நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கவிதையும்நானும் 100,யும்தாண்டி


100, ருக்கு மேல் எழுதிவிட்டேனா கவிதைகள் எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது,

கவிதைகள்  எழுதும்போதே
உள்ளுக்குள் நீரூற்று பீறிட்டு பாய்க்கிறது, வால்கட்டிய பட்டம் வானைநோக்கிய பயணம்போல்
சிந்தனைகள் அனைத்தும் கவிதைகளுக்காக ரெக்கைகட்டிப்பறக்கிறது,
வெள்ளையருவி பார்த்ததும் துள்ளிக்குதித்தாடும் பிள்ளைமனம்போல்
விழிப்பார்வைகள் காணும் இடமெல்லாம் கவிதைகளாக்கி காணத்துடிக்கிறது.

எண்ணங்களை எழுத்துக்களாக்கி
எழுத்துக்களை காட்சிகளக்கி
காட்சிகளை வரிகளாக்கி
வரிகளை கோர்வையாக்கி
கோர்வைகளோடு கவிதையை
படைப்பதில்தான் எத்தனை ஆனந்தம்.

கவிதையெழுத கடந்துவந்தபாதையை
திரும்பிப்பார்த்து ரசிக்கிறேன்
என்னோடு உங்களை ரசிக்க அழைக்கிறேன்

என் அன்புமச்சானின் [கணவர்] அன்பும் இதற்கு ஒரு பெருங்காரணம் அவர்களின் ஊக்கம் இல்லாதிருந்தால் இத்தனை அளவிற்கு என்னால் எழுதியிருக்கமுடியாது.
அவர்கள் துபையிலிருந்து ஊருக்குவரும்போது கடிதம் எழுதுவதற்காக கொண்டுவந்து தரும் அத்தனை லட்டர் பேட், டைரிகளில்,
கத்தைக்கத்தையாய் கவிதைகளை காகிதமுழுவதும் எழுதி அதை மீண்டும் மீண்டும் படித்துரசிப்பதுதான் என் வேலை.

முதல் குட்டிகவிதை பெயர்மாற்றி 17 வயதில். இரு இதழ்களுக்கு அனுப்பியது. ஒற்றுமை இதழுக்கு பின்னூட்டங்கள் அனுப்பியது என ஞாபக்கிடங்கினுள் அத்தனையும் புதைந்து மிதந்து கொண்டிருக்கிறது.

துபை வந்தபின்பும் இங்கு நடக்கும் அத்தனைபதிவுகளையும் அப்ப மனதில் காப்பி [அச்சோ அந்த காஃபியல்ல]எடுத்துவந்து வீட்டில் அமர்ந்திருக்கும் நேரம் அதேபோல் லட்டர் பேடுகளில் கிறுக்கிவைத்திருந்த போதுதான் ஒரு சமயம் வீட்டிற்குவந்த சினேகிதி, தமிழ்குடும்பம் என்ற

ஒரு வெப்ஷைட் உண்டு அதை பாருங்கள் அத்தனையும் உங்களுக்கு பிடித்த அழகிய தமிழில் என சொல்லிச்சென்றாள் அன்றே அதில் உறுப்பினராக இணைந்தேன். முதலில் சிந்தனைக்கு சில என ஆரம்பித்தேன். பின் கவிதைகளைத்தந்தேன், ஒரு 7, 8, கவிதைகளிலேயே நல்ல வரவேற்பு மகிழ்ச்சிவெள்ளத்தில் மிதந்தேன்,

தொடர்ந்து உணர்வுப்பூர்வமாய் கவிதைகளைத்தரச்சொல்லி உறுப்பினர்களும் ஆதரவுதர, முதல்முறையாக எனக்கென்று கவிதைகென தனிபகுதி //மலிக்காவின் வரிகள்// என தமிழ்நேசன் அண்ணா, தந்து என்னை ஊக்கம் கொடுத்து எழுதச்சொன்னார்கள்.

சும்மாவே எழுதிகிறுக்கிய எனக்கு ஊக்கங்கள் தொடர்ந்துவர நம்மால் எதுவும் செய்யமுடியுமென, அறிவுப்பகுதி. விடுகதை. பட்டிமன்றம். என்று ஆரம்பித்தேன். [நாங்களும் பட்டிமன்றத்தீர்ப்பும் சொல்லியிருக்கோமுல்ல. நாகரீகமா—கலாச்சாரமா என்ற தலைப்பிற்கு] கைவண்ணக்கலை, தையல், மருதாணி டிசைன், பெயிண்ட் ஒர்க். ஜுவல் ஒர்க். சமையலில் புதிது, என எனக்கு தெரிந்தவகையில் தமிழ்குடும்பத்தில் புகுந்துவிளையாடி எனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் என்னை தமிழ்தேர் [அமீரகத்தித்தில் வெளியாகும் மாத இதழ்] இதழிலிருந்த சிம்மபாரதி அவர்கள், கவிதைகள் எழுதிதரும்படி அழைத்தார்கள். மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்

அதுவும் ஆண்டுமலர் வெளியாகும் சமயம், விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், அழைத்ததற்கு ஒரு நன்றி சொல்லலாமே என ஒரு கவிதை என நானாக நினைத்து கிறுக்கியதை அனுப்பிவைத்தேன், விழா அன்று என்னால் கலந்துகொள்ளமுடியாமல்போனதால் ஆண்டுமலர் சிம்மபாரதியிடம் பெற்றுக்கொண்டேன், அதில் பார்த்தால் நான் இதழ் வாழ்த்துக்காகஎழுதிய கவிதையை பிரசவம் [பிரசுரம்]செய்திருந்தார்கள்.

முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ்


           த ன்னம்பிக்கையென்னும் தைரியத்துடன்
     
          மி ருதுவான மனிதனாய்  மனசாட்சியோடு வாழ்ந்திடு

  வாழ்க்கை முழுதும் வசந்தம் பூ பூக்கும்

தமிழ்குடும்பத்தில் விண்ணப்பம் கொடுத்து
தமிழ்தேரை வடம்பிடிக்க விடுத்தது அழைப்பு
தமிழர்கள் ஒன்றுகூடி தமிழினை தொகுத்து
தமிழின் கழுத்தில்போடுவோம் தமிழ்மாலை தொடுத்து
திருவாரூர் தேருக்கு என்றும் இருக்குது மவுசு
தமிழால் தமிழ்தேருக்கு இனி கிடைக்கும் தனிசிறப்பு
தமிழரென்பதில் பெருமிதம் எனக்கு
தமிழினமே ஒன்றுபட்டு தமிழ் வடத்தைபிடிப்போம் இழுத்து

முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ்,என
அனைத்தையும் இணைத்து
தரணியெங்கும் பாடிடுவோம் தமிழ்தாய் வாழ்த்து.

அம்மாடியோ நான் எழுதிய கவிதை அதுவும் வெளிநாட்டு தமிழ் இதழில் பார்த்தபோது ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப்பார்த்தது,எனக்குள் என்னிலடங்கா பூக்கள் பூத்துக்குலுங்கின படபடத்தபடியே பறவைகளின் கீச்சு கீச்சு ஒலிகேட்டது.மனமெல்லாம் மகிழ்ச்சி ராகம் இசைத்தது.

அந்த மாத தலைப்பாய் /எதைத்தேடுகிறோம்/ வந்தது எழுதினேன் ஏதோ என் அறிவுக்கு எட்டிய வரையில். கவிதை எழுதியவர்களே கவிதையை வாசிக்கனும் என்பது தமிழ்தேரின் கொள்கை. அதுவும் சரிதானே எழுதியவருக்குத்தானே அதை எப்படி வாசிக்கனும் என்று தெரியும். மாதா மாதம் இதழ்வெழியீட்டுவிழா நடக்கும், அதில் வாசிக்கவேண்டும் நாம் எழுதிய கவிதைகளை, அந்தமாதம் என்னை அழைத்தபோது என்னால் முடியாது என மறுத்துவிட்டேன், பயம் ஒருபுறம். பதட்டம் ஒருபுறம் [மேடையேறியெல்லாம் பலக்கமா நமக்கு ஹா ஹா ஹா]

இருமாதங்கள் கழித்து /கோடையும் வாடையும்/ தலைப்பு
இதற்காவது வாசிங்கப்பா, என்றபோது சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று எழுந்தால் கடகடவென காலெல்லாம் நடுநடுங்கியதே பார்க்கனும், உதறல் எடுத்த கைகளை காட்டிக்கொள்ளாமல் குனிந்த தலை நிமிராமல் [நிமிர்ந்தா எதிர்த்தாப்புல இருப்பவங்களப்பாத்து இந்த பச்சபுள்ள பயந்துடுவேனுல்ல]மைக் எடுத்து [ஹலோ மைக் டெஸ்டிங் கேட்குதா என மைக் டெஸ்டிங்கெல்லாம் பண்ணலிங்கோ] ஒருவழியா கவிதையை வாசித்து முடித்ததும் எழுந்ததே கரஹோஷம், காதில் இன்னும் ஒலிக்கிறது[முதல் முறையல்லவா அப்படித்தானிருக்கும்] அப்படியே பூமிக்குள் புதைவதை போலிருந்தது, எப்படி நடந்து என் சீட்டுக்கு வந்தேனென தெரியவில்லை.

சரி சரி எப்படி பிளாக் ஆரம்பிச்சேன்னு சொல்லிடுறேன்.
என்அண்ணன் முகம்மது ஆரீஃப் ஊரிலிருந்து இங்கு [துபை] வந்திருந்தது, அப்போது எனக்குள் இருக்கும் திறமைகளை பார்த்து[ஹே காலரை தூக்கிவிடுகிறேன்]
நீயே தனியாக அனைத்தையும் செய்யவும்,சேமித்துவைக்கவும் ஒரு வழியுண்டு எனசொல்லிவிட்டு ஊருக்குப்போய் அங்கிருந்து என் பெயரில் ஒரு பிளாக் ஓப்பன் செய்து இதில் எல்லாவற்றையும் சேர்த்து வெளியிடு என்று சொன்னார்கள், கேட்கவா வேணும் புகுந்துட்டமில்ல,முதலில் /கவிதைக்களஞ்சியம்/ என்று இருந்த பிளாக்கை மாற்றிவிட்டு பின்பு நீரோடை என இந்தபிளாக்கை திறந்து இதை கவிதைகளுக்கு மட்டும் என்று வைத்துவிட்டு, /கலைச்சாரல்/ என்று மற்றொன்றையும் திறந்து அதில் நம்ம கைவண்ணக்கலைகளையும் வெளியிடுகிறேன்.

இந்த பிளாக் திறந்து மூன்றுமாதம் முழுமையடைத்துவிட்டது இரண்டுமாதங்களாக தமிலிழ்ஸ், தமிழ்மணம், பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் தானாக படைப்புகளை சேர்த்துவைத்துவிட்டு பின்பு மற்றவர்களின் பிளாக்பக்கம் போனபோதுதான் இப்படிதான் செய்யனும் என ஒரு விபரம் கிடைத்தது. இடையில் ஃபாலோவர்ஸ் காணாமல்போய் சுஹைன்னாக்காத்தான் கண்டுபிடிச்சி தந்தாங்க. முதன்முதலில் சாருக்கா விருதுதந்து மேலும் ஊக்கம்படுத்தினாங்க.
அப்புறம் ஜலீலாக்கா மேனகா, ஸாதிக்காக்கா. எல்லாரும் எனக்கு விருதுகள் கொடுத்து ஊக்கம் ஆதரவும் கொடுக்கிறார்கள்.

பின்பு தமிழ்குறிஞ்சியிலும்.[இணைய இதழ்] தமிழ்த்தோட்டதிலும் எழுதி தரச்சொல்லிக்கேட்டாங்க அங்கும் தருகிறேன். அப்புறம்

சுதந்திரமே சுதந்திரமே, http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp கவிதையெழுதிய அன்று யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்காக தேர்ந்தெடுத்திருந்தாங்க.

நம்ம தியாவின் பார்வையில் மலிக்காவும் கவிதையையும் ஒரு ஆய்வு நடத்தியிந்தாங்க. அதிலிருந்து புரிந்துகொண்ட விசயம் ஏராளம் கவிதைக்குள்ளும் இத்தனையிருக்கா என்று..http://theyaa.blogspot.com/2009/11/blog-post_20.html [மிகுந்த மகிழ்ச்சியான விசயம்]

வலைச்சரத்தில் ஐந்தாம் நாளில் http://blogintamil.blogspot.com/2009/11/blog-post_27.html என் இரு தளங்களையும் தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியிருந்தாங்க.

இந்நேரம் .காம். என்ற இணையம் என் தளத்தை அறிமுகப்படுத்தலாமா என கேட்டு இருக்காங்க.
ரொம்பவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..

விரைவில் /ஒரு ரசிகனின் டைரி/ என்று திருச்சி சையத் அவர்கள் வெளியிடுகிறார்கள் அதிலும் என்கவிதைகள் வரவிருக்கின்றன.
இத்தனைக்கும் உறுதுணையாய் என் மச்சான்..

நம்முடைய எழுத்துக்கள் பிறறை சாரும்போது அது நல்எண்ணங்களாக சேரவேண்டும் என்பதுதான் என்நோக்கம்
எண்ணும் எண்ணங்கள் உயர்ந்ததாக இருந்தால் எல்லாமே உயர்வாக இருக்கும். நமக்குள் இருக்கும் திறமைகளை நாமே மூடிவைத்துக்கொண்டால் அதுவால் என்ன பயன்

பிறந்துவிட்டோம் இறப்பதற்குமுன்னால் எதாவது நல்லது செய்துவிடுவோம் என்ற நல்நோக்கமிருந்தால் எதையும் செய்வோம்.

என் எழுத்துபணி நல்லவிதமாக அமையவேண்டும், பிறறின் மனம் நோகாதவாறு என் எழுத்துக்கள் சொல்லும் எதுவும் பயன்தராமல் வீணாகாதவாறும் இருக்கவேண்டும். பொய்களை முடிந்தவரை தவிர்த்து எழுதவேண்டும்[[சிரிப்பதுபோல் தெரிகிறது கவிதைக்கே பொய்தானே அழகு என சொல்வது காதில் கேட்கிறது] நல்லெண்ணங்கள் உருவாக என்எழுத்துக்கள் ஒரு காரணமாக அமையவேண்டும் என்பதுதான் என் உளமார்ந்த ஆவல்.

அதற்கு தாங்களைவரின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.நாம் ஒரு மனிதன் மேலே செல்வதற்கு ஏணியாக இல்லாவிட்டாலும் கீழே விழுந்துவிடாவன்னம் அவனுக்கு ஒரு கையாவது கொடுத்து பிடித்து இழுக்கவேண்டும். நீங்களைனைவரும் இதுவரையில் கொடுத்துவந்த ஆதரவுபோல் மேலும் என் படைப்புகளுக்கு கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுக்க இன்னும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்..

இதுவரை நான் எழுதிய எழுத்துக்களிலும் பின்னுட்டங்களிலும் யார்மனதும் நோகும்படி எழுதியிருந்தால் இறைவனுக்காக என்னைமன்னிக்கவும்

எனக்கு தமிழில் நிறைய எழுத்துப்பிழைகள் வருகிறது இருந்தபோதிலும் தமிழ்மீதிருந்த அளவுகடந்த பிரியத்தினால்தான் என்னால் என் எண்ணங்களுக்கு எழுதவடிவம் கொடுக்கத் தூண்டுகிறது. முடிந்தவரை பிழைகள்வராதவாறு எழுத முயற்ச்சிகிறேன்

நிறைகுறைகளிருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்,
தட்டிக்கொடுப்பதுமட்டுமல்ல நட்பு
தவறிழைக்கும்போது தட்டிக்கேட்ப்பதும்தான் நட்பு.
இதுவரை எனக்கு ஊக்கமும் ஆதரவும் தந்ததுபோல் தொடர்ந்துவரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்..
தாங்களனைவருக்கும் என்மனமார்ந்த நன்றியினை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்..

என்றென்றும்
அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

61 கருத்துகள்:

  1. கவிதை நூறு...! :-) :-)
    கலக்குங்க...!
    வாழ்த்துக்கள்........பாக்கற விஷயத்தைலாம் எப்டி கவிதையாக்ராதுன்னு கத்து குடுங்க மலிக்கா..!
    :-) :-)

    பதிலளிநீக்கு
  2. 100 (க)விதைகளுக்கு வாழ்த்துக்கள்..வேறூன்றி வளர்ந்திருக்கிறது இந்த 100 க(விதை)..

    //த ன்னம்பிக்கையென்னும் தைரியத்துடன்

    மி ருதுவான மனிதனாய், மனசாட்ச்சியோடு வாழ்திடு

    வாழ்க்கை முழுதும் வசந்தம் பூ பூக்கும்//

    தமிழுக்கு ஒரு கவிதை...நன்றி மலிக்கா...

    பதிலளிநீக்கு
  3. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் blog உலக experience சொன்ன இந்த கட்டுரையில் உங்கள் வளர்ச்சி தெரிகிறது. தொடரட்டும் உங்கள் பணி

    பதிலளிநீக்கு
  4. நூறு கவிதைகளா.இப்பவே கண்ணை கட்டுதே.உங்களின் தமிழ் ஆர்வம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.மிகுந்த மகிழ்ச்சியும்,
    வாழ்த்துக்களும் உரித்தாகுக.

    மென்மேலும் பலநூறு கவிதை எழுதி தமிழுக்கு தொண்டு செய்ய வாழ்த்துக்கள் தோழி.

    எப்போ ட்ரீட்?

    பதிலளிநீக்கு
  5. 100 க்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள் 100 யை தாண்டி.. உங்களது ப்ளாக் மென்மேலும் பயனுள்ளதாய் ஆக பிரார்த்திக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. நல்ல நெடிய பயணம், சீரான வளர்ச்சியும் பெற்று இருக்கின்றீர்கள். தங்கள் வலையுலக அனுபவத்திற்க்கு முன் நான் ஒரு குழந்தை. தங்களின் நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் ஆயிரம் ஆயிரம் இடுகைகள் இட வாழ்த்துக்கள். இனி தங்களின் கவிதைகளை நானும் படிக்கின்றேன். நன்றி. ஆமா துபையில எங்க இருக்கீங்க குறுக்கு சந்துதான?

    பதிலளிநீக்கு
  7. நிஜமாகவே பிரமிப்பாகத்தான் இருக்கிறது உங்கள் எழுத்துப்பயணம். உங்கள் ஆர்வம், தன்னம்பிக்கை, உங்களின் வளர்ச்சி என்று எல்லாமே பாராட்டுக்குறியவையன்றி வேறில்லை.

    இனியும் தொடர்ந்து மெருகேற்றவும் நல்ல படைப்புகளைத்தந்து. நீங்களே கூரியதுபோல் எழுத்துப்பிழைகளில் சிறிது கவனமெடுத்துக்கொள்ளவும். மற்றபடி உங்கள் சிந்தனைக்கு குறைவில்லை.

    மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  8. /லெமூரியன்... கூறியது...
    கவிதை நூறு...! :-) :-)
    கலக்குங்க...!
    வாழ்த்துக்கள்........பாக்கற விஷயத்தைலாம் எப்டி கவிதையாக்ராதுன்னு கத்து குடுங்க மலிக்கா..!
    :-) :-)/

    மிக்க நன்றி லெமூரியன்.

    காட்சிகளை பார்க்கும்போதே மனதிற்குள்வைத்துப்பூட்டுங்கள்
    எழுததொடங்கும்போது பூட்டிய காட்சிகளை கண்முன்கொண்டுவாருங்கள் அப்புறமென்ன கவிதைதான்..

    பதிலளிநீக்கு
  9. /சென்ஷி கூறியது...
    வாழ்த்துகள்/

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சென்ஷி, தொடர்ந்துவாருங்கள்..

    பதிலளிநீக்கு
  10. /புலவன் புலிகேசி கூறியது...
    100 (க)விதைகளுக்கு வாழ்த்துக்கள்..வேறூன்றி வளர்ந்திருக்கிறது இந்த 100 க(விதை)..

    //த ன்னம்பிக்கையென்னும் தைரியத்துடன்

    மி ருதுவான மனிதனாய், மனசாட்ச்சியோடு வாழ்திடு

    வாழ்க்கை முழுதும் வசந்தம் பூ பூக்கும்//

    தமிழுக்கு ஒரு கவிதை...நன்றி மலிக்கா.../

    மிகுந்த சந்தோஷம் தோழமையே,
    தோழமையின் தொடர்ந்த ஊக்கம் தொடர்ந்துவரும்போது, 100 ரென்ன ஆயிரத்தையும் தொடலாம்..

    மிக்க நன்றி புலிகேசி...

    பதிலளிநீக்கு
  11. /க.பாலாசி கூறியது...
    vazhthukkal thozhiye. thodarungal ungal payanathai...../

    வாழ்த்துக்கு மகிழ்ச்சி தோழனே.
    மிக்க நன்றி பாலாஜி

    பதிலளிநீக்கு
  12. உங்கள் வெற்றிக்கு பின்னால்
    மச்சானின் உழைப்பும் இருக்கு
    உங்களுக்கு வாழ்த்து கூரும் முன்
    மச்சானுக்கு நன்றி கூறுவதின் மூலமே உங்களை வாழ்த்துவது முழுமை பெரும்

    நன்றியும் வாழ்த்துகலும்

    பதிலளிநீக்கு
  13. உங்களுடைய இந்த பதிவை பார்க்கும் போது
    நானும் உங்களை போல வரணும் என்ற எண்ணம் வருகிறது
    thanks for your sharing....
    மல்லிகா...

    பதிலளிநீக்கு
  14. 100 கவிதைகளா?ஆச்சர்யமா இருக்குப்பா.வாழ்த்துக்கள் மலிக்கா!மேலும் கலக்குங்க...

    பதிலளிநீக்கு
  15. இவ்வளவு விசயங்க நீங்க சொன்னபிறகுதான் தெரியுது...

    தொடர்ந்து எழுதுங்க, சமூகத்தில் ஒரு விழிப்புணர்ச்சியாக உங்க எழுத்து இருக்கட்டும்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. 100க்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  17. நூறுக்கு மேற்பட்ட பதிவுகள் போட்ட கவிதாயினி .( நான் உங்களுக்கு தரும் பட்டம் ) ...மாலிகாவுக்கு என் வாழ்த்துகள் .பலாயிரம் படைக்க் இறைவன் வரம் தரவேண்டும். ஒருமூச்சிலே சொல்லி முடிசிடீங்க. பாராடுக்கள்.

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப சந்தோசம் சகோ

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  19. ஆஹா! உண்மையிலேயே பெரிய சாதனைதான் மலிக்கா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. wowowow... feels really happy :) all the best. growing :D May almighty god help you forever

    பதிலளிநீக்கு
  21. Hi,

    I believe that you are using counting program, probably it doesn't working (or does), I'm sorry for inconvenience. I have upload my script to another website, its working fine, I request you please change coding.

    To change

    goto www.blogger.com → login → Dashboard → Layout → Edit HTML → Click “Expand Widget Templates”

    find the word http://mastan.moved.in/blog/blogcount.php and change it http://mastanoli.99k.org/blog/count.php thats all.

    just make it bold, here cant see that letter so visible.

    It could works fine.
    All the best

    Thanks
    Mastan

    பதிலளிநீக்கு
  22. செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்
    பிரமிப்பாக இருக்கிறது

    கமலேஷ் கூறிய மாதிரி உங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்

    வாழ்த்துக்கள் சகோதரி

    விருதுக்கு மிக்க நன்றி

    விஜய்

    பதிலளிநீக்கு
  23. /S.A. நவாஸுதீன் கூறியது...
    நிஜமாகவே பிரமிப்பாகத்தான் இருக்கிறது உங்கள் எழுத்துப்பயணம். உங்கள் ஆர்வம், தன்னம்பிக்கை, உங்களின் வளர்ச்சி என்று எல்லாமே பாராட்டுக்குறியவையன்றி வேறில்லை.

    இனியும் தொடர்ந்து மெருகேற்றவும் நல்ல படைப்புகளைத்தந்து. நீங்களே கூரியதுபோல் எழுத்துப்பிழைகளில் சிறிது கவனமெடுத்துக்கொள்ளவும். மற்றபடி உங்கள் சிந்தனைக்கு குறைவில்லை.

    மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி./

    இறைவனின் துணையுடன் நிச்சியம் நல்ல கருத்துக்களை தரமுயற்ச்சிக்கிறேன், அண்ணனின் தொடர்ந்த ஆதரவு எனக்குள் நம்பிக்கையை துளிர்க்கச்செய்கிறது.
    இனி கவனமாக எழுத்துப்பிழைகளில்லாமல் எழுதுகிறேன்..
    மிகுந்த சந்தோஷம்மான நன்றி நவாஸண்ணா..

    பதிலளிநீக்கு
  24. / பித்தனின் வாக்கு கூறியது...
    நல்ல நெடிய பயணம், சீரான வளர்ச்சியும் பெற்று இருக்கின்றீர்கள். தங்கள் வலையுலக அனுபவத்திற்க்கு முன் நான் ஒரு குழந்தை. தங்களின் நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் ஆயிரம் ஆயிரம் இடுகைகள் இட வாழ்த்துக்கள். இனி தங்களின் கவிதைகளை நானும் படிக்கின்றேன். நன்றி./

    மிக்க மகிழ்ச்சி பித்தனின் வாக்கு. இனி தொடர்ந்து படைப்புகளைபடித்துவிட்டு குறை நிறைகளைச்சொல்லுங்கள்..மிக்க நன்றி..


    /ஆமா துபையில எங்க இருக்கீங்க குறுக்கு சந்துதான?/

    துபையிலா?

    பித்தனின் சாலை
    4,வது குறுக்குதெரு, மெயின் துபை..

    அட்ரஸ் சரிதானே?

    பதிலளிநீக்கு
  25. கவிதைகள் எழுதும் உங்களுக்கும், தொடர் ஊக்கமும்,உற்சாகமும் தரும் மச்சானுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி.

    மேலும் பல ஆயிரம் கவிதைகள் எழுத எல்லாம்வல்ல இறைவன் அருள்வேண்டி நானும் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. kulanthai valarthu ... athar puthisalithanathaiyum arivukoormaiyaiyum wulakama paratumpoothu thaiyukku ewwalavu santhoosamoo antha santhoosam unkal valarchiyai parkumpoothuu... Muthala thirusti sothi podanum...

    - trichy syed

    பதிலளிநீக்கு
  27. kulanthai valarthu ... athar puthisalithanathaiyum arivukoormaiyaiyum wulakama paratumpoothu thaiyukku ewwalavu santhoosamoo antha santhoosam unkal valarchiyai parkumpoothuu... Muthala thirusti sothi podanum...

    - trichy syed

    பதிலளிநீக்கு
  28. kulanthai valarthu ... athar puthisalithanathaiyum arivukoormaiyaiyum wulakama paratumpoothu thaiyukku ewwalavu santhoosamoo antha santhoosam unkal valarchiyai parkumpoothuu... Muthala thirusti sothi podanum...

    - trichy syed

    பதிலளிநீக்கு
  29. /அதிரை அபூபக்கர் கூறியது...
    100 க்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள் 100 யை தாண்டி.. உங்களது ப்ளாக் மென்மேலும் பயனுள்ளதாய் ஆக பிரார்த்திக்கிறேன்.../

    மிகுந்த சந்தோஷம் அபூபக்கர். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  30. பூங்குன்றன்.வே கூறியது...
    நூறு கவிதைகளா.இப்பவே கண்ணை கட்டுதே.உங்களின் தமிழ் ஆர்வம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.மிகுந்த மகிழ்ச்சியும்,
    வாழ்த்துக்களும் உரித்தாகுக.

    மென்மேலும் பலநூறு கவிதை எழுதி தமிழுக்கு தொண்டு செய்ய வாழ்த்துக்கள் தோழி.

    எப்போ ட்ரீட்?/

    தோழமைகளின் ஊக்கமும் ஆதரவும் இருந்தால் எதையும்சாதிக்கதூண்டும்.
    மிகுந்த மகிழ்ச்சி தோழமையே மிக்க நன்றி.

    ட்ரீட்தானே தோழமைகளுக்கு இல்லாததா. [டீயும் பன்னும் ரெடி]

    பதிலளிநீக்கு
  31. /Mohan Kumar கூறியது...
    100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் blog உலக experience சொன்ன இந்த கட்டுரையில் உங்கள் வளர்ச்சி தெரிகிறது. தொடரட்டும் உங்கள் பணி/

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி மோகன்.
    தொடர்ந்துவாருங்கள்..

    பதிலளிநீக்கு
  32. /அபுஅஃப்ஸர் கூறியது...
    இவ்வளவு விசயங்க நீங்க சொன்னபிறகுதான் தெரியுது...

    தொடர்ந்து எழுதுங்க, சமூகத்தில் ஒரு விழிப்புணர்ச்சியாக உங்க எழுத்து இருக்கட்டும்

    வாழ்த்துக்கள்/

    நிச்சியமாக விழிபுணர்வு விசயங்களை எழுதுகிறேன் அபு, வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  33. /Mrs.Menagasathia கூறியது...
    100 கவிதைகளா?ஆச்சர்யமா இருக்குப்பா.வாழ்த்துக்கள் மலிக்கா!மேலும் கலக்குங்க.../

    தோழியே நீங்க சமைச்சு கலக்குறீங்க நான் கலக்கி சமைக்கிறேன் படைப்புகளை.மிகுந்த சந்தோஷம் மேனகா. தொடர்ந்த ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  34. /கமலேஷ் கூறியது...
    உங்களுடைய இந்த பதிவை பார்க்கும் போது
    நானும் உங்களை போல வரணும் என்ற எண்ணம் வருகிறது
    thanks for your sharing....
    மல்லிகா/

    ரொம்ப மகிழ்வாக இருக்கு கமலேஷ்,
    ஒவ்வொருத்தரும் அவரவர்களின் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அவர்கள் திறமையானவர்களாக தெரிகிறார்கள், நாம் வெளிப்படுத்தும்போது நமக்கே நாம் திறமையானவர்களாக தெரிவோம்,
    நிச்சயம் எல்லாருக்குள்ளும் திறமைகளிருக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது தானாக வெளிவரும்.
    தொடர்ந்து எழுதுங்கள்..
    தாங்களீன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி, தொடர்ந்துவாருங்கள்..

    பதிலளிநீக்கு
  35. /ராஜவம்சம் கூறியது...
    உங்கள் வெற்றிக்கு பின்னால்
    மச்சானின் உழைப்பும் இருக்கு
    உங்களுக்கு வாழ்த்து கூரும் முன்
    மச்சானுக்கு நன்றி கூறுவதின் மூலமே உங்களை வாழ்த்துவது முழுமை பெரும்

    நன்றியும் வாழ்த்துகலும்/

    கண்டிப்பாக மச்சானுக்குதான் கூறவேண்டும், ஒருமனைவியென்பதைவிட தோழியாக நினைத்து தாங்கும் கணவர்கள் நிறையபேர்களுக்கு வாய்பதில்லை, அந்தவிதத்தில் நான் இறைவனின் அருள்பெற்றவள்..

    மச்சானிடமும் சொல்லிட்டேன் உங்களின் வாழ்த்துக்களையும்.. மிக்க நன்றி ராஜவம்சம்

    பதிலளிநீக்கு
  36. ஒருமனைவியென்பதைவிட தோழியாக நினைத்து தாங்கும் கணவர்கள் நிறையபேர்களுக்கு வாய்பதில்லை, அந்தவிதத்தில் நான் இறைவனின் அருள்பெற்றவள்..

    Arumaiyana karuthu!
    Congratulations!
    100 kavithaikal eluthithiya neenkal 1000 kavithaikal eluthi sathani padaikka prayer pannukireen Sister!

    - trichy syed

    பதிலளிநீக்கு
  37. oonu rendu kavithakal eluthinala pantha pannum intha wulakathil 100 kavithaikal eluthithuum adakkamaka irrukkum neenkal unmayil niraikudam!

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  38. /நிலாமதி கூறியது...
    நூறுக்கு மேற்பட்ட பதிவுகள் போட்ட கவிதாயினி .( நான் உங்களுக்கு தரும் பட்டம் ) ...மாலிகாவுக்கு என் வாழ்த்துகள் .பலாயிரம் படைக்க் இறைவன் வரம் தரவேண்டும். ஒருமூச்சிலே சொல்லி முடிசிடீங்க. பாராடுக்கள்./

    நிலாமதியான என்தோழியே, தங்களின் கவிதாயினி பட்டத்தை தலையில் கிரீடம்வைத்து பெற்றுக்கொண்டேன்,உங்களின் வேண்டுதலுக்கும்,கருத்துக்கலுக்கும்
    மிகுந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் மண்டிக்கிடக்கிறது மனகூண்டில்.

    மிக்க நன்றிதோழி தொடர்ந்து தாங்களின் வருகையையும் கருத்துக்களையும் தரவும்...

    பதிலளிநீக்கு
  39. /Suvaiyaana Suvai கூறியது...
    100 கவிதைகள!!
    வாழ்த்துக்கள்/

    வருகைக்கும் வாழ்த்துக்களும்
    மிக்கநன்றி. Suvai ...


    / தேவன்மாயம் கூறியது...
    100க்கு வாழ்த்துக்கள்!!/


    மிக்க நன்றி தேவன்

    பதிலளிநீக்கு
  40. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
    ரொம்ப சந்தோசம் சகோ

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.../

    மிக்க நன்றி சகோ..

    /இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
    ஆஹா! உண்மையிலேயே பெரிய சாதனைதான் மலிக்கா. வாழ்த்துக்கள்./

    மிக்கநன்றி. நிஜாம்
    / ..:: Mãstän ::.. கூறியது...
    wowowow... feels really happy :) all the best. growing :D May almighty god help you forever/

    மிக்கநன்றி மஸ்தான்....

    பதிலளிநீக்கு
  41. கவிதை(கள்) கூறியது...
    செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்
    பிரமிப்பாக இருக்கிறது

    கமலேஷ் கூறிய மாதிரி உங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்

    வாழ்த்துக்கள் சகோதரி

    விருதுக்கு மிக்க நன்றி

    விஜய்

    ரொம்ப மகிழ்ச்சியாவும் சந்தோசமாகவும். இருக்கு சகோதரரே,

    மிக்க நன்றி விஜயண்ணா..

    பதிலளிநீக்கு
  42. /துபாய் ராஜா கூறியது...
    கவிதைகள் எழுதும் உங்களுக்கும், தொடர் ஊக்கமும்,உற்சாகமும் தரும் மச்சானுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி./

    மிகுந்த சந்தோஷம் ராஜா, இருவரும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டோம்..

    மேலும் பல ஆயிரம் கவிதைகள் எழுத எல்லாம்வல்ல இறைவன் அருள்வேண்டி நானும் வேண்டுகிறேன்.

    மிக்க நன்றி துபைராஜா..

    பதிலளிநீக்கு
  43. மலர்வனம் கூறியது...
    kulanthai valarthu ... athar puthisalithanathaiyum arivukoormaiyaiyum wulakama paratumpoothu thaiyukku ewwalavu santhoosamoo antha santhoosam unkal valarchiyai parkumpoothuu... Muthala thirusti sothi podanum...

    - trichy syed/
    ரொம்ப ரொம்ப சந்தோஷம் மலர்வனம்.

    பதிலளிநீக்கு
  44. /மலர்வனம் கூறியது...
    ஒருமனைவியென்பதைவிட தோழியாக நினைத்து தாங்கும் கணவர்கள் நிறையபேர்களுக்கு வாய்பதில்லை, அந்தவிதத்தில் நான் இறைவனின் அருள்பெற்றவள்..

    Arumaiyana karuthu!
    Congratulations!
    100 kavithaikal eluthithiya neenkal 1000 kavithaikal eluthi sathani padaikka prayer pannukireen Sister!

    - trichy syed

    December 4, 2009 1:44 PM


    மலர்வனம் கூறியது...
    oonu rendu kavithakal eluthinala pantha pannum intha wulakathil 100 kavithaikal eluthithuum adakkamaka irrukkum neenkal unmayil niraikudam!

    - Trichy Syed/

    படைப்புககளுக்கு கிடைக்கும் கருத்துக்களும் ஊக்கமும்
    கிடைக்கும்போது மகிழ்ச்சிக்கு அளவேயிருக்காது, அதேபோன்றெ நிலைதான் தாங்களைவரின் கருத்துக்களும் ஊக்கமும் என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது.

    நிச்சியம் நல்லபடைப்புகளை தொடர்ந்துதர முயற்சிக்கிறேன்..

    மிகுந்த மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி திருத்தி சையத்..

    என்றென்றும் அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு
  45. இதுவரை நான் எழுதிய எழுத்துக்களிலும் பின்னுட்டங்களிலும் யார்மனதும் நோகும்படி எழுதியிருந்தால் இறைவனுக்காக என்னைமன்னிக்கவும்

    ... above lines unkal perunthanmayin velippadu!

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  46. வெள்ளையருவி பார்த்ததும் துள்ளிக்குதித்தாடும் பிள்ளைமனம்போல்...

    unkal kavithaikalai padikkum poothu enkal manasu!

    - Shamir & Shahir

    பதிலளிநீக்கு
  47. Congratulations for your success!

    With love
    Rizwana, Arif, Shakul, Shahana, Asif, Afrina,

    பதிலளிநீக்கு
  48. நீரோடை மலிக்கா, கவிதையரசி மலிக்கா,


    100 வது கவிதைக்கு என் லேட்டானா லேட்டஸ்ட் வாழ்த்துக்கள்.

    உலகில் உள்ள அனைத்து தளத்திலும் உங்கள் கவிதைகள் 100 , ஆயிரமாக வாழ்த்துக்கள்.
    எம்மாடியோ 100 கவிதைகளா ஆச்சரியம், மூச்சு விடாம படிச்சாச்சு, யுத்ஃபுல் விகடனில் சுதந்திரமே கவிதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் உங்க‌ள் பணி....

    பதிலளிநீக்கு
  49. Jaleela கூறியது...
    நீரோடை மலிக்கா, கவிதையரசி மலிக்கா,
    100 வது கவிதைக்கு என் லேட்டானா லேட்டஸ்ட் வாழ்த்துக்கள்.
    உலகில் உள்ள அனைத்து தளத்திலும் உங்கள் கவிதைகள் 100 , ஆயிரமாக வாழ்த்துக்கள்.

    .... eppadi oru pen ennoru pennai paratuvathu arokiyamana... santhosamana visayam.... Very Good!

    - Sinekithan

    பதிலளிநீக்கு
  50. Anbullah Kavingar Malikka Avarkalukku...

    Elankai Tamil Sanga Thunai Thalaivar Kavingar Jinnah Sherifudeen avarkal unkal kavithaiyai parattiyapoothu nan adainthan santhosathirku alava illai....

    Aaadral mikuntha avarin asirvatham unkalai periya kavingarakkum enpathu nichayam.

    Thamilpool enitha valzha!

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  51. அன்புள்ள சகோதரியே! (மகளே என்றழைப்பதுகூட என் வயதுக்கு மேலும் பொருத்தமாக இருக்கும்),

    தங்கள் நீரோடையில் சிறிதே நீந்தும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்

    வலைத்தளத்தின் அழகே 'வா வா' என்று கவிதையை வாசிக்க அழைத்தது.

    சிறந்த வலைத்தளத்திற்கான பரிசுக்கு அடுத்தபடியாக, சிறந்த கவிதைகளுக்கான பரிசையும் நீங்கள் அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.

    நூறு கண்ட நீங்கள் விரைவிலேயே ஆயிரம் காண வாழ்த்தும்,

    ஷேக் சிந்தா மதார்
    050 - 62 456 62

    பதிலளிநீக்கு
  52. அன்புள்ள சகோதரியே! (மகளே என்றழைப்பதுகூட என் வயதுக்கு மேலும் பொருத்தமாக இருக்கும்),

    தங்கள் நீரோடையில் சிறிதே நீந்தும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்

    வலைத்தளத்தின் அழகே 'வா வா' என்று கவிதையை வாசிக்க அழைத்தது.

    சிறந்த வலைத்தளத்திற்கான பரிசுக்கு அடுத்தபடியாக, சிறந்த கவிதைகளுக்கான பரிசையும் நீங்கள் அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.

    நூறு கண்ட நீங்கள் விரைவிலேயே ஆயிரம் காண வாழ்த்தும்,

    ஷேக் சிந்தா மதார்
    050 - 62 456 62

    பதிலளிநீக்கு
  53. அன்பிற்குரிய மல்லிகா அவர்களுக்கு
    வணக்கம்
    தங்கள் வலைப்பதிவு பற்றி திருச்சி சையது சொன்னார்
    தங்கள் தளம் கண்டேன் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்
    கவிதைகளும் சிறப்பாக உள்ளன. நல்ல மொழி நடை பாராட்டுகள்.
    தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள். தங்களின் எழுத்து பணிசிறக்கட்டும்
    அன்பின்
    இசாக்
    http://iishaq.blogspot.com/
    http://thamizalai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  54. அன்பு மல்லிகா அவர்களுக்கு
    நல்ல எதிர்காலம் உள்ளது !
    நிறைய எழுதுங்கள் !

    அன்பு
    இசாக்

    பதிலளிநீக்கு
  55. அன்பு மகளுக்கு,

    கவிதை என்பது இயற்கையின் ஊற்று. தண்ணீர் எடுக்க எடுக்கத்தான் மேலும் மேலும் ஊறும்.

    இறையருளால் உங்களிடம் அத்தகைய கற்பனை வளம் இயல்பாகவே அமைந்துள்ளது.

    நீங்களே ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் ஒருசில எழுத்துப் பிழைகள்தாம் ஆங்காங்கே தலைதூக்குகின்றன.
    அவற்றை மட்டும் வெல்லப் பழகிக்கொண்டீர்களென்றால் உங்கள் கவிதைகளின் மதிப்பு எங்கோ பறந்துவிடும்.

    இன்றுபோல் என்றும் வாழ்க, இன்றைவிட மேலும் சிறப்பாக உயர்க.

    அன்புடன்,

    ஷேக் சிந்தா மதார்



    Sheikh Sintha Mathar

    Project Manager

    Emirates Electrical Engineering

    P.O. Box 16482, Dubai , UAE

    Tel : +9714 2954808

    Fax : +9714 2954880

    Mob: +97150 6245662

    Email: sheikh@alrostamanigroup.ae

    Website: www.alrostamani.com

    பதிலளிநீக்கு
  56. Unkal Thiramaikkum... Nalla manasukkum Aaandavan unkalauku Niraya viruthukalai tharuvan! (Insha Allah...)

    Best of Lcuk

    Mrs. Sabira

    பதிலளிநீக்கு
  57. ஆண்டவன் அருள் செய்வான் தங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  58. Maaperum sabaithanil nee nadanthal vunakku malaikal vizha vendum.. Oru matru kuraithatha arasi endru nee poodri puzhalavendum...

    Valthum..
    Mrs. Sabira Syed

    பதிலளிநீக்கு
  59. "என் எழுத்துபணி நல்லவிதமாக அமையவேண்டும், பிறறின் மனம் நோகாதவாறு என் எழுத்துக்கள் சொல்லும் எதுவும் பயன்தராமல் வீணாகாதவாறும் இருக்கவேண்டும்" - endra unkalin nalla manasuku neenka nallaa irrupeenka Amma!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது