நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விடியலை நோக்கி,


முகநூலில். கவிதை சங்கமம் நடத்திய கவிதைபோட்டியில். “வாய்ப்பும் வியப்பும்” என்ற என் கவிதை முதல் இடத்தை பெற்றிருந்தது. அதற்கான பரிசாக இப்புத்தகத்தை சங்கமம் குழுவினர்கள் மனமார்ந்த வாழ்த்துகளோடு இதை அனுப்பிவைத்துள்ளார்கள் கூரியரில்.நேற்றுதான் இது கிடைக்கபெற்றது. இம்மகிழ்ச்சியான விசயத்தை உங்களோடு  பகிர்ந்துகொள்வதில் சந்தோஷம்.

இன்பமும் துன்பமும் நிலைப்பதில்லை இந்த நிலையில்லா உலகைப்போல். சிரமமும் சந்தோஷமும் கலந்துதான் வாழ்க்கை  என்பதை உணர்த்துகிறது வாழ்க்கைப்பாடம் சிறுசந்தோஷத்தை தந்த இறைவன் சீரிய நல்லதை தந்து,சிரமத்தையும் நீக்கவழிசெய்வான் என்ற நம்பிக்கையில்...


வெளுத்த வானத்தை
கருத்தமேகம் சூழ்ந்து
வெளிச்சக்கதிரை
மறைக்க முயழ

சுற்றி வீசும் தென்றல்
சூழ்ந்த மேகத்தை கலைத்து
வெளிச்ச ஒளியை
உலகில் பரப்ப

கருத்த மேகமலையை -தன்
ஊடுருவல் உளியால் செதுக்கி
மெல்ல மெல்ல புகுந்து
வெண்ணிற வானத்தை அடைய

தென்றல் புகுந்த கீறலின் வழியே
தெரியப் பார்க்கும்
வெளிச்சக் கோடுகளை வரவேற்று
விடியலை நோக்கும் பூமியாய்

கவலைகள் சூழ்ந்துள்ள
மனதிற்கு சிறுமகிழ்வாய்
சந்தோஷக் கீறல்கள்
சில சில வந்தபோதும்

நிஜ விடியலை எதிர்பார்த்து
நிறைவைக் காணத் துடிக்கும்
நிலைகுலைந்த நெஞ்சம்
நிறைவைத் தரச்சொல்லி புகுந்தது
இறைவனிடம் தஞ்சம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
கவிஞர்களையும். இலக்கிய ஆர்வர்வலர்களையும். ஊக்கும்விக்கும்வகையில் செய்ல்படும்  கவிதை சங்கமத்திற்கு
மனமார்ந்த நன்றிகள்..

28 கருத்துகள்:

 1. சரியாகச் சொன்னீர். தஞ்சமென அடைவோம் இறைவனிடம்

  பதிலளிநீக்கு
 2. மனமார்ந்த வாழ்த்துக்கள் மலிக்கா.

  'நீரோடை'யில் வற்றாது கரை ததும்பப் பாயட்டும் உங்கள் கவிநீர்!

  பதிலளிநீக்கு
 3. ///சிறுசந்தோஷத்தை தந்த இறைவன் சீரிய நல்லதை தந்து,சிரமத்தையும் நீக்கவழிசெய்வான் என்ற நம்பிக்கையில்...///

  ////நிஜ விடியலை எதிர்பார்த்து
  நிறைவைக் காணத் துடிக்கும்
  நிலைகுழைந்த நெஞ்சம்
  நிறைவைத் தரச்சொல்லி புகுந்தது
  இறைவனிடம் தஞ்சம்..////

  என் பிரியக் கவிஞன், கவியரசு கண்ணதாசனின் முதல் கவிதையான - முதல் பாடல் வரியான
  "கலங்காதிரு மனமே....! - உன்
  கனவெல்லாம்
  நினைவாகும் ஒரு தினமே...!" என்ற வரிகளும்...

  "விடியலுக்கில்லை தூரம்... விடியும்
  மனதில் இன்னும் ஏன் பாரம்...!".............. என்ற வரிகளும்...... என்றும் scoralலாய் ஓடிக்கொண்டிருக்கும் என் மனதில்...
  அந்த வரிகளையே தங்களுக்கும்..!

  ****
  விடியும்....!
  விரைவில் விடியும்...!
  நம்பிக்கையோடிருங்கள்...!

  நிச்சயம் முன்பைவிட
  மேன்மையாய்த்தான் வாழ்வீர்கள்...!
  இது நிச்சயம்...!

  பூமிக்குள்
  புதைந்துபோகும்
  எரிந்துபோன கரிதான்..
  வைரமாய் உருமாறுகிறது...! - அவ்
  வைரத்தை
  அறுக்கமுடியாத அளவிற்கு...
  திடகாத்ரத்துடன் திடமாய் விளங்குகிறது...!

  அதைப்போல...
  திடமனதுடன்... உறுதியான மனதுடன் இருங்கள்...!

  "வைர வாழ்க்கை"
  வரமாய் வரும்... வெகுசீக்கிரம்...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,
  மலிக்கா\
  இன்பம் , துன்பம் இரண்டுமே கலந்த்தது தான் வாழ்க்கை. எல்லாம் நன்மைக்கே.

  பதிலளிநீக்கு
 5. சகோ மலிக்கா...
  கவிதை அருமை...

  "நிலைகுழைந்த"..இது "நிலைகுலைந்த"

  என்று வருமென நினைக்கிறேன்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் கவிதாயினி.தொடரருங்கள் உங்கள் கவி மழையை.அவை நீரோடையாய் சலசலத்து ஓடட்டும்.

  பதிலளிநீக்கு
 7. இது...
  இது என்ன..ஜூஜூபி...!

  இன்னும்...!
  இன்னுமின்னும் இருக்கில்ல...!
  இது முடிவல்ல.. ஆரம்பம்...!

  வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
 8. அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரி நலம் கான விழைகிறேன். வளக்கம்போல் கவிதை வளம் மிக்கதாய் உள்ளது. முன்பு நான் எழுதினதை நினைத்துப்பார்தேன்,சோக மேகம் நெஞ்ச வானமதில் வட்டமிட, நம்பிக்கை மின்னல் தோன்றி சோகமேகம் கிழிந்து கலைந்தது,அங்கே சந்தோச மழைபொழிந்தது.
  நிற்க,இறைவனிடம் ஒப்படைத்தபின் எந்த கெடுதலும் கெட்டொழியும். (எங்களுக்கும் எழுத சொல்லிதாங்களே)

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் சகோ
  உங்களுக்கும்
  உங்கள் உயரத்திற்கு உறுதுணையாய் இருக்கும் மச்சானுக்கும்

  விஜய்

  பதிலளிநீக்கு
 10. வாழ்க, வளர்க‌வென மகிழ்வோடு வாழ்த்துகிறேன், உங்கள் அன்புத் தோழி!

  பதிலளிநீக்கு
 11. மிக அருமையான கவிதையும் அருமையான புத்தகவும்.இன்னமும் பல பல பரிசுகளும் விருதுகளும் கிடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 12. அருமையான வரிகள். கவிதையும் கவிதைக்கான விளக்கமும். வாழ்த்துக்கள் இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. மிக அருமையான அழகான கவி.
  கவிதாயினியே நீ இன்னுமினும் வளர்க நற்புகழ் பெருக.

  தீராத சோகமும் தீரும் நீ நம்பும் உன் இறைவனின் அருளால் கவலைவேண்டாம் கண்மணியே கடவுளீடம் கட்டாயம் வேண்டுகிறேன் உனக்காக்காக உன்குடும்பத்துக்காக..

  அன்போடு ஆறுதலாய் அன்னை
  சாரதாவிஜயன்

  பதிலளிநீக்கு
 14. மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 15. எண்ணங்களை எழுத்துருவாய், எழில் கொஞ்சும் வார்த்தைகளாய் தரும் வல்லமை எழுத்தாளனுக்கே உரிய அந்த நிறை தகுதி திருமதி மலிகா அவர்களிடம் நிறையவே இருப்பதை கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் மலிகா..

  அன்புடன்,
  ராஜ்குமார்(அறந்தைராஜா)

  http://namatchivaya.blogspot.com/2010/12/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 16. கவலைகள் சூழ்ந்துள்ள
  மனதிற்கு சிறுமகிழ்வாய்
  சந்தோஷக் கீறல்கள்
  சில சில வந்தபோதும்.
  அதைக் கண்டு ஏமாறாது
  என் மனம்.

  நான் படைக்கும் படைப்பிற்கு
  ஆறுதலாய் இருந்தது இந்த பரிசு
  அதை உங்களுக்கும் பகிர்நதளிக்க
  ஆவலாக உள்ளேன்.

  ஆணி வேறாய் வாசக நண்பர்களின்
  தோழமையுடன் நான் ஏறிய போதும்
  என்றும் நான் மறவா தினம் உம்மை.

  அந்நியர்கள் அர்த்தமின்றி கூவிய போதும்
  எனை காத்து என்னை வெளிச்சத்திற்கு
  கொண்டு வந்த என்னிறைவா உனக்கே
  எல்லாப் புகழும்.

  விருது கிடைக்கப் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


  -கவிஞர்.வைகறை
  &
  "நந்தலாலா" இணைய இதழ்,
  www.nanthalaalaa.blogspot.com

  பதிலளிநீக்கு
 18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


  -கவிஞர்.வைகறை
  &
  "நந்தலாலா" இணைய இதழ்,
  www.nanthalaalaa.blogspot.com

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள் கவிஞர் மலிக்கா.இன்பம் , துன்பம் இரண்டுமே கலந்த்தது தான் வாழ்க்கை.
  Super.God Bless U
  pls come and join our 2010 dairy
  writing.
  www.vijiscreation.blogspot.com

  பதிலளிநீக்கு
 20. நீரோடை வரிகள் கவிஞர் மலிக்கா...\

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. எனது அன்பு நெஞ்சங்களுக்கு எந்நாளும் என்நன்றிகள். இன்பம் துன்பம் இரண்டை பகிர்ந்துக்கொள்ளும் நண்பர்கள் கிடைத்தால் அதைவிட அதிர்ஸ்டசாலி யாரிருக்கமுடியும் அந்தவிதத்தில் நான் கொடுத்துவைத்தவள்.. அனைவருக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது