நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னவனே!


கனகாமரச் செடியோரம்
கைகோத்து நடக்கையில
கரிச்சாங்குருவி ஒன்னு
கான பாடிச்சி -குருவி
கான பாடிச்சி

கானவ கேட்டுகிட்டே
கதபேசிப் போகையில
கருவேல முல்லு ஒன்னு
நறுக்குன்னு குத்திச்சி -என்காலில்
நறுக்குன்னு குத்திச்சி அத

கண்ட கண்ல கண்ணீர் -என்
கண்ணன் கண்ல வழிய -உன்
கையில எங்கால எடுத்து
வழிஞ்ச ரத்தம் துடைக்க

மனசெல்லாம் மனசெல்லாம்
காத்துல பறந்துச்சி -பஞ்சாகி
காத்துல பறந்துச்சி
குத்தினமுல் வலியெல்லம்
காணாம போயிடுச்சி -காத்துல
காணாம போயிடுச்சி

                      [கருவேலங்காட்டுக்குள்ள]

நெஞ்சுக்குள் வலியெடுத்து
நொடிகூட ஆகவில்ல
துடியா துடிச்சிபோயி
நெஞ்சில சாச்சிக்கிட்ட -உன்
நெஞ்சில சாச்சிக்கிட்ட

விடிய விடிய முழிச்சிருந்து
விழி மூடாம காத்திருந்து
விரலாலே என்ன நீயும்
நீவிகொண்டிருந்த நெஞ்ச
நீவி கொண்டிருந்த -அத

பாத்த என்னோட மனசு
பச்சபுள்ளையா மாறிப்போக -ஒங்கைய
புடிச்சிக்கிட்டே
புலம்பிகொண்டு நானுங்கரைய

மனசெல்லாம் மனசெல்லாம்
பனியா உருகிடிச்சி -வெயில்பட்ட
பனியா உருகிடிச்சி
பட்டாம் பூச்சிபோல
சிறக விறிச்சிச்சி -மனசு
சிறக விறிச்சிச்சி

                       [கருவேலங்காட்டுக்குள்ள]

என்னவனே என்ன வனே
என்னையாளும் மன்னவனே
என் னுயிருக்கு ஏதுமுன்ன
உள்ளம் துடிக்குது ஓங்
உள்ளம் துடிக்குது -அத

நானும் காணும் போது
நெஞ்சம் நெகிழுது என்
நெஞ்சம் நெகிழுது
உங்கூட காலமெல்லாம்

ஒன்னா இருக்கோனும் -சேந்து
ஒன்னாயிருக்கோனும்
உயிருக்குள் ஊடுருவி
உதிரமா ஓடனும் உனக்குள்
உயிரா ஆகனும்..

                         [கருவேலங்காட்டுக்குள்ள]


[டிஸ்கி:: நமக்கும் நாட்டுபுற பாட்டு வருதான்னு ஒரு டெஸ்டுதான்.
 புதுவருசத்துல இதெல்லாம் தேவையான்னு  யாரோ!!!!!!!!! முனங்குவது என்காதில் கேட்கிறது சரி சரி ]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

34 கருத்துகள்:

 1. கஷ்ட்டம் தான் இப்படி எழுதறது .. நல்லா இருக்கு சகோதரி..::) வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஆகா. ரொம்ப நல்லா வந்திருக்கு சகோதரி.

  ///உயிருக்குள் ஊடுருவி
  உதிரமா ஓடனும் உனக்குள்
  உயிரா ஆகனும்..///

  அருமை அருமை அருமை

  பதிலளிநீக்கு
 3. அழகான கவிதை நாட்டுப்புற மெட்டோடு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் சகோ..

  பதிலளிநீக்கு
 4. சந்தம்தான் அழகு
  நாட்டுப்புற பாட்டுக்கு...

  உங்க பாட்டில் அது இன்னும் நெறயவே இருக்குங்க..
  நிறாஇவா இருக்குங்க.. :-)

  பதிலளிநீக்கு
 5. என்ன ஒரு மெட்டு இவ்வளவு அழகாக போட்டுஇருக்கீங்க சூப்பர் போங்க உங்களை சினிமி்ல் மெட்டுகட்ட கூப்பிட்டாலும் தப்பில்லை

  பதிலளிநீக்கு
 6. நல்ல உருக்கமான கவிதை
  வழ்த்துக்கள்

  //உன்
  கையில எங்கால எடுத்து
  வழிஞ்ச ரத்தம் உறிய//

  இந்தவரிதான் எனக்கு நெருடல்

  ஆசையாயின் பாசமாயின் நேசமாயின் குருதி பருகுதல் ஹராம்
  முடிந்தால் மாற்றி எழுதவும்

  நன்றி

  பதிலளிநீக்கு
 7. எல்லாத்துலயும் பூந்து புறப்பட நினைக்கறீங்க போல.. சரி.. வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 8. எழுதுங்கள் வாசிக்க நாங்கள் உள்ளோம்

  பதிலளிநீக்கு
 9. பாட்டு நலாருக்கு மலிக்கா...அப்புடியே ஏ.ஆர் கிட்ட கொடுத்தா "ஆத்தன்கரை மரமே" மாதிரி மெட்டு போட்ருவாரு..

  பதிலளிநீக்கு
 10. உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் !!!

  வாசகனாய் ஒரு கவிஞன் ,
  பனித்துளி சங்கர்
  http://wwwrasigancom.blogspot.com

  பதிலளிநீக்கு
 11. நல்ல கவிதை. நல்ல நடை. வாழ்த்துக்கள் மலிக்கா. பார்த்து பாரதிராஜ கேட்டுடப் போறார். அப்புறம் சிச்சுவேசனல் சாங் சொல்லி படத்துல போடுவார். நன்றி மலிக்கா.

  பதிலளிநீக்கு
 12. நாட்டுபுற பாடல்கள் அழிந்துவிட்ட நிலையில் அதை நினைவூட்டி மகிழ்வித்ததற்கு மிகுந்த நன்றி சகோதரி.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 13. ///நமக்கும் நாட்டுபுற பாட்டு வருதான்னு ஒரு டெஸ்டுதான்////

  ரொம்ப நல்லா வருது தோழி டெஸ்ட்ல பாஸ் ..வாழ்த்துக்கள்.. உங்கள் நாட்டுபுற பாடலுக்கும்...புது வருடத்திற்கும்...

  பதிலளிநீக்கு
 14. அருமையாக இருக்கு.

  ராஜவம்சம் சொன்னதை கவணியுங்க.

  பதிலளிநீக்கு
 15. உயிருக்குள் ஊடுருவி
  உதிரமா ஓடனும் உனக்குள்
  உயிரா ஆகனும்..

  அழகான கவிதை ஆழமான காதல்..
  நல்ல அருமையான வரிகள் தோழி..

  பதிலளிநீக்கு
 16. நறுக்குன்னு குத்திச்சி -என்காலில்
  நறுக்குன்னு குத்திச்சி அத
  கண்ட கண்ல கண்ணீர் -என்
  கண்ணன் கண்ல வழிய -உன்
  கையில எங்கால எடுத்து
  வழிஞ்ச ரத்தம் துடைக்க....


  - Unkal anbu chellathin anbu manasai nekila vaithathu...

  உங்கூட காலமெல்லாம்
  ஒன்னா இருக்கோனும் -சேந்து
  ஒன்னாயிருக்கோனும்
  உயிருக்குள் ஊடுருவி
  உதிரமா ஓடனும் உனக்குள்
  உயிரா ஆகனும்..


  - Nalla maniviyin pasam niraintha varikal.

  Mika Nalla Kavithai Thankachi!

  பதிலளிநீக்கு
 17. பலா பட்டறை கூறியது...
  கஷ்ட்டம் தான் இப்படி எழுதறது .. நல்லா இருக்கு சகோதரி..::) வாழ்த்துக்கள்.//

  ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி சகோதரரே,,

  பதிலளிநீக்கு
 18. S.A. நவாஸுதீன் கூறியது...
  ஆகா. ரொம்ப நல்லா வந்திருக்கு சகோதரி.

  ///உயிருக்குள் ஊடுருவி
  உதிரமா ஓடனும் உனக்குள்
  உயிரா ஆகனும்..///

  அருமை அருமை அருமை///


  மிக்க மகிழ்ச்சி நவாஸண்ணா..

  பதிலளிநீக்கு
 19. SUFFIX கூறியது...
  வாவ்...!! அழகிய கவிதை.//

  மிக்க நன்றி ஷபியண்ணா..

  சாதிக் கூறியது...
  அழகான கவிதை நாட்டுப்புற மெட்டோடு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் சகோ..
  //

  வாங்க சாதிக் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 20. கடைக்குட்டி கூறியது...
  சந்தம்தான் அழகு
  நாட்டுப்புற பாட்டுக்கு...

  உங்க பாட்டில் அது இன்னும் நெறயவே இருக்குங்க..
  நிறாஇவா இருக்குங்க
  //


  ரொம்ப மகிழ்வா இருக்குங்க தாங்களீன் கருத்துக்கு

  கடைக்குட்டியின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 21. சோலை ராசா கூறியது...
  என்ன ஒரு மெட்டு இவ்வளவு அழகாக போட்டுஇருக்கீங்க சூப்பர் போங்க உங்களை சினிமி்ல் மெட்டுகட்ட கூப்பிட்டாலும் தப்பில்லை/

  வாங்க சோலை. சுகமா

  மிக்க மகிழ்ச்சி தாங்களீன் பின்னூட்டத்திற்கு. தப்பில்லையா???????

  பதிலளிநீக்கு
 22. ராஜவம்சம் கூறியது...
  நல்ல உருக்கமான கவிதை
  வழ்த்துக்கள்.//

  மிக்க மகிழ்ச்சி

  //உன்
  கையில எங்கால எடுத்து
  வழிஞ்ச ரத்தம் உறிய//

  இந்தவரிதான் எனக்கு நெருடல்

  ஆசையாயின் பாசமாயின் நேசமாயின் குருதி பருகுதல் ஹராம்
  முடிந்தால் மாற்றி எழுதவும்

  நன்றி//


  ரத்தம் குடிப்பது தவிர்க்கப்பட்டுது[ஹராம்] நான் இங்கே குறிப்பிட்டது குடிப்பதைபோன்றல்ல.

  இருந்தாலும் அந்த வரிகளை நீக்கிடிட்டேன் சந்தேகத்திற்கிடமில்லாமல்
  சரியா?

  பதிலளிநீக்கு
 23. அண்ணாமலையான் கூறியது...
  எல்லாத்துலயும் பூந்து புறப்பட நினைக்கறீங்க போல.. சரி.. வாழ்த்துக்கள்//


  ஹாஹா ஹா. சும்மா பூந்துபார்ப்போமேன்னுதான் அணணாமலையரே..

  பதிலளிநீக்கு
 24. கவிக்கிழவன் கூறியது...
  எழுதுங்கள் வாசிக்க நாங்கள் உள்ளோம்

  /

  மிக்க நன்றி யாதவா..

  Madurai Saravanan கூறியது...
  nalla kavithai .
  /

  மிக்க நன்றி மதுரை சரவணன்

  பதிலளிநீக்கு
 25. புலவன் புலிகேசி கூறியது...
  பாட்டு நலாருக்கு மலிக்கா...அப்புடியே ஏ.ஆர் கிட்ட கொடுத்தா "ஆத்தன்கரை மரமே" மாதிரி மெட்டு போட்ருவாரு
  //

  ஆகா இப்படி உசுப்பேசியே நம்ம பாட்டுக்காரவகளா ஆக்கிடுவாகபோலருக்கே..
  ஆகிடலாமோ..

  மிக்க நன்றி தோழா..

  பதிலளிநீக்கு
 26. சங்கர் கூறியது...
  உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் !!!/

  வாங்க சங்கர்.வாசகனாய் ஒரு கவிஞன் தாங்களீன் அழகான கருத்துக்களுக்கு மிக நன்றி.

  தொடர்ந்து வாருங்கள்..

  பதிலளிநீக்கு
 27. பித்தனின் வாக்கு கூறியது...
  நல்ல கவிதை. நல்ல நடை. வாழ்த்துக்கள் மலிக்கா. பார்த்து பாரதிராஜ கேட்டுடப் போறார். அப்புறம் சிச்சுவேசனல் சாங் சொல்லி படத்துல போடுவார். நன்றி மலிக்கா.
  /

  அதுவேறயா பாரதிராஜா சார்கிட்ட சொல்லிடதீங்க ஓகேவா.

  மிக்க மகிழ்ச்சி மிகுந்த சந்தோஷம் பித்தனின் வாக்கு..

  பதிலளிநீக்கு
 28. விஜய் கூறியது...
  நாட்டுபுற பாடல்கள் அழிந்துவிட்ட நிலையில் அதை நினைவூட்டி மகிழ்வித்ததற்கு மிகுந்த நன்றி சகோதரி./


  எனக்கு நாட்டுபுறப்பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் சகோதரரே. அதன் அதபோலவருதான்னு பார்த்தேன்.
  மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ..

  /தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  விஜய்
  .//

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 29. kamalesh கூறியது...
  ///நமக்கும் நாட்டுபுற பாட்டு வருதான்னு ஒரு டெஸ்டுதான்////

  ரொம்ப நல்லா வருது தோழி டெஸ்ட்ல பாஸ் ..வாழ்த்துக்கள்.. உங்கள் நாட்டுபுற பாடலுக்கும்...புது
  வருடத்திற்க்கும்//


  அப்பாடா பாஸாயிட்டேனா தோழா, மிகுந்த சந்தோஷம்..

  மிக்க நன்றி கமலேஷ்..

  பதிலளிநீக்கு
 30. நட்புடன் ஜமால் கூறியது...
  அருமையாக இருக்கு.

  ராஜவம்சம் சொன்னதை கவணியுங்க

  மிக்க நன்றி ஜமால் அண்ணா..
  கவனிச்சிட்டேன்

  பதிலளிநீக்கு
 31. திவ்யாஹரி கூறியது...
  உயிருக்குள் ஊடுருவி
  உதிரமா ஓடனும் உனக்குள்
  உயிரா ஆகனும்..

  அழகான கவிதை ஆழமான காதல்..
  நல்ல அருமையான வரிகள் தோழி../

  வாங்க திவ்யாதோழி தங்களின் அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள்..  மலர்வனம் கூறியது...
  நறுக்குன்னு குத்திச்சி -என்காலில்
  நறுக்குன்னு குத்திச்சி அத
  கண்ட கண்ல கண்ணீர் -என்
  கண்ணன் கண்ல வழிய -உன்
  கையில எங்கால எடுத்து
  வழிஞ்ச ரத்தம் துடைக்க....


  - Unkal anbu chellathin anbu manasai nekila vaithathu...

  உங்கூட காலமெல்லாம்
  ஒன்னா இருக்கோனும் -சேந்து
  ஒன்னாயிருக்கோனும்
  உயிருக்குள் ஊடுருவி
  உதிரமா ஓடனும் உனக்குள்
  உயிரா ஆகனும்..


  - Nalla maniviyin pasam niraintha varikal.

  Mika Nalla Kavithai Thankachi!
  /

  மிக்க நன்றி மலர்வனம் தொடர்ந்த கருத்துக்களுக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது