நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உறக்கமென்பது!!!!!


மரணத்திற்கான
முன் ஒத்திகை!
மரணம் வருமென்ற
முன்னெச்சரிக்கை!

மனப்போராட்டத்திற்கு
சிறு ஓய்வு!
மனிதப்போராட்டத்திற்கு
மறு ஆய்வு!

நிறைவேறாத ஆசைகளின்
நீச்சல்குளம்!
நிறைவேற்றும் எண்ணங்களின்
எதிர் நீச்சல்தளம்!

உடல் உழைப்புக்குண்டான
இடைவேளை!
உள்ளச் சோர்வுக்குண்டான
மலர்மாலை!

கலர் கனவுகளின்
வேடந்தாங்கல்!
கனப்பொழுதினிலும்
சொர்க்க ஊஞ்சல்!

ஆறடியையும் அடக்கும்
மயக்கும் வித்தை!
அடங்கிவிட்டால் அன்றே
மண்ணுக்குள் சிறை!!!!!!!!!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

24 கருத்துகள்:

  1. வித்தியாசமா சொல்ல முயற்சித்த விதம் அருமை

    பதிலளிநீக்கு
  2. ///கலர் கனவுகளின்
    வேடந்தாங்கல்!///

    சில நேரம் ஊமை கண்ட கனவு...

    பதிலளிநீக்கு
  3. தூக்கத்துக்கு எம்பூட்டு விளக்கம், நல்லாத்தேன் இருக்கு :))

    பதிலளிநீக்கு
  4. உறக்கத்தில் இத்தனையிருக்கா.. அழகிய வரிகளால் அழங்கரித்துள்ளாய்..

    அம்மு

    பதிலளிநீக்கு
  5. மரணத்தை ஞாபகத்தில் வைத்து கொள்ள செய்யும் இடுக்கை.

    நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  6. எனக்கு பிடித்த வரிகளில்....
    சில...

    இந்த வரிகளில்....
    முதல் வரி.....
    //மரணத்திற்கான முன் ஒத்திகை!//

    "மரித்தவன்
    உயிர்த்தவனை காணலாம்....!
    உயிர்த்தவனாகிய நீ....
    மரித்த உடலாய்
    உன்னைக் காண ..........
    உன்னையே நீ உறக்கத்தில் காண்.........!" என
    யாரோ (?) ஒருவர் எப்போதோ கிறுக்கியது.....
    ஹி....ஹி....ஹி ......
    (எனது பழைய பனை ஓலைகளிலிருந்து )
    ஆனால்..........
    இவ்வரிகளைவிட
    ஒரே வரியில்
    "மரணத்திற்கான முன் ஒத்திகை" என்ற
    தங்கள் வரிகள்.... ரியலி சூபெர்ப்...!

    அடுத்து..........
    //மனப்போராட்டத்திற்கு சிறு ஓய்வு!//
    இவ்வரிகள் எல்லோர் மனதிலும் ஒலிப்பதுதான்.............
    ஆனால்......
    அதனை யாருக்கும் வார்த்தைகளால் வடிக்கத் தெரியாது....
    சொல்லவும் தெரியாது.... (ஊமை கண்ட கனவு போல)
    இவ்வளவு எளிய - விளங்கக்கூடிய வகையில்
    வார்த்தைகளால் வடித்தமைக்கு..... பாராட்டுக்கள்....

    அடுத்ததாய்........
    //நிறைவேறாத ஆசைகளின் நீச்சல்குளம்!//
    என்னமா thing பண்றீங்க....!

    //உடல் உழைப்புக்குண்டான இடைவேளை!//
    உண்மை.... உண்மை.... உண்மை........

    //கனப்பொழுதினிலும் சொர்க்க ஊஞ்சல்!//
    தினமும் நானும் சொர்கத்தின்.............
    யதார்த்தமாய்....

    ஆக........
    "உறக்கமென்பது!!!!!"
    மீண்டும் மீண்டும்
    எங்கள் மனதில்
    அசைபோடும் கவிதை........

    (sorry...! மலிக்கா இரண்டே வரிகளில்
    கருத்து தெரிவிக்க முயற்சி செய்கிறேன்)

    வாழ்த்துக்கள்.....

    நட்புடன்.....
    காஞ்சி முரளி..........

    பதிலளிநீக்கு
  7. உறக்கமென்பது.. என்னவென உங்கள் பார்வையில் அழகுற சொல்லியிருக்கிறீர்கள்.

    //மனப்போராட்டத்திற்கு
    சிறு ஓய்வு!
    மனிதப்போராட்டத்திற்கு
    மறு ஆய்வு!//

    அருமை.

    பதிலளிநீக்கு
  8. மலிக்கா, அருமையாக உள்ளது கவிதை

    பதிலளிநீக்கு
  9. அருமையா எழுதி இருக்கிறிங்க சகோதரி

    பதிலளிநீக்கு
  10. அனைத்து உவமானங்களும் வெகு அருமை!
    எனினும்...
    //ஆறடியையும் அடக்கும்
    மயக்கும் வித்தை! //
    எனும் வாக்கியம் வியக்கவைத்தது.

    கவிஞர் மலிக்கா! -கேட்டதுண்டா
    இந்த பாடல்? -வாருங்களேன்
    எனது வலைப்பக்கம்!

    http://nizampakkam.blogspot.com/2010/03/56eththanainaalpirinthu.html

    பதிலளிநீக்கு
  11. //மனப்போராட்டத்திற்கு
    சிறு ஓய்வு!
    மனிதப்போராட்டத்திற்கு
    மறு ஆய்வு!//

    சரியான வரிகள் மலிக்கா...

    பதிலளிநீக்கு
  12. ஆமா, கனவுகள் கலர்ல வருமா?
    --
    வித்தியாசமான நடை:)
    நல்லா இருக்கு சகோதரி..:)

    பதிலளிநீக்கு
  13. அபுஅஃப்ஸர் கூறியது...
    வித்தியாசமா சொல்ல முயற்சித்த விதம் அருமை//

    ஆகா நல்லாயிருக்கு.. மிக்க நன்றி அஃப்ஸரின் தந்தையே!

    பதிலளிநீக்கு
  14. அண்ணாமலையான் கூறியது...
    நல்லாருக்கு..//

    நன்றி அண்ணாமலையாரே...


    ஜெய்லானி கூறியது...
    ///கலர் கனவுகளின்
    வேடந்தாங்கல்!///

    சில நேரம் ஊமை கண்ட கனவு..//

    பாவமில்லையா ஊமை, அவர்களின் கனவை சொல்லமுடியாதென்றுதான் அவர்களுக்காக நான் சொல்றேன்..

    பதிலளிநீக்கு
  15. தூக்கத்துக்கு எம்பூட்டு விளக்கம், நல்லாத்தேன் இருக்கு ://

    இன்னுமும் சொல்வோமுல்ல பொருத்துயிருங்கோ, சைவப்பரோட்டா...

    பதிலளிநீக்கு
  16. அம்மு கூறியது...
    உறக்கத்தில் இத்தனையிருக்கா.. அழகிய வரிகளால் அழங்கரித்துள்ளாய்..

    அம்மு..//

    மிக்க நன்றி அம்மு. எங்கே ஆளையே காணோம்.. ஊரிலிருந்து வந்தாச்சா...

    பதிலளிநீக்கு
  17. Kanchi Murali கூறியது...
    எனக்கு பிடித்த வரிகளில்....
    சில...

    இந்த வரிகளில்....
    முதல் வரி.....
    //மரணத்திற்கான முன் ஒத்திகை!//

    "மரித்தவன்
    உயிர்த்தவனை காணலாம்....!
    உயிர்த்தவனாகிய நீ....
    மரித்த உடலாய்
    உன்னைக் காண ..........
    உன்னையே நீ உறக்கத்தில் காண்.........!" என
    யாரோ (?) ஒருவர் எப்போதோ கிறுக்கியது.....
    ஹி....ஹி....ஹி ......
    (எனது பழைய பனை ஓலைகளிலிருந்து )
    ஆனால்..........
    இவ்வரிகளைவிட
    ஒரே வரியில்
    "மரணத்திற்கான முன் ஒத்திகை" என்ற
    தங்கள் வரிகள்.... ரியலி சூபெர்ப்...!//

    அந்த பனை ஓலையை புத்தகப்பொக்கிஷமாக்கி விரைவில் அனுப்பிவையுங்கள், நாங்களும் படித்து கொஞ்சம் அறிவை வளர்த்துக்கொள்கிறோம்.


    /அடுத்து..........
    //மனப்போராட்டத்திற்கு சிறு ஓய்வு!//
    இவ்வரிகள் எல்லோர் மனதிலும் ஒலிப்பதுதான்.............
    ஆனால்......
    அதனை யாருக்கும் வார்த்தைகளால் வடிக்கத் தெரியாது....
    சொல்லவும் தெரியாது.... (ஊமை கண்ட கனவு போல)
    இவ்வளவு எளிய - விளங்கக்கூடிய வகையில்
    வார்த்தைகளால் வடித்தமைக்கு..... பாராட்டுக்கள்....//

    அவர்களின் பிரதியாக நான் சொல்வதில் மகிழ்கிறேன், பாராட்டுக்களுக்கு மகிழ்ச்சி.

    அடுத்ததாய்........
    //நிறைவேறாத ஆசைகளின் நீச்சல்குளம்!//
    என்னமா thing பண்றீங்க....!//

    நிஜமாவா? சந்தோஷம்

    //உடல் உழைப்புக்குண்டான இடைவேளை!//
    உண்மை.... உண்மை.... உண்மை........//

    நன்றி நன்றி நன்றி.

    //கனப்பொழுதினிலும் சொர்க்க ஊஞ்சல்!//
    தினமும் நானும் சொர்கத்தின்.............
    யதார்த்தமாய்....//

    அனுபவம் அழகு..

    ஆக........
    "உறக்கமென்பது!!!!!"
    மீண்டும் மீண்டும்
    எங்கள் மனதில்
    அசைபோடும் கவிதை......../

    மிக்க நன்றி

    (sorry...! மலிக்கா இரண்டே வரிகளில்
    கருத்து தெரிவிக்க முயற்சி செய்கிறேன்)//

    வேண்டாம் வேண்டாம் விளக்கத்துடன் விளக்கினால் நான் இன்னுமும் விள்ங்கிக்கொள்ள வசதியாக இருக்கும்..

    வாழ்த்துக்கள்.....

    நட்புடன்.....
    காஞ்சி முரளி..........//

    மகிழ்ச்சிகலந்த நன்றி முரளி........

    பதிலளிநீக்கு
  18. உறக்கத்தை பற்றி அருமையான கவிதை,

    உறக்கமும் சிறிய மரணம் போல் தானே.

    பதிலளிநீக்கு
  19. உறக்கத்திற்கு முன்னும், விழித்தெழுந்த பின்னும் இறைவனை நினைவு கூற வேண்டும் என சொல்லியிருப்பது இந்த காரணத்தினால் தானோ?

    சிந்திக்க வைத்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  20. உடல் உழைப்புக்குண்டான
    இடைவேளை!
    உள்ளச் சோர்வுக்குண்டான
    மலர்மாலை!


    ........... very nice!
    இதை தூக்கம் வராமல் இருக்கும் போது யோசித்தீர்களோ? ஹா,ஹா,ஹா,ஹா......

    பதிலளிநீக்கு
  21. //அந்த பனை ஓலையை புத்தகப்பொக்கிஷமாக்கி விரைவில் அனுப்பிவையுங்கள், நாங்களும் படித்து கொஞ்சம் அறிவை வளர்த்துக்கொள்கிறோம். - மலிக்கா//

    நான் மேற்சொன்ன அளவிற்கு வளரவில்லை....
    நன்றி...!

    நான்
    "அன்புடன் மலிக்கா" அளவிற்கு வளராதவன்....
    தங்களைப் போல பல நாட்டுத் தமிழர்களால் இனங் காணாதவன்....

    அதோடு....
    என் எழுத்துக்களை இன்னும் நான் கிறுக்கல்களாய்த்தான் நினைப்பதால்......
    என்று நான் வடித்தவற்றை 'கவிதை'களாய் என்னால் அங்கீகரிக்கபடுகிறதோ...... அன்றும்

    தங்கள் அளவிற்கும்
    சில வலைக் கவிஞரளவிற்கும் வளர்ந்ததும்.......
    என் "பழைய பனை ஓலை"களை
    புத்தகமாய் புதுப்பித்து....
    தங்கள் பார்வைக்கு அனுப்புவேன்....
    அப்போது தாங்கள் அப்புத்தகத்திற்கு
    'அணிந்துரை' வழங்குமளவிற்கு வளர்வீர்கள்.....
    வழங்குவீர்களல்லவா....!

    அதுவரை ஓர் நல்ல வாசகனாய்.... விமர்சகனாய் மட்டுமே இந்த...........

    நட்புடன்....
    காஞ்சி முரளி.........

    பதிலளிநீக்கு
  22. மணக்கம்... சே..!? வணக்கம் மேடம்
    நா அப்பவே நெனச்சேன், பயபடாதீக காத்து கருப்பு ஏதோ அடிச்சிருக்கு சரி பன்னிரலாம்.இப்படி சீரியஸ் ஆக எல்லாம் யோசிக்க கூடாது.
    வாரா வாரம் மாங்காடு அம்மன் கோவிலுக்கு போய் விளக்கு ஏத்துங்க எல்லாம் சரியா போகும்.

    டிஸ்கி : கவிதை ரொம்ப நல்லாருக்கு மேடம்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது