நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அன்புமகனும் அழகிய யானையும்..

இந்த போட்டோவை  எடுத்தது யார்?

காட்டில் உலவும் யானைக்குடும்பம்
காலார நடக்க ஆசைப்பட்டு
கதை பேசிக்கொண்டே -தன்
குட்டிகளோடு சுற்றிவரவே

காட்டிலொரு சிறுவன் தெரிய
கவனமாய் அவனருகில் வந்து
சிறு விழியால் கண்ணடித்து
சிறுவ னவனை சிரிக்கவைத்து!

தும்பிக்கையால் அவனைத்
தூக்கிதன் முதுகிலேற்றி
வைத்துக்கொண்டு
வனமுழுதும் வலம்வரவே!

வரும் வழியில்
வழிந்தோடும் தண்ணீரைக்கண்டு
தங்கள்முகத்தை தங்களே பார்க்க
துள்ளித் துள்ளிக் குதித் தனவே!

அச்சிறுவன் மனமுழுதும்
ஆனந்தம் பொங்கி டவே!
அதை படம்பிடித்து காட்டியதும்
அன்னையுள்ளம் ஆனந்தமடைந்ததம்மா!

காட்டிலுள்ள மிருகமெல்லாம்
நாட்டில் உலா வருகையிலே!
நாட்டிலுள்ள மனிதமெல்லாம்
காட்டுக்குள்ளே உலவுதம்மா!

ஐந்தறிவு உள்ளதெல்லாம்
ஐம்பொன்னாக மினுமினுக்க
ஆறறிவு உள்ளதெல்லாம்
அறிவு மங்கிப் போனதம்மா!

//டிஸ்கி//  முசந்தம் போனபோது கிளிக் எடுத்ததையெல்லாம் கலைச்சாரலில் போட்டுயிருந்தேன் அதை நம்ம அண்ணாத்தே ஜெய்லானி சுட்டுபோட்டைவை இப்படி அழகாய் ஆணைமேல் ஊர்வலம்போகவைத்துவிட்டார் என் அன்புமகனை..
மிக அழகாய் கிரியேட் செய்த அண்ணாத்தேக்கு அல்லாரும் சேர்ந்து ஒரு பாராட்ட போடுங்க அப்படியே ஓட்டையும் கருத்தையும்போட்டு என்அன்புச் செல்லத்துக்கும் அன்பையும் தாருங்கள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

14 கருத்துகள்:

  1. போட்டோ நல்லாருக்குங்க....

    பதிலளிநீக்கு
  2. ஆணை போட்டோவை எடுத்தது யாரு?

    மலிக்கா மச்சான்

    ஆணை மேல மலிக்கா செல்வத்தை வைத்து அழகுபடுத்தியது யாரு?

    அண்ணாத்தே "ஜெய்லானி"

    அந்த போடோவுகு அழகுற கவிதை வடித்தது யாரு?

    "கவிதாயனி"மலிக்கா

    செல்லத்துக்கு இந்த மாமா அன்பு எப்போதும் உண்டு அப்படின்னு சொல்லறது யாரு?

    S.மகாராஜன்

    பதிலளிநீக்கு
  3. //ஐந்தறிவு உள்ளதெல்லாம்
    ஐம்பொன்னாக மினுமினுக்க
    ஆறறிவு உள்ளதெல்லாம்
    அறிவு மங்கிப் போனதம்மா!//

    ஆறாவது அறிவு வேலை செஞ்சா பூவுலமே சொர்கலோகமாகிடாதா ? !!

    அன்பினால் ஆகாத போதே இயற்கையும் தன் அழிவு வேலையை தொடங்குதே!! படிப்பினை பெறுமா மானிடம்..

    பதிலளிநீக்கு
  4. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் . உண்மைதான் இதை பார்த்த போது .
    கவிதை சூப்பர்..:-))
    யாருங்க அது ஜெய்லானி ஓஓஓஓஓஓஓ

    பதிலளிநீக்கு
  5. மொதல்ல...
    ஜெய்லானிக்கு ஒரு ஓ...! போட்டாச்சு...

    அடுத்து..
    தங்கள் செல்ல... அன்பு... மகனுக்கு.... வாழ்த்துக்கள்... (இவர் எப்போ யானைப் பாகனா மாறினாரு...)

    இதையும் கவிதையிலா...
    அப்புறம்... சென்ற பதிவில்... மங்குனி அமைச்சர் சொன்ன மாதிரி செய்துருவோம் நாங்களும்....

    ////காட்டிலுள்ள மிருகமெல்லாம்
    நாட்டில் உலா வருகையிலே!
    நாட்டிலுள்ள மனிதமெல்லாம்
    காட்டுக்குள்ளே உலவுதம்மா! /////

    இந்த வரிகள் சூப்பர்...! இதிலேயும் மெசேஜா...

    ஆனா....! இந்த வரிகள்... "எங்கேயோ கேட்ட குரலாய்" இருக்கே...!

    ஆயிரம் இருந்தாலும்...
    ஜெய்லானிக்கு ஓர் ஓ.....!
    யானைப் பாகனுக்கு ஒரு ஓ...!
    உங்கள் கவிதைக்கும் ஒரு பெரிய ஓஹோ...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  6. //ஐந்தறிவு உள்ளதெல்லாம்
    ஐம்பொன்னாக மினுமினுக்க
    ஆறறிவு உள்ளதெல்லாம்
    அறிவு மங்கிப் போனதம்மா!//

    அழகாய் இணைத்த சகோ.ஜெய்லானிக்கு பாராட்டுகள்..! உங்கள் கவிதை உண்மை!! வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  7. கவிதை ரொம்ப அருமையாக இருக்கு மலிக்கா அக்கா.. இந்த யானை ஆப்பிரிக்க யானைபோல...

    பதிலளிநீக்கு
  8. பாவம் ஜெய்லானி அண்ணன்

    மல்லிக்கா உங்க புள்ளைய யானையில் ஏத்த என்ன கஸ்டப்பட்டாரோ வாழ்த்துக்கள் ஜெய்லானி


    உங்களுக்கும் தான் மல்லிக்கா கவிதையில் ஒரு யானைநடை போய்வந்திருக்கிறிர்கள்

    பதிலளிநீக்கு
  9. நல்லா இருக்கு மல்லி - க்கா படத்த அழகா அமைச்ச ஜெய்லானி அவர்களுக்கு பாராட்டுகள்...

    //இந்த போட்டோவை எடுத்தது யார்?//
    அக்கா நிஜம்மா சொல்லறேன் நான் எடுக்கல கா...ஆனால் யாரு எடுத்தானு கண்டு பிடிக்க நான் சி.பி.சி.ஐ.டி. க்கு சிபாரிசு பண்ணறேன்...

    பதிலளிநீக்கு
  10. உங்க‌ள் அன்பு ம‌க‌ன் யானையின் மேல்...அழ‌கு அழ‌கு... வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி..

    க‌விதையும் அழ‌குங்க‌..

    பதிலளிநீக்கு
  11. க.பாலாசி கூறியது...
    போட்டோ நல்லாருக்குங்க.//

    வாங்க பாலாஜி எப்படியிருக்கீங்க.
    மிக்க நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  12. S Maharajan கூறியது...
    ஆணை போட்டோவை எடுத்தது யாரு?

    மலிக்கா மச்சான்

    ஆணை மேல மலிக்கா செல்வத்தை வைத்து அழகுபடுத்தியது யாரு?

    அண்ணாத்தே "ஜெய்லானி"

    அந்த போடோவுகு அழகுற கவிதை வடித்தது யாரு?

    "கவிதாயனி"மலிக்கா

    செல்லத்துக்கு இந்த மாமா அன்பு எப்போதும் உண்டு அப்படின்னு சொல்லறது யாரு?

    S.மகாராஜன்..

    ஆங் சொல்லுவேளே போட்டோ எடுத்தது மச்சானல்ல நானாக்கும்..

    அன்பு மாமாக்கு மருமகன் தேங்ஸ் சொல்லச்சொன்னாரு..
    மிக்க நன்றி மகராராஜன்..

    பதிலளிநீக்கு
  13. ஹை யாணை மேலே மக்ரூஃப் பா.

    இத பார்த்ததும், முன்பெல்லாம் தெருவில் யாணை வரும் , காசு கொடுத்தா துஆ செய்ய்யும், இன்னும் சில பேர் மேலே உட்கார்ந்து தெருவில் இரண்டு ரவுண்டு வருவார்கள்.

    அதெல்லாம் ஞாபகத்துக்கு வருது.

    அழகாய் வடிவமைத்த ஜெய்லானிக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது