நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாராயோ வெள்ளி நிலவே


அந்தரத்தில்
உதிக்கும் நிலவே
என்
அந்தபுரம்
வரவேண்டும் நீயே
ஆடிபாட
அழைக்குது மயிலே
ஆவலோடு வந்துவிடு
அழகே

அங்கே
வழியொன்று
வைத்திருக்கிறேன்
சிறு ஓட்டை
அதன் வழியே
நுழைந்து திறந்திடு
என்
மனக்கூட்டை

மனதை மறைத்து
போட்டுள்ளேன்
ஒரு பூட்டை
அதில்
ஒளிந்து கிடக்குது
ஆயிரம் ஆசை

நமக்குள்
பேசிக்கொள்ளும்
வார்த்தை
யாருக்கும்
விளங்கிடாத பாஷை

நம்மிருவரையும்
இணைத்திருக்கும்
ஓசை
ஒருவருக்கும்
புரிந்திடாத
உயிரோசை

வானத்தில்
வந்து நீ
நின்றால்-என்
வதனத்தில்
ஒளிகூடிபோகும்

மேகத்தில்
ஒளிந்து நீ
சென்றால்-என்
இதயத்தில்
இருள்சூழ்ந்துக்
கொள்ளும்

அழகாய்
வலம்வரும் நிலவே
அமாவாசையிலும்
வேண்டும்
உன் வரவே

அந்தரத்தில்
ஒளிவீசும் அழகே
என்
அந்தபுரம்
வரவேண்டும்
நீயே

விரும்பி அழைக்கிறேன் 
உன்னை
வெள்ளி நிலவே
வந்துவிடு எனதருகே..


அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

20 கருத்துகள்:

  1. //நம்மிருவரையும்
    இணைத்திருக்கும்
    ஓசை
    ஒருவருக்கும்
    புரிந்திடாத
    உயிரோசை//

    கவிதை கலக்கல்.....

    பதிலளிநீக்கு
  2. அத்துணை கவிகளும் நிலாவை அழைத்தால் அது எங்கே போகும் :))
    கவிதை அழகு.

    பதிலளிநீக்கு
  3. // அழகாய்
    வலம்வரும் நிலவே
    அமாவாசையிலும்
    வேண்டும்
    உன் வரவே //
    நல்ல கற்பனை. ஆனாலும் ரொம்பத்தான் ஆசை. நல்ல கவிதை மலிக்கா.நல்ல வரிகள். கோர்வையான வரிகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ////அமாவாசையிலும்
    வேண்டும்
    உன் வரவே///

    எனக்கு பிடித்த வரி.

    பதிலளிநீக்கு
  5. அங்கே
    வழியொன்று
    வைத்திருக்கிறேன்
    சிறு ஓட்டை
    அதன் வழியே
    நுழைந்து திறந்திடு
    என்
    மனக்கூட்டை

    superb Mallika

    :-)

    பதிலளிநீக்கு
  6. அழைக்காமலே வந்துவிடும் நிலா, நீங்கள் தான் அந்தப்புரம் சென்று நிற்க வேண்டும். அமாவாசையின் போது எங்கு பெளர்ணமியோ அந்த இடம் சென்றுவிடுங்கள் :)

    பதிலளிநீக்கு
  7. நிலாவை நிலா அழைக்கிறது போய்வா நிலா எந்தோழியை கண்டுவா

    அழகோ அழகுடி கன்னு கவிதை சூப்பர்..

    பதிலளிநீக்கு
  8. என் மகள் அழைத்தால் வாராதோ வெள்ளிநிலா.

    பதிலளிநீக்கு
  9. எளிமையான நடை, அருமையான வரிகள், நல்லா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  10. ஆசையை அழகாக சொல்லி இருகிறிர்கள்

    பதிலளிநீக்கு
  11. அழகான கவிதை. கண்டிப்பாக வெள்ளி நிலவு வரும்.

    பதிலளிநீக்கு
  12. எளிமையான் அழகான் கவிதை வரிகள்...........அந்த நிலாவுக்கு
    இந்த நிலாவின் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வானத்தில்
    வந்து நீ
    நின்றால்-என்
    வதனத்தில்
    ஒளிகூடிபோகும்

    அழகுக்கு அழகூட்டும் வரிகள்......

    பதிலளிநீக்கு
  14. எதுகையும் மோனையும்
    இணைந்த
    இனிய
    இயற்கையான
    இயற் கவிதை..........

    வாழ்த்துக்கள்.......

    நட்புடன்....
    காஞ்சி முரளி.........

    பதிலளிநீக்கு
  15. மலிக்கா அக்கா இந்தப்பக்கம் நான் வந்து பல நாட்கள் ஆகிவிட்டதுக்கா......னீங்க 2010 ஆரம்பித்தே இத்தனி கவிதைகள் எழுதி முடிச்சுட்டீங்க...பாராட்டுக்கள்.அடிக்கடி வரனும்னுதான் நினைக்கிரேன்....வரமுடியரதில்லை...ஆனால் வந்தால் எல்லா கவிகளையும் படிச்சுடரேன்.எல்லா படைப்புகளும் மிகவும் நன்றாக இருக்கிரது.மேலும் மேலும் எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது