹ் ஒருநாள் வருவோம்..அப்படியே தந்தை வீட்டுக்கும் வரலாமா..

  ரொம்ப நன்றி தந்தை அவர்களே..

  பதிலளிநீக்கு
 25. //வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  பதிவு நன்றாக சுவாரஸ்யமாக கிராமீய மணத்துடன் நகைச்சுவையும் கலந்ததாக உள்ளது. பாராட்டுக்கள்.//

  பராட்டுகளுக்கு மிக்க நன்றி அய்யா..


  // குணசேகரன்... கூறியது...

  அட நல்ல கட்டுரைதானுங்க..
  என்னோட வலைப்பக்கமும் கொஞ்சம் வந்திட்டு போங்க பாஸ்..//

  அட அப்படியா. வந்துகிட்டுதான் இருக்கேன் குணா. அதுசரி பாஸ் அப்படின்னா யாருங்க பாஸ்.. ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 26. ஷாஜி.. கூறியது...

  என் பூர்விகம் மலையாளம். நான் சென்னையுள்ளென்.பிறந்துவளர்ந்தன்.
  உங்கள் பக்கம் அடிக்கடிவருவதில் தமிழிமேல் அதிகம் ஸ்நேகம் வந்தது.

  நன்றாக எழுதுகிறீர்கள்.உங்கள் ஊரை அறிந்ததில் மகிழ்ச்சி. நானும் தர்காவுக்கு அடிக்கடி வந்துள்ளேன் அச்சன்கூட.

  இன்னும் நிரம்ப்ப எழுதுங்கள்..//

  அட ஆச்சர்யமாக இருக்கே ஷாஜி. நல்லா தமிழ் எழுதுறீங்க. சந்தோஷமாக இருக்கிறது.. என் எழுத்தை மலையாளத்துமக்களும் படிக்கும்போது.

  இப்பவும் சென்னையிலேயா இருக்கீங்க இல்லை துபையிலா?
  ஏன் கேட்கிறேன்னா ஷாஜின்னு ஒருமெய்ல் வந்ததே அது நீங்களா..

  ரொம்ப நன்றிம்மா என் தளம்தேடிவந்து வந்து படித்து கருதிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எந்நாளும்..

  பதிலளிநீக்கு
 27. அன்பிற்சிறந்த சகோதரி படித்து கருத்திட்டால் பெருமை அடைவேன்
  நன்றி
  http://arr27.blogspot.com/2011/07/blog-post_06.html

  பதிலளிநீக்கு
 28. ஆஹா..ப‌க்க‌த்து ஊர‌ ப‌ற்றி கேள்விப்ப‌ட்ட‌தை விட‌ கேள்விப்ப‌டாத‌தையெல்லாம் அருமையா விவ‌ரிச்சு இருக்கீங்க‌.. சூப்ப‌ர்.. அருமை...குட்..

  பதிலளிநீக்கு
 29. சிவா கூறியது...

  அடடா நீங்க நம்ம தூரத்து ஊரா நான் சிவகங்கை.// அட ரொம்ப்பாஆஆஆஆஅ தூரர்த்து ஊர்தாங்கோ..


  //உங்க ஊரை அழகாக வர்ணித்துள்ளீர்கள்.
  நீங்க எழுதியதை படிததுவுடன் லகூனுக்கு வரனும்போல் உள்ளது. அது சரி அங்கே மான் இருக்கே அதை நாங்க லகூன் பார்த்துவிட்டு வரும்போது அபேச் பண்ணிட்டுவந்திடலாமா?//

  ஏங்கப்பு ஏன் பாவம் அந்த மான் அதுபாட்டுக்கு மிரண்டு நிக்குது அதபோய் மேலும் மிரலவைக்கிரீங்க..ஹி ஹி

  //அருமையாக எழுதியுள்ளீர்கள். அப்படியே அந்த வாடா தட்டை இங்கே அனுப்பிவைங்க. எங்கபக்கமெல்லாம் இதெல்லாம் கிடைக்காதுங்க. ப்லீஸ்.//

  ஒரு டன் பட்டாசு அனுப்பிவைத்தால் இந்த வாடா அனுப்பப்படும் எப்புடி நம்ம டீல்..


  சிநேகமுடன் சிவா..//

  தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சிவா,,...

  பதிலளிநீக்கு
 30. அமைதிச்சாரல் கூறியது...

  உங்க ஊரைப்பத்தின விவரங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்குதுங்க.. எம்.ஜி.ஆர் உங்க தாத்தாவா!! சொல்லவேயில்ல ;-)//

  அடடா உங்களுக்கு தெரியாதுல்ல அதான் இப்ப சொல்லிட்டேனுல்ல ஹா ஹா எப்புடி..

  மிக்க நன்றி அமைத்திசாரல். ம்ஹூம்
  அடைமழைச்சாரல்..

  பதிலளிநீக்கு
 31. தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...

  மிக அருமை மலிக்கா.. முத்துப் பேட்டைக்கு ஒரு சூப்பர் விசிட். அப்புறம் அந்த வடையை கூரியர் பண்ண முடியுமா..:)))//

  ஆகா அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கமுடியுமா. நேரில் வந்துட்டுதான் சொல்லனும் தேனக்கா.

  வடையைல்ல அக்கா வாடா அதுக்கு பேருக்கா இது.. அனுப்பிட்டாபோச்சி.

  நன்றிக்கா..

  // vidivelli கூறியது...

  உங்கள் பதிவு நல்லாயிருக்கு.
  விளக்கிய விதமும் சுப்பர்.....
  அற்புதம்.
  வாழ்த்துக்கள்..........

  நண்பர்களே நம்ம பக்கம் !!!!!1மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!! நீங்களும் யோசித்து பாருங்களேன்.//

  வாழ்த்துக்கும் கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் விடிவெள்ளி..

  பதிலளிநீக்கு
 32. நான் தற்போது அபுதாபில் இருக்கேன் மல்லிகா. சென்னைதான் தங்குமிடம்.
  சென்னைவந்தா வருவீங்களா எங்க இல்லத்துகு. நாங்கலூம் ஊரோடு போகிரோம்.பிஸினல் சென்னையில் தொடங்கப்போகிரோம்..

  பதிலளிநீக்கு
 33. தங்கை மலிக்கா,இந்த பதிவு என் கண்ணில் சிக்காமலே போய் விட்டது.நீங்கள் அழைத்த பின் தான் தெரிந்தது.தாமதத்திற்கு மன்னிக்கவும்.உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் மிகவும் சுவாரஸ்யமாக விலாவாரியாக முத்தான பேட்டையை பற்றி சத்தாக சொல்லிகாட்டி அங்கு வரவேண்டும் என்ற ஆவலை வித்து போட்டு உங்கள் ஊருக்கே அழைத்துச்சென்று காட்டியதைப்போன்ற ஒரு பிரம்மபையை பிரம்மிப்புணர்வை ஊட்டி விட்டீர்கள்.மிக்க நன்றி.உங்கள் எழுத்துநடைக்கும் நகைச்சுவைக்கும் உங்கள் ஊருக்கும்தான் ஒரு ஜே...

  பதிலளிநீக்கு
 34. Rathnavel கூறியது...

  நல்ல பதிவு.
  உங்கள் ஊரைப் பற்றி அனைத்து விபரங்களையும் அருமையாக படத்துடன் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.//

  வாங்கய்யா தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 35. Ramani கூறியது...

  ஊரின் மீது அளவு கடந்த பாசம் இருந்தால் ஒழிய
  இவ்வளவு ஈடுபாடோடு நேர்த்தியோடு எழுதுவது கடினம்
  மிகச் சிறந்த பதிவு படங்களும் அருமை
  வாழ்த்துக்கள்//

  பிறந்து வளர்ந்ததோடு அல்லாமல் வாழ்க்கையும் தந்த ஊரல்லவா அதனைபர்றி எழுதுவதில் ஆனந்தம்தான்..

  அருமையான கருதை பகிர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா..

  பதிலளிநீக்கு
 36. அடடா முத்துப்பேட்டையை அழகாகச் சொல்லிட்டீங்க... என் சொந்தப் பெயர்தான் உங்கட சொந்த ஊரா அவ்வ்வ்வ்:)).

  ஸாதிகா அக்கா பக்கத்தில உங்கள் பதிவு பார்த்ததால... அதைப் புடிச்சு ஸ்ரெயிட்டா இங்க வந்து இறங்கிட்டேன்...

  கூடை முட்ட மீஈஈஈஈஈன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

  பதிலளிநீக்கு
 37. தாஜுதீன் கூறியது...

  அன்புள்ள சகோதரிக்கு.

  நலமா?

  இப்பதான் விடுமுறைலிருந்து திரும்பினேன். மீண்டும் அதிரைக்கு போக தூண்டிகிறது இந்த பதிவு.

  வாழ்த்துக்கள்.

  சபீர் காக்கா எழுதிய அதிரை புளியமரம் பற்றிய பதிவை இங்கு சென்று பாருங்கள்.

  http://adirainirubar.blogspot.com/2011/06/blog-post_17.html//

  வாங்க சகோதரர் அவர்களே! இறைவன் உதவில அனைவரும் நலம். தங்கள் மற்றும் குடும்பதிலுள்ளவர்களின் நலமறிய ஆவல்..

  தங்களுடைய அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்

  பதிலளிநீக்கு
 38. காஞ்சி முரளி கூறியது...

  காக்கைக்கு தன் குஞ்சு.....!
  பொன் குஞ்சல்லவோ...!

  அதைப்போலத்தான்

  மலிக்காவுக்கு
  முத்துப்பேட்டையும்..........!//

  காக்கைக்குமட்டுமல்ல சகோ கழுகுக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சுதானே பாவம் எப்போதும் காகத்தையே சொல்லுறமேன்னு மற்றவைங்க கோபப்பட்டுகப்போகுதுங்க.

  //இந்த பதிவும்...!
  அந்த ஊரும்.......!
  நல்லாத்தான் இருக்கு......!//

  இப்பவெல்லாம் இரு இழுவை வந்திருக்கு நல்லாதானிருக்கு ஆனாஆஆஆஆஅன்னு..

  //ஆனால்....

  முத்துப்பேட்டையில் வாழும் மனிதர்கள்...!
  குறிப்பாய்...
  மலிக்காவின் அன்னை, சகோதரி, சகோதரர்...
  என் நண்பர் முத்துப்பேட்டை கார்த்திக்...
  they are very good peoples....!

  "மறக்கமுடியாதவர்கள்"......!//

  ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோ ஒருமுறையே என்குடும்பதுஆரை நேரில கண்டாலும் தங்களின் பாசம் நெகிழவைக்கிறது அம்மாவும் அடிக்கடி கேட்பார்கள் அண்ணாக்கு நீ போன் செய்தாயா? நல்லாயிருக்காரான்னு.. பாசம் என்பது சொல்லிவருவதில்லை என்பதை நிரூபிக்கும் சில உறவுகளில் தாங்களும். தங்கள் குடும்பபமும் ஒன்று என்பதில் மகிழ்ச்சியே..

  மனம் நிறைந்த மகிழ்ச்சி சகோ. நன்றி எல்லாம் கிடையாதுங்கோ..

  பதிலளிநீக்கு
 39. ஸாதிகா கூறியது...

  தங்கை மலிக்கா,இந்த பதிவு என் கண்ணில் சிக்காமலே போய் விட்டது.நீங்கள் அழைத்த பின் தான் தெரிந்தது.தாமதத்திற்கு மன்னிக்கவும்.உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் மிகவும் சுவாரஸ்யமாக விலாவாரியாக முத்தான பேட்டையை பற்றி சத்தாக சொல்லிகாட்டி அங்கு வரவேண்டும் என்ற ஆவலை வித்து போட்டு உங்கள் ஊருக்கே அழைத்துச்சென்று காட்டியதைப்போன்ற ஒரு பிரம்மபையை பிரம்மிப்புணர்வை ஊட்டி விட்டீர்கள்.மிக்க நன்றி.உங்கள் எழுத்துநடைக்கும் நகைச்சுவைக்கும் உங்கள் ஊருக்கும்தான் ஒரு ஜே...//

  ஆகா வந்துட்டாங்க எங்கக்கா அழைச்சதும்தான் வந்தாங்க எங்கக்கா. [இது எங்க ஊர் குறும்பு]

  இப்படியெல்லாம் சொன்னத்தோடு நிப்பாடிடாம அப்படியே எங்க ஊருக்கு வந்துட்டுபோங்க நான் வந்ததும் செல்லுல சொல்லுறேன் ஓக்கேவா..

  ரொம்ப சந்தோஷம் ஸாதிகாக்கா எங்க ஊரைபற்றி என்னை எழுத்தூண்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தாங்களுக்கு..

  பதிலளிநீக்கு
 40. A.R.ராஜகோபாலன் கூறியது...

  அன்பிற்சிறந்த சகோதரி படித்து கருத்திட்டால் பெருமை அடைவேன்
  நன்றி
  http://arr27.blogspot.com/2011/07/blog-post_06.html//

  ரொம்ப மகிழ்ச்சி அண்ணா சொன்னதும் உடனே சுடசுட எழுதியமைக்கு மிக்க நன்றி அண்ணா..

  பதிலளிநீக்கு
 41. அஹமது இர்ஷாத் கூறியது...

  ஆஹா..ப‌க்க‌த்து ஊர‌ ப‌ற்றி கேள்விப்ப‌ட்ட‌தை விட‌ கேள்விப்ப‌டாத‌தையெல்லாம் அருமையா விவ‌ரிச்சு இருக்கீங்க‌.. சூப்ப‌ர்.. அருமை...குட்..//

  ஆக நல்லாதான் சொல்லியிருக்கேன் நம்ம இல்ல எங்க ஊரைப்பத்தி . ரொம்ப நன்றி இர்ஷாத்..

  ரொம்ப நாளைக்கப்புறம் இந்தபக்கம் எட்டிப்பார்த்தமைக்கு நன்றிங்கோ..

  பதிலளிநீக்கு
 42. athira கூறியது...

  அடடா முத்துப்பேட்டையை அழகாகச் சொல்லிட்டீங்க... என் சொந்தப் பெயர்தான் உங்கட சொந்த ஊரா அவ்வ்வ்வ்:)).//

  அட அப்படியா முத்து. அப்ப நீங்க ர [னா டி[னா] வா. ஜிவ்வ்வ்வ்வ்வ்

  //ஸாதிகா அக்கா பக்கத்தில உங்கள் பதிவு பார்த்ததால... அதைப் புடிச்சு ஸ்ரெயிட்டா இங்க வந்து இறங்கிட்டேன்...//

  ஓ பூசார் பாலைக்கண்டுமட்டுமல்ல மீனைக்கண்டும் மோப்பபிடிக்குமுன்னு சும்மாவா சொன்னாங்க

  கூடை முட்ட மீஈஈஈஈஈன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).//

  எப்புடி சரியாத்தான் சொல்லியிருக்கேன்..

  வாங்க பூசார். அப்படியெல்லாரும் கூப்பிடுறாங்கன்னு நானும் கூப்பிடுறேன் ஹா ஹா.

  தங்களின் மோப்ப வருகைக்கும் மோப்பம் பிடித்த மீன் முட்டக்கும் ரொம்ப நன்றிங்கோ..

  பதிலளிநீக்கு
 43. முத்துப்பேட்டையை தாண்டி பஸ் மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் பலமுறை சென்றிருக்கிறேன். அங்கு சில தோழிகளும் எனக்கு உண்டு (மலிக்கா தோழியையும் சேர்த்துதான்:)) மற்றபடி இவ்வளவு விஷயங்கள் இப்போதான் தெரிந்துக் கொண்டேன் தோழி.

  மேலும் தனித் தனித்தீவுகளாக இருப்பதும் போட்டிங் செல்வதும் கூட தோழிகள் யாரும் சொன்னதில்லை. பகிர்வுக்கு நன்றி! வாடாவும் சூப்பர் :)

  பதிலளிநீக்கு
 44. இந்த இறால் வடை முத்து பேட்டையில் இருக்கும் போது போட்டதா ஹி...ஹி... :-))

  பதிலளிநீக்கு
 45. அன்புள்ள சகோதரி மல்லிகா அவர்களுக்கு
  அஸ்ஸலாமு அழைக்கும்
  "பேட்ட பேட்ட முத்தான பேட்டை.." தொகுப்பு அருமை . முத்துப்பேட்டை ஊரை பற்றி நிறைய விஷயங்கள் எழுதியிருக்கிரீர்கள். படித்து பார்த்து மகிழ்ந்து போனோம். நீங்கள் இது போன்ற நல்ல செய்திகளையும், உங்கள் மேலான கருத்துக்களையும் நமது முத்து பேட்டை இணைய தளத்தில் வெளி இட்டு இருந்தால் அணைத்து சகோதரர்களும் படித்து தெரிந்து இருப்பார்கள். இன்ஷா அல்லா வரும் காலங்களில் நீங்கள் இது போன்ற தொகுப்புகளை நமது இணைய தளத்திலும் வெளியிடும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம் . மேலும் தங்களின் மேலான அனுமதியுடன்
  இந்த பதிப்பை நங்கள் முத்து பேட்டை இணைய தளத்தில் வெளியிட விரும்புகிறோம். தங்களின் அனுமதியை எதிர்பார்த்து நிற்கும் உங்கள் முத்து பேட்டை சகோதரர்கள். www.mutuhpet.com

  பதிலளிநீக்கு
 46. எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!
  http://rasekan.blogspot.com/2011/08/blog-post_1720.html

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது