நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒளியற்ற விழி!

நன்றி கூகிள்
கலர்கனவுகளை சுமந்து
கானலைக்கூட
காணமுடியா காரிருள் சூழ்ந்த
கருவிழிகள்

வெளிச்சமென்றால் என்னவென்று
விபரமறியா கேள்விக்கேட்டு
வெளிறிக் கிடக்கும்
வெள்ளைவிழிகள்

வண்ணத்தை பார்க்கிறதா?
வடிவத்தை பார்க்கிறதா?
விளங்காமல்
விழிக்கும் இருவிழிகள்

வாழ்கையை பார்க்கமுடியா -தன்
வதனத்தை பார்க்கமுடியா
வேதனையில்
வேகிறது  மனச்செல்கள்

விதிபோட்ட முடிச்சில் -சில
விழிக்களுக்கு மட்டும்
விதிவிலக்கானதே விடியல்

காலங்கள் கடக்கிறது
கறுமையின் வெறுமையில்
காற்றோடு கேட்கிறது
கண்ணொளியின் உணர்தல்

கலிகால யுகத்தில்
கண்ணிருந்தும்
குணத்தளவில்
குருடனாயிப்பதைவிட

குருடனாயிருந்து
காலத்தை கழிப்பதே மேலென
கருதுக்கும் சொன்னாலும்
கலங்குகிறது நெஞ்சம்

மனம் கல்லானவருக்கெல்லாம்
மங்கள ஒளியிருக்கும்போது
மென்மையான மனகொண்டோருக்கு
மங்கிய ஒளிகூட முன்னுக்குவர
மறுக்கிறதே யென!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

26 கருத்துகள்:

  1. நல்ல உணர்சிக் கவிதை...

    கலிகால யுகத்தில்
    கண்ணிருந்தும்
    குணத்தளவில்
    குருடனாயிப்பதைவிட

    குருடனாயிருந்து
    காலத்தை கழிப்பதே மேலென
    கருதுக்கும் சொன்னாலும்
    கலங்குகிறது நெஞ்சம்//


    அருமையான வரிகள்..

    பதிலளிநீக்கு
  2. விதிபோட்ட முடிச்சில் -சில
    விழிக்களுக்கு மட்டும்
    விதிவிலக்கானதே விடியல்.//

    நினைக்கும்போதே நெஞ்சத்தை அடைக்குது மல்லி.

    நன்றி சொல்லவேண்டும் கண்கள்தந்த கடவுளுக்கு.
    அவர்களூக்கும் நல்வழிப்பிரக்கவேண்டு..

    அருமையாநெகிழுவக்கவிதை மலிக்கா

    பதிலளிநீக்கு
  3. கவிதையின் முதல் வரியே மனதை கனக்க வைத்துவிட்டது...

    தொடர்ந்த வரிகள் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது...

    இதில்...
    ///வாழ்கையை பார்க்கமுடியா -தன்
    வதனத்தை பார்க்கமுடியா
    வேதனையில்
    வேகிறது மனச்செல்கள்///
    இவ்வரிகளும்...

    குறிப்பாக "வேதனையில் வேகிறது மனச்செல்கள்" என்ற வரி மிக அற்புதம்...!

    மனதில் அமிழ்ந்து கிடந்த சோகங்களை தூர்வாரி வெளியேபோட்டுவிட்டது இக்கவிதை...

    வாழ்த்துக்கள்...

    விடுமுறையில் இருந்தாலும்...
    விடாக்கண்டனாய் கவிதையா...!
    விடாதீர்கள்... keepit up...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  4. please... இந்த போட்டோ எடுத்துட்டு..... வேற போட்டோ போடுங்க..!

    பதிலளிநீக்கு
  5. விதிபோட்ட முடிச்சில் -சில
    விழிக்களுக்கு மட்டும்
    விதிவிலக்கானதே விடியல்

    கண்களை பற்றி கவி பாடி பல கண்களை கலங்க வைத்து விட்டிர்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  6. //காலங்கள் கடக்கிறது
    கறுமையின் வெறுமையில்
    காற்றோடு கேட்கிறது
    கண்ணொளியின் உணர்தல்//

    வரிகள் அருமை

    கவிதை ரொம்ப சூப்பரா இருக்கு.. உங்களுக்கு நல்லநல்ல படமெல்லாம் எங்கிருந்துதான் கிடைக்கிறது. படமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  7. வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருளை தேடும் கண்களுள் வெளிச்சமே வேண்டாத விழிகளின் கவிதை அழகு மல்லிகா அக்கா...ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  8. எப்படி மலிக்கா.
    உங்களுக்குதான் இப்படியெல்லாம் பிறரின் வேதனைகளை அனுபவித்துதுபோல் எழுதமுடியும்.

    மனவேதனையாகயிருக்குமா.
    இதுபோன்றவர்களை நினைத்து.

    நன்றீ மலிக்கா...

    பதிலளிநீக்கு
  9. வெறும்பய கூறியது...
    நல்ல உணர்சிக் கவிதை...

    கலிகால யுகத்தில்
    கண்ணிருந்தும்
    குணத்தளவில்
    குருடனாயிப்பதைவிட

    குருடனாயிருந்து
    காலத்தை கழிப்பதே மேலென
    கருதுக்கும் சொன்னாலும்
    கலங்குகிறது நெஞ்சம்//


    அருமையான வரிகள்,..///

    மிக்க நன்றி வெறும்பய,அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. அருள்ஜோதி. கூறியது...
    விதிபோட்ட முடிச்சில் -சில
    விழிக்களுக்கு மட்டும்
    விதிவிலக்கானதே விடியல்.//

    நினைக்கும்போதே நெஞ்சத்தை அடைக்குது மல்லி.

    நன்றி சொல்லவேண்டும் கண்கள்தந்த கடவுளுக்கு.
    அவர்களூக்கும் நல்வழிப்பிரக்கவேண்டு..

    அருமையாநெகிழுவக்கவிதை மலிக்கா,..//

    வாங்க ஜோதி தங்களின் வருகைக்கும். நெகிழ்வான கருத்துக்கும் மிக்க நன்றி

    இதுபோன்ற மனிதங்களை பார்க்கும்போது என்னையறியாமல் மனம்கலங்கி கண்கள் கண்ணீரை சொறியும்.

    இறைவனின் படைப்பில் ஓவ்வொன்றும் ஒருவிதங்களென எண்ணிக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  11. நாம் காணும் கனவு வெறும் கருப்பு வெள்ளை (black & white ) தானாம் மனிதர்கள் கலர் கனவு கானமுடியதாம் சுஜாதா புக்கில் படித்த நினைப்பு விவரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் விவரம் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  12. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.... க‌ண்தான‌ம் ஒன்றே இத‌ற்கு ஒரு விடிவாக‌ அமையும்..

    பதிலளிநீக்கு
  13. மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எத்தனை முறை சொன்னாலும் தீராது.
    அதே போல் உங்க வலை தளத்திலும் வெளியிட்டு எல்லா நன்பர்களின், தோழி, தோழர் எல்லாருடைய்ய வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    அமெரிக்காவில் பெட்னாவில் மலிக்கா கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஏராளம்.என்னை விட மல்லிக்கா இன்னும் நன்றாகவே வாசித்திருப்பாங்க. மிக மிக பாராட்டுக்கள். மலிக்கா நான் புகைபடம் உங்களுக்கு மெயிலில் விரைவில் அனுப்புகிறேன். நான் கேம்பிங்கில் இருக்கிறேன். வந்ததும் அனுப்புகிறேன். நன்றி..//

    மலிக்கா உங்க கவிதை உலகெங்கும் பரவுமென்பதற்க்கு சிறுதுளீயும் சந்தேகமில்லை.

    அமெரிக்காவில் கிடைத்த பாராட்டுபோல் இன்னும் உலகெங்கும் கிடைக்கும். இந்த நண்பனின் பிராத்தனையும் ஆசையும் நிறைவேரும்..

    பதிலளிநீக்கு
  14. வண்ணத்தை பார்க்கிறதா?
    வடிவத்தை பார்க்கிறதா?
    விளங்காமல்
    விழிக்கும் இருவிழிகள்-யதார்த்தத்தை கவிதையால் கனக்க வைத்தீர்

    பதிலளிநீக்கு
  15. விழிப்பூட்டும் கவிதை தோழி.
    அருமை.சிந்திக்காமல் செயல்படவேன்டும் !

    பதிலளிநீக்கு
  16. காஞ்சி முரளி கூறியது...
    கவிதையின் முதல் வரியே மனதை கனக்க வைத்துவிட்டது...

    தொடர்ந்த வரிகள் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது...

    இதில்...
    ///வாழ்கையை பார்க்கமுடியா -தன்
    வதனத்தை பார்க்கமுடியா
    வேதனையில்
    வேகிறது மனச்செல்கள்///
    இவ்வரிகளும்...

    குறிப்பாக "வேதனையில் வேகிறது மனச்செல்கள்" என்ற வரி மிக அற்புதம்...!

    மனதில் அமிழ்ந்து கிடந்த சோகங்களை தூர்வாரி வெளியேபோட்டுவிட்டது இக்கவிதை...

    வாழ்த்துக்கள்...

    விடுமுறையில் இருந்தாலும்...
    விடாக்கண்டனாய் கவிதையா...!
    விடாதீர்கள்... keepit up...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....//

    சந்தோஷம் சகோ. தாங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
    இதுபோன்ற மனிதங்களைபார்க்கும்போது தானே கலங்கிவிடுகிறது கண்களும் மனதும்.

    லீவில் இருந்துடுவோமுன்னுதான் 5 6 கவிகளை தானியங்கியில் போட்டுவிடுகிறேன்.அதுவா பப்ளிஸ் ஆகட்டுமுன்னு.
    அப்பப்பவந்து கருத்துகளைபார்வையிட்டுசெல்கிறேன்.

    தொட்டுவிட்டோம் தொடர்வதுதானே முறை. இனிவிடுவதாயில்லை..

    மிக்க மகிழ்ச்சி சகோதரா..

    பதிலளிநீக்கு
  17. காஞ்சி முரளி கூறியது...
    please... இந்த போட்டோ எடுத்துட்டு..... வேற போட்டோ போடுங்க.//

    இந்தபோட்டோ கண்டதும்தான் இப்படியொருகவிதை மனதிலோடியது அதான் இதையேபோட்டேன். ஏன் முரளி சரியில்லையா?

    பதிலளிநீக்கு
  18. இளம் தூயவன் கூறியது...
    விதிபோட்ட முடிச்சில் -சில
    விழிக்களுக்கு மட்டும்
    விதிவிலக்கானதே விடியல்

    கண்களை பற்றி கவி பாடி பல கண்களை கலங்க வைத்து விட்டிர்கள் சகோதரி.

    இல்ல்லாதவின் வருத்தம் இருப்போர் உணரவேண்டும் என்பதற்காகத்தான். என்னையுசேர்த்து..

    மிக்க நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
  19. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    //காலங்கள் கடக்கிறது
    கறுமையின் வெறுமையில்
    காற்றோடு கேட்கிறது
    கண்ணொளியின் உணர்தல்//

    வரிகள் அருமை

    கவிதை ரொம்ப சூப்பரா இருக்கு.. உங்களுக்கு நல்லநல்ல படமெல்லாம் எங்கிருந்துதான் கிடைக்கிறது. படமும் சூப்பர்.

    மிக்க நன்றி ஷேக் .
    எல்லாம் கூகிள்கொடுக்கும் பரிசுகள்..

    பதிலளிநீக்கு
  20. seemangani கூறியது...
    வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருளை தேடும் கண்களுள் வெளிச்சமே வேண்டாத விழிகளின் கவிதை அழகு மல்லிகா அக்கா...ரசித்தேன்.//

    மிக்க நன்றி கனி.தங்களின் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  21. முத்து.. கூறியது...
    எப்படி மலிக்கா.
    உங்களுக்குதான் இப்படியெல்லாம் பிறரின் வேதனைகளை அனுபவித்துதுபோல் எழுதமுடியும்.

    மனவேதனையாகயிருக்குமா.
    இதுபோன்றவர்களை நினைத்து.

    நன்றீ மலிக்கா.//

    வாங்க முத்து. தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.

    பிறர் வேதனை உணரதெரியும்போதுதானே நம்மையும் பிறர் உணர்வார்கள். என்று சிறு சுயநலம்தான்..

    பதிலளிநீக்கு
  22. shahulhameed கூறியது...
    நாம் காணும் கனவு வெறும் கருப்பு வெள்ளை (black & white ) தானாம் மனிதர்கள் கலர் கனவு கானமுடியதாம் சுஜாதா புக்கில் படித்த நினைப்பு விவரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் விவரம் சொல்லுங்கள்.//

    கலர்கலரா கனவில் தெரிவதென்பதல்ல.

    காக்கா கனவென்றதும் சினிமாபக்கம்போய்விடாதீங்க.
    மனக்கனவு நம் மனதில் பலவிதமான எண்ணைங்களை நாமே வண்ணங்கள்கொண்டு படைக்கிறோம் அதைதான் கலர்கனவென்றேன்.

    இது எனக்குத்தெரிந்தவரையில்..




    நாடோடி கூறியது...
    க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.... க‌ண்தான‌ம் ஒன்றே இத‌ற்கு ஒரு விடிவாக‌ அமையும்.//

    நிச்சியமாக ஸ்டீபன்..

    மிக்க நன்றிமா..

    பதிலளிநீக்கு
  23. முத்தையா கூறியது...
    மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எத்தனை முறை சொன்னாலும் தீராது.
    அதே போல் உங்க வலை தளத்திலும் வெளியிட்டு எல்லா நன்பர்களின், தோழி, தோழர் எல்லாருடைய்ய வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    அமெரிக்காவில் பெட்னாவில் மலிக்கா கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஏராளம்.என்னை விட மல்லிக்கா இன்னும் நன்றாகவே வாசித்திருப்பாங்க. மிக மிக பாராட்டுக்கள். மலிக்கா நான் புகைபடம் உங்களுக்கு மெயிலில் விரைவில் அனுப்புகிறேன். நான் கேம்பிங்கில் இருக்கிறேன். வந்ததும் அனுப்புகிறேன். நன்றி..//

    மலிக்கா உங்க கவிதை உலகெங்கும் பரவுமென்பதற்க்கு சிறுதுளீயும் சந்தேகமில்லை.

    அமெரிக்காவில் கிடைத்த பாராட்டுபோல் இன்னும் உலகெங்கும் கிடைக்கும். இந்த நண்பனின் பிராத்தனையும் ஆசையும் நிறைவேரும்..//

    அன்பு சகோதரரே! தாங்களின் பாசமான இக்கருத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

    உங்களைபோன்றவர்களின் பிராத்தனைகளும் ஊக்கங்களும் நிச்சயம் நல்லகாரியதை வழிநடத்திசெல்லும். இன்ஷாஅல்லாஹ்.

    ரொம்ப மகிழ்ச்சி மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  24. //சிபி.செந்தில்குமார் கூறியது...
    வண்ணத்தை பார்க்கிறதா?
    வடிவத்தை பார்க்கிறதா?
    விளங்காமல்
    விழிக்கும் இருவிழிகள்-யதார்த்தத்தை கவிதையால் கனக்க வைத்தீர்//

    வாங்க வாங்க சிபி.
    தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி தொடர்ந்து இணைந்த்திருங்கள்..

    பதிலளிநீக்கு
  25. ஹேமா கூறியது...
    விழிப்பூட்டும் கவிதை தோழி.
    அருமை.சிந்திக்காமல் செயல்படவேன்டும்.//

    ஆமாம் தோழி மிக்க நன்றிமா..

    பதிலளிநீக்கு
  26. "விதிபோட்ட முடிச்சில் -சில
    விழிக்களுக்கு மட்டும்
    விதிவிலக்கானதே விடியல்

    காலங்கள் கடக்கிறது
    கறுமையின் வெறுமையில்
    காற்றோடு கேட்கிறது
    கண்ணொளியின் உணர்தல்"

    அருமையான வரிகள்

    அவர்களின் ஒருவராய் இருந்து வடித்த கவிதை போல் இருக்கிறது.ஏனென்றால் இக்கவிதை அவர்களின் உணர்வுகளை அழகாக விவரித்து படிப்பவர்களை நெகிழ செய்கிறது.வாழ்த்துகள் சகோதரி

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது