நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மழைப்போர்வை


தூவி தூவி பெய்தது
தூறல்போட்டு நெய்தது

சாரல் சாரல் அடித்தது
சரம் சரமாய் தொடுத்தது

சன்னல் வழியே பார்க்கையில்
சாடைகாட்டி அழைத்தது

சற்று எட்டிப் பார்க்கும்போது
சரசம் செய்ய துடித்தது

மெல்ல மெல்ல தேகத்தை
முழுவதுமாய் நனைத்தது

செல்லமான மழைதுளிக்கு
முத்தம் ஒன்று கொடுக்கையில்

ஹச்சென்ற தும்மல் வந்து
எங்கள் இறுக்கத்தையே பிரித்தது

நனைந்த தேகம் குளிரக் குளிர
நாடிநரம்பெல்லாம்  நடுங்கியது

கதகதப்பு தேடிய தேகத்திற்க்கு
கையில் போர்வை  கிடைத்தது

இழுத்துப்போர்த்தபோகையில்
போர்வை கேள்வி கேட்டது

காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
காதல் உனக்கு வேண்டுமா?

பட்டென்றென்று பதிலளித்தேன்
காய்ச்சல் தந்தால் போதுமே

வினோதமாய் பார்த்தது
வியப்பாய் ஏனென்று கேட்டது

காய்ச்சல் வந்தால் கூடவே
காதலும் வரும் தன்மையாய்

காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மையாய்

சொல்லி முடிக்கும் முன்னெயே
என்னை மூடிக்கொண்டது போர்வையே......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


46 கருத்துகள்:

  1. அருமையான, அடுக்கு வார்த்தை நிறைந்த கவிதை...
    மல்லிகா... நீங்க கில்லிக்கா...

    பதிலளிநீக்கு
  2. வாவ்..எவ்ளோ எளிமையான வரிகள், பல முறை படித்துப் பார்த்தேன், வரிகள் கொஞ்சி குலாவுதுங்க. மழை வந்தாலும் வந்துச்சு கவிஞ்ர்களுக்கு கவிதையையும் சேர்த்துல கொண்டு வந்துருக்கு. உடல் நலம் பரவாயில்லையா?

    பதிலளிநீக்கு
  3. மழையைப் பற்றி எழுதினாலே கவிஞர்களுக்கு அத்தனை சந்தோசம்தான். வாசிப்பவர்களையும் இழுத்து நனைய வைத்துவிடுவார்கள், எனபது சரியாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ///செல்லமான மழைதுளிக்கு
    முத்தம் ஒன்று கொடுக்கையில்///

    அன்று பெற்ற
    முத்தத்தை
    இன்று கால் தொட்டு
    கடன் தீர்க்கிறது
    கடல் அலையாய்

    என்பதுபோல் மென்மையான கவிதை.

    நல்லா இருக்கு சகோதரி. தொடர்ந்து கலக்குங்க.

    பதிலளிநீக்கு
  5. //காய்சல் வந்தால் கூடவே
    காதலும் வரும் தன்மையாய்

    காதல்வரும்போதிலே அதனுடன்
    கவிதையும் வரும் மென்மையாய்//

    சரிதான்...அப்படி பிறந்ததுதானோ இதுவும்...காய்ச்சல் தொடர வாழ்த்துக்கள்....

    கவிதை அழகு...

    பதிலளிநீக்கு
  6. மழையால் காய்ச்சலா?காதலா?-எது என்றாலும் உங்கள் கவிதை அருமை தோழி !!!

    பதிலளிநீக்கு
  7. வெகு அருமை .
    நனைந்தேன் கவிதைமழையில்
    குளிர்ந்தது மழைப்போர்வை...

    பதிலளிநீக்கு
  8. மலிக்காவிற்கு காய்ச்சல் வந்ததோ, காதல் வந்ததோ தெரியாது. கவிதை வந்துடுச்சின்னு கன்ஃபர்மா தெரியுது.. பட்டய கெளப்புங்க

    பதிலளிநீக்கு
  9. மழைபோலவே பட்டுத்தெறிக்கும் வரிகள்.சாரலில் நனைந்தேன் கொஞ்சம்.

    பதிலளிநீக்கு
  10. //காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
    காதல் உனக்கு வேண்டுமா?

    பட்டென்றென்று பதிலளித்தேன்
    காய்ச்சல் தந்தால் போதுமே
    //

    ரசனையா சொல்லியிருக்கீங்க சகோ...

    ரொம்ப ரசித்து மழையோடு பேசுவது உரையாடுவது போன்றே இருந்தது..

    பதிலளிநீக்கு
  11. Malikkavirku kaichal vanthathu
    Athu nalla kavithaiyaiyum thanthau

    Avarathu varikalil inimai thullum
    Padippar nenchai allum

    Avarin kavithai padikavendum thinam
    Evvaru koorukirathu enkal manam

    Kaichal vanthathal thunpam
    Kavithai thanthathal enpam

    (Eppadi yunka sisyanooda kavithai?)

    Valthum...
    Shamir

    பதிலளிநீக்கு
  12. Manasukku pidicha saral malaiyil nanaitha sugam kidathathu...

    Padam kollai alagu!

    Anbudan
    Mrs. Sabira Syed

    பதிலளிநீக்கு
  13. \காய்ச்சல் வந்தால் கூடவே
    காதலும் வரும் தன்மையாய்.......//

    :-) :-) : -)

    கலக்குறீங்க...!

    இங்கயும் நல்ல மழை மலிக்கா....
    படிச்சதே மழைல நனைஞ்ச ஒரு அனுபவம் போல இருக்கு..!

    பதிலளிநீக்கு
  14. Mallikai pookakai thoduthu poocharam kattuvathupool menmaiyana varthaikalal miruthuvanan kavithai saikereerkal...

    Samayal saiyum unkal kaikalil saraswathi kudierukkiral!

    Unkal kavithaiyin mikapperiya palam : Unkal kavithai kanniyamai veedil ellarum padikkaramathiri... nalla irrukku...

    Kadawul aparithamana thiramaiyai unkalukku koduthu irrukiran...

    Unkalai sinakithiyaai pavithu mariyathai koduthu... penmaiyai poodrum unkal anbu kanavarum nichayam paratukkoriyavarthan!

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  15. சூப்பர்... ப்ரிண்ட் எடுத்துட்டேன். ஊருக்கு போயி என் மகனுக்கு சொல்லிக்கொடுக்கணும்.

    பதிலளிநீக்கு
  16. //இழுத்துப்போர்த்தபோகையில்
    போர்வை கேள்வி கேட்டது

    காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
    காதல் உனக்கு வேண்டுமா?/

    நானும் ஒரு மழைக் காதலன்தான்..கவிதையை மழையாய் பொழிந்து விட்டீர்கள் மலிக்கா....

    பதிலளிநீக்கு
  17. தாளத்துடன் படிக்கிற விதமாக உங்கள் கவிதை இருந்தது. அருமை.

    பதிலளிநீக்கு
  18. அருமையான வரிகள் ...அநுபவத்திலிருந்து போல ...வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  19. தேர்ந்த வார்த்தை துளிகளை மழையின் நூலெடுத்து கோர்த்த அழகான கவிதை மாலை ... வாழ்த்துக்கள் .... நான் ஒரு மழை கிறுக்கு, உங்க கவிதையை படித்த உடனே நினையனுமுனு கொள்ளை ஆசை வந்துட்டு .... நேற்று என் கண்ணோடு கொட்டி தீர்த்த காதல் மழை இன்றும் வாராதோ ..............

    பதிலளிநீக்கு
  20. காதல்வரும்போதிலே அதனுடன்
    கவிதையும் வரும் மென்மையாய்
    நல்ல அர்த்தங்கள் தோழியே

    பதிலளிநீக்கு
  21. காதல்வரும்போதிலே அதனுடன்
    கவிதையும் வரும் மென்மையாய்
    நல்ல அர்த்தங்கள் தோழியே

    பதிலளிநீக்கு
  22. /கலையரசன் கூறியது...
    அருமையான, அடுக்கு வார்த்தை நிறைந்த கவிதை...
    மல்லிகா... நீங்க கில்லிக்கா...
    /

    கருத்துக்களுக்கு மிக்க நன்றி கலை..

    அதுசரி யாரந்த? மல்லிக்காவும் கில்லிக்காவும்.

    எழுதியது மலிக்காவான நான் ஆனால் பாராட்டு மல்லிக்காவுக்கும் கில்லிக்காவுக்குமா? [ஹா ஹா ஹா]

    பதிலளிநீக்கு
  23. நானும் மழையில் நனைந்த அனுபவத்தை உணர்ந்தேன் மிக அருமை...

    பதிலளிநீக்கு
  24. மலிக்கா ரொம்ப அழகா மழையை பதிவு செய்து இருக்கிறீர்கள் ,சூப்பர்

    பதிலளிநீக்கு
  25. மிக சரியான வார்த்தைகளால் வடிவமைத்த இந்த கவிதை மழை அசர வைக்கிறது, தோழி!!

    பதிலளிநீக்கு
  26. //காதல்வரும்போதிலே அதனுடன்
    கவிதையும் வரும் மென்மையாய்//


    அருமை மலிக்கா நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  27. Elakiya Kavingaree!

    Cinema padalukkuriya alakum, santha layamum rasikka vaithathu...

    Keep it up!

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  28. Bharathirajavin basumaiyana kiramathu padathil varum eniya padal mathiri irrukku....

    - Rasikan

    பதிலளிநீக்கு
  29. SUFFIX கூறியது...
    /வாவ்..எவ்ளோ எளிமையான வரிகள், பல முறை படித்துப் பார்த்தேன், வரிகள் கொஞ்சி குலாவுதுங்க. மழை வந்தாலும் வந்துச்சு கவிஞ்ர்களுக்கு கவிதையையும் சேர்த்துல கொண்டு வந்துருக்கு. உடல் நலம் பரவாயில்லையா?/

    ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஷஃபியண்ணா.
    கவிதையை திரும்ப திரும்ப படிச்சதற்க்கும். என்னை அன்போடு விசாரித்தமைக்கும் மிகுந்த மகிழ்ச்சி

    அல்ஹம்துல்லிலாஹ். குணமாகிட்டது.அடம்பிடித்தது கவிதை எழுதாமல் காய்ச்சல் போகமாட்டேன்னு.. எழுதியதும் போயேபோச்சு.. மிக்க நன்றி ஷஃபியண்ணா..

    பதிலளிநீக்கு
  30. /S.A. நவாஸுதீன் கூறியது...
    மழையைப் பற்றி எழுதினாலே கவிஞர்களுக்கு அத்தனை சந்தோசம்தான். வாசிப்பவர்களையும் இழுத்து நனைய வைத்துவிடுவார்கள், எனபது சரியாகத்தான் இருக்கிறது./

    மழையில் நனைந்தமைக்கு மகிழ்ச்சி
    நவாஸண்ணா..

    பதிலளிநீக்கு
  31. /S.A. நவாஸுதீன் கூறியது...
    ///செல்லமான மழைதுளிக்கு
    முத்தம் ஒன்று கொடுக்கையில்///

    அன்று பெற்ற
    முத்தத்தை
    இன்று கால் தொட்டு
    கடன் தீர்க்கிறது
    கடல் அலையாய்

    என்பதுபோல் மென்மையான கவிதை./

    மழையை கண்டதும் மனம்போடும் ஆட்டமிருக்கே சிறுபிள்ளாயாய்மாறி துள்ளீக்குதிக்கச்சொல்கிறது,அண்ணா
    அதான் கவியாய் மழைக்குள் குதித்து குளிச்சாச்சி..

    /நல்லா இருக்கு சகோதரி. தொடர்ந்து கலக்குங்க./
    தொடர்ந்த ஊக்கமும் அன்பும் நெகிழ்ச்சியைதருகிறது நவாஸண்ணா..

    பதிலளிநீக்கு
  32. /க.பாலாசி கூறியது...
    //காய்சல் வந்தால் கூடவே
    காதலும் வரும் தன்மையாய்

    காதல்வரும்போதிலே அதனுடன்
    கவிதையும் வரும் மென்மையாய்//

    சரிதான்...அப்படி பிறந்ததுதானோ இதுவும்...காய்ச்சல் தொடர வாழ்த்துக்கள்....

    கவிதை அழகு.../

    அப்படியே பிறந்ததுதான் பாலாஜி..காய்ச்சல் விட்டுக்கொடுத்து கவிதையை தொடரச்சொல்லி போய்விட்டது ஜி.

    மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  33. /பூங்குன்றன்.வே கூறியது...
    மழையால் காய்ச்சலா?காதலா?-எது என்றாலும் உங்கள் கவிதை அருமை தோழி !!!/

    மழைமேல் கொண்ட காதலால் காய்ச்சல்வந்தது
    காய்ச்சல்வந்ததால் கவிதையை தந்தது.
    நன்றி தோழனே..

    பதிலளிநீக்கு
  34. /வாசமுடன் கூறியது...
    வெகு அருமை .
    நனைந்தேன் கவிதைமழையில்
    குளிர்ந்தது மழைப்போர்வை...
    /

    ஓ அப்படியா. மிக்க நன்றி நன்றி வாசமுடன்..

    பதிலளிநீக்கு
  35. /அண்ணாமலையான் கூறியது...
    மலிக்காவிற்கு காய்ச்சல் வந்ததோ, காதல் வந்ததோ தெரியாது. கவிதை வந்துடுச்சின்னு கன்ஃபர்மா தெரியுது.. பட்டய கெளப்புங்க/

    ஓஹோ, மிகுந்த மகிழ்ச்சி அண்ணாமலையாரே. தொடர்வருகைக்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  36. / ஹேமா கூறியது...
    மழைபோலவே பட்டுத்தெறிக்கும் வரிகள்.சாரலில் நனைந்தேன் கொஞ்சம்./

    சாரலில் நனைந்த தோழிக்கு சந்தமாய்
    சரம் சரமாய் நன்றி..

    பதிலளிநீக்கு
  37. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
    //காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
    காதல் உனக்கு வேண்டுமா?

    பட்டென்றென்று பதிலளித்தேன்
    காய்ச்சல் தந்தால் போதுமே
    //

    ரசனையா சொல்லியிருக்கீங்க சகோ...

    ரொம்ப ரசித்து மழையோடு பேசுவது உரையாடுவது போன்றே இருந்தது../

    ஆமா சகோ, எல்லாத்தோடவும் பேசக்கற்றுக்கொண்டிருக்கிறேன் இப்போதுதான் அ, ஆ வில் நிற்கிறது.

    இன்னும் நிறைய கற்று பேசி உரையாடனும் இயற்க்கையோடு..

    ரொம்ப சந்தோஷம் சகோ..

    பதிலளிநீக்கு
  38. /வானம்பாடிகள் கூறியது...
    நல்ல கவிதை. பாராட்டுகள்./

    மிகுந்த சந்தோசம் வானம்பாடிகள்..


    /மலர்வனம் கூறியது...
    kavingarukku kaichal alakana kavithaiyai thanthathu..//

    மிக்க நன்றி மலர்வனம்...

    பதிலளிநீக்கு
  39. மலர்வனம் கூறியது...
    Malikkavirku kaichal vanthathu
    Athu nalla kavithaiyaiyum thanthau

    Avarathu varikalil inimai thullum
    Padippar nenchai allum

    Avarin kavithai padikavendum thinam
    Evvaru koorukirathu enkal manam

    Kaichal vanthathal thunpam
    Kavithai thanthathal enpam

    (Eppadi yunka sisyanooda kavithai?)

    Valthum...
    Shamir/

    அழகாய் ஒரு கவிதை தந்த சமீருக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  40. லெமூரியன்... கூறியது...
    \காய்ச்சல் வந்தால் கூடவே
    காதலும் வரும் தன்மையாய்.......//

    :-) :-) : -)

    கலக்குறீங்க...!

    இங்கயும் நல்ல மழை மலிக்கா....
    படிச்சதே மழைல நனைஞ்ச ஒரு அனுபவம் போல இருக்கு..!/

    அப்படியா. ரொம்ப சந்தோஷம் லெமூரியன்..

    பதிலளிநீக்கு
  41. /பீர் | Peer கூறியது...
    சூப்பர்... ப்ரிண்ட் எடுத்துட்டேன். ஊருக்கு போயி என் மகனுக்கு சொல்லிக்கொடுக்கணும்/

    ஹய் அப்படியாரொம்ப சந்தோஷம் . மருமகப்பிள்ளைக்கு மழைப்பாடல் இந்த மாமிதந்ததுன்னும் சேர்த்து சொல்லிடுங்க பீர் அண்ணா...

    பதிலளிநீக்கு
  42. /புலவன் புலிகேசி கூறியது...
    //இழுத்துப்போர்த்தபோகையில்
    போர்வை கேள்வி கேட்டது

    காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
    காதல் உனக்கு வேண்டுமா?/

    நானும் ஒரு மழைக் காதலன்தான்..கவிதையை மழையாய் பொழிந்து விட்டீர்கள் மலிக்கா....
    /

    மழைக்கு மயங்காத மனமும் உண்டோ
    என்பதுபோலிருக்கிறது நந்தான் மழைகிறுக்கு நினைத்தா நிறையபேர் இருக்குக்காங்கன்னு இப்போதுதான் தெரியுது தோழனே. மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  43. /Chitra கூறியது...
    தாளத்துடன் படிக்கிற விதமாக உங்கள் கவிதை இருந்தது. அருமை./

    மிக்க நன்றி தோழி சித்ரா..

    பதிலளிநீக்கு
  44. /கருணையூரான் கூறியது...
    அருமையான வரிகள் ...அநுபவத்திலிருந்து போல ...வாழ்த்துக்கள்/


    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கருணையூரான்..

    சந்தேகமேயில்லை அனுபவமேதான்...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது