நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புத்தாண்டே வா வா
பூத்துக்குலுங்கும்
மலராய்
பிறக்கும்
புத்தாண்டே!!

புத்தம் புதிதாய்
புவிமீது விழும்
நிழலாய்

கரும்புச் சாராய்
கற்க்கண்டு
துகளாய்

மண்ணின் மணமாய்
மாசற்ற
மனமாய்

தேனின் ருசியாய்
தென்றலில்
இசையாய்

மழலையின் சிரிப்பாய்
மனங்களின்
பூரிப்பாய்

வேறுபாடுகளை கழைந்து
வெவ்வேறு
இனமென்பதை மறந்து

மனிதமென்னும்
புனிதமாய்
மனிதர்களென்னும்
எங்களை
மனமொத்து மகிழ்வாய்

வளமான வாழ்வை
வாழ்வதற்கு வழிசெய்ய
வல்ல இறைவனிடம்
வேண்டி வா

வரவேற்கிறோம்
புத்தாண்டே
வசந்தமாய் வா வா...
Bengali New Year-Poila Glitters- Click to get more 
 
 
 
 
 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

 

20 கருத்துகள்:

 1. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. கவிபுயல் மலிக்கா உங்களுக்கும் உங்கள் குடுமப்த்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வாங்க இன்று என் அட்டகாசத்தில் ஷீர் குருமா,

  பதிலளிநீக்கு
 4. நன்று. உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. புத்தாண்டு வாழ்த்துக்கள்..
  http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post_30.html

  பதிலளிநீக்கு
 6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நல்ல உடல்நலத்தோடு எல்லா வளமும் நலமும் பெற்று மனிதநேயம் மேலோங்க சிறந்த நாளாக இன்றும் என்றும் அமையட்டும் எல்லோருக்கும்.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 11. பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக

  நமது வலிகளும் ரணங்களும் அகண்று

  பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 13. ராஜவம்சம் கூறிய...
  "பிறக்கும் புத்தாண்டில் நமது வலிகளும்... ரணங்களும்... அகன்று
  சுகங்களும், சொந்தங்களும் கூடவே வர வாழ்த்துக்கள்!"

  வழி மொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
 14. புத்தாண்டு வாழ்த்துக்கள் மலிக்கா நலமே பொலிக

  பதிலளிநீக்கு
 15. புத்தாண்டு நல்வாழ்த்துகள்..இந்த வார டரியல் உங்க 'அரையடி நாக்கு"..வந்து பாருங்க

  பதிலளிநீக்கு
 16. தங்களுடன் சேர்ந்து நாங்களும் இந்த புத்தாண்டை இனிதே வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. "அரையடி
  ஆறடியை
  வீழ்த்துகிறது..."
  அழகாக உவமித்து இருக்கிறீர்கள். ரசித்தேன்.
  இனிய புத்தாண்டு 2010 வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் அன்புகனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களோடு என்மனமர்ந்த நன்றியும்.

  அனைவரின் வருகையும் கருத்துக்களும் என் ஊக்கத்திற்கு உற்சாக டானிக்.
  தொடர்ந்து வருக கருத்துக்களை அள்ளித்தருக..

  என்றென்றும்
  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது